ஒளி விளையாட்டு

ஒளி விளையாட்டு, எஸ்.டி. பாலகிருஷ்ணன், சி. வெங்கடேசன், அறிவியல் வெளியீடு அறிவியல் விளையாட்டுகள் பாடத்தின் ஒரு பகுதியாகவும், பொழுதுபோக்கு அம்சமாகவும் மாறி வரும்காலம் இது. அறிவியலை விளையாட்டு ரீதியாகக் கற்க எளிமையான பல விளையாட்டுகளை அறிமுகப்படுத்துகிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்டுள்ள இந்நூல் எஸ்.டி. பாலகிருஷ்ணன், சி. வெங்கடேசன் ஆகியோர் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளனர். நன்றி: தி இந்து, 9/11/2016.

Read more

மீசைக்காரப் பூனை

மீசைக்காரப் பூனை, பாவண்ணன், புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு தமிழ் சிறார் இலக்கியத்தில் பாடல்கள் பெரிதும் குறைந்துவிட்ட நிலையில், சமீபகாலமாகத் தொடர்ச்சியாகச் சிறார் பாடல்களை எழுதி வருகிறார் எழுத்தாளர் பாவண்ணன். அவருடைய புதிய சிறார் பாடல் தொகுப்பு இது. ரயிலில் சந்தித்த சிறார்கள் பேசிய கதையின் உந்துதலால் இப்பாடல்களை அவர் எழுதியிருக்கிறார். நன்றி: தி இந்து, 9/11/2016.

Read more

மந்திரக் கைக்குட்டை

மந்திரக் கைக்குட்டை, கொ.மா.கோ.இளங்கோ, புக்ஸ் ஃபார் சில்ரன், குழந்தைகளுக்காகத் தொடர்ச்சியாக எழுதிவரும் கொ.மா.கோ. இளங்கோ எழுதிய சிறார் கதைகளின் தொகுப்பு இது. குழந்தைகளின் கற்பனையை வித்தியாசமாகத் தூண்டக்கூடிய இந்தக் கதைகளில் சில ‘மாயா பஜாரி’ல் ஏற்கெனவே நீங்கள் வாசித்தவைதான். சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கதை வடிவிலேயே அழகாகச் சில கதைகள் சொல்லிச் செல்கின்றன. நன்றி: தி இந்து, 9/11/2016.   —- மின்மினி, மொழிபெயர்ப்பு என். மாதவன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு பள்ளி ஆசிரியரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கச் செயல்பாட்டாளருமான என். மாவனின் […]

Read more

கனவினைப் பின் தொடர்ந்து

கனவினைப் பின் தொடர்ந்து, தமிழில் ஜே. ஷாஜஹான், எதிர் வெளியீடு, வரலாறு எவ்வளவு சுவாரஸ்யமானது என்று சில புத்தகங்களை வாசித்தால் தெரியும். அப்படிப்பட்ட புத்தகங்களில் ஒன்று இது. சிந்து சமவெளி மக்கள், நாளந்தா பல்கலைக்கழகம், கிரேக்கத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்பு போன்ற முக்கிய வரலாற்றுத் தகவல்களை ஒரு கதை போலப் படித்தால் எப்படியிருக்கும்? அந்த அனுபவத்தைத் தருகிறது இந்த நூல். பிரபல ஆங்கிலக் குழந்தைகள் எழுத்தாளர் த.வெ. பத்மா எழுதியதைச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார். நன்றி: தி இந்து, 9/11/2016.   —- இறக்கை விரிக்கும் […]

Read more

பூமியின் வடிவத்தைக் கண்டறிந்தது எப்படி?

பூமியின் வடிவத்தைக் கண்டறிந்தது எப்படி?, அனதோலி தொமீலின், தமிழில் நா. முகம்மது செரீபு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு பூமியின் வடிவம் தட்டையா, வட்டமா?, உருண்டையா? உருண்டை வடிவம்தான். ஆனால் இந்த உருண்டை வடிவமும், மிகச் சரியான உருண்டையா, இல்லையா? இது பற்றிய கேள்விகள் பண்டைக் காலம் முதலே பலருக்கும், குறிப்பாக விஞ்ஞானிகளிடையே தோன்றின. அந்தக் கேள்விகளிலிருந்து பூமியின் வடிவத்தைக் கண்டடைந்த விதத்தை அழகாகப் படங்களுடன் சுவைபடக் கூறுகிறது இந்த நூல். இந்த நூலை எழுதியவர் அனதோலி தொமீலின். இதை சுவாரஸ்யம் குறையாமல் […]

Read more

மாயக்கண்ணாடி

மாயக்கண்ணாடி, உதயசங்கர், நூல்வனம், குழந்தைகளுக்கான நேரடிக் கதைகள், மலையாள மொழிபெயர்ப்பைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் உதயசங்கர் எழுதிய நேரடிக் கதைகளின் தொகுப்பு இது. வித்தியாசமான முன் அட்டையுடன் வந்துள்ளது. இந்தக் கதைகளில் சில ‘மாயாபஜாரி’ல் ஏற்கெனவே நீங்கள் வாசித்து மகிழ்ந்தவைதான். பொதுவாக ராஜாக்களைப் பாராட்டும், ராஜாக்களைப் புகழும் கதைகளையே அதிகம் கேட்டிருப்போம். ஆனால் இந்தத் தொகுப்பில் உள்ள கதை ஒவ்வொன்றும் ராஜாக்களின் கோமாளித்தனங்களைக் கேலி செய்கின்றன. நன்றி: தி இந்து, 9/11/2016.

Read more

‘இந்து’ தேசியம்

‘இந்து’ தேசியம், தொ. பரமசிவன், கலப்பை பதிப்பகம், விலை 130ரூ. ஒற்றைக் கலாச்சாரத்துக்கு எதிராக… தொ. பரமசிவனின் இந்த நூல், கடந்த நூற்றாண்டு காலத்தில் தமிழ்ச் சமூகம் சந்தித்த தத்துவப் போராட்டத்தை மீளாய்வு செய்கிறது. இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் நலன்களுக்கு எதிரான ஒற்றைக் கலாச் சாரத்தையும் அதன் பின்னணியில் உள்ள சக்திகளையும் எடுத்து இழைஇழையாக அலசும் கட்டுரைகள், பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் வாழ்நாள் போராட்டங்களின் அடிநாதத்தை வலுவாக எடுத்துக்கூறுகின்றன. இன்றைய சமூக, அரசியல் சூழ்நிலையைத் தமிழ்ச் சமூக மரபின் பின்னணியில் அலசி ஆராயும் இந்நூல் […]

Read more

நான் இராமானுசன்

நான் இராமானுசன், ஆமருவி தேவநாதன், விஜயபாரதம் பதிப்பகம், விலை 60ரூ. நாவல் வடிவில் ராமானுஜர் மணிப்பிரவாளத்தைத் தவிர்த்த நடையில் ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை நாவல் வடிவில் முயற்சி செய்திருக்கிறார் ஆசிரியர். அத்துடன் துவைதம், அத்துவைதம், விசிஷ்டாத்வைதம் என்ற மூன்றையும் எல்லோருக்கும் புரியும் வகையில் எடுத்துரைத்திருக்கிறார் ஆசிரியர். ஸார்வாகம், ஜைனம், பவுத்தம், வேதங்கள், உபநிஷத்துகள், யாகங்கள் பற்றிய விளக்கங்களும் பொருத்தமாகவும் அளவோடும் இருக்கின்றன. வைணவத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியவனவற்றைத் திட்டமிட்டு, ‘சூடிக்கொடுத்த நாச்சியிரைப்’ போலவே வண்ணமயமாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார். வேற்றுமைகளை விதைக்கும் ‘கலை’ தெரிந்தவர்களைப் பற்றிய […]

Read more

வசப்படாத வார்த்தைகளுடன்

வசப்படாத வார்த்தைகளுடன், கா. அமீர்ஜான், முரண்களரி படைப்பகம், விலை 100ரூ. உள்வெளிக் கவிதைகள் உள்ளிருந்து புறமும், புறமிருந்து உள்ளுமாய் வாழ்க்கையை விசாரணை செய்யும் கவிதைகளை ஐம்பதாண்டுகளாக எழுதிவரும் கவிஞர் கா. அமீர்ஜானின் முதல் கவிதை நூல் இவ்வளவு காலங்கடந்து இப்போதுதான் வெளிவந்திருக்கிறது. ‘அன்பென்று எதனையும் சொல்…’ என்ற முதல் கவிதை முடிவடையும் இடத்திலிருந்தும், ‘என் பிள்ளைகளின் நிமித்தம் எழுதப்படாத நாட்குறிப்பாய் நானும்..’ என்று கடைசிக் கவிதை முடிவடையும் இடத்திலிருந்தும் மட்டுமில்லாமல், தொகுப்பு முழுவதுமான கவிதைகளில் உள்ளும் வெளியுமாய் தன்னையே நிறுத்திப் பார்த்து எழுதியுள்ளார் கா. […]

Read more

மீண்டும் ஆசிரியரைத் தேடி

மீண்டும் ஆசிரியரைத் தேடி, த. தங்கவேல், சமூக இயங்கியல் ஆய்வு மையம், விலை 240ரூ. ஆசிரியர் வருகை : ஒரு விவாதம் ஆசிரியர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? வந்தார்களா, சென்றார்களா? என்ற விவாதம் பல காலமாக நடக்கிறது. அந்த விவாதத்தின் கேள்விகளையும் பதில்களையும் நம்முன் வைத்து விவாதிக்கும் நூல். பல நாடுகளில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் முதலாக மனிதர்களின் மரபணு ஆய்வுகள் வரை பலதரப்பட்ட ஆராய்ச்சிகளைத் தொகுத்து விவாதிக்கிறது இந்த நூல். விருப்பு வெறுப்பில்லாத வாதம், தமிழகத்தில் அரசியலாக்கப்பட்டுள்ள ஒரு கருத்தை அறிவியல் […]

Read more
1 20 21 22 23 24 36