உலக மக்கள் வரலாறு

உலக மக்கள் வரலாறு, ஹார்மன், தமிழில் மு. வசந்தகுமார், நிழல் வண்ணன், விடியல் பதிப்பகம், விலை 1100ரூ. உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் மக்களின் வாழ்க்கை முறை தொடங்கி, மனிதர்களுக்கு இடையிலான உறவுகள், இனக்குழுக்கள், பொருளாதாரம் என்று பல விஷயங்களைப் பற்றிய கருத்துகள் அடங்கிய நூல். சமகால நிகழ்வுகளுடனான ஒப்பீட்டுடன் பழைய வரலாறு சொல்லப்பட்டிருக்கிறது. நன்றி: தி இந்து, 28/5/2016.   —- டாக்டர் ஜே.சி. குமரப்பாவின் கருத்துக் களஞ்சியம், மா.பா. குருசாமி, சர்வோதய இலக்கியப் பண்ணை, விலை 300ரூ. காந்தியத் தத்துவத்துக்குப் பொருளாதார வடிவம் […]

Read more

சுற்றுச்சூழலியல் உலகம் தழுவிய வரலாறு

சுற்றுச்சூழலியல் உலகம் தழுவிய வரலாறு, ராமச்சந்திர குஹா, எதிர்வெளியீடு, விலை 250ரூ. சுற்றுப் பயணங்கள், ஆய்வேடுகளின் அடிப்படையில் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா எழுதிய நூலின் தமிழாக்கம் இது. சுற்றுச்சூழல் பாதிப்பு, அரசுத் திட்டங்காளல் தமது நிலங்களை இழக்கும் பழங்குடியினர், விவசாயிகளின் நிலை என்று பல பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறார் குஹா. நன்றி: தி இந்து, 28/5/2016.   —- ஏ.கே. செட்டியார் படைப்புகள், அறியப்படாத அரிய கட்டுரைகளின் முழுத் தொகுதி, சந்தியா பதிப்பகம், விலை 900ரூ. ஏ.கே. செட்டியாரின் படைப்புகள் முழுவதுமாகத் தொகுக்கப்பட்டு இரு […]

Read more

திரைப்பாடம்

திரைப்பாடம், டாக்டர் ஆர். கார்த்திகேயன், கிழக்கு பதிப்பகம், விலை 120ரூ. திரைப்படம் என்னும் கருவி இசை, நடனம், நடிப்பு, ஓவியம் என அத்தனை கலைகளும் சங்கமிப்பது சினிமாவில். ஆனால் நெடுங்காலமாக சினிமா என்பது மலினமான பொழுதுபோக்கு ஊடகமாகவே கருதப்படுகிறது. இந்தப் பார்வையைப் புரட்டிப்போட்டு, திரைப்படத்தைப் பயிற்றுக் கருவியாக மாற்ற முடியும் என்பதை ‘திரைப்பாடம்’ புத்தகம் காட்டுகிறது. சார்லி சாப்ளினின் ‘தி கிரேட்டிக்டேட்டர்’ , ஹிட்ச்காக்கின் ‘சைக்கோ’, பாரதிராஜாவின் ‘பதினாறு வயதினிலே’ எனப் புகழ்பெற்ற 31 திரைப்படங்களை ஆழமாகவும் சுவாரஸ்யமாகவும் அலசுகிறது இப்புத்தகம். இந்தத் திரைப்படங்கள் […]

Read more

ஜெயகாந்தனின் பர்ணசாலை

ஜெயகாந்தனின் பர்ணசாலை, நவபாரதி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 100ரூ. நினைவில் புரளும் ஜே.கே. ஜெயகாந்தன் தொடர்பான அநேக நூல்கள் தமிழ்ச் சூழலில் வந்து கொண்டேயிருக்கின்றன. அப்படியொரு நூலான இது பெருங்கடலில் ஒரு தனித் துளியாகச் சேர்ந்திருக்கிறது. ஜெயகாந்தனுடனான நேரடி உரையாடல், தகவல்கள், ருசிகரச் சம்பவங்கள் ஆகியவற்றின் வழியே ஒரு சித்திரத்தைத் தீட்டுகிறார் நூலாசிரியர் நவபாரதி. ஜெயகாந்தனின் கதை உலகம் பற்றிய பார்வைகள், விமர்சனங்கள், சக எழுத்துக்கும் ஜே.கே.வின் எழுத்துக்குமான ஒப்பிடல்கள் என ஒரு நீண்ட கட்டுரையும் நூலில் இடம் பெறுகிறது. ஜே.கே. மறைந்து […]

Read more

மதுரை நாயக்கர்கள் வரலாறு

மதுரை நாயக்கர்கள் வரலாறு, ஆர். சத்தியநாத அய்யர், தமிழில் எஸ். அர்ஷியா, கருத்து பட்டறை வெளியீடு, விலை 370ரூ மதுரை நாயக்கர்கள் மதுரை நாயக்கர்களின் வரலாற்றை விரிவாகப் பேசும் ஆய்வு நூல் இது. விஜயநகரப் பேரரசின் வரலாற்றையும், தொலைதூரத்திலிருந்து அது செயல்படுத்திய அரசப் பிரதிநிதித்துவத்தையும் இணைத்துப் பேசும் ஒரு முயற்சியை இந்த ஆய்வு நூல் செய்கிறது. இந்நூலில் மதுரையை ஆட்சிசெய்த ஒவ்வொரு நாயக்க மனன்ரைப் பற்றிய குறிப்பும் தனித்தனியாக இடம் பெற்றிருக்கின்றன. அத்துடன், நாயக்கர் ஆட்சியின் சிறப்பம்சங்களும் தனிக் கட்டுரையாக இந்நூலில் சேர்க்கப்பட்டிருக்கிறது. அத்துடன், […]

Read more

இது மடத்துக் குளத்து மீனு

இது மடத்துக் குளத்து மீனு, ஹாஜகான், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 215ரூ. மிதக்கும் நினைவுகள் சுயசரிதைக்கு இணையான பொறுப்புணர்ச்சியுடன் எழுதப்பட்டிருக்கிறது இந்த நினைவலைகள் தொகுப்பு. ஷாஜகான், தான் படித்து ரசித்தது, தான் அவமானப்பட்டது, தான் பாராட்டப்பட்டது அனைத்தையும் எளிமையான நடையில் பதிவு செய்திருக்கிறார். சாலை விபத்துகள், ‘தூல் கா ஃபோல்’ இந்திப் படப் பாடல், கடித இலக்கியம், தாராபுரத்தில் உள்ள சித்தி வீடு, கணக்கு வாத்தியார்… என்று அவரது நினைவலைகளில் மிதக்கும் தகவல்கள் சுவையான டைரிக் குறிப்புகளாகச் சுவையூட்டுகின்றன. -மானா. நன்றி: […]

Read more

ஆலயமும் ஆகமமும்

ஆலயமும் ஆகமமும், சிகரம் ச. செந்தில்நாதன், சந்தியா பதிப்பகம், விலை 195ரூ. புரிதலின் புதிய ஒளி ஆகமமும், வேதங்களும், ஆகமமும் சித்தர்களும், ஆலய நுழைவும், ஆகமமும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கு – உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு – ஒரு சட்டப் பார்வை முதலான தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இந்த நூல். தமிழக அரசின் தனிச் சட்டத்துக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை இல்லாத நிலையில், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் பணி நியமனம் செய்யாப்படாமல் […]

Read more

ஏகாதிபத்திய பண்பாடு

ஏகாதிபத்திய பண்பாடு, ஜேம்ஸ் பெட்ராஸ், தமிழில் க. மாதவ், சிந்தன் புக்ஸ், விலை 200ரூ. சமூக மாற்றத்துக்கான குரல் அமெரிக்கப் பேராசிரியர் ஜேம்ஸ் பெட்ராஸ், லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள மக்கள் அமைப்புகளுக்கு ஆதரவானவர். ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வோடு செயல்படும் எழுத்தாளராக தன்னை அறிவித்துக்கொண்டவர். சிலி, கிரீஸ், வெனிசுலா நாடுகளின் அரசாங்கங்களின் ஆலோசகராக இருந்தவர். 70க்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ளார். 30க்கும் மேலான மொழிகளில் அவை மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஏகாதிபத்தியம் இந்தியாவையும் விழுங்கிகொண்டிருக்கும் நேரத்தில் ஜேம்ஸின் கருத்துகள் இந்தியாவில் சமூக மாற்றத்துக்காக போராடுபவர்களுக்கும் பயன்படும். -த. நீதிராஜன். […]

Read more

காடோடி

கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015 காடோடி, நக்கீரன், அடையாளம், விலை 270ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024312.html தமிழில் கவனம் பெற்றுவரும் பசுமை இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க படைப்பாக்க முயற்சி ‘காடோடி’. உலகின் பழமையான, பிரம்மாண்டமான போர்னியோ காடுகளில் பணிபுரிந்த எழுத்தாளர் நக்கீரன், காடுகளைப் பற்றி நமக்கென்ன தெரியும் என்ற கேள்வியை நாவல் மூலம் எழுப்புகிறார். நன்றி: தி இந்து, 2/1/2016. (கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015)

Read more

இடது திருப்பம் எளிதல்ல

கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015 இடது திருப்பம் எளிதல்ல, விஜயபிரசாத், தமிழில் சுப்பாராவ், பாரதி புத்தகாலயம். கம்யூனிஸ்ட் இயக்கங்களின் வரலாற்றின் பின்னணியில் சுதந்திர இந்தியாவின் வரலாற்றையும் கம்யூனிஸ்ட்கள் பின்தங்க, இந்தியச் சூழலில் எவையெல்லாம் முக்கியக் காரணங்கள் என்பதையும் ஆய்வுநோக்கில் எழுதப்பட்டிருக்கும் நூல். நன்றி: தி இந்து, 2/1/2016. (கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015)

Read more
1 21 22 23 24 25 36