அவலங்கள்

அவலங்கள், சாவித்ரி, எதிர் வெளியீடு, விலை 180ரூ. அவலங்களின் வாழ்வு கதாசிரியர் பிரான்ஸில் வசிக்கும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர். ஒரே நாவலின் அத்தியாயங்கள் என்று கருதும் அளவுக்கு இந்தத் தொகுப்பின் கதைகள் தொடர்கின்றன. காதல், வீரம், சோகம், நகைச்சுவை அத்தனை உணர்வுகளும் விரவிக்கிடக்கின்றன. இந்திய அமைதிப் படைப்புக்கு இரையான ராணியக்கா, சாதிக்கொடுமைக்கு ஆளான மல்லிகா, மனைவியின் காதில் ஈர்க்குச்சி சொருகியதைக் காணச் சகியாமல் கடையில் வேலை செய்து சிமிக்கி வாங்கிக்கொடுத்த நாதன் நாடு திரும்புகையில் விமானத்திலேயே மனைவியுடன் மரணிப்பது, கடல் புலிப் பிரிவில் சேர்ந்து கண்ணிழந்த […]

Read more

ஜல்லிக்கட்டு போராட்டம்

ஜல்லிக்கட்டு போராட்டம், கிழக்கு பதிப்பகம், விலை 150ரூ. கருத்துகளின் ஜல்லிக்கட்டு தமிழ்ச் சமூகத்தில் நிகழும் சமகால மக்கள் போராட்டங்கள் குறித்து உடனுக்குடன் நூல்கள் வெளியாவது ஆரோக்கியமானதொரு அணுகுமுறை. சென்னை பெருமழை வெள்ளம், பணமதிப்பு நீக்கம் போன்றவற்றைப் பற்றிப் பல நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த மரபின் தொடர்ச்சியாக, ஜல்லிக்கட்டுப் போராட்டம் குறித்தும் நூல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. கடந்த ஜனவரியில் சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான இளைஞர்களின் தன்னெழுச்சியான போராட்டம், தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே பல செய்திகளைச் சொல்லியிருக்கிறது. ஜல்லிக்கட்டுப் போராட்ம் குறித்த பலரின் பன்முகப்பட்ட பார்வைகள் […]

Read more

நேரில் கண்ட ருஷ்யப் புரட்சி

நேரில் கண்ட ருஷ்யப் புரட்சி, தமிழில் பூ. சோமசுந்தரம், அலைகள் பதிப்பகம், விலை 140ரூ. ஜான் ரீடைப் போலவே ரஷ்யப் புரட்சியைப் பற்றி மிக விரிவாக எழுதிய மற்றொரு எழுத்தாளரும் அமெரிக்காவைச் சேர்ந்தவரே அவர் பத்திரிகையாளர் ரைஸ் வில்லியம்ஸ், ஜான் ரீடின் வழிகாட்டலில் வந்தவர். இருவருமே ரஷ்யப் புரட்சியை நேரில் கண்டவர்கள். ரஷ்யா பற்றியும், அந்நாட்டில் புரட்சியை வழிநடத்திய லெனின் பற்றியும் நிலவிய பல்வேறு தவறான நம்பிக்கைகள், சித்திரங்களை மாற்றியதில் ரைஸ் வில்லியம்ஸின் எழுத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. ரஷ்யப் புரட்சிக்குப் பின்னால் 1922- […]

Read more

முதல் வரிசை மூன்றாவது இருக்கை

முதல் வரிசை மூன்றாவது இருக்கை, படுதலம் சுகுமாரன், ஆரம் வெளியீடு, விலை 160ரூ. பல்வேறு வார இதழ்கள், மாத இதழ்களில் வெளியான ஆசிரியரின் 35 சிறுகதைகளின் தொகுப்பு. அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் வாழ்க்கைப் போராட்டங்களுமே கதைக்கான களமாக விரிகின்றன. மகிழ்ச்சி, சந்தேகம் பொறாமை, உறவுச் சிக்கல்கள் என எல்லாப் பின்னணிகளிலும் கதைகள் பயணிக்கின்றன. ஒரு குழந்தையின் மனதில் ஒருவர் இடம்பிடிப்பது எவ்வளவு கடினம் என்பதையும், இந்த நிலை மாறும்போது அந்தக் குழந்தையின் மனநிலை எப்படி மாறுகிறது என்பதையும் அற்புதமாக விளக்குகிறது ‘12 வயதுப் […]

Read more

ஒரு நாடோடிக் கலைஞன் மீதான விசாரணை

ஒரு நாடோடிக் கலைஞன் மீதான விசாரணை, அண்டனூர் சுரா, இருவாட்சி இலக்கியத் துறைமுகம், விலை 180ரூ. அண்டனூர் சுராவின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. இத்தொகுப்பில் 19 சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு கதையும் ஏதாவது ஒரு சமூக நிகழ்வின் நிகழ்காலப் பதிவாக நம் கவனத்தை ஈர்க்கிறது. சிக்கலற்ற கதைப்போக்குகளுடன் இயல்பாக உள்வாங்க கூடிய கதைகளாக எல்லாக் கதைகளுமே இருக்கின்றன. வெறும் உரையாடல்களோடு மட்டுமே நிறைவுறா இக்கதைகள், ஆசிரியரின் அரசியல் சார்பையும் வெளிப்படுத்துகின்றன. நன்றி: தி இந்து, 5/11/2016.

Read more

வீரம் விளைந்தது

வீரம் விளைந்தது, தமிழில் எஸ். ராமகிருஷ்ணன், கார்முகில், விலை 250ரூ. ஒரே நாவல் மூலம் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் பலர் உண்டு. அப்படிப்பட்ட நாவல் ‘வீரம் விளைந்தது’. உலகெங்கும் உள்ள போராளிக் குழுக்களுக்குக் காலம்காலமாக உத்வேகம் அளித்துவரும் நாவல்களில் இதுவும் ஒன்று. ‘How the steel was Tempered’ என்று ஆங்கிலத்தில் வெளியான இந்த நாவல், ஒரு சுயசரிதை நாவல். இதை எழுதியவர் கம்யூனிஸ்ட் கட்சியின் செம்படை வீரர்களில் ஒருவராக ரஷ்ணப் புரட்சியில் பங்கேற்றுப் போரிட்ட நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி. இந்த நாவலில் வரும் பாவெல் […]

Read more

உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்

உலகைக் குலுக்கிய பத்து நாட்கள், ஜான் ரீடு, மலையாளம் யூமா. வாசுகி, தமிழில் ரா. கிருஷ்ணையா, புக்ஸ் ஃபார் சில்ரன், விலை 250ரூ. நவம்பர் புரட்சியின் சாட்சியங்கள் ரஷ்யப் புரட்சி பற்றி மிக விரிவாகவும், அதைப் பற்றி முழுமையானதொரு சித்திரத்தையும் தருகிறது ஜான் ரீடு எழுதிப் புகழ்பெற்ற இந்த நூல். இந்த நூலும் நூலின் தலைப்பும் காலம்காலமாக உச்சரிக்கப்படுவதாகவும் உத்வேகம் ஊட்டக் கூடியதாகவும் இருந்துவருகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் – சோஷலிசவாதி ஜான் ரீடு, ரஷ்யாவில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை முன்கூட்டியே உணர்ந்து அந்நாட்டுக்குச் சென்று […]

Read more

தீயரும்பு

தீயரும்பு, இலக்குமிகுமாரன் ஞானதிரவியம், அய்யா நிலையம் வெளியீடு, விலை 150ரூ. இலக்குமிகுமாரன் ஞானதிரவியத்தின் 13 சிறுகதைகள் கொண்ட தொகுப்பிது. தான் வாழ்ந்த கிராமத்தின் புழுதி படிந்த வாழ்க்கையை, வியர்வை பிசுபிசுக்கும் மனிதர்களை அப்படியே தன் கதைகளுக்குள்ளும் நடமாட வைத்துள்ளார். “கொம்பால குருணிப்பாலு கற்தாலும் கூர புடுங்கற மாடு உதவாது…” என்பது போன்ற தஞ்சை வட்டார மக்களின் வழக்குச் சொல்லாடலில் வாசிப்பை விறுவிறுப்பாக கடத்திச் செல்கிறது ஞானதிரவியத்தின் மொழிநடை. நன்றி: தி இந்து, 5/11/2016.

Read more

கண்ணீர்ச் சமுத்திரம்

கண்ணீர்ச் சமுத்திரம், குறும்பனை சி. பெர்லின், முக்கடல் வெளியீடு, விலை 90ரூ. நெய்தலின் வாழ்வை அசலாகப் பதிவுசெய்யும் எழுத்தாளர்களில் ஒருவரான குறும்பனை சி. பெர்லின் எழுதியிருக்கும் இந்தச் சிறுகதைத் தொகுதி கடற்புரத்து மக்களின் அன்றாட வாழ்க்கைப் பதிவுகளைக் கதைக்களன்களாகக் கொண்டிருக்கிறது. பொது வாசகர்களுக்கு அந்நியமான சொற்கள் ஒவ்வொரு சிறுகதைக்குப் பின்னாலும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கடும் நெருக்கடிகள் நிறைந்த சம்பவங்களுக்கு இடையில் நறுக்குத் தெறித்தாற்போல் நகைச்சுவையும் இழையோடுகிறது. நன்றி: தி இந்து, 5/11/2016.

Read more

கனவினைப் பின் தொடர்ந்து

கனவினைப் பின் தொடர்ந்து, தமிழில் ஜே. ஷாஜஹான், எதிர் வெளியீடு, வரலாறு எவ்வளவு சுவாரஸ்யமானது என்று சில புத்தகங்களை வாசித்தால் தெரியும். அப்படிப்பட்ட புத்தகங்களில் ஒன்று இது. சிந்து சமவெளி மக்கள், நாளந்தா பல்கலைக்கழகம், கிரேக்கத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்பு போன்ற முக்கிய வரலாற்றுத் தகவல்களை ஒரு கதை போலப் படித்தால் எப்படியிருக்கும்? அந்த அனுபவத்தைத் தருகிறது இந்த நூல். பிரபல ஆங்கிலக் குழந்தைகள் எழுத்தாளர் த.வெ. பத்மா எழுதியதைச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார். நன்றி: தி இந்து, 9/11/2016.   —- இறக்கை விரிக்கும் […]

Read more
1 19 20 21 22 23 36