மேடையில் பேசலாம்

மேடையில் பேசலாம், நெல்லை கவிநேசன், குமரன் பதிப்பகம், பக். 80, விலை 60ரூ. மேடைப் பேச்சு கலை பற்றி விரிவாக வழிகாட்டும் நூல். முறையாக பேசி பழகினால் மிளிர்வதற்கு பல உத்திகளை சொல்கிறது. பயிற்சி செய்வதற்கு ஏற்ற வகையில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. மாணவ மாணவியருக்கு உதவும். நன்றி: தினமலர், 10/5/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030597_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாறு

அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாறு, நெல்லை கவிநேசன், குமரன் பதிப்பகம், விலை 100ரூ. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் தென் பகுதியில் வாழ்ந்த மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, சாதிக்கொடுமை தலைவிரித்து ஆடியபோது, சமுதாய சீர்திருத்த எண்ணங்களை மக்களிடம் விதைத்து மறுமலர்ச்சி உண்டாக்கிய பகவான் வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு மனதைத் தொடும் வகையில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கிறது. புத்தகத்தில் ஆங்காங்கே பகவான் வைகுண்டரின் அகிலத்திரட்டில் இருந்து சிந்தனையைத் தூண்டும் வாசகங்களைக் கொடுத்து இருப்பது சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 5/2/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027989.html […]

Read more

ஐ.ஏ.எஸ். முதன்மைத் தேர்வு

ஐ.ஏ.எஸ். முதன்மைத் தேர்வு, நெல்லை கவிநேசன், குமரன் பதிப்பகம், விலை 150ரூ. ஐ.ஏ.எஸ். தேர்வு குறித்து பல்வேறு நூல்களை நெல்லை கவிநேசன் எழுதியுள்ளார். ஆனால் சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வுக்காக தனியாக விரிவான நூல் தமிழில் வெளிவரவில்லை. அந்தக் குறையைப் போக்கும் வகையிலும், ஐ.ஏ.எஸ். முதன்மைத் தேர்வுக்கான முழுமையான தயாரிப்புக்கு உதவும் வகையிலும் ‘ஐ.ஏ.எஸ். முதன்மைத் தேர்வு’ என்னும் இந்த நூலை அவர் உருவாக்கியுள்ளார். இது தமிழில் சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு பற்றித் தெரிந்து கொள்ளவும், பாடத்திட்டம் பற்றி புரிந்து கொள்ளவும், முந்தைய […]

Read more

வெற்றிதரும் மேலாண்மை

வெற்றிதரும் மேலாண்மை, நெல்லை கவிநேசன், குமரன் பதிப்பகம், பக். 240, விலை 150ரூ. மேலாண்மை நுட்பங்கள் காலங்கள்தோறும் வளர்ந்து வருபவையே. ஒரு நிறுவனத்திற்கான வெற்றி தோல்விக்கு காரணங்கள் என்ன என்பது குறித்து ஆய்வு செய்வது அவசியமாகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தொழில் முனைவோருக்கு தமிழில் புரிந்துகொள்ளும் வகையில் இந்நூல் பெரிதும் உதவக்கூடும்.உலகப் பொருளதாதாரத்தில் பெரிய பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், மேலாண்மை யுக்திகளை சரிவர இனம் கண்டு கொள்வது தொழில் நிறுவனங்களின் கடமையாகும். புதிய யுக்திகளை நடைமுறைப்படுவத்துவது இன்றைய மேலாளர்கள் மற்றும் தொழில் […]

Read more

வெற்றி தரும் மேலாண்மை

வெற்றி தரும் மேலாண்மை, நெல்லை கவிநேசன், குமரன் பதிப்பகம், விலை 150ரூ. ஒரு நிறுவனத்தில் இயக்குநராக மேலாளராக இருப்பவர்களுக்கு மேலாண்மைத் திறன் அவசியம் தேவை. இதனால் இன்றைக்கு உலகம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் மேலாண்மை கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. மாறி வரும் சூழ்நிலைகளுக்கேற்ப மேலாண்மை யுக்திகளை சரியாக இனம் கண்டு கொள்வது தொழில் நிறுவனங்களின் கடமையாகும். அந்த வகையில் மேலாண்மைத் துறை தொடர்பான நுட்பமான செய்திகளை நெல்லை கவிநேசன் எளிமையாக எல்லோரும் புரிந்துகொள்ளும்வகையில் இந்த நூலில் தெளிவுபடுத்தியுள்ளார். தொழில் முனைவோருக்கும் மாணவர்களுக்கும் பெரிதும் […]

Read more

இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம்

இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம், நெல்லை கவிநேசன், குமரன் பதிப்பகம், விலை 50ரூ. தலைச்சிறந்த விஞ்ஞானி, எளிமையும் புகழும் மிக்க குடியரசுத் தலைவர், இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம், தமிழில் அறிவியல் பயின்று உலக சாதனை படைத்தவர், சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு எல்லோராலும் விரும்பப்படும் தலைவர், உயர்ந்த பண்பாளர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை, வாழ்க்கைப் பாடங்களை, அவரது உயர்ந்த சிந்தனைகளை, அவர் பிறந்த ராமேசுவரம் மண்ணில் தொடங்கி, அக்னிச் சிறகுகளாய் விண்ணில் சாதித்தது வரையான வரலாற்றை எளியமுறையில் தந்துள்ளார் ஆசிரியர். நன்றி: குமுதம், […]

Read more

ரகசியமாய் ஒரு ரகசியம்

ரகசியமாய் ஒரு ரகசியம், ஓஷோ, தமிழில் சிவாமி சியாமானந்த், கவிதா பதிப்பகம், சென்னை, பக். 992, விலை 600ரூ. ஓஷோ, தனது பக்தர்களிடம் ஆற்றிய உரைகயின் தொகுப்பாக வெளிவந்துள்ள மற்றும் ஒரு நூல். தியானம் செய்வது எப்படி? துறவறம் என்பது அவசியம்தானா? காமம் என்றால் என்ன? சுய இன்பம் அனுபவிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதுதானா? என்பது போன்ற பலதரப்பட்ட விஷயங்களை அப்பட்டமாக அலசி இருக்கிறார். இடையிடையே ருசிகரமான சிறுகதைகள், புத்தர், போதிதர்மர், குரு லூத் சூ போன்றவர்களின் மேற்கோள்கள் ஆகியவற்றைக் கூறி படிக்க ஆவலைத் தூண்டுகிறார். ஓஷோவே […]

Read more

ஐ.ஏ.எஸ். பொது அறிவு கேள்விகள் பதில்கள்

ஐ.ஏ.எஸ். பொது அறிவு கேள்விகள் பதில்கள், நெல்லை கவிநேசன், குமரன் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரியாக வேண்டும் என்பது அனைவரது லட்சியம், கனவாகவே இருக்கும். அதற்கான சூழலும், வழிகாட்டுதலும் அமையப்பெற்றவர்கள் அந்த இலக்கை எட்டிப்பிடித்து விடுகிறார்கள். அத்தகைய வழிகாட்டுதலை செவ்வனே செய்துள்ளது இந்த நூல். சிவில் சர்வீசஸ் தேர்வின் கீழ் எத்தனை பணிகள் வருகின்றன. சிவில் சர்வீசஸ் தேர்வை யார், யார் எழுதலாம்? எத்தனை முறை எழுதலாம்? அதற்கான வயது வரம்பு என்ன? , அதற்கு நாம் தேர்வு செய்ய […]

Read more

இதயம் திருந்த இனிய மருந்து

இதயம் திருந்த இனிய மருந்து, சிராஜுல் ஹஸன், இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், 138, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை12, பக். 63, விலை 30ரூ. முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி முஸ்லிமல்லாத மக்களுக்கும் இஸ்லாத்தின் சில அடிப்படைச் செய்திகளை, இறை மார்க்கத்தின் சீர்திருத்தக் கருத்துக்களை எடுத்துரைக்கும் நோக்கில் மிகமிக எளிமையாக ஆக்கப்பட்டிருக்கும் நூல் இது. இஸ்லாம் வலியுறுத்தும் இறைக்கொள்கை, ரமலான் மாதத்தின் சிறப்பு நோன்பு. மறுமை போன்றவற்றுடன் பெற்றோரை மதித்தல், நட்புக் கொள்ளுதல், கலந்தாலோசித்தல் முதலிய வாழ்வியல் நடைமுறைகளையும் மனதில் பதியும்படி விளக்கப்பட்டுள்ளது சிறப்பு. மனிதர்களின் இதயங்களில் படிந்துள்ள […]

Read more