செம்மொழிகளின் வரிசையில் தமிழ்

செம்மொழிகளின் வரிசையில் தமிழ், ஜி.என். சாமுவேல், முல்லை நிலையம், விலை 120ரூ. தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நிகழ்வுகளை முதன் முறையாக 2007 ம் ஆண்டு பதிவு செய்த இந்த நூல், இப்போது மறுபதிப்பாக வெளியாகி இருக்கிறது. தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மை அழிந்தும், அழிக்கப்பட்டும் வருகின்ற இந்தக் காலக்கட்டத்தில் தமிழ மொழியின் சிறப்பைக் காப்பதும் உலகம் முழுவதும் அதனைப் பரவச் செய்வதும் சமுதாயப் பொறுப்புணர்வு கொண்ட தமிழனின் கடமை என்பதை இந்த நூல் வலியுறுத்திச் சொல்லி இருக்கிறது. நன்றி: […]

Read more

செம்மொழிகளின் வரிசையில் தமிழ்

செம்மொழிகளின் வரிசையில் தமிழ், ஜி.ஜான் சாமுவேல், முல்லை நிலையம், பக். 172, விலை 120ரூ. தமிழ்மொழி செம்மொழி மதிப்பை அடைந்து ஐந்தாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அந்த உயரிய அடைதலுக்காக மேற்கொள்ளப்பட்ட அரிய முயற்சிகள் என்ன, அதற்காக சமர்ப்பிக்கப் பட்ட ஆய்வறிக்கைகள் என்னென்ன என்பதைப் பற்றிய வரலாற்று விபரங்களைத் தருகிறது இந்நூல். நம் பண்டைய புலவர்கள் தமிழைச் செவ்வியல் நிலையிலேயே வளர்த்து அதைச் செந்தமிழ் என்று அழைத்து வந்தனர். செவ்வியல் எனும் சொல்லை, ரோமானியர்கள் பெரும்பாலும் உயர்தரமான இலக்கியப் படைப்புகளை சுட்டப் பயன்படுத்தியிருக்க, கிரேக்க இலத்தீன் […]

Read more

செம்மொழிகளின் வரிசையில் தமிழ்

செம்மொழிகளின் வரிசையில் தமிழ், ஜி.ஜான் சாமுவேல், முல்லை நிலையம், பக்.172, விலை ரூ.120. தொன்மை, தனித்தன்மை, பலமொழிகளுக்கும் தாயாக அமைந்த தன்மை, நாகரிகம் மேம்பாடு அடைந்த ஓர் இனத்தின் பண்பாடு, கலை, அனுபவ உணர்வுகளின் முழுவெளிப்பாடாக அமைந்த இலக்கியங்களைப் பெற்றிருத்தல், தனித்து இயங்கும் ஆற்றல், தனித்தன்மை வாய்ந்த உயர்ந்த கலை, இலக்கிய வெளிப்பாடுகள், தனிச்சிறப்பான மொழிக் கோட்பாடுகள் கொண்டிருக்கும் ஒரு மொழி செம்மொழியாகக் கருதப்படும். தமிழுக்கு அந்தத் தன்மைகள் எல்லாம் எவ்வாறு இருக்கின்றன என்பதை இந்நூல் விளக்குகிறது. வெறும் இலக்கியமொழியாக மட்டுமல்லாமல், நாட்டுப்புற இலக்கிய […]

Read more

மங்கையர்க்கரசியின் காதல்

மங்கையர்க்கரசியின் காதல், வ.வே.சு.ஐயர், முல்லை நிலையம், விலை 55ரூ. கமல விஜயம், மங்கையர்க்கரசியின் காதல், அனார்க்கலி உள்ளிட்ட 8 தலைப்புகளில் எழுதப்பட்ட கதைகள் அடங்கிய நூல். இதில் இடம் பெற்றுள்ள கதைகளை படிப்பவர்களின் உள்ளத்தை உருக்குவதுடன், உயர்ந்த கருத்துக்களை படிப்பவர்களுக்கு கற்றுதரும் பாடமாகவும் அமைந்துள்ளது. தமிழில் கதை எழுதுபவர்களுக்கு இந்த நூல் ஒரு நல்வழியை காட்டுகிறது. நன்றி: தினத்தந்தி, 16/8/2017.

Read more

தாயுமானவ சுவாமிகள் பாடல் – அரிய பழைய உரை

தாயுமானவ சுவாமிகள் பாடல் – அரிய பழைய உரை, சு. இலம்போதரன், முல்லை நிலையம், பக். 656, விலை 450ரூ. வேதாந்த – சித்தாந்த நெறி நின்ற தாயுமானவரின், 1,451 பாடல்களுக்குப் பலர் எழுதிய உரைத் தொகுப்போடு, செய்குதம்பி பாவலரின் கைவண்ணமும் கலந்து வெளிவந்துள்ள இவ்வரிய உரை தனித்தன்மை வாய்ந்தது. காலத்தால் பிற்பட்டவர் எனினும் அத்வைத நெறியை, தனது செழுமைச் சிந்தனைகளால் வெளிப்படுத்திய மகான். உரைச் சிறப்பிற்கு ஒரு சில உதாரணங்கள்: ‘அங்கிங்கெனாதபடி’ என்ற முதல்பாடலில், ‘மனவாக்கனிற் தட்டாமல் நின்றதெது’ என்னும் அடிக்கு, (பக்.100) […]

Read more

தாயுமான சுவாமிகள் பாடல் உரை

தாயுமான சுவாமிகள் பாடல் உரை, பதிப்பாசிரியர் சு. இலம்போதரன், முல்லை நிலையம், விலை 450ரூ. இந்திய தத்துவ ஞான மரபில் தாயுமான சுவாமிகளுக்கென்று தனியிடம் உண்டு. தாயுமானவர் ஒரு ஞானக்கடல். அதில் தத்துவ முத்துக்களும், தரங்குறையா பவழங்களும் நிரம்ப உண்டு. அத்தகைய தாயுமான சுவாமிகளின் பாடல்களை அரிய பழைய உரையுடன் க. இலம்போதரன் தொகுத்துள்ளார். “கல் எறியப் பாசி கலைந்து நன்னீர் காணும், நல்லோர் சொல் உணரின் ஞானம் வந்து தோன்றும் பராபரமே” என்று எளிய உவமையைக் கூறி தாயுமானவர் நம்மைத் தெளிவுபடுத்துகிறார். மலரின் […]

Read more

தாயுமான சுவாமிகள் பாடல் அரிய பழைய உரை

தாயுமான சுவாமிகள் பாடல் அரிய பழைய உரை, பதிப்பாசிரியர் சு. இலம்போதரன், முல்லை நிலையம், சென்னை, பக். 656, விலை 450ரூ. தாயுமானவரை ஒரு தத்துவ ஞானி, தத்துவ வித்து, ஞானக்கடல், சித்தர் என்றெல்லாம் கூறுவர். அந்த அளவிற்கு அவருடைய பாடல்களில் தத்தவம், சைவ சித்தாந்தம், சித்தர் இலக்கியம் போன்றவை ஆழமாகப் பதிவாகியுள்ளன. அவர் விராலிமலைச் சித்தர்களுடன் நெருங்கிப் பழகியவர். இல்லறத்தானாக இருந்து பின்னர் துறவறம் பூண்டவர். திருவருள் விலாசப் பரசிவ வணக்கம், பொருள் வணக்கம், கருணாகரக் கடவுள், பரிபூரணானந்தம், சின்மயானந்த குரு பதிகம், […]

Read more

பேரறிஞர் அண்ணா களஞ்சியம்

பேரறிஞர் அண்ணா களஞ்சியம், குமுதவல்லி பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 200ரூ. அப்பாவித் தோற்றமளித்த அறிஞன். எதிராளியையும் வசப்படுத்திய வசியன். குரலால், எழுத்தால் ஆண்ட மன்னன். தமிழ்நாட்டின் அண்ணன், சி.என்.ஏ. என்னும் மூன்றெழுத்தால் அறிமுகமான அறிஞர் அண்ணா பற்றிய கட்டுரைக் களஞ்சிய நூல். இந்நூல் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்று சுருக்கக் குறிப்பும், அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் அண்ணா பற்றி எழுதிய புகழ்மாலை தொகுப்பும், கவிஞர்களின் கவிதைத் தொகுப்பும், அண்ணாவின் மறைவுக்குப் பின் தலைவர்கள் தெரிவித்த இரங்கல் உரைகளும் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. திறனாய்வுச் செம்மல் எம்.எஸ்.தியாகராஜன் இத்தொகுப்பை செம்மைப்படுத்தியிருக்கிறார். […]

Read more

விவேக சிந்தாமணி

விவேக சிந்தாமணி, புலவர் தமிழமுதன், முல்லை நிலையம், 9, பாரதி நகர், சென்னை 17, பக். 128, விலை 45ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-602-2.html கருத்துக்களைக் கூறும் நூல்கள் பலவும் நல்லனவற்றையும் தீயனவற்றையும் எடுத்துக் கூறி, மனிதன் சிறந்து வாழ வழிகாட்டிகளாக விளங்குவன. அந்த வகையில் காலத்தால் பிற்பட்ட அறநூல்களில் ஒன்றாக விளங்கும் விவேக சிந்தாமணி. எளிமையான அறவுரைகளைச் சுவைபடக் கூறுகிறது. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. காலமும் அப்படியே. கற்பனையும் உவமையும் அமைந்த பல பாடல்களைக் கொண்ட […]

Read more

கலிங்கத்துப் பரணி

கலிங்கத்துப் பரணி, ஆ.வீ. கன்னைய நாயுடு உரை, முல்லை நிலையம், சென்னை 17, பக். 392, விலை 175ரூ. ஆயிரம் யானைகளை போரில் வென்ற ஆண்மை வாய்ந்த தலைமகனைச் சிறப்பித்துப் பாடுவத பரணி. தொண்ணூற்று வகை பிரபந்தங்களுள் ஒன்று. தமிழ்த் தரணி போற்றும் பரணிகள் பல உள்ளன. எனினும், பரணி என்றதுமே நினைவுக்கு வருவதும், முதன்மையானதும் ஜெயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப் பரணியே. இதற்கு பலர் உரை எழுதியுள்ளனர். ஆனால், படிப்போர் மிக எளிதாய்ப் புரிந்துகொள்ளும் வகையில் சொல்லுக்குச் சொல் என்ற அளவில் பதவுரையும், நீரோடை […]

Read more
1 2