ஓநாய் குலச்சின்னம்

ஓநாய் குலச்சின்னம்,(சிறந்த மொழிபெயர்ப்பு புனைவு), சி. மோகன், அதிர்வு பதிப்பகம். மாவோ தலைமையில் சீனாவில் நடந்த கலாசாரப் புரட்சியைத் தொடர்ந்து அங்கு அழிந்துபோன அல்லது அழித்தொழிக்கப்பட்ட மேய்ச்சல் நிலங்களின் தொன்மையை, நாகரிகத்தை, அவை அழித்தொழிக்கப்பட்ட வன்முறையைப் பேசும் வரலாற்று ஆவணம் ஓநாய் குலச்சின்னம். 2004ம் ஆண்டு வெளியாகி Wolf Totem என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. நாவலின் ஆசிரியர் ஜியாங் ரோங், சீனாவின் ஜியாங்சூவில் பிறந்தவர். வெளியான இரண்டே ஆண்டுகளில் 40 லட்சம் பிரதிகள் சீனாவில் விற்பனையான இந்த நாவல், மங்கோலிய மேய்ச்சல் நில […]

Read more

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், மயிலை சீனி. வேங்கடசாமி, முல்லை நிலையம், 9, பாரதி நகர் முதல் தெரு, தியாகராய நகர், சென்னை 17, பக். 176, விலை 55ரூ. தமிழர்களின் கட்டடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை, இசைக்கலை, நடனக் கலை, நாடகக் கலை, இலக்கியக் கலை ஆகியவற்றைப் பற்றி தெளிவாகவும் ஓரளவு விரிவாகவும் எழுதப்பட்டுள்ள நூல். அழகுக் கலை என்பது ஒப்பனை மட்டுமல்ல என்பதை விளக்கும்விதமாக அழகுக் கலைகள் யாவை? என்ற தலைப்பில் ஒரு சிறப்பான கட்டுரையை எழுதியுள்ளார் நூலாசிரியர். […]

Read more

சங்க இலக்கிய மாண்பு

சங்க இலக்கிய மாண்பு, பேராசிரியர் இரா. மோகன், வானதி பதிப்பகம், பக். 186, விலை 85ரூ. சங்க இலக்கியத்தின் மாண்பும், அதன் ஆளுமை பண்பும், இன்றைய சமூகத்திற்கு ஏற்றவாறு புனையப்பட்டிருக்கின்ற பாங்கும், இளைய தலைமுறை அறிய வேண்டியது அவசியம். சங்க இலக்கியத்தில் கையாளப்பட்டிருக்கும் சொற்கள், பொருள் கடினமாக, நடை சிரமமாக இருப்பதால், அதன் கருத்துக்கள் இன்றைய தலைமுறையை எளிதாக எட்டவில்லை. எனவே, அவை கூறும் அரிய கருத்துக்களை, எளிய தமிழ் நடையில் கட்டுரையாக தந்துள்ளார் ஆசிரியர். ஆழிபெருஞ்சித்திரனாரின் சான்றாண்மையும், கோப்பெருஞ்சோழனின் கவித்திறமும், சங்க சான்றோர்களின் […]

Read more

வெற்றிக்கொடி கட்டு

வெற்றிக்கொடி கட்டு, நாகூர் ருமி, சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.120, விலை 80ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-392-3.html பள்ளி, கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு, இலக்கு, லட்சியம் என்று இருந்திருக்கும். கல்லூரியை விட்டு வெளியே வந்து நிதர்சனத்தை எதிர்கொள்ளும்போது, பலருக்கு அவர்களது கனவுகளும் இலக்குகளும் எங்கோ விலகிச் சென்றிருக்கும். இது யதார்த்தம். அப்படிப்பட்டவர்களை வழி நடத்திச் செல்லும் நிலையில் உள்ள பெற்றோருக்கும், மூத்தோருக்கும் உதவும் வகையில், இந்த நூலை எழுதியிருக்கிறார் ஆசிரியர். கால் நூற்றாண்டுக்கும் மேலாகப் […]

Read more

மறவர் சரித்திரம்

மறவர் சரித்திரம், வீ. ச. குழந்தை வேலுச்சாமி, முல்லை நிலையம், 9, பாரதிநகர், முதல்தெரு, தி.நகர், சென்னை 17, விலை 60ரூ. தமிழகத்தின் பழமை குடி மக்கள் என்று கூறப்படும் மறவர்கள் வாழ்ந்து வந்த பகுதிகள், நாயக்கர் அரசாட்சியில் தென்நாட்டு பகுதிகளில் மன்னவர்களாய் மறவர்கள் இருந்த பெருமைகள் உள்ளிட்ட மறவர்கள் பற்றிய பல தகவல்களை இந்நூல். நன்றி: தினத்தந்தி, 22/5/13   —-   மண்ணை அளந்தவர்கள், பழ. கோமதி நாயகம், பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை […]

Read more

ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி

மங்களேஸ்வரியம், ஜோதிடர் அல்லூர் வெங்கட்ராமன், ஸ்ரீ ஆனந்த நிலையம், சென்னை – 600 083, பக்கம்: 676, விலை: ரூ. 360. வராகமிஹிரர், வடமொழியில் எழுதிய பிரஹத் ஜாதகம் என்ற பிரபல நூலை, தமிழில் செய்யுளாக பாடிய புலவர்கள் இருவர். இலிங்கன் என்பவரும், வைத்திலிங்கம் என்ற ஜோதிடரும் தமிழில் மங்களேஸ்வரியம் என்னும் பெயரில், மொழி பெயர்த்தும் பாடியுள்ளனர். அதற்கு, விளக்க உரை தந்திருக்கிறார் நூலாசிரியர். ஓரளவு, ஜோதிட ஞானம் உள்ளவர்கள், எளிதில் இதைப் புரிந்து கொள்ளலாம். ஆங்காங்கு காணப்படும், அச்சுப் பிழைகள் கவனத்துடன், அடுத்த […]

Read more

நான் கண்ட நகரத்தார்

நான் கண்ட நகரத்தார், அமுதா பதிப்பகம், ஏ82, அண்ணாநகர், சென்னை – 102. விலை ரூ. 70 தமிழ்நாட்டில் உள்ள செட்டிநாட்டுக்குத் தனிச்சிறப்பு உண்டு. ‘நகரத்தார்’ என்று அழைக்கப்படும் செட்டியார்கள், 5 ஆயிரம் ஆண்டுகால வரலாறு படைத்தவர்கள். இங்குள்ள வீடுகள் அரண்மனை போன்று பிரமாண்டமானவை. அந்த “அரண்மனை”யின் பூட்டு, ஒரு அடிக்கு ஒரு அடி கொண்ட சதுரமானது! பூட்டு இவ்வளவு பெரிது என்றால் சாவி – ஒரு அடி நீளம் கொண்டது! எடை ஒரு கிலோ! எழுத்தாளரும், தொழில் அதிபருமான ‘அமுதா’ பாலகிருஷ்ணன் செட்டிநாட்டில் […]

Read more

ஆடத்தெரியாத கடவுள்

ஆடத்தெரியாத கடவுள், நீதிபதி எஸ்.மகாராஜன், விகடன் பிரகரம், 757 அண்ணாசாலை, சென்னை – 2; விலை ரூ. 150 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-722-2.html   ஒரே சமயத்தில் இரட்டைக் குதிரைகள் மீது சுவாரி செய்து, சரியான இலக்கை அடைந்து வெற்றிக்கனியைப் பறித்து இருக்கிறார், நீதிபதி எஸ்.மகாராஜன். இலக்கியம், நீதி என்ற இரு வேறு துறைகளில் தனக்குள்ள புலமையை அருமையான கட்டுரைகளாக ஒருசேர வார்த்தெடுத்து இருக்கிறார். அனைத்து கட்டுரைகளிலும் ஏராளமான இலக்கியங்களில் இருந்து மேற்கோள் காட்டி, தன்னை சிறந்த இலக்கியவா தியாகவும், […]

Read more

கலிங்கத்துப் பரணி

கலிங்கத்துப் பரணி, உரையாசிரியர் – ஆ.வீ. கன்னைய நாயுடு, பக்கம் 392, முல்லை நிலையம், சென்னை – 17, விலை 175 ரூ. ஆயிரம் யானைகளை போரில் வென்ற ஆண்மை வாய்ந்த தலைமகனைச் சிறப்பித்துப் பாடுவது பரணி. தொண்ணூற்று வகை பிரபந்தங்களுள் ஒன்று. தமிழ்த்தரணி போற்றும் பரணிகள் பல உள்ளன எனினும், பரணி என்றதுமே நினைவுக்கு வருவதும், முதன்மையானதும் ஜெயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப்பரணியே. இதற்கு பலர் உரை எழுதியுள்ளனர். ஆனால் படிப்போர் மிக எளிதாய்ப் புரிந்துகொள்ளும் வகையில் சொல்லுக்குச் சொல் என்ற அளவில் பதவுரையும், நீரோடைபோன்ற […]

Read more
1 2