கடல் தாவிய கதாநாயகன்

கடல் தாவிய கதாநாயகன், முனைவர் கு. ஞானசம்பந்தன், வானதி பதிப்பகம், விலை 80ரூ. ராமதூதனாக கடலைத் தாண்டி இலங்கைக்குச் சென்றவர் அனுமார். சிரஞ்சீவி வரம் பெற்றவர். ராமாயணம், மகாபாரம் இரண்டிலும் இடம் பெற்ற ஒரே கதாபாத்திரம். அத்தகைய சிறப்பு பெற்ற ஆஞ்சநேயரின் பெருமைகளைக் கூறுகிறார் பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தன். நன்றி: தினத்தந்தி, 13/9/2017.

Read more

கவிதை ஒளி

கவிதை ஒளி, பேராசிரியர் இரா. மோகன், வானதி பதிப்பகம், பக். 198, விலை 130ரூ. உரைநடை இலக்கியத்தில் தனிமுத்திரை பதித்துள்ள பேராசிரியர் இரா.மோகனின் 22 கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. தொன்மை இலக்கியத்திலும், புதுமைஇலக்கியத்திலும் நிறைய ஆய்வுக் கட்டுடிரைகள் எழுதியுள்ள இவர், இந்நூலில் மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், ஹைக்கூ, சங்க இலக்கியம் பற்றிய கட்டுரைகள் தந்துள்ளார். ‘கவி ஆளுமைகள், கவிதைக் கீற்றுகள்’ என்ற தலைப்பிலான அத்தியாயங்களில், 13 கவிஞர்களின் சொல் ஆளுமையை, நேர்த்தியான ஒப்பீடுகளுடன் விளக்கி உள்ளார். ‘கேட்டிசின் வாழி தோழி’ என்ற குறுந்தொகை […]

Read more

எலும்போடு ஒரு வாழ்க்கை

எலும்போடு ஒரு வாழ்க்கை,  பிரபல ஆர்த்தோபீடிக் சர்ஜன் மயில்வாகனன் நடராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு, ராணி மைந்தன், வானதி பதிப்பகம், பக்.224, விலை ரூ.275. முடநீக்கியலின் தந்தை என்று போற்றப்படும் டாக்டர் எம்.நடராஜனின் வழிகாட்டுதலால், அவருடைய மகனான டாக்டர் மயில்வாகனன் நடராஜன், முடநீக்கியல்துறையில் கடந்த 30 ஆண்டுகளாகச் சிறந்து விளங்கி அத்துறையில் புகழின் உச்சியை எப்படி அடைந்தார் என்பது இந்நூலில் எளிய நடையில் விவரிக்கப்பட்டுள்ளது. நூலாசிரியர் ராணிமைந்தன் டாக்டர் மயில்வாகனன் நடராஜனின் வாழ்க்கை வரலாற்றையும், முடநீக்கியல் மருத்துவம் தொடர்புடைய அனைத்துத் தகவல்களையும் இந்நூலில் பதிவு செய்திருப்பது […]

Read more

அறிவோமா பிரம்ம சூத்திரம்

அறிவோமா பிரம்ம சூத்திரம், வ.ந.கோபால தேசிகாசாரியார், வானதி பதிப்பகம், பக். 216, விலை150ரூ. இந்திய நாட்டில், ஆன்மிக பொக்கிஷங்களாக இருப்பவை உபநிஷத்துக்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை என்று பெரியோர் கூறுவர். இம்மும்மணிகளில் பிரம்ம சூத்திரம் வியாச முனிவரால் எழுதபட்டு, பின் ஆதிசங்கரர், ஸ்ரீமத் ராமானுஜர், மத்வர் ஆகிய மூவரால் உரை விளக்கங்கள் எழுதப்பட்டன. இந்நூல், ஸ்ரீமத் ராமானுஜர் எழுதிய வடமொழி உரையை, மிக எளிய தமிழில், யாவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் வெளிவந்து உள்ளது. வேதங்கள் கர்ம காண்டம், பிரம்ம காண்டம் என்று […]

Read more

முதுமை ஒரு முழுநிலா

முதுமை ஒரு முழுநிலா (வினா விடையில் முதியோர் நல மருத்துவம்), டாக்டர் வ.செ.நடராசன், வானதி பதிப்பகம், பக்.223, விலைரூ.150. முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் பற்றி கேள்வி-பதில் வடிவில் எழுதப்பட்டுள்ள சிறப்பான நூல் இது. சென்னை அரசு பொது மருத்துவமனையில் 35 ஆண்டுகளுக்கு முன்பே முதன்முறையாக முதியோர் நல மருத்துவத் துறையை ஏற்படுத்தியவர் டாக்டர் வ.செ.நடராசன். முதுமையை வெற்றிகரமாக எதிர்கொண்டு தரமான வாழ்க்கையை வாழ்வதற்கு முதுமை, உடல் நலம், மூளை நரம்பு நோய்கள், மூட்டு-எலும்பு தொல்லைகள், உடற்பயிற்சி, மன நலம், உணவு முறைகள், […]

Read more

எலும்போடு ஒரு வாழ்க்கை

எலும்போடு ஒரு வாழ்க்கை, பிரபல ஆர்த்தோபீடிக் சர்ஜன் மயில்வாகனன் நடராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு, ராணி மைந்தன், வானதி பதிப்பகம்,  பக்.224, விலை ரூ.275. முடநீக்கியலின் தந்தை என்று போற்றப்படும் டாக்டர் எம்.நடராஜனின் வழிகாட்டுதலால், அவருடைய மகனான டாக்டர் மயில்வாகனன் நடராஜன், முடநீக்கியல்துறையில் கடந்த 30 ஆண்டுகளாகச் சிறந்து விளங்கி அத்துறையில் புகழின் உச்சியை எப்படி அடைந்தார் என்பது இந்நூலில் எளிய நடையில் விவரிக்கப்பட்டுள்ளது. நூலாசிரியர் ராணிமைந்தன் டாக்டர் மயில்வாகனன் நடராஜனின் வாழ்க்கை வரலாற்றையும், முடநீக்கியல் மருத்துவம் தொடர்புடைய அனைத்துத் தகவல்களையும் இந்நூலில் பதிவு செய்திருப்பது […]

Read more

வா நம் வசப்படும் மணிக்கட்டுரைகள்

வா நம் வசப்படும் மணிக்கட்டுரைகள், அ. கோவிந்தராஜ், வானதி பதிப்பகம், பக். 174, விலை 110ரூ. வீதிகள் தோறும், ஆங்கிலக் கல்விக் கூடங்கள் நிரம்பியுள்ள நிலையில், கற்றல், கற்பித்தல் என்பது, ஆசிரியர், மாணவர்கள் என இருதரப்பிற்குமே, பெரும் சுமையாகவே உள்ளது. கல்வி என்பது, பொருளீட்டும் முதலீடாகவே கருதப்படும் அளவுக்கு சமூக மாந்தரின் சிந்தனை சுருங்கி விட்ட நிலையில், கற்றலும், கற்பித்தலும் எப்படி இருக்க வேண்டும் என்பதை, நன்னூல் ஆசிரியர் பவணந்தி முனிவர் எழுதியவற்றிலிருந்து மேற்கோள் காட்டி, வகுப்பறை ஒழுக்கங்களை முதல் பத்து கட்டுரைகளில், செம்மையுடன் […]

Read more

திருக்கோயில்கள் திருவிழாக்கள்

திருக்கோயில்கள் திருவிழாக்கள் (சில சுவையான தகவல்கள்), கைலாசம் சுப்ரமணியம், வானதி பதிப்பகம், பக்.480, விலை ரூ.300. ஆலயங்கள் அனைத்தும் கலை, கலாசாரம் இவற்றின் உறைவிடமாகத் திகழ்வதை இந்நூல் எடுத்தியம்புகிறது. ஆலயங்களில் கலைகள், நூல்களின் அரங்கேற்றம் நடைபெறுதல், கோயில்கள் கட்டுதல், கோபுரம் அமைத்தல், தெய்வங்கள் மூலவர், உற்சவர் திருமேனிகள் செய்தல், தெய்வத்திற்கு ஆபரணங்கள் செய்தல், வாகனங்கள், தேர், சிற்பங்கள் செய்தல் என எல்லாக் கலைகளுமே ஆலயத்தை மையமாகக் கொண்டு வளர்ந்து வருவதை விளக்குகிறது. சைவ ஆகமங்கள், வைணவ ஆகமங்கள் கொடியேற்றம் (துவஜாரோஹணம்), கொடியிறக்கம் (துவஜஅவரோஹணம்), துவஜஸ்தம்பத்தின் […]

Read more

தாம்பத்திய வழிகாட்டி அந்தப்புரம்

தாம்பத்திய வழிகாட்டி அந்தப்புரம், விகடன் பிரசுரம், விலை 125ரூ. புதிதாக மணம் செய்து கொண்டவர்கள், மணம் செய்யப்போகிறவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி பிரபல டாக்டர் டி. நாராயண ரெட்டி இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். கேள்வி – பதில் பகுதியும் அடங்கியுள்ளது. ஷ்யாம் வரைந்துள்ள படங்கள் கண்ணைக் கவருகின்றன. நன்றி: தினத்தந்தி, 23/3/2017   —-   இரா. இரவியின் படைப்புலகம், பேராசிரியர் இரா. மோகன், வானதி பதிப்பகம், விலை 70ரூ. இரா.இரவி எழுதிய 10 நூல்களுக்கு இரா. மோகன் எழுதிய அணிந்துரைகள் […]

Read more

படித்தாலே இனிக்கும்

படித்தாலே இனிக்கும், பேராசிரியர் நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், பக். 118, விலை 80ரூ. கருத்தரங்குகளில் வாசிக்கப்பெற்ற கட்டுரைகள், நூல்களுக்கு வழங்கப்பட்ட அணிந்துரைகள், கலை. இலக்கியம், இசை, நாடகம் என்று பன்முக நோக்கில் எழுதப்பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு. பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன், அருட்செல்வர், நா. மகாலிங்கம், பேராசிரியர் க. வெள்ளைவாரனார், ஏர்வாடியார் என்று பலரின் ஆளுமையைப் பற்றி அறிந்து கொள்ள முடியும் நூல்களை தேடிப்பிடித்து படிக்க வைக்க உதவும் கட்டுரைகள் இவை. நன்றி: குமுதம், 19/4/2017.

Read more
1 8 9 10 11 12 22