கவிதைச் சிறகுகள்

கவிதைச் சிறகுகள், வானதி பதிப்பகம், விலை 160ரூ. கவிதை நாற்றுகள், கவிதை கீற்றுகள், கவிதை சிறகுகள், இலக்கிய ஆளுமைகள் என்ற தலைப்பில் பேராசிரியர் மோகன் படைத்துள்ள திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. கவிஞர்கள் செல்லகணபதி, ரெ.முத்துக் கணேசன், பெ. சிதம்பரநாதன், பாரதி வசந்தன், இளசை சுந்தரம், துணை வட்டாட்சியர் பே.ராஜேந்திரன், கம்பதாசன் போன்றோரின் கவிதைகளில் உள்ள நயங்களை எடுத்துச் சொல்கிறார். உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள், புதுக்கவிதையில் நிகழ்காலப் பதிவுகள் அருமை. கவிஞர்களை மட்டுமல்ல இலக்கிய ஆளுமைகள் பற்றியும் இந்த நூலில் அவர் அழகுற எடுத்துக் […]

Read more

வெளிச்ச விதைகள்

வெளிச்ச விதைகள், கவிஞர் இரா.ரவி, வானதி பதிப்பகம், விலை 120ரூ. முற்போக்கு சிந்தனைக் கொண்ட நூலாசிரியர், உணர்வு பூர்வமான, சிந்திக்க கூடிய தலைப்புகளில் கவிதைகள் தொகுப்பை வெளியிட்டு உள்ளார். குறிப்பாக விழிகளை விற்று ஓவியம் வாங்கலாமா? வாக்குகளை விற்று பணம் வாங்கலாமா? என்ற ஆழமான பல்வேறு கருத்துகள் இந்த நூலில் அடங்கியுள்ளன. நன்றி: தினத்தந்தி, 1/3/2017.

Read more

தமிழ்க்கதிர் வ.சு.ப.மாணிக்கனார்

தமிழ்க்கதிர் வ.சு.ப.மாணிக்கனார், இரா.மோகன், நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், பக். 230, விலை 150ரூ. தமிழறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள நூல் இது. ஒருவரது நூற்றாண்டு விழா எனில் அவரது வாழ்க்கை வரலாறு, படைப்புகள், விருதுகள் என தனிப்பெருமை போற்றும் வழக்கமான நிலையில், வ.சுப.மாணிக்கனாரின் தமிழ் நூல்களைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூலாக்கியிருக்கிறது. தொல்காப்பியத்தை மற்ற பேராசிரியர்களிலிருந்து வ.சுப.மாணிக்கனார் எப்படி வேறுபட்டு பார்க்கிறார் என்பது மிக நுட்பமாக விளக்கப்பட்டுள்ளது. தமிழ் பல்துறை ஆராய்ச்சிக்கு உரியதாக வளர்ந்தாலும், யாப்பு குறித்த ஆய்வு […]

Read more

தமிழ்க்கதிர் வ.சுப.மாணிக்கனார்

தமிழ்க்கதிர் வ.சுப.மாணிக்கனார், இரா. மோகன், நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், பக். 230, விலை 150ரூ. தமிழறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள நூல் இது. ஒருவரது நூற்றாண்டு விழா எனில் அவரது வாழ்க்கை வரலாறு, படைப்புகள், விருதுகள் என தனிப்பெருமை போற்றும் வழக்கமான நிலையில், வ.சுப.மாணிக்கனாரின் தமிழ் நூல்களைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூலாக்கியிருக்கிறது. தொல்காப்பியத்தை மற்ற பேராசிரியர்களிலிருந்து வ.சுப.மாணிக்கனார் எப்படி வேறுபட்டு பார்க்கிறார் என்பது மிக நுட்பமாக விளக்கப்பட்டுள்ளது. தமிழ் பல்துறை ஆராய்ச்சிக்கு உரியதாக வளர்ந்தாலும், யாப்பு குறித்த […]

Read more

அறிவியலுக்கு அப்பால்

அறிவியலுக்கு அப்பால், நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன், வானதி பதிப்பகம், பக். 152, விலை 125ரூ. நம்மைச் சுற்றிலும் அறிவியலுக்கு அப்பாற்பட்டு எவ்வளவோ நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அறிவியலுக்கே சவால் விடுபவை அவை. அவற்றில் சிலவற்றை அலசி, அவற்றை மூடத்தனம் என்று ஒதுக்காமல், அதில் உள்ள உண்மைத்தன்மையை தேட வைக்கும் முயற்சி இந்நூல். இசை ஞானமே இல்லாத ரோஸ்மேரி பிரவுன் – இசைமேதைகளின் ஆவியுலகில் இருந்து தரப்பட்ட புது கம்போசிஷன்களில் இசைத்தட்டுக்களை விற்பனைக்குக் கொண்டு வந்தது, அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி கொல்லப்படுவதை முன்கூட்டியே […]

Read more

வெளிச்ச விதைகள்

வெளிச்ச விதைகள், கவிஞர் இரா. இரவி, வானதி பதிப்பகம், பக். 190, விலை 120ரூ. ‘உலகில் உறவுகள் ஆயிரம் இருந்தாலும் பெற்ற அம்மாவிற்கு, நிகர் ஏதுமில்லை’ என்று தாயையும் உலகை உணர்த்தும் ஆசான் என்று தந்தையையும் போற்றும் கவிஞர் இரவியின் கவிதைகள் போற்றுதலுக்குரியவை. பெண்மை, தமிழர், தமிழ்மொழி, இயற்கை, தன்னம்பிக்கை, சமூக அவலங்கள் என்று படிப்போர் மனதில் கவிதை கொண்டு உழவிட்டு வெளிச்ச விதைகளை கவிதைதோறும் விதைத்துப் போகிறார். -இரா. மணிகண்டன், நன்றி: குமுதம், 25/1/2017.

Read more

கம்ப நதிக்கரையினிலே

கம்ப நதிக்கரையினிலே, ஆர். குறிஞ்சி வேந்தன், வானதி பதிப்பகம், பக்.100, விலை 70ரூ. கம்பர் காவியத்தின் பல அழகுகளைக் கூறும் நூலாக அமைந்துள்ளது. கம்பனைச் சுவைக்கும் அன்பர்களுக்கு நல்லதொரு விருந்தாக இந்நூல் திகழ்கிறது எனலாம். ‘கம்ப ராமாயணத்தை விதை நெல்லைப் போல பாதுகாத்து எதிர்காலச் சமூகத்திடம் தந்து விட வேண்டும்’ என்ற நூலாசிரியரின் கனவுக்கு இந்நூல் ஓர் எடுத்துக்காட்டு எனலாம். இந்நூலில் 12 கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் பட்டை தீட்டப்பட்ட வைரமாக விளங்குகின்றன. ‘நதியின் பிழையன்று நறும்புனலின்மை’ என்றும், ‘நின் பிரிவினும் சுடுமோ […]

Read more

வளரும் ஒலிபரப்புக்கலை

வளரும் ஒலிபரப்புக்கலை, கோ. செல்வம், விஜயதிருவேங்கடம், வானதி பதிப்பகம், பக். 224, விலை 150ரூ. சோ.சிவபாதசுந்தரம் 1954 இல் எழுதிய “ஒலிபரப்புக்கலை‘’ என்ற நூலின் தொடர்ச்சியாக – அதன் வளர்ச்சிநிலையாக – இந்நூல் மலர்ந்திருக்கிறது. ஒலிப்பரப்புத்துறையில் நீண்ட காலம் அனுபவம் பெற்ற நூலாசிரியர்கள் இந்த நூலை எழுதியுள்ளார்கள். ஒலிபரப்புத்துறையின் பல்வேறு அங்கங்களை இந்நூல் விரிவாக விளக்குகிறது. வானொலி அறிவிப்பாளர் அல்லது தொகுப்பாளர் குரல் வளம், நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, சேர்ந்திசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்விதம், வானொலிக்கு எழுதும் முறை, வானொலிப் பேச்சின் தன்மை, வானொலி […]

Read more

வான் தொட்டில்

வான் தொட்டில், முனைவர் ஆ. மணிவண்ணன், வானதி பதிப்பகம், பக். 192, விலை 125ரூ. தன்னை உணர்ந்தவன் ஞானி. சமுதாயத்தை உணர்ந்தவன் மனிதன். இந்த இரண்டையும் உணர்ந்தவன் கலைஞன் என்ற கவிதையாய் கொட்டுகிறது இந்நுல். நன்றி: தினமலர், 06/11/2016.   —-   வளர்பிறைகளும் தேய்பிறைகளும், கழனியூரன், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 144, விலை 100ரூ. ஆசிரியர் தன் முதல் நாவலில் அனைத்து வகை சுவைகளையும் கூட்டி எழுதியுள்ளார். நன்றி: தினமலர், 06/11/2016.

Read more

முதல்வர் இவன்…

முதல்வர் இவன்… தமிழ்மறை தழைக்க வந்த ஸ்ரீ ராமானுஜர், முனைவர் கலியன் எதிராசன், வானதி பதிப்பகம், பக். 260, விலை 150ரூ. வைணவர்கள் தினமும் ஸ்ரீ ராமானுஜரை வழிபடுவதை வழக்கமாக கொண்டவர்கள். 120 ஆண்டுகள் வாழ்ந்த அம்மகானின், 1000மாவது ஆண்டை ஒட்டி இந்நூல் வெளிவந்துள்ளது. ஸ்ரீ ராமானுஜரின் வரலாற்றை நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களின் அடிகளை உரைநடைபோல் எழுதி, விளக்கிய பான்மை நூலாசிரியரின் ஆழ்ந்த புலமைக்கு எடுத்துக்காட்டாகும். ஆழ்வார்கள், ஆசாரியர்கள் வைணவத்தை வளர்த்தது, முதல் பகுதியிலும், ஸ்ரீ ராமானுஜர் அவதரித்தது முதல் அவர் ஸ்ரீ […]

Read more
1 9 10 11 12 13 22