வியப்பில் ஆழ்த்தும் சித்தர்கள்

வியப்பில் ஆழ்த்தும் சித்தர்கள், வானதி பதிப்பகம், விலை 450ரூ. முக்காலமும் உணர்ந்தவர்கள் சித்தர்கள், தவவலிமையினால் இறைவனின் இன்னருளைப் பெற்றவர்கள். அட்டமா சித்திகளைக் கைவரப்பெற்று அரிய செயல்களைப் புரிந்தவர்கள். பொதுவாகச் சித்தர்கள் எண்ணிக்கையில் 18பேர் என்பார்கள். அது உண்மையல்ல, நூறுக்கும் மேற்பட்ட சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அதன் அடிப்படையில் மா.ந.திருஞான சம்பந்தன் ஏற்கனவே ‘சித்தர்கள் ஒரு கண்ணோட்டம்’ என்ற நூலில் 81 சித்தர்களைப் பற்றி எழுதியுள்ளார். இந்த நூலில் பூண்டி மகான், மல்லையா சித்தர், கொடுவிலார் பட்டி சித்தர், பாடகச்சேரி ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள், ஸ்ரீரெட்டியப்பட்டி சுவாமிகள் […]

Read more

ஒப்பற்ற வாழ்வு தரும் உன்னத ஆலயங்கள்

ஒப்பற்ற வாழ்வு தரும் உன்னத ஆலயங்கள், வானதி பதிப்பகம், விலை 195ரூ. பனையபுரம் பனங்காட்டீசன் கோவில், பழையாறை வடதளி தர்பூரீஸ்வரர் கோவில், தேவதானப்பட்டி காமாட்சி ஆலயம், திருவண்ணாமலை மாவட்டம் சோமாசிபாடியில் அமைந்துள்ள அதிசய மலைக் கோவில், போடி பரமசிவம் கோவில், பேரையூர் நாகநாதசுவாமி ஆலயம் உள்பட 33 கோவில்கள் குறித்து பனையபுரம் அதியமான எழுதிய நூல். கோவில்களின் தொன்மை சிறப்பு, புராண சிறப்பு, அங்குள்ள இறைவனை வணங்குவதால் உண்டாகும் நன்மைகள், வழித்தடங்கள் போன்ற முழுமையான செய்திகள் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 14/9/2016

Read more

இதய ஒலி என் வாழ்க்கை அனுபவங்கள்

இதய ஒலி என் வாழ்க்கை அனுபவங்கள், பழனி ஜி. பெரியசாமி, வானதி பதிப்பகம், பக். 420, விலை 350ரூ. வாழ்வில் திட்டமிட்டு உழைத்து, உயர்ந்த சிகரங்களை எட்டியவர்களின் தன்வாழ்க்கை வரலாற்று நூல்கள், மற்றவர்களுக்கு முன் மாதிரியாக விளங்குபவை. அந்த வகையில், அமெரிக்கா வாழ் இந்தியரான டாக்டர் பழனி ஜி. பெரியசாமியின் வாழ்க்கை மிகவும் குறிப்பிடத் தக்கதாகும். நாமக்கல்லில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து, கல்வி வேட்கையால் உந்தப்பட்டு பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற அமெரிக்கா சென்ற பெரியசாமி, அங்கேயே கல்வியாளராக மாறினார். இருந்தபோதும் தாய்மண் மீதான […]

Read more

இதய ஒலி என் வாழ்க்கை அனுபவங்கள்

இதய ஒலி என் வாழ்க்கை அனுபவங்கள், பழனி. ஜி. பெரியசாமி, வானதி பதிப்பகம், பக். 352, விலை 350ரூ. கல்லும் முள்ளும் நிறைந்த கடினப்பாதையில் தொடங்கி, நிறைந்த முன்னேற்றத்தை அடைந்த தொழிலதிபர் பழனி.ஜி.பெரியசாமி, தன் அனுபவங்களை இந்த நூலில் பகிர்ந்து கொள்கிறார். சிலம்பொலி செல்லப்பனாரின் மாணவரான பெரியசாமி, அமெரிக்காவுக்கு மேற்படிப்பிற்காக சென்ற முதல் தலைமுறை இந்தியர் ஆக செல்லும் முன், அங்கு செல்ல தன் மாமனார் தயங்கியதை சுட்டிக்காட்டியிருப்பது, அருமை. ஆனாலும் தன் மனைவி அதை மீறி அனுப்ப முன்வந்தது, தமிழக குடும்பங்களில் உள்ள, […]

Read more

இதய ஒலி

இதய ஒலி, பழனி ஜி. பெரியசாமி, வானதி பதிப்பகம், விலை 350ரூ. இன்று தமிழ்நாட்டின் முக்கிய தொழில் அதிபர்களில் ஒருவராக விளங்கும் டாக்டர் பழனி ஜி.பெரியசாமி, சில காலத்துக்கு முன் அமெரிக்காவில் பொருளாதாரப் பேராசிரியராக இருந்தவர். தமிழக முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டபோது, அவரை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லவும், புரூக்களின் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகளை முன்நின்று செய்தவர். அதனால் எம்.ஜி.ஆர். இதயத்தில் தனி இடம் பெற்றவர். எம்.ஜி.ஆர். பற்றிய பல அபூர்வ தகவல்கள் இந்த நூலில் இடம் […]

Read more

கனவோடு நில்லாமல்

கனவோடு நில்லாமல், முனைவர் ஜெ. சதக்கத்துல்லாஹ், வானதி பதிப்பகம், விலை 150ரூ. இந்திய ரிசர்வ் வங்கியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான மண்டல இயக்குநர் முனைவர் ஜெ. சதக்கத்துல்லாஹ். மிக சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவராலும் உயர்ந்த பதவிக்கு வர முடியும் என்பதற்கு இவர் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. தனது வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளையும், அதைச் சாதனைகளாக மாற்றிய நிகழ்வுகளையும் அவர் இந்த நூலில் எளிய இனிய நடையில் சுவையாக விவரித்துள்ளார். இளம் வயதில் தந்தையை இழந்த அவர், தன் கல்வியைத் தொடர பட்ட பெரும்பாடுகளையும், […]

Read more

மனதில் பதிந்தவர்கள்

மனதில் பதிந்தவர்கள், கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், விலை 150ரூ. தன்னைக் கவர்ந்த பிரமுகர்களின் வாழ்க்கைச் சுருக்கத்தை ‘மனதில் பதிந்தவர்கள்’ என்ற தலைப்பில் கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் கட்டுரைகளைக எழுதி வருகிறார். இந்த வரிசையில் எட்டாவது புத்தகம் இப்போது வெளிவந்துள்ளது. வெ. இறையன்பு, நீதியரசர் மு. கற்பக விநாயகம், ‘கிருஷ்ணா சுவீட்ஸ்’ முரளி, ரவிதமிழ்வாணன், கவிஞர் முடியரசன் உள்பட 19 பேர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் இதில் அடங்கியுள்ளன. வாழ்க்கைக் குறிப்பு என்றால் வெறும் புள்ளி விவரங்கள் அல்ல. தன்னை கவர்ந்தவர்களை எழுத்தோவியங்களாகத் தீட்டி […]

Read more

மகராஜனா இரு

மகராஜனா இரு, அமரர் கல்கி, வானதி பதிப்பகம், பக். 292, விலை 200ரூ. கடந்த, 1930களில், தேசியம், காந்தியம், சமுதாயப் பொறுப்புணர்வு போன்ற விஷயங்களைப் பற்றி, அப்போது நிலவிய சூழலுக்கு ஏற்ப, ஆனந்த விகடனில் கட்டுரைகள் எழுதினார் கல்கி. அவற்றின் தொகுப்புதான் இந்த நூல். அன்று பேசப்பட்ட பல பிரச்னைகள், இன்று வரை நீடிக்கின்றன என்பதே யதார்த்தம். எவரையும் புண்படுத்தா நகைச்சுவை எப்படி இருக்கும், இருக்க வேண்டும் என்பதை உணர, இந்த நூலை அவசியம் படிக்க வேண்டும். சென்னைப் பல்கலைக்கழக நூலகத்திற்குள் பட்டதாரிகள் அல்லாதோர் […]

Read more

கணினி யுகத்திற்குத் திருவள்ளுவர்

கணினி யுகத்திற்குத் திருவள்ளுவர், இரா. மோகன், வானதி பதிப்பகம், பக்.208, விலைரூ.150. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட குறள், இந்தக் கணினி யுகத்துக்கும் பொருத்தமானதாக இருக்கிறது. இன்றைய நவீன யுகத்தில், அறிவுலகில் விவாதிக்கப்படும் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் குறள் உரக்கப் பேசுகிறது. குறிப்பாக, அதிகமாகவும், பரவலாகவும் விவாதத்துக்கு உள்படுத்தப்படும் “ஆளுமை வளர்ச்சி, மனித வள மேம்பாடு, விழுமியக் கல்வி (Value Education), தொடர்பியல் திறன்கள், உடன்பாட்டுச் சிந்தனை’ ஆகியவற்றுக்கு திருக்குறள் கருத்துகள் எவ்வாறு வலுசேர்க்கின்றன என்பது குறித்து விரிவாக ஆராய்கின்றன மேற்கண்ட தலைப்புகளிலான கட்டுரைகள். […]

Read more

தீர்க்கதரிசி

தீர்க்கதரிசி, தமிழில் சிவசங்கரி, வானதி பதிப்பகம், விலை 800ரூ. ஆந்திராவில் எளிய குடும்பத்தில் பிறந்து தமிழ்நாட்டில் குடியேறி உலக சாதனை புரிந்தவர் டாக்டர் பிரதாப் சந்திர ரெட்டி. ஒரு காலத்தில் அரசாங்க ஆஸ்பத்திரிகளும், நகரசபை ஆஸ்பத்திரிகளும்தான் இருந்தன. இந்நிலையில் சர்வதேச தரத்துக்கு ஆஸ்பத்திரிகளை அமைத்தார், பிரதாப் சி.ரெட்டி. இன்று அவருடைய அப்போலோ ஆஸ்பத்திரிகள், உலகப்புகழ் பெற்று விளங்குகின்றன. வெளிநாட்டவர்களும் இங்கு வந்து சிகிச்சை பெறுகிறார்கள். அப்போலோ மருத்துவமனைகள் ஒவ்வொரு நாளும் 60,000 பரிசோதனைகளைச் செய்கின்றன. 3000 அவசர நிலை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றன. 2200 […]

Read more
1 10 11 12 13 14 22