இன்றைக்கும் ஆராய்ச்சி மணி

இன்றைக்கும் ஆராய்ச்சி மணி, தி. இராஜகோபாலன், வானதி பதிப்பகம், விலை 120ரூ, மன்னர்கள் காலத்தில் அடிக்கப்பட்ட ஆராய்ச்சி மணி இன்றைய காலத்திற்கும் அவசியம் என்பதை தனது ஆய்வு கட்டுரைகளில் வலியுறுத்துகிறார் பேராசிரியர் தி. ராஜகோபாலன். சிங்கப்பூரை உலகின் தலைசிறந்த நாடுகளில் ஒன்றாக மாற்றுவதற்கு மறைந்த பிரதமல் லீ குவான் இயூ எடுத்துக்கொண்ட கடின முயற்சி, அயராத உழைப்பு இப்படியும் ஒரு தலைவர் வாழ்ந்தாரா? என பாராட்ட வைக்கிறது. பண்பாடு படும்பாடு கட்டுரைகளில் தொழில்நுட்ப துறை இளைஞர்களின் காதலின் முத்தம் குறித்து கடுமையாக சாடியிருக்கிறார். இப்படி […]

Read more

இமயமலைச் சாரலிலே

இமயமலைச் சாரலிலே, டி.கே.எஸ். கலைவாணன், வானதி பதிப்பகம், விலை 90ரூ. பொதுவாக பயண நூல் என்றால், அது பயணித்தவரின் அனுபவங்களின் வடிகாலாக மட்டுமே இருக்கும். ஆனால் “நாடக மன்னர்”அவ்வை டி. சண்முகத்தின் மகனான டி.கே.எஸ். கலைவாணன், அந்த மரபை மீறி தனது பயணத்தின் அனுபவங்களால் மற்றவர்கள் பயன் அடைய வேண்டும் என்ற நோக்கில் இதனை ஆக்கி இருக்கிறார். பயண ஏற்பாட்டாளர் மூலம் இமயமலையில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, ஹரித்துவார் போன்ற இடங்களுக்குச் சென்ற அவர், அங்கே பார்க்க வேண்டிய இடங்கள், தங்கும் […]

Read more

வழிகாட்டும் வள்ளுவம்

வழிகாட்டும் வள்ளுவம், வானதி பதிப்பகம், விலை 170ரூ. திருக்குறள் பற்றியும், திருவள்ளுவர் பற்றியும் புதுப்புது தகவல்களைக் கூறும் அரிய நூல் இது. பேராசிரியர் இரா. மோகன், அவர் மனைவி பேராசிரியர் நிர்மலா மோகன் இருவரும் இணைந்து இந்த நூலை எழுதியுள்ளனர். திருக்குறளுக்கு அறிஞர் – பெருமக்கள் எழுதிய உரைகளை ஆராய்ந்து, நாமக்கல் கவிஞர் சில குறள் பாக்களுக்கு எழுதியுள்ள நுட்பமான உரையை சுட்டிக்காட்டுகிறார்கள். திருவள்ளுவருக்கும், சீன அறிஞர் கன்பூசியசுக்கும் (கி.மு.551 – கி.மு.479) உள்ள ஒற்றுமைகள் பற்றியும் எடுத்துக் கூறுகிறார்கள். சுருக்கமாகக் கூறினால், திருவள்ளுவர் […]

Read more

இந்தியச் சிற்பி ஜவாஹர்லால் நேரு

இந்தியச் சிற்பி ஜவாஹர்லால் நேரு, ஜி. பாலன், வானதி பதிப்பகம், முதல் பாகம் விலை 270ரூ, இரண்டாம் பாகம் விலை 230ரூ. “மனிதருள் மாணிக்கம்”, “நவ இந்தியாவின் சிற்பி” என்றெல்லாம் புகழ்பெற்ற பண்டித ஜவஹர்லால் நேரு பற்றிய அபூர்வமான புத்தகம். வரலாற்று நூல்களையும், வாழ்க்கை வரலாறுகளையும் எழுதுவதில் புகழ்பெற்ற முனைவர் ஜி.பாலன் இதை எழுதியுள்ளார். செல்வம் மிகுந்த குடும்பத்தில் பிறந்தாலும், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு 1041 நாட்கள் சிறையில் கழித்தார், நேரு. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி ஏற்று, இந்தியாவை பொருளாதாரத்தில் முன்னேறச் […]

Read more

அப்துல்கலாம் பொன்மொழிகள்

அப்துல்கலாம் பொன்மொழிகள், தொகுப்பு ச.குமார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 75ரூ. தமிழகத்தில் பிறந்து இந்தியனாக வளர்ந்து உலக விஞ்ஞானிகளுள் ஒருவராகத் திகழ்ந்த நமது பாரத நாட்டின் ‘பாரத ரத்னா’ என்ற உயரிய விருது பெற்ற எளிமையான மாமனிதர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் வாழ்க்கைச் சுருக்கத்தையும், அவரின் பொன்மொழிகளையும் தொகுத்து அளித்திருக்கிறார் ச. குமார். அவருடைய பல நூல்களின் சாரத்தை இந்த ஒரே நூலில் அறிய முடிகிறது. மாணவ-மாணவிகள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 17/2/2016.   —- […]

Read more

திருக்கோயில் தரிசனம்

திருக்கோயில் தரிசனம், மகேந்திரவாடி உமா சங்கரன், வானதி பதிப்பகம், விலை 140ரூ. குற்றாலம் ஸ்ரீ குற்றாலநாதர்கோவில், நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர்கோவில், அனுமந்தபுரம் அகோர வீரபத்பத்திரர்கோவில், கூடுவாஞ்சேரி நந்தீஸ்வரர்கோவில், நேமம் ஆவுண்டீஸ்வரர் கோவில் மற்றும் சென்னை புறநகரில் அமைந்துள்ள கோவில்கள் உள்பட 40 கோவில்களைப் பற்றி மகேந்திரவாடி உமா சங்கரன் எழுதிய நூல்.  இந்து மத நெறியை அறிந்து கொள்ளவும், இந்தக் கோவில்களைத் தரிசிக்கவும் இந்த நூல் பெரிதும் உதவும். நன்றி: தினத்தந்தி, 12/2/2016.   —- முற்லிம் பெண்களின் நேர்வழிகாட்டி, எஸ்.கே.எஸ். பப்ளிஷர்ஸ், விலை […]

Read more

அகச்சுவடுகள்

அகச்சுவடுகள், கவிதாயினி அமுதா பொற்கொடி, வானதி பதிப்பகம், விலை 200ரூ. கவிதாயினி அமுதா பொற்கொடி எழுதிய கவிதைகளின் தொகுப்பு. “வல்லினமின்றி மெல்லினமின்றி இடையினமாய் அவதரித்தவள் நான்” என்று திருநங்கைகளைப் பற்றி பாடும்போதும், ‘பாருக்குள்ளே நல்ல நாடு’ என்ற தலைப்பில் ‘கலாவதி ஆனது நல வாழ்வு, கண்ணீரில் மிதக்குது பலர் வாழ்வு’ என்று மதுக்கடை பார்’ குறித்து சொல்லும்போதும் இவரது சொல்லாடல் நம்மை ரசிக்க வைக்கிறது. இந்தக் கவிதைத் தொகுதியில், அவர் சமூகக் கேடுகளையும், கலாச்சார சீரழிவுகளையும் சாடுகிறார். அவரது ஆழ் மனதின் உள்ளே உள் […]

Read more

அமுதும் தேனும்

அமுதும் தேனும், பேராசிரியர் இரா. மோகன், வானதி பதிப்பகம், பக். 242, விலை 150ரூ. முப்பது கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். ‘மூத்தோர் சொல்’ என்ற அத்தியாயத்தில், விவேகானந்தர், ரமண முனிவர், ராஜாஜி, நாமக்கல் கவிஞர், தமிழறிஞர் வ.அய். சுப்பிரமணியன், ஏர்வாடியார் ஆகியோர் பற்றிய கட்டுரைகள் அத்தனையும் அற்புதம். ‘இலக்கிய அமுது’ என்ற தலைப்பில் அகநானூறு, புறநானூறு பற்றிய ஆய்வுக் கட்டுரைகள், ஆசிரியரின் ஆழ்ந்த தமிழ் அறிவுக்கு சான்றாய் அலங்கரிக்கின்றன. இக்கால கவிஞர்களின் படைப்புகள் பற்றி தனி ஒரு அத்தியாயம். அதில் புதுக்கவிதை, மரபுக்கவிதை, […]

Read more

முகமற்றவர்களின் அரசியல்

முகமற்றவர்களின் அரசியல், கே.எம். சரீப், உயிர்மை பதிப்பகம், விலை 110ரூ. ஆதிக்க வர்க்கம் அதிகாரப் பசி கொண்டு அலைகிறது. அதிகாரத்திற்கு மாற்று வழியாக, மதவெறியை அது பயன்படுத்தப் பார்க்கிறது. மனித மூளைகளில் மத விஷம் ஏற்றுகிறது. தேசத்தை மரண வாயில் நோக்கி அது அழைத்துச் செல்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வியல் தேவைகள் இங்கே பூமிக்குக் கீழே புதைக்கப்படுகிறது. புதிய சமூகம் படைப்போம் என பிணந்தின்னும் பிசாசுகளே, இங்கே கூக்குரலிடுகின்றன. அரசியல் கட்சிகள் அடித்தட்டு மக்களின் ரத்தம் குடித்து மகிழ்கின்றன. இஸ்லாமியர்களும் சாமான்ய மக்களும் இங்கே […]

Read more

காமராஜ் புதிரா புதையலா

காமராஜ் புதிரா புதையலா, காமராஜ் விழிப்புணர்வு மையம், விலை 70ரூ. காமராஜரின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளை வைத்து வரலாறு எழுதுவதென்பது, வரலாற்றை வாசகர் தெரிந்துகொள்வதற்கு மட்டுமல்ல, அந்த வரலாற்றிலிருந்து வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டியவற்றை கற்றுக் கொள்வதற்கும்தான். அந்த எதிர்பார்ப்பில்தான் நூலாசிரியர் எஸ்.பி. கணேசன் இந்நூலை தொகுத்து அளித்திருக்கிறார். வரலாற்று பதிப்பு என்பதால் கூட்டி, குறைத்து என்றில்லாமல் மிக கவனத்துடன் எழுதப்பட்டிருக்கிறது. செய்தி சேகரிப்பை வகைப்படுத்திய விதம் நேர்த்தியாக இருக்கிறது. வாசகரின் செய்தித் தேடலுக்குத் தகுந்தாற்போல் தலைப்புகள் அமைந்திருக்கின்றன. இந்த நூலை வாசித்தால், நம் மனதில் […]

Read more
1 11 12 13 14 15 22