பூக்கள் விடும் தூது

பூக்கள் விடும் தூது, ஸ்ரீஜா வெங்கடேஷ், வானதி பதிப்பகம், பக். 224, விலை 100ரூ. இந்த நாவல் ஒரு வளர்ப்பு தாயின் பாசத்தையும், அவள் வாழ்வின் வேதனைகளையும் பேசுகிறது. அவள் வளர்த்த குழந்தைகளின் அன்புக்காக, தன் கடந்த கால வாழ்வை துன்ப மயமாக்கியோரை, மன்னிக்கவும் தயாராகிறாள் அந்த அன்னை. இந்த நூலில் இடம்பெறும் மற்றொரு நாவலான, காற்றோடு போராடும் பூக்கள் கீழ்த்தட்டு மக்களின் வாழ்வை சித்தரிக்கிறது. தந்தையின் குடிப்பழக்கத்தால், மகளின் கற்பே பறிபோகும் நிலை, அதிலிருந்து கதாநாயகி மீண்டாளா, அவளின் வாழ்க்கை லட்சியம் நிறைவேறியதா […]

Read more

பஞ்ச நாராயண கோட்டம்

பஞ்ச நாராயண கோட்டம், வானதி பதிப்பகம், சென்னை, விலை 300ரூ. டைரக்டர் சித்ராலயா கோபுவின் மகனும், இந்து நாளிதழின் மூத்த இணையாசிரியருமான காலச்சக்கரம் நரசிம்மா, புகழ் பெற்ற எழுத்தாளராகவும் விளங்குகிறார். பொன்னியின் செல்வனின் வரும் சில கதாபாத்திரங்களை வைத்து, இவர் எழுதிய சங்கதாரா என்ற நாவல் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. தன் மகள் வசந்திகாவை பிடித்த பேயை விரட்டியடித்த இராமானுஜாசாரியருக்கு, தாசனாக மாறிய சமண மன்னன் பிட்டிதேவன், விஷ்ணு வர்த்தனன் என்கிற வைஷ்ணவனாக மாறுகிறான். இந்த நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த சரித்திர நாவலை […]

Read more

51 அட்சர சக்தி பீடங்கள்

51 அட்சர சக்தி பீடங்கள், ஜபல்பூர் ஏ. நாகராஜ சர்மா, வானதி பதிப்பகம், சென்னை, பக். 710, விலை 400ரூ. சிவனின் பேச்சை மீறி தட்சனின் யாகத்திற்குச் செல்கிறார் தாட்சாயிணி. அங்கு தந்தையான தட்சனால் அவமானம் நேர்கிறது. கொழுந்து விட்டெரியும் யாகத் தீயில் பாய்ந்து தன்னுயிரை விடுகிறார். செய்தி அறிந்த சிவபெருமான், தீ தீண்டாத உயிரற்ற உடலாய்க் கிடந்த தாட்சாயிணியின் உடலைத் தன் தோள்மீது தூக்கிப் போட்டுக் கொண்டு மிக உக்கிரமாக பித்துப் பிடித்தவர் போல் கூத்தாடுகிறார். அச்சமயம் தேவியின் உடல் பல கூறுகளாக […]

Read more

கம்பனில் சட்டமும் நீதியும்

கம்பனில் சட்டமும் நீதியும், நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன், வானதி பதிப்பகம், பக். 184, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-278-0.html கம்பன் காப்பியம் என்பது ஓர் உயர்பாற்கடல். அதில் இருந்து யார் யாரோ எவ்வளவோ கருத்து அமுதத்தை அள்ளி அள்ளிப் பருகியிருக்கிறார்கள். ஆனால் இதுவரை அறியப்படாத கருத்துக்களை தேடி எடுத்துக் கொண்டுவந்து தந்திருக்கிறார் நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன். சட்டமும் நீதியும் அவரது உயிரிலும் உணர்விலும் கலந்துவிட்ட ஒன்று என்பதால், நீதியரசர் கம்பனில் இருந்து சட்டத்தையும் நீதியையும் எடுத்துத் தருவது […]

Read more

தெய்வத்தமிழ்

தெய்வத்தமிழ், பேராசிரியர் இரா. மோகன், வானதி பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. உலகத்தை வெறுப்பது ஆன்மிகம் அல்ல, உலகத்தை அறிந்துகொண்டு, அதற்குள் வாழ்ந்து, தங்களையும், உலகத்தையும், ஒருசேர வளர்த்துக் கொள்வதே ஆன்மிகம் என்ற குன்றக்குடி அடிகளாரின் கருத்தியலின் ஒளியில் ஆன்மாவின் – உயிரின் – தரத்தை மேம்படுத்தும் கட்டுரைகள் இந்நூலில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. இக்காலத்திலே மனிதன் மன அழுத்தத்திலும், கவலையிலும் சிக்கித் தவிக்கிறான். புற வளர்ச்சியில் இமாலய உச்சியைத் தொட்டிருந்தாலும், அக உலகில் மயக்கத்திலும், கலக்கத்திலும், குழப்பத்திலும், நடுக்கத்திலும் அகப்பட்டு, அல்லற்பட்டு, ஆற்றாது, அழுது புலம்புகிறான். […]

Read more

கவியமுதம்

கவியமுதம், கவிஞர் இரா. இரவி, வானதி பதிப்பகம், சென்னை, பக். 172, விலை 100ரூ. கவிஞர் இரா. இரவியின் கவிதைகள் ஒவ்வொன்றிலிருந்தும் தமிழின்-தமிழனின் உயிர்த் துடிப்பு கேட்கிறது. சமூக அவலங்களை எதிர்க்கும் ஒரு கலகக்குரல் கேட்கிறது. மொழியின் ஆன்மா தெரிகிறது. முற்போக்குச் சிந்தனையின் முகவரி தெரிகிறது. சமரசம் செய்து கொள்ளாத கொள்கை தெரிகிறது. காமராசரையும் பெரியாரையும் பாரதிதாசனையும் இன்னும் பல அறிஞர்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் உழைப்பு தெரிகிறது. எதிர்காலம் குறித்த நம்பிக்கை விதையை விதைக்கும்போக்கு தெரிகிறது. காதலின் வலிமையும் மேன்மையும் தெரிகிறது. […]

Read more

ஒரு நீதியரசரின் நெடும் பயணம்

ஒரு நீதியரசரின் நெடும் பயணம், ராணி மைந்தன், வானதி பதிப்பகம், சென்னை, பக். 244, விலை 200ரூ. துவக்க காலத்தில், ‘கடவுள் இல்லை’ என்று நம்பியவன், கால ஓட்டத்தில், ‘கடவுள் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன’ என்று எண்ணி காலத்தை ஓட்டினான். ஆனால் இன்று, கடவுளின் கருணை இல்லாமல், எதுவுமே இல்லை என்று நம்புகிறான். இந்த மூன்றாம் கட்டத்து வாழ்க்கையில்தான், நான் அர்த்தமுள்ள வாழ்வு வாழ்வதாக, ஆத்மார்த்தமான வாழ்வு வாழ்வதாக மனப்பூர்வமாக நம்புகிறேன்’ (பக். 16) – நீதியரசர் மு. கற்பகவிநாயகத்தின் இந்த வாக்குமூலம் […]

Read more

ராஜாஜியின் கருத்துக்கள்

ராஜாஜியின் கருத்துக்கள், ராஜாஜி, வானதி பதிப்பகம், சென்னை, பக். 176, விலை 70ரூ. 20 ஆம் நூற்றாண்டின் ‘இந்திய அரசியல் ஞானி’ என்று பாராட்டப்பட்டவர் சக்கரவர்த்தி சி. ராஜகோபாலாச்சாரியார். விடுதலைப் போராட்டத்தில் மகாத்மா காந்திக்கு உறுதுணையாகத் திகழ்ந்தவர். இந்தியாவின் மிக உயர்ந்த பொறுப்பையும் வகித்தவர். பொது வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் அப்பழுக்கற்றவராகத் திகழ்ந்த இந்த மூதறிஞரின் கருத்துக்கள், தொலைநோக்குக் கொண்டவை. 1970-71ல் மத்தியிலும், மாநிலங்களிலும், மற்ற நாடுகளிலும் நிகழ்ந்த பல்வேறு பிரச்னைகள், சம்பவங்கள் குறித்து இவர் கூறிய கருத்துகள் என்ற தலைப்பில் தொடர்ந்து வெளியாகின. […]

Read more

உணவு சரித்திரம்

உணவு சரித்திரம், முகில், சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம், சென்னை, விலை 225ரூ. உலகின் முதல் (சமைத்த) உணவு எது? பாறையை அடுப்பாக பயன்படுத்தி சுட்டு எடுக்கப்பட்ட ரொட்டியாக இருக்கலாம். உணவுக்கு சுவை எப்போது வந்து சேர்ந்தது? சந்தேகமில்லாமல் உப்பை உணவில் சேர்த்த பின்புதான். இந்தியர்கள் உலகிற்கு நன்கொடையாக வழங்கிய உணவுப் பண்டங்கள் என்னென்னஈ பிற நாட்டவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டு இந்தியர்கள் எந்த உணவுகளின் சுவைக்க அடிமையானார்கள்? என்பது போன்ற சுவையான உணவு வரலாற்றை பரிமாறுகிறது ‘உணவு சரித்திரம்’ நூல். மிளகு, ஏலக்காய் போன்ற நறுமணப் பொருட்கள்தான் […]

Read more

அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்

அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள், கண்ணப்பன் பதிப்பகம், சென்னை, விலை 80ரூ. அரசியல், வரலாறு, சமூகம், கலை, இலக்கியம் அனைத்திலும் அறிஞர் அண்ணாவின் உரை முழக்கத்தைக் கேட்டு மக்கள் போற்றினர், புகழ்ந்தனர், வியந்தனர், பாராட்டினர். தனக்கு சரியென்று தோன்றுவதைக் கூறவோ, எழுதவோ தந்தை பெரியார் எப்போதும் தயங்கியதில்லை.மூதறிஞர் ராஜாஜி சுயமான சிந்தனையாளர். இந்த மூவரும் உதிர்த்த முத்துக்களை ஒருங்கே தொகுத்து ஒரு கருத்துக் களஞ்சியமாக தொகுத்தளித்திருக்கிறார் பி.எல். முத்தையா. நன்றி: தினத்தந்தி, 28/1/2015.   —- விநய பத்திரிகா, முனைவர் மா. கோவிந்தராசன், வானதி பதிப்பகம், […]

Read more
1 13 14 15 16 17 22