சாதனையாளர்களின் சரித்திரம்

சாதனையாளர்களின் சரித்திரம், வானதி பதிப்பகம், சென்னை, விலை 65ரூ. விஞ்ஞானிகள், சரித்திர சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றை புதுவிதமாக எழுதியுள்ளார் புதிய தலைமுறையின் கல்வி இதழின் மூத்த துணை ஆசிரியரான ஜி. மீனாட்சி. மாணவ மாணவிகளுக்கு ஏற்ற முறையில் ஒவ்வொருவர் வாழ்க்கையையும் சிறுகதைபோல் எழுதியிருக்கிறார். தெளிவான விறுவிறுப்பான நடை. அணுசக்தி விஞ்ஞான ஹோமி பாபா, விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா, கணிதமேதை ராமானுஜம், விவசாய விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் உள்பட 9 பேர்களின் வாழ்க்கை வரலாறுகள் நீ உன்னை அறிந்தால் என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ளன. […]

Read more

நல்லுறவுகள்

நல்லுறவுகள், இல.பழனியப்பன், வானதி பதிப்பகம், சென்னை, விலை 60ரூ. குடும்ப வாழ்வில் உறவு நிலையில் தொடங்கி உலக நாடுகள் உறவு நிலை வரை எதிர்காலச் சந்ததியினருக்குப் படம் பிடித்துக் காட்டும் வகையிலான 19 தலைப்புகளில் பல்வேறு கருத்துகள் இடம் பெற்றுள்ள நூலாகும். உறவுக்கு கை கொடுக்கவும், அதன் வழி உலகம் உயரவும் வழிவகுக்கும் வகையில் நூல் திகழ்கிறது. நன்றி: தினத்தந்தி, 114/1/2015.   —- ராணி பெற்ற முத்து, ஜ்வாலாமுகி ராஜ், கிருஷ்ணாலயா பதிப்பகம், நாமக்கல், விலை 350ரூ. எயிட்ஸ் என்ற உயிர்க்கொல்லி நோய் […]

Read more

ஒரு நீதியரசரின் நெடும் பயணம்

ஒரு நீதியரசரின் நெடும் பயணம், ராணி மைந்தன், வானதி பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. நீதியரசர் கற்பகவிநாயகத்தின் வாழ்வும், அவர் சமுதாயத்துக்கு காட்டி வரும் நல்ல வழிகளை மையமாக வைத்து வண்ண புகைப்படங்களுடன், 24 அத்தியாயங்களில் எழுதப்பட்ட நூலாகும். வீழ்வது கேவலம் அல்ல, வீழ்ந்தே கிடப்பதுதான் கேவலம், விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமை அல்ல. விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை என்ற நீதியரசரின் வைரவரிகளை இளைஞர்கள் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் நூலில் இடம் பெற்றுள்ளன. நீதியரசரின் […]

Read more

மெழுகாய் கரையும் பெண்மைகள்

மெழுகாய் கரையும் பெண்மைகள், ஸ்ரீஜா வெங்கடேஷ், வானதி பதிப்பகம், பக். 288, விலை 100ரூ. ஸ்ரீஜா வெங்கடேஷின் நாவல்கள் பெரும்பாலும், சமூகம் மற்றும் குடும்பத்தில் பெண்களின் நிலை, அவர்களின் உணர்வுகள், கோபம், தியாகம் இவற்றை மையமாக வைத்தே புனையப்படுகின்றன. மெழுகாய் கரையும் பெண்கள் என்ற இந்த நாவலில், பிறந்த வீட்டுப் பாசத்தால் கணவனையும், வயிற்றில் வளரும் குழந்தையையும்கூட, பலி கொடுக்கத் துணிகிறாள், கதாநாயகி. இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் மற்றொரு நாவலான உயிரே உருகாதே. ஒரு மகளாக, மனைவியாக, தாயாக என்று எல்லா நிலைகளிலும், […]

Read more

நூலின்றி அமையாது உலகு

நூலின்றி அமையாது உலகு, பேராசிரியர் இரா. மோகன், வானதி பதிப்பகம், பக். 244, விலை 150ரூ. To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-233-3.html வாசிப்பு பழக்கம் இல்லாதவர்களை வாசிக்க செய்யும் இரா. மோகன் எழுத்தில், வானதி பதிப்பகம் வெளியிட்டு உள்ள நூலின்றி அமையாது உலகு என்ற புத்தக வாசிப்பு தொடர்பான புத்தகத்தை, சமீபத்தில் படித்தேன். பேசுவதை போன்ற எளிய  நடையுடன் பயணிக்கும் அந்த நூல், புத்தகங்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், புத்தகம் பற்றிய அறிஞர்களின் கருத்து, புத்தகம் பற்றிய பழமொழிகள் என, பல தடங்களில் […]

Read more

நுகர்வோர் விழிப்புணர்வு கையேடு

நுகர்வோர் விழிப்புணர்வு கையேடு, வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 248, விலை 200ரூ. To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-338-0.html பொதுமக்கள் பொருட்கள் வாங்கும்போது ஏமாறாமல் இருப்பதற்கும், அப்படி ஏமாற்றப்பட்டால் அதற்கு தீர்வு காண்பது எப்படி? எங்கே முறையிடுவது? தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிகள், தொலைபேசி எண்கள், நுகர்வோர் நீதிமன்றங்கள், தமிழகத்தில் உள்ள தன்னார்வ நுகர்வோர் மன்றங்கள் முதலான விவரங்கள் கொண்ட பயனுள்ள புத்தகம். நன்றி: தினத்தந்தி, 8/10/2014.   —-   மெழுகாய் கரையும் பெண்மைகள், வானதி பதிப்பகம், […]

Read more

பொன் அந்திச் சாரல் நீ

பொன் அந்திச் சாரல் நீ, ஸ்ரீஜா வெங்கடேண், வானதி பதிப்பகம், பக். 264, விலை 100ரூ. மாத நாவல் உலகில் கொடி போட்ட சாதனையாளர் ஸ்ரீஜா வெங்கடேஷ். நெல்லை மாவட்டம், ஆழ்வார் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர். பொன் அந்திச் சாரல் நீ என்ற அவர் எழுதிய நாவல், ஒரு தவறான தொலைபேசி அழைப்பால், ஒரு குடும்பம் சிதைவதையும், அதற்கு காரணமான மருத்துவரான தன் தாய்மாமனுக்காக, கதாநாயகன் தன் வாழ்க்கையே தியாகம் செய்வது பற்றியும் பேசுகிறது. இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் மற்றொரு நாவல், நினைக்கவே […]

Read more

புத்தகம் போற்றுதும்

புத்தகம் போற்றுதும், கவிஞர் இரா.ரவி, வானதி பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. ஞாயிறு போற்றுதும், திங்கள் போற்றுதும் என்ற வரிசையில் தற்போது வித்தியாசமான தலைப்பான புத்தகம் போற்றுதும் என்ற தலைப்புடன் 50 நூல்கள் மற்றும் நாவல்களை நூலாசிரியர் விமர்சனங்களாக எழுதி தொகுத்துள்ளார். இதில் எழுத்தாளரும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான வெ. இறையன்பு எழுதிய அவ்வுலகம் என்ற நாவலை விமர்சனம் செய்யும்போது இறந்தவர்களின் நெற்றியின் மீது ஐந்து ரூபாய் நாணயம் என்ற மூடப்பழக்கத்தை, தனக்குரிய பாணியில் நூலாசிரியர் சாடியுள்ளதையும் சுவைப்பட விமர்சனம் செய்துள்ளார். எனக்குச் சாவு […]

Read more

தமிழர் வாழ்வில் தகவலியல்

தமிழர் வாழ்வில் தகவலியல்,முனைவர் வெ. நல்லதம்பி, வையவி பதிப்பகம், சென்னை, விலை 180ரூ. மிகப் பழங்காந்தொட்தே தமிழ் வாழ்வில் தகவல் தொடர்புகள் எவ்விதமெல்லாம் செழித்து வளர்ந்து வந்திருக்கின்றன என்பதை ஆராய்கிறது இந்த நூல். தகவலியல் என்னும் கண்ணோட்டத்தில் இத்தனை செய்திகள் நம் பரந்த பன்னெடுங்கால இலக்கிய நூல்களில் பொதிந்திருப்பது வியப்பு என்றால், அதை அழகுபட ஒரு முத்துமாலைப்போல் தொகுத்துத் தந்திருக்கும் நூலாசிரியரின் ஆற்றல் அதனினும் வியப்பு. சிலப்பதிகாரம், மணிமேகலை, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, புறநானூறு, அகநானூறு, முருகாற்றுப்படை, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, தொல்காப்பியம் ஆகிய நூல்களில் […]

Read more

வியாசர் அருளிய மகாபாரதம்

வியாசர் அருளிய மகாபாரதம், கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 200ரூ. மாபெரும் இந்திய இதிகாசங்களில் வியாசர் அருளிய மகாபாரதம் மனித வாழ்வை நெறிப்படுத்தும் நன்னூல். தர்மத்தை உயிர் மூச்சாய் கொண்ட யுதிஷ்டிரன், அநியாய அக்கிரமங்கள் செய்யத் தயங்காத துரியோதனன் இவர்களுக்கிடையே உருவாகிறது பகைமை. முடிவில் எது வெற்றி பெறுகிறது? தர்மமா, அதர்மமா என்ற கேள்வியும், அதற்கான பதிலுமே மிகப்பெரிய மகாபாரதமாய் விரிந்திருக்கிறது. இந்நூலின் சிறப்பு, கண்ணன், யுதிஷ்டிரன், அர்ச்சுனன், கர்ணன், சகுனி, விதுரன் என்று மாறுபட்ட ஆளுமைச் சிறப்புகளை, வாழ்வியல் நெறிகளை உள்ளடக்கியது என்பதுதான், […]

Read more
1 14 15 16 17 18 22