ஆதிமுதல் அந்தரங்கம் வரை ஹிட்லர்

ஆதிமுதல் அந்தரங்கம் வரை ஹிட்லர், சிக்ஸ்த் சென்ஸ், சென்னை, விலை 300ரூ. இந்த நூலில் சொல்லப்பட்டு இருப்பது ஜெர்மனி நாட்டின் சர்வாதிகாரி ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு. ஆனால் அந்த வரலாற்றையே மர்ம நாவல்போல ஆக்கித்தந்து இருக்கிறார் ஆசிரியர். நாஜி என்ற பெயர், அதற்கான ஸ்வத்திக் சின்னம் ஆகியவை வந்தது எப்படி, அந்தக் கட்சி உருவான விதம் என்ன, இன்றைய அரசியல் பிரசார உத்திகளுக்கு ஹிட்லர் வழிகாட்டிய முறை, அவரது ஆளுமை, வக்கிர குணங்கள் என்று அனைத்தும் படித்து வியக்கும் வண்ணம் தரப்பட்டுள்ளன. அத்துடன் ஜெர்மனியின் […]

Read more

கம்பனில் சட்டமும் நீதியும்

கம்பனில் சட்டமும் நீதியும், நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன், வானதி பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்ட கம்பன் காப்பியத்தை, இதுவரையில் யாரும் தொட்டு பார்க்காத அளவில் பல ஆழமான கருத்து பெட்டகங்களை வெளியே கொண்டு வந்து காட்டியிருக்கிறார் நூலாசிரியர் நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன். இவர் சட்டத்தை கரைத்து குடித்தவர் என்பதால், கம்பனில் சட்டமும், நீதியும், நீதிபரிபாலனமும் எந்த அளவில் இருந்திருக்கிறது? என்பதை முழுமையாக ஆய்வு செய்து தெரிவித்துள்ளார். நீதி, மனுநீதி போன்ற சட்டம் தொடர்பான கருத்துக்களையெல்லாம் ஆழமாக எடுத்துக்காட்டியிருக்கிறார். […]

Read more

பாரதத்தின் பண்பாடு

பாரதத்தின் பண்பாடு, சுவாமி முருகானந்தா, காந்தலட்சுமி சந்திரமவுலி, வானதி பதிப்பகம், பக். 80, விலை 50ரூ. பதினைந்து ஆண்டுகளுக்கு முன், (1999 டிச. 5ம் தேதி) தென்னாப்ரிக்க நகரான கேப்டவுனில் நிகழ்ந்த, மூன்றாவது சர்வமத மாநாட்டில், நெல்சன் மண்டேலோவுடன் கலந்து கொண்டு, சுவாமிஜி ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கம் இது. பாரதம், ஆன்மிகம், பகவத்கீதை பற்றிய மேன்மையான செய்திகள் பல, இதன் கண் ஒளி வீசுகின்றன. போரை உருவாக்குவதற்காக போதிக்கப்பட்டதல்ல பகவத்கீதை. நீங்கள் உங்கள் கடமைகளை எங்கு, எப்போது, எப்படி செய்ய வேண்டும் என, […]

Read more

அபிராமி சமயம் நன்றே

அபிராமி சமயம் நன்றே, ராமநாதன் பழனியப்பன், வானதி பதிப்பகம், சென்னை, பக். 736, விலை 486ரூ. ஒரு பரம்பொருளுக்கு பல வடிவங்கள், பெயர்கள் ஏன்? இந்நூல் சாக்த சமய நெறியில் நின்று, தாய்த் தெய்வமாகிய அம்பிகையை, சடங்குகள், வேள்விகள் இல்லாமல், எளிய முறையில் சாமானிய மக்களும் வழிபடுவதற்கு ஏற்ற வண்ணம், இனிய தமிழில் அபிராமி அந்தாதியை, அபிராமி பட்டர் தோற்றுவித்தார் எனவும், இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட சம்பந்தரும், நம்மாழ்வாரும் எவ்வாறு ஓர் உந்துதலால் அருட்பாக்களைப் பாடினரோ, அதேபோல் பட்டரும் அம்பிகையால் ஆட்கொள்ளப்பட்டு பாடினார் எனவும் ஒப்புமைப்படுத்துகிறது. […]

Read more

விடுதலை இயக்கத்தில் தமிழகம்

விடுதலை இயக்கத்தில் தமிழகம், டாக்டர் ஜி.பாலன், வானதி பதிப்பகம், பக். 624, விலை 300ரூ. விடுதலை இயக்கத்தில் பங்குபெற்ற வேலு நாச்சியார், கட்டபொம்மன், வ.உ.சி., திரு.வி.க., ம.பொ.சி., ஜீவானந்தம், கக்கன் போன்ற தமிழகத் தியாகச் செம்மல்களின் வரலாறுகளை தெளிவாகத் தொகுத்து, எழுதப்பெற்றுள்ள நூல். அண்ணல் காந்தியடிகள், தமிழகத்தில் பயணம் செய்தபோது நிகழ்ந்த நிகழ்வுகள், அழகாகப் பதிவு செய்யப்பெற்றுள்ளன. தேசியக்கொடி பற்றிய கட்டுரையில், தேசியக்கொடியின் தோற்றம், அமைப்பு, அளவு, வரையறை, வண்ணங்கள், சக்கரச்சின்னம் முதலியவற்றை விளக்கி, சுதந்திரக்கொடியான மூவர்ணக்கொடியின் வரலாறு விளக்கப் பெற்றுள்ளது. தேசியக் கொடியைப் […]

Read more

வேலி மேல் வாச மலர்

வேலி மேல் வாச மலர் (பிறமொழிக் கதைகள்), வீ. விஜயராகவன், தளம் வெளியீடு, பக். 160, விலை 120ரூ. கணையாழி, படித்துறை, தளம் இதழ்களில் வெளிவந்த மொழியாக்க சிறுகதைகளில், இந்தியில் இருந்து 6, ஆங்கிலம், வங்கம், மைதிலி, மராத்தி, மலையாளம், பஞ்சாபி மொழிகளில் இருந்து தலா ஒன்று வீதம் மொத்தம், 12 சிறுகதைகள் ஆகியவை இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. அவற்றில், 100 ஆண்டுகளுக்கு முன், பிரேம்சந்த், இந்தியில் எழுதிய, பண்ணையாரின் கிணறு, மருமகளால் அடிபட்டு இறந்து போன பூனைக்கு பிராயச்சித்தம் செய்ய முற்படும் […]

Read more

சிலம்புச்சாலை

சிலம்புச்சாலை, சுப்ர.பாலன், வானதி பதிப்பகம், சென்னை, பக். 156, விலை 100ரூ. கல்கி வார இதழில் தொடராக வெளிவந்ததின் நூல் வடிவம். தமிழ் இலக்கியத்தின் புதுமைக் காவியமான சிலப்பதிகாரத்தை புதிய ஆய்வுச் சாலையில் எடுத்துச்சென்றிருக்கிறார் சுப்ர. பாலன். புகார் நகரை பூம்புகாராகக் காணும் நூலாசிரியர். கோவலன், கண்ணகி கால அந்தப் புராதன நகரம், இப்போது களையிழந்து போனதை கனத்த மனதுடன் விளக்குகிறார். கோவலன், கண்ணகி தடம் பதித்த மற்ற இடங்களான ஸ்ரீரங்கம், உறையூர், கொடும்பாளூர் என ஒவ்வோர் ஊரையும் விவரிக்கும் ஆசிரியர், அந்தந்த இடங்களின் […]

Read more

சிவசங்கரி குறுநாவல்கள் தொகுதி 8

சிவசங்கரி குறுநாவல்கள் தொகுதி 8, சிவசங்கரி, வானதி பதிப்பகம், சென்னை, பக். 344, விலை 175ரூ. எழுத்தாளர் சிவசங்கரி தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். இதுவரை 150 சிறுகதைகள், 30 நாவல்கள் எழுதியுள்ளார். அவர் எழுதிய கதைகளில் ஒரு மனிதனின் கதை, நண்டு, அம்மா சொன்ன கதைகள் ஆகியவை இன்றும் அவரது எழுத்துக்குச் சான்றுகளாகத் திகழ்கின்றன. பொதுவாக அவருடைய கதைகளில் சமூகச் சிந்தனைகள் மேலோங்கி நிற்கின்றன. போதைப் பொருளுக்கு அடிமையாவது, மதுவுக்கு அடிமையாவது ஆகியவற்றைத் தன்னுடைய எழுத்துக்கள் மூலம் தொடர்ந்து கண்டித்து வருகிறார். முதுமை சார்ந்த […]

Read more

இந்தியச் சூழலும் முஸ்லிம்களும்

இந்தியச் சூழலும் முஸ்லிம்களும், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், சென்னை, விலை 60ரூ. பல்வேறு மதங்கள், இனங்கள், கலாச்சாரங்கள், மொழிகள், பண்பாடுகளைச் சேர்ந்த மக்களைக் கொண்ட சமூகமாக நமது இந்தியத் திருநாடு திகழ்கிறது. இத்தகைய பன்மைச் சமூகச் சூழலில் ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும்? முஸ்லிம் அல்லாத சமூகத்தாருக்கு மத்தியில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு இஸ்லாம் தருகின்ற அறிவுரைகள் யாவை? என்பன போன்ற கேள்விகளுக்கு மவுலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அழகிய முறையில் விளக்கம் அறித்துள்ளார். முஸ்லிம் அல்லாத நாட்டில் வாழ்கின்ற ஒரு முஸ்லிம், அந்த […]

Read more

கண்ணதாசன் பாடல்கள் காலத்தை வென்றவை

கண்ணதாசன் பாடல்கள் காலத்தை வென்றவை, வானதி பதிப்பகம், சென்னை, விலை 140ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-230-3.html கவியரசு கண்ணதாசனின் திரைப்படப் பாடல்கள் கவிதை இலக்கணத்துடன் அமைந்தவை. ஆழ்ந்த கருத்துகளுடன் கூடியவை. ஆயிரக்கணக்கான பாடல்களில் இருந்து, பக்தி, காதல், சோகம், தத்துவம், பல்சுவை என ஐந்து வகைப்பட்ட தலைப்பின் கீழ் வரும் பாடல்களைத் தேர்வு செய்து விளக்கி எழுதியிருக்கிறார் காவிரி மைந்தன். காலத்தை வென்று தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் கவியரசரின் பாடல்கள் பற்றி, விரிவான ஒரு பகுப்பாய்வை சுவைபட செய்திருக்கிறார் […]

Read more
1 15 16 17 18 19 22