வாழ்க்கை வாழத்தான்

வாழ்க்கை வாழத்தான், எஸ்.ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், பக்.120, விலை 90ரூ. வாழ்தல் – நம், ‘கை’யில் இருப்பதால் தான் அதற்கு, வாழ்க்கை’ என்று பெயர் வைக்கப்படுகிறது என்பார் ஏர்வாடியார். ‘ஜெயமுண்டு பயமில்லை மனமே’ என்கிற பாரதி, ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்று கூறி அசையாது நிற்பான். அப்பர் சுவாமிகள், ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’ என்பார். இவர்களைப் போல் அஞ்சாது, வாழ்க்கையை எதிர்கொண்டால், வாழ்க்கை நமக்கு வசப்படும். பழி எண்ணம் மறக்கிற போது, பகை மாறி நட்பு மலரும் என்று பேசும் ஏர்வாடியார் – கவிஞர் அப்துல் […]

Read more

இலக்கிய இணையர் படைப்புலகம்

இலக்கிய இணையர் படைப்புலகம், இரா.ரவி, வானதி பதிப்பகம், விலை 175ரூ. கணவர், மனைவி இருவருமே இலக்கியவாதிகளாக இருந்து பல படைப்புகளை வழங்கி இருக்கிறார்கள் என்ற சிறப்பான தகவலை அறிந்து கொள்ள இந்த நூல் வகை செய்து இருக்கிறது. பேராசிரியர் இரா.மோகனும், அவரது மனைவி நிர்மலா மோகனும் ஆக்கிய சிறந்த பல நூல்களுக்கு கவிஞர் இரா.ரவி இணையங்களிலும், வலைப்பூ மற்றும் முகநூலிலும் மதிப்புரைகள் எழுதி இருக்கிறார். அந்த மதிப்புரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றைத் தொகுத்து இந்த நூல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் இரா.மோகன், நிர்மலா மோகன் […]

Read more

சட்டத்தின் ஆன்மா

சட்டத்தின் ஆன்மா, எம்.குமார், வானதி பதிப்பகம், பக்.384, விலை ரூ.280, அரசு என்றால் என்ன, உலகளாவிய பல்வேறு ஆட்சிமுறைகள், அவற்றின் தன்மைகள், அதிகாரப் பிரிவினைக் கோட்பாடு, அமெரிக்க அரசியலமைப்பின் தோற்றம், சுவிட்சர்லாந்து அரசியல் அமைப்பு உள்ளிட்ட 13 கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்துள்ளது. இந்த நூல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பல்வேறு பரிமாணங்களைப் பற்றி பேசியுள்ளது. குறிப்பாக நல்ல எண்ணம் கொண்ட மக்கள் அதிகம் வாழும் நாட்டில் மட்டுமே நல்லதொரு ஆட்சியும் நிர்வாகமும் நடப்பது சாத்தியம் என்பதை உணர்ந்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் நடந்து […]

Read more

சட்டத்தின் ஆன்மா

சட்டத்தின் ஆன்மா, எம்.குமார், வானதி பதிப்பகம், விலை 280ரூ. இந்திய அரசியல் சட்ட நுணுக்கங்களின் அடிப்படையை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதையும், சாதாரண குடிமக்கள் மனதில் பதிய வைப்பதற்காக அரசியல் சாசனத்தை பள்ளி, கல்லூரிகளில் ஒரு பாடமாக வைக்க மத்திய மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த நூல் வலியுறுத்துகிறது. இங்கிலாந்து, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து ஆகிய நாட்டு அரசியல் சட்டங்களின் பல பிரிவுகள் இந்திய அரசியல் சட்டத்துடன் தொடர்புடையவை என்பதால், அந்த நாடுகளின் அரசியல் சட்டத்திற்கும், நம் நாட்டின் அரசியல் சட்டத்திற்கும் […]

Read more

பாரதிதாசன் படைப்புகளில் நகைச்சுவை

பாரதிதாசன் படைப்புகளில் நகைச்சுவை, அரங்க.இராமலிங்கம், வானதி பதிப்பகம், பக்.160, விலை ரூ.120. புரட்சிக் கவிஞர் என்று அறியப்பட்ட பாரதிதாசன் படைப்புகளில் காணப்படும் நகைச்சுவை பற்றி ஆராய்ந்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது.நகைச்சுவை என்றால் என்ன? என்பதை நூலின் முதல் கட்டுரையான நகைச்சுவையும் பாரதிதாசனும் விளக்குகிறது. நகைச்சுவை உணர்வை பாரதிதாசன் எவ்வாறு கையாண்டார் என்பதையும் அது கூறுகிறது. நகைச்சுவை என்பது இருபக்கமும் கூர்மையான வாள். அதை மிகத் திறமையாகப் பயன்படுத்த வேண்டும். இல்லையேல் அது பயன்படுத்துபவரையே தாக்கிவிடும் என்று கூறும் நூலாசிரியர்,  பாரதிதாசன் எழுதிய பாடல்களில், நாடகங்களில், கதைகளில், திரைப்படங்களில் […]

Read more

தமிழ் விருந்து

தமிழ் விருந்து, பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், விலை 200ரூ. அறுசுவை விருந்து உண்டிருக்கலாம். அருந்தமிழ் விருந்து உண்டதுண்டா? அத்தகைய ஆனந்த அனுபவத்தை அளிக்கும் அற்புதமான தொகுப்பு நூல். சங்கத் தமிழ் முதல் இன்றைய ஹைகூ வரை பலப்பல கவிஞர்களின் கற்பனையில் ஊற்றெடுத்த உவகைத் தமிழின் உயர்வுகளை உணர்வுகளை உதாரணங்களுடன் சொல்லியிருக்கும் விதம் அருமை. நன்றி: குமுதம். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029544.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

அத்திமலைத் தேவன் பாகம் 1

அத்திமலைத் தேவன் பாகம் 1, காலச்சக்கரம் நரசிம்மா, வானதி பதிப்பகம், விலை 425ரூ. அத்தி வரதர் வரலாறு என்ன? 40 ஆண்டுகளாக, ஏன் தண்ணீருக்குள் இருக்கிறார்? என, ‘காலச்சக்கரம்’ நரசிம்மா, 40 ஆண்டுகளாக திரட்டிய ஆய்வறிக்கை, சுவைபட, சுவாரஸ்யம் குன்றாமல், ‘அத்திமலைத் தேவன்’ என்ற நாவலாக வெளிவந்திருக்கிறது. கோவில்கள் நகரமான காஞ்சியில், 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த, வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவிலின், ஆனந்த புஷ்கரணியில் இருந்து, அத்தி வரதர், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை எழுந்தருளி, பக்தர்களுக்கு […]

Read more

ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே

ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே, கவிஞர் முத்துலிங்கம், வானதி பதிப்பகம், பக். 496, விலை 400ரூ. இந்த கட்டுரைத் தொகுதியில், கவிஞர் தன்னைப் பற்றி பேசுகிறார். ஆனால், தன்னை மட்டும் முன் நிறுத்தாது, திரைக்கவி முன்னோடிகள் குறித்து நிறைய பேசுகிறார். பல சம்பவங்கள் குறித்துப் படித்து சிலிர்ப்பு அடைகிறோம். ஒரு படத்தில் டைட்டிலில் மருதகாசி, கண்ணதாசன், தஞ்சை ராமையா தாஸ் ஆகியோர் பெயருக்குக் கீழே, உடுமலை நாராயணகவி பெயரைப் போட்டனர். அப்போது ஒரு நண்பர், உடுமலையாரிடம் என்னய்யா, எவ்வளவு பெரிய சீனியர் நீங்கள், உங்களுக்குக் கீழே […]

Read more

மனத்தின் குரலும் மக்கள் குரலும்

மனத்தின் குரலும் மக்கள் குரலும், பெ.சிதம்பரம், வானதி பதிப்பகம், விலை 150ரூ. பல்வேறு காலக்கட்டத்திற்கு தகுந்தபடி அவ்வப்போது எழுதி வெளியான 35 கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் தயாராகி இருக்கிறது. அயோத்தி பிரச்சினைக்குத் தீர்வு காண்பது எவ்வாறு, சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு, நதிகள் இணைப்பு, கல்வியில் தாய்மொரீ உள்பட பல ஆக்கபூர்வமான கட்டுரைகள் சிந்தனைக்கும் விருந்தாக உள்ளன. நன்றி: தினத்தந்தி, 7/8/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

நெமிலி ஸ்ரீ பாலா குருபீடம்

நெமிலி ஸ்ரீ பாலா குருபீடம், நெமிலி ஸ்ரீ பாபாஜி பாலா, வானதி பதிப்பகம், விலை 200ரூ. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது சான்றோர் வாக்கு. அருணகிரியாருக்கு முருகனே குருவாய் வர வேண்டும் என்ற ஆசையால், குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்றார். நெமிலி ஜி.பாபாவிற்கு, பாலாவே குருவாக ஆட்கொண்டார் என்ற தகவல் உள்ளது. குருவருளும் திருவருளும் துவங்கி, குருவின் ஆற்றல் வரை, 10 தலைப்புகளில் இந்த நுால் பேசுகிறது. படிப்போருக்குக் கிடைக்கும் பாக்கியம் எனலாம். இந்த நுாலின் தனி சிறப்பே நாமாவளிகள் தான். […]

Read more
1 2 3 4 5 6 22