கனவும் வெற்றியும் பேசிக்கொண்டவை

கனவும் வெற்றியும் பேசிக்கொண்டவை, புதுயுகன், வானதி பதிப்பகம், பக். 232, விலை 200ரூ. லண்டன் கல்வியாளர், எழுத்தாளர் புதுயுகனின் தன்னம்பிக்கை நுால் இது. வித்தியாசமான பார்வையில், வித்தியாசமான சிந்தனையில், வாழ்வியல் நெறிமுறைகளை மையப்படுத்துவதில் தமிழ் தன்னம்பிக்கை நுால்களில் தனித்துவம் பெறுகிறது இந்நுால். ‘நல்ல மனப்பான்மை இருந்தால் வாழ்க்கையின் உள்ளேயே ஒரு புதிய வாழ்க்கை புலப்படும்,-3டி போல, தனது தனித்துவத்தை துல்லியமாக புரிந்து கொண்ட நொடியில் ஒரு உலகச்சாம்பியன் உருவாகிறான்’ என்பது போன்ற தத்துவரீதியான தன்னம்பிக்கை சிந்தனைகள் ஏராளம். ‘கல்வியை பொறுத்தவரை நமக்கு யானைப்பசி வேண்டும்’ […]

Read more

கனவும் வெற்றியும் பேசிக்கொண்டவை

கனவும் வெற்றியும் பேசிக்கொண்டவை, புதுயுகன், வானதி பதிப்பகம், விலை 200ரூ. உயர்கல்வித் துறையில் ஏற்படும் சவால்களை இளைஞர்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது சுவைபட கொடுக்கப்பட்டுள்ளது. கனவு, திறமை, பண்பு ஆகியவை சமமாக அமையப்பெற்றால் அதுவே வெற்றியின் அடையாளம் என்பதை ஆசிரியர் தெளிவுபடக்கூறி இருக்கிறார். இளைய சமுதாயத்துக்கு இந்த நூல் பயன் உள்ளதாக இருக்கும். நன்றி: தினத்தந்தி, 10/4/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000027747.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

ஆனந்தத் தேன்காற்றுத்தாலாட்டுதே

ஆனந்தத் தேன்காற்றுத்தாலாட்டுதே,  கவிஞர் முத்துலிங்கம்,  வானதி பதிப்பகம், பக்.496, விலை ரூ.400., தமிழகம் நன்கறிந்த கவிஞரான முத்துலிங்கம் தனது திரைப்பட அனுபவங்களை தினமணி நாளிதழில் தொடராக எழுதினார். அதில் வெளி வந்த கட்டுரைகள் இப்போது நூல் வடிவம் பெற்றிருக்கின்றன. சிவகங்கைக்கு அருகில் உள்ள கடம்பங்குடி என்ற கிராமத்தில் பிறந்த முத்துலிங்கம், திரைப்படப் பாடல் எழுதும் ஆர்வத்தால் பள்ளி இறுதித் தேர்வில் தோல்வியடைந்ததும், மீண்டும் தேர்வு எழுதும்போது மணிமேகலை என்ற திரைப்படத்தின் இரவுக்காட்சியைப் பார்த்துவிட்டு மறுநாள் எழுதிய தேர்வில் தோல்வியடைந்ததும், அதன்பிறகு தமிழ் வித்வான் படிப்பையும் முழுமையாகப் […]

Read more

தெய்வப் புலவர் திருவாய்மொழி

தெய்வப் புலவர் திருவாய்மொழி, அரங்க. இராமலிங்கம், வானதி பதிப்பகம், பக்.656, விலை ரூ.500. திருக்குறளின் சிறப்பையும், மாண்பையும் தமிழறிஞர்கள் மட்டுமல்ல, எல்லீஸ், ஜி.யு.போப் முதலிய வெளிநாட்டவர் பலரும் அதன்பால் ஈர்க்கப்பட்டு போற்றி உரைத்துள்ளனர். மொழிபெயர்ப்பு செய்துள்ளனர். திருக்குறளில் உள்ள பல்வேறு சிறப்புகளை குறிப்பாக, நூலின் அமைப்பு, திறனாய்வு குறித்த விவரங்கள், திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள், அதில் இடம்பெற்றுள்ள உவமைகள், அணிநயங்கள், பாயிரத்தில் திருவள்ளுவர் கூறும் இறை, அறிவு பற்றிய கருத்துகள்,  உலகியல் பார்வையோடு கூடிய துறவு அதிகாரத்தின் சிறப்பு, திருக்குறளை எடுத்தாண்ட புலவர்களின் கருத்துகள், பல்வேறு […]

Read more

கம்பனில் ஆழம் கண்ட வேழம் கம்பன் அடிப்பொடி

கம்பனில் ஆழம் கண்ட வேழம் கம்பன் அடிப்பொடி, சொ.சேதுபதி, வானதி பதிப்பகம்,  பக்.352, விலை ரூ.250. கம்பன் கழகங்களுக்கெல்லாம் தாய்க் கழகமாக விளங்குவது "கம்பன் அடிப்பொடி சா.கணேசனால் 1939-ஆம் ஆண்டு காரைக்குடியில் தொடங்கப்பட்ட கம்பன் கழகம்தான். இக்கழகத்தின் மூலம் உலகம் முழுவதும் கம்ப காவியத்தைக் கொண்டு சேர்த்த பெருமை சா.கணேசனையே சாரும். இந்நூல், சா.கணேசனை வேழமாக உருவகப்படுத்தி, அவர் கம்ப காவியத்தில் கண்டஆழத்தைக் கூறி, முழுக்க முழுக்க அவர் புகழபாடியிருக்கிறது. இதுவரை அச்சு வாகனம் ஏறாமல் இருந்த சா.கணேசனின் உரையும் பாட்டும் நூல் முதன்முதலில் இந்நூலில் […]

Read more

இறையன்பு கருவூலம்

இறையன்பு கருவூலம், இரா.ரவி, வானதி பதிப்பகம், விலை 110ரூ. மூன்று முனைவர் பட்டங்களைப் பெற்று, தமிழக அரசின் முதன்மை செயலாளராக, முது முனைவராக, நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்த வெ.இறையன்பு எழுதிய 16 நூல்களைத் தேர்ந்தெடுத்து, அந்த நூல்களைப் பற்றிய மதிப்பீடுகளைத் தந்து இருக்கும் இந்த நூல், இறையன்புவின் ஆற்றல்களை தெளிவாக அறிந்து கொள்ள ஒரு வழிகாட்டி போல அமைந்து இருக்கிறது. ‘தந்தி’ பதிப்பகம் வெளியிட்ட ‘உலகை உலுக்கிய வாசகங்கள்’, ‘கேள்வியும் நானே, பதிலும் நானே’ ஆகியவை உள்பட இறையன்பு எழுதிய புத்தகங்களில் காணப்படும் […]

Read more

சோழ சிரஞ்சீவி ஆதித்த கரிகாலன்

சோழ சிரஞ்சீவி ஆதித்த கரிகாலன், உளிமகிழ் ராஜ்கமல், வானதி பதிப்பகம், பக். 248, விலை 180ரூ. சோழ வரலாற்றில் மாபெரும் வீரனாக, தவிர்க்க முடியாத ஓர் தலைவனாகக் கருதப்படுபவர் ஆதித்த கரிகாலன். இவனின் தம்பி தான் அருண்மொழி என்னும் ராஜராஜன். சோழப் பேரரசை ஆதித்த கரிகாலன் ஐந்து ஆண்டுகள் தான் ஆட்சி புரிந்திருக்கிறார். அதற்குள்ளாகவே எவரும் தொட முடியாத சாதனைகளை எல்லாம், சாதாரணமாகத் தொட்டுச் சென்றது இவரின் பெருஞ்சிறப்பு. அவர் காலத்தில் அவருக்கு நிகரான வீரனே கிடையாது என்பதைச் சொல்வதாக இருக்கிறது. மாவீரனான ஆதித்த […]

Read more

திருக்கயிலாய தரிசனம்

திருக்கயிலாய தரிசனம் (பயண அனுபவங்கள்), டி.கே.எஸ்.கலைவாணன்,  வானதி பதிப்பகம், பக்.176, விலை ரூ.125. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்&amp என்ற திருமூலரின் வாக்கின்படி நூலாசிரியர் தாம் 2010-ஆம் ஆண்டில் மேற்கொண்ட திருக்கயிலாய யாத்திரையை இந்நூலில் பயணக் கட்டுரையாகப் படைத்துள்ளார். திருக்கயிலாயத்துக்குச் சென்று வர மனப்பக்குவமும், உறுதியும் வேண்டும். அத்துடன் இறை அருளும் தேவை என்பதை அவர் நூலில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். இந்திய அரசு நடத்தும் கயிலாய யாத்திரை குழுவில் பங்கேற்பது எப்படி? என்பது குறித்தும், தனியார் அழைத்துச் செல்லும் யாத்திரை குழுவில் […]

Read more

அணிந்துரை அணிவகுப்பு

அணிந்துரை அணிவகுப்பு, இரா.மோகன், வானதி பதிப்பகம், விலை 150ரூ. ஆன்மிகம், கவிதை, உரைநடை, பயணக் கட்டுரை என்பது போன்ற பலதரப்பட்ட தலைப்புகளில் வெளியான நூல்களில் முப்பது நூல்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் தராதரத்தைப் பார்த்து மெச்சுவது போல, ஒவ்வொரு நூலுக்கும் அணிந்துரை வழங்கி அவற்றையே தனி புத்தகமாக வெளியிட்டு இருக்கும் முயற்சி புதுமையானதும் பாராட்டத்தக்கதும் ஆகும். ஒவ்வொரு நூலிலும் உள்ள சிறப்புகளைச் சுட்டிக்காட்டுவதோடு, அவை தொடர்பான மேற்கோள்களைப் பிற நூல்களில் இருந்தும் மற்ற எழுத்தாளர்களிடம் இருந்தும் தேடிப்பிடித்து அவற்றைப் பொருத்தமாக வழங்கி இருக்கிறார் ஆசிரியர். இந்த […]

Read more

கண்டேன் கனடா

கண்டேன் கனடா, அ.கோவிந்தராஜு, வானதி பதிப்பகம், விலை 125ரூ. கனடா நாட்டின் தலைநகரமான ஒட்டாவா நகரில் 6 மாத காலம் தங்கி இருந்த ஆசிரியர், அங்கே ஒவ்வொரு இடத்திற்கும் தான் சென்ற போது பார்த்த வியப்பான காட்சிகள், வித்தியாசமான அனுபவங்கள் ஆகியவற்றை சுவாரசியமாக நகைச்சுவை கலந்து ஆவணப்படுத்தி இருக்கிறார். கனடாவில் தான் பார்த்த ஆச்சரியங்கள் நமது நாட்டிலும் ஏற்படாதா என்ற ஏக்கத்தையும் பல இடங்களில் சுட்டிக்காட்டி இருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 24/4/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more
1 3 4 5 6 7 22