தகராறு

தகராறு, கடந்து சென்றிடம் வழிவகையும் மாற்றியமைத்திடும் நெறிமுறையும், யொ. ஹான்கால்டுங், தமிழில்-சுப.உதயகுமாரன், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 168, விலை 85ரூ. தகராறு என்பது தவறானது அல்ல. மனித வாழ்க்கைக்குத் தகராறு மிகவும் இன்றியமையாதது. கருத்து முரண்பாட்டின் அடுத்த நிலை தகராறு. தகராறு முற்றும்போது தீர்வு ஒன்று உருவாகும். தகராறுகளுக்கு நிவாரணம் என்ன? என்பதைப் பற்றி இந்த நூல் விரிவாக அலசுகிறது. மனிதனுக்குள் மற்றும் மனிதருக்கிடையே எழும் முரண்பாடுகள், சிறுதகராறுகள், சமூகங்களிடையே எழும் பிணக்குகள் குறுந்தகராறுகள், அரசுகளுக்கும் மக்களுக்கும் இடையே எழும் தகராறுகள், […]

Read more

தங்கத்தின் விலை ஏறுகிறதா? ஏமாற்றுகிறதா?

தங்கத்தின் விலை ஏறுகிறதா? ஏமாற்றுகிறதா?, மாரிக்கனி, ஒருலகம் பதிப்பகம், 75, முதல் மாடி, லேக் வியூ ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 60ரூ. தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே போகிறது. இதற்குக் காரணம் என்ன? தங்கத்தின் விலை குறைய வேண்டுமானால் அதற்கு என்ன வழி என்று விவரிக்கிறார் ஆசிரியர்.   —-   வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை ரூ160. ஔரங்கஜேப் (அவுரங்கசீப்) எத்தகைய குணம் உடையவர்? அவர் மீது வீண்பழிகள் விழக்காரணம் என்ன […]

Read more

திருப்பதி

திருப்பதி, மஞ்சுள் பதிப்பகம், 2வது தளம், உஷா பிரீத் காம்ப்ளக்ஸ், 42, மாளவியா நகர், போபால் 462003, விலை ரூ 199. உலகிலேயே மிக முக்கியமாகக் கருதப்படும் கோவில்களில் ஒன்றான திருப்பதி கோவிலின் தெய்வீக மற்றும் வரலாற்றுப் பின்புலத்தை விளக்கும் நூல். பூமியில் சில காலம் வாழ்வதென்று முடிவு செய்த வராகப் பெருமாள், தனது பட்சி வாகனமான கருடனை அழைத்து, சொர்க்கத்திலிருந்து தனது வசிப்பிடமான வைகுண்டத்தில் இருந்து தனக்குப் பிரியமான கிரீடாச்சல மலையை எடுத்து வந்து, தான் குறிப்பாகத் தேர்ந்தெடுத்த ஓர் இடத்தில் அதை […]

Read more

நெல்லை ஜமீன்கள் சமஸ்தானங்களும் சரிவுகளும்

நெல்லை ஜமீன்கள் சமஸ்தானங்களும் சரிவுகளும், முத்தாலங்குறிச்சி காமராசு, விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 376, விலை 150ரூ. தென் தமிழகத்தில் நாயக்கர்கள் ஆட்சி காலத்துக்கு முன்பே பாளையக்காரர்கள் என்ற பெயரில் ஜமீன்தாரி முறை அமலில் இருந்ததையும், நாயக்கர் ஆட்சிக்குப் பின் அது பலப்பட்டதையும் விரிவுபட்டதையும் நூல் எடுத்துரைக்கிறது. இதில் பாண்டிய நாட்டுக்கு உள்பட்ட 72 பாளையங்களில் அன்றைய நெல்லை ஜில்லாவைச் சேர்ந்த சிவகிரி, நெற்கட்டும், செவ்வல், எட்டையபுரம், பாஞ்சாலங்குறிச்சி,  உள்ளிட்ட 10 ஜமீன்களின் குறுநில மன்னர்கள் வாழ்ந்ததையும் வீழ்ந்ததையும் நூல் விளக்குகிறது. ஊர்க்காடு […]

Read more

வெற்றி வெளியே இல்லை

வெற்றி வெளியே இல்லை, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-772-8.html தன்னம்பிக்கை கட்டுரைகள் கொண்ட நூல். விதைக்குள்ளே மரம் மறைந்திருப்பதைப்போல முயற்சியும், உற்சாகமும், உழைப்பும், ஊக்கமும் நமக்குள்ளே மறைந்து இருக்கின்றன. அயராத முயற்சியால், மூடி இருப்பதை அகற்றி ஆற்றலை வெளிப்படுத்தினால் வெற்றிதான் என்பதை எளிமையான கட்டுரைகள் மூலம் கூறுகிறார் வழக்கறிஞர் த. இராமலிங்கம். நன்றி: தினத்தந்தி, 18/12/13. —-   தமிழ் இன்பம், ரா.பி. சேதுப்பிள்ளை, பூம்புகார் பதிப்பகம். […]

Read more

காலம்

காலம் சிறுகதைகள், தேவ விரதன், வசந்தா பிரசுரம், பக். 192, விலை 120ரூ. பிரபல வார இதழ்களில் வெளியான, பரிசும், பாராட்டுக்களும் பெற்ற ஆசிரியரின் 28 சிறுகதைகளின் தொகுப்பு. தினமலர் வாரமலரில் இவர் எழுதிப் பிரசுரமாகிய கதைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இந்த நூலின் மற்றொரு சிறப்பு, சிறுகதைக்கு ஆரம்ப வரிகள் கிமவும் முக்கியம் என அன்பர்கள் சொல்வதுண்டு. இந்த தொகுப்பில் உள்ள எல்லா கதைகளின் கடைசி நான்கு வரிகளும் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளதைக் கவனித்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. நல்ல சிறுகதைகளின் தொகுப்பு. […]

Read more

இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள்

இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள், இந்திரா பார்த்தசாரதி, கவிதா பப்ளிகேஷன், பக். 400, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-863-4.html கும்பகோணத்தில் பிறந்து, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற, டில்லியில் தமிழ்ப் பேராசிரியராக கல்லூரியில் பணிபுரிந்து, தமிழில் நிறைய எழுதி, புகழ் பெற்ற இ.பா. கட்டுரைகளின் தொகுப்பு. அவரே கூறியுள்ளதுபோல, வெங்காயத்லிருந்து வெடி குண்டுவரை என, அனைத்து விதமான விஷயங்களையும் அலசி, ஆராய்ந்து, விமர்சித்து, பின்னிப்பெடலெடுத்து எபதப்பட்டுள்ள கட்டுரைகள். சவை, சுவாரஸ்யம், காரசாரம், வம்பு என எல்லாம் அடக்கம். […]

Read more

சீனா அண்ணன் தேசம்

சீனா அண்ணன் தேசம், சுபஸ்ரீ மோகன், விகடன் பிரசுரம், பக். 136, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-926-8.html அதிக மக்கள் தொகையும், மிகப் பெரிய நிலப்பரப்பும் கொண்ட சீனாவை நாம் அனைவரும் ஒரு கம்யூனிச நாடு (செஞ்சீனா) என்ற அளவில் மட்டும் புரிந்து வைத்திருக்கிறோம். ஆனால், இந்தச் சிறிய புத்தகத்தைப் படித்து முடித்த பின், நமக்கு சீனாவைப் பற்றிய பல அரிய சுவாரஸ்யமான தகவல்கள் தெரிய வருகின்றன. குறிப்பாக கூட்டுக் குடும்ப வாழ்க்கை மற்றும் முதியவர்களைப் […]

Read more

வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப்

வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப், செ.திவான், விகடன் பிரசுரம், 757, அண்ணாசலை, சென்னை 2, விலை 160ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-181-6.html சத்தமே இல்லாமல் சாதனை படைக்கச் சிலரால்தான் முடியும். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் செ.திவான். மறைக்கப்பட்ட வரலாற்றுப் பொக்கிஷங்களைத் தோண்டி எடுத்துவந்து, மக்கள் மன்றத்தில் அரங்கேற்றிய ஒரு சிலரில் திவான் குறிப்பிடத்தக்கவர். முஸ்லிம் மன்னர்கள் என்றாலே… கொள்ளையடிக்க வந்தவர்கள், இந்துக்களுக்கு வரி விதித்தவர்கள், ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவர்கள்-என்பதே வரலாறாக திணிக்கப்பட்ட சூழ்நிலையில், அவர்களின் இன்னொரு பாகத்தைக் காட்டியவர் திவான். […]

Read more

தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்

தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 120ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-181-7.html சிறந்த தமிழ்ச் சிறுகதைகளைக் கொண்ட நூல் ஒன்றை எழுத்தாளர் தமிழ்மகன் உருவாக்கியுள்ளார். ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒரு சிறுகதை வீதம் 13 சிறுகதைகள் இதில் இடம் பெற்றுள்ளன. மகாகவி பாரதியார், வ.வே.சு. அய்யர், புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், சுஜாத உள்பட 13 எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. தேர்வு செய்யப்பட்டவை சிறந்த கதைகள்தான். ஆயினும், பத்தாண்டுக்கு […]

Read more
1 18 19 20 21 22 31