உலக அரங்கில் உயர்ந்த தமிழர்கள்

உலக அரங்கில் உயர்ந்த தமிழர்கள், எஸ். அன்வர், குமுதம் புது(த்)தகம், பக். 151, விலை 150ரூ. உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு பல உயர்ந்த பதவிகளில் உலகம் முழுக்க கோலோச்சியவர்கள் தமிழர்கள் என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டும் நூல். கூகுள் சி இ ஓ சுந்தர் பிச்சை உள்ளிட்ட 11 ஆளுமைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களின் தனித்திறன், அவர்களுக்குப் பின்னிருந்த உந்துசக்திகளை தொகுத்து இந்த அரிய நூலை உருவாக்கித்தந்துள்ளார் அன்வர். உலக அரங்கில் தமிழர்களை தலை நிமிரவைத்த தமிழர்களைப் பற்றிய வாழ்க்கைப் பதிவு. -இரா. மணிகண்டன். நன்றி: […]

Read more

நோபல் பரிசு பெற்ற வேதியியல் விஞ்ஞானிகள்

நோபல் பரிசு பெற்ற வேதியியல் விஞ்ஞானிகள், அரு. வி. சிவபாரதி, நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 192, விலை 120ரூ. வேதியியலில் சாதனை புரிந்த அறிவியல் அறிஞர்கள் பற்றியும் அவர்களின் வாழ்க்கையையும் அவர்களின் கண்டுபிடிப்புகளையும் பற்றி எழுதப்பட்ட நூல். மாணவர்களுக்கு உபயோகமான நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 20/4/2016.   —-   ஐந்திரன் கவிதைகள், ஐந்திரன், லெனின் விஜி பதிப்பகம், பக். 260, விலை 120ரூ. சமூக அவலங்களை உடுத்துக் கூறும் மக்களுக்கான கவிதைகள். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 20/4/2016.

Read more

இனியொரு கடவுள் செய்வோம்

இனியொரு கடவுள் செய்வோம், கவிஞர் தியாரூ, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 180, விலை 135ரூ. மரபின் பெருமை மாறாமல், மரபை எளிமைப்படுத்தி புதிய சந்தங்களில் எழுதப்பெற்ற மரபுக் கவிதைகளின் தொகுதி. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 20/4/2016.   —– கந்தர்வன் காலடித் தடங்கள், புலவர் வை. சங்கரலிங்கம், ஏ.ஆர். பப்ளிகேஷன்ஸ், பக். 160, விலை 140ரூ. உழைக்கும் தொழிலாளர்கள், அடக்குமுறைக்கு ஆட்படும் பெண்கள், மக்கள் பற்றியும் தன் படைப்புகள் வழி பதிவு செய்த கந்தர்வன் படைப்புகள் பற்றியும் அவரது வாழ்க்கை […]

Read more

அசையா சொத்து

அசையா சொத்து, கவிஞர் ஆ. முரகரசு, கவிஞர் பதிப்பகம், பக் 142, விலை 100ரூ. சமூக அக்கறை சார்ந்த கவிதைகளின் தொகுப்பு. சமூக அநீதிகளை சூடான வார்த்தைகளால் குட்டுவது பொருத்தம். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 20/4/2016.   —- மாறிச் செல்லும் மாற்றங்கள், ஜி.கே. தமிழ்ச்செல்வி, தாரிணி பதிப்பகம், பக். 132. விலை 100ரூ. மாற்றுத் திறனாளிகளின் கூக்குரல் வெளியே கேட்பதில்லை. அதை கேட்கச் செய்யும் முயற்சியே இந்நூல். மாற்றுத் திறனாளியின் சொந்த அனுபவங்கள் இவை. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 20/4/2016.

Read more

ஜீவா பார்வையில் அறிஞர்களும் கவிஞர்களும்

ஜீவா பார்வையில் அறிஞர்களும் கவிஞர்களும், ஜீவா பதிப்பகம், பக். 288, விலை 180ரூ. ஜீவா தன் எழுத்தின் வழியாகவும் மேடை முழக்கத்தின் வழியாகவும் உலக அறிஞர்கள் முதல் உள்ளூர் கவிஞர்கள் வரை வெளிக் கொணர்ந்த கருத்துக்களின் தொகுப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 20/4/2016.   —- தென்பாண்டி தந்த திருவள்ளுவர், டாக்டர் கேசவ சுப்பையா, துவாரகா பதிப்பகம், பக். 228, விலை 120ரூ. வள்ளுவரின் வரலாறோடு தமிழகத்தின் வரலாற்றையும் பேசும் நூல். அவர் வாழ்ந்த பகுதியின் வரலாற்றை கணித்துள்ளது சிறப்பு. -இரா. மணிகண்டன். […]

Read more

இசைப்பாட்டு இலக்கியம்

இசைப்பாட்டு இலக்கியம், கி. கோவிந்தராசு, வாசகன் பதிப்பகம், பக். 96, விலை 100ரூ. திரையிசைப் பாடல்களும் இலக்கியச் சுவையுடையவையே என்று நிறுவும் நூல். பஞ்சு அருணாசலம், கங்கை அமரன், டி. ராஜேந்தர் ஆகியோர் பாடல்கள் வழி இதை நிரூபித்திருப்பது சிறப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 18/4/2016.   —- ஊமையின் பேச்சு, ந. வேலுசாமி, அருளகம் வெளியீடு, பக். 224, விலை 150ரூ. ந. வேலுசாமி எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. ரத்தமும் சதையுமான உறவுகளை உணர்வு பூர்வமாக சித்தரித்துள்ளன இக்கதைகள். -இரா. மணிகண்டன். […]

Read more

காற்றில் வடித்த சிலைகள்

காற்றில் வடித்த சிலைகள், முனைவர் மரியதெரசா, தென்றல் நிலையம், பக். 80, விலை 35ரூ. இயற்கையை அன்றாட வாழ்க்கையோடு இணைத்து காணும் முயற்சியே இக்கவிதைத் தொகுப்பு. இயற்கை தரும் இன்பத்தை நூல் முழுதும் அள்ளித்தெளித்திருக்கிறார் கவிதை வடிவில். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 11/4/2016.   —- விழிப்புணர்வு, புதுவை மு. தருமராசன், புதுகைத் தென்றல், பக். 224, விலை 110ரூ. நூலாசிரியர் எழுதிய தலையங்கங்களின் தொகுப்பு இந்நூல். அரசியல் பிரச்னைகளில் இருந்து சமூகப்பிரச்னை வரை பலவற்றையும் அலசியுள்ளார். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், […]

Read more

மோகனம்

மோகனம், தொகுப்பாசிரியர் பேராசிரியர் நிர்மலா மோகன், திருவரசு புத்தக நிலையம், பக். 498, விலை 300ரூ. பேராசிரியர் இரா.மோகனின் முதல் நூல் தொடங்கி அண்மை நூல் வரையிலான படைப்புகள் குறித்த ஆவணமாக இந்நூலைத் தொகுத்துத் தந்துள்ளார் நூலாசிரியர். பேரா. இரா. மோகனின் படைப்பாளுமை இந்நூல் வழி பதிவு செய்திருப்பது சிறப்பான முயற்சி. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 11/4/2016.   —- ஜான்சிராணி, கள்ளிப்பட்டி சு. குப்புசாமி, சுவாமிமலை பதிப்பகம், பக். 96, விலை 40ரூ. வீரமங்கை ஜான்சிராணியின் வாழ்க்கை மூலம் ஒவ்வொரு பெண்ணும் […]

Read more

சப்தமில்லாத சப்தம்

சப்தமில்லாத சப்தம், ஓஷோ, தமிழில் சிவதர்ஷினி, கண்ணதாசன் பதிப்பகம், பக். 312, விலை 200ரூ. புராதன இசையைத்தான் சப்தமில்லாத சப்தம் என்கிறார் ஓஷோ. அது நம்மைச் சூழ்ந்துதான் இருக்கிறது. ஆனால் அதை நம்மால் உணர முடியாது. அதைக் கேட்டுணரும் முயற்சிதான் தியானம் என்கிறார். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 18/4/2016.   —– சிந்திக்க வைக்கும் சிறுவர் கதைகள், சுப்ரபாரதி மணியன், விஜயா பதிப்பகம், பக். 64, விலை 30ரூ. இன்பச் சுற்றுலா உள்ளிட்ட 11 சிறுகதைகளின் தொகுப்பு. சின்னஞ்சிறுகதைகள் மூலம் மாணவர்களுக்கு ஆதிவாசிகள். […]

Read more

100 சிறுதானிய சமையல் 1

100 சிறுதானிய சமையல் 1, எஸ். மல்லிகா பத்ரிநாத், பிரதீப் எண்டர்பிரைசஸ், பக். 107, விலை 100ரூ. கம்பையும் கேழ்வரகையும் கொண்டு 100 வகையான உடல் ஆரோக்கியமிக்க சமையலைத் தந்துள்ளார். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 18/4/2016.   —- டோக்கன் நம்பர் 18, தொகுப்பாசிரியர் நந்தவனம் சந்திரசேகரன், இனிய நந்தவனம் பதிப்பகம், பக். 106, விலை 100ரூ. திருச்சி மாவட்ட எழுத்தாளர்களின் மிகச் சிறந்த 20 கதைகளைத் தேர்வு செய்து நூலாகத் தந்துள்ளார்கள். மனித வாழ்வின் யதார்த்தத்தை பதிவு செய்யும் கதைகளே இவற்றில் […]

Read more
1 27 28 29 30 31 57