கற்றோர் போற்றுங்கள்

கற்றோர் போற்றுங்கள், ஆர்.பி. சங்கரன், கண்ணதாசன் வெளியீடு, பக். 228, விலை 120ரூ. கவியரசர் கண்ணதாசன் வாழ்ந்த காலத்திலும் மறைந்த காலத்திலும் அவரைப் பற்றிய அவரோடு பழகிய பெருமக்கள், பல்வேறு இதழ்களில் வடித்த எண்ணங்களின் தொகுப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 22/2/2016.   —- வயிறு மட்டும் வாழ்க்கையல்ல, கவிஞர் ஏகலைவன், வாசகன் பதிப்பகம், பக். 128, விலை 70ரூ. வெற்றிக்கான நம்பிக்கையூட்டும் கட்டுரைகளின் தொகுப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 22/2/2016.

Read more

பெருவெடி பிரபஞ்ச வரலாறு

பெருவெடி பிரபஞ்ச வரலாறு, எம்.எஸ். முகமது பாதுஷா, எஸ்.டி. பாலகிருஷ்ணன், அறிவியல் வெளியீடு, விலை 75ரூ. நம்மைச் சுற்றியுள்ள அண்டங்கள் எவ்வாறு தோன்றின என்பதை விளக்கும் சிறுவர்களுக்கான அறிவியல் விளக்க நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 22/2/2016.   —- நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதைகள், அரு.வி. சிவபாரதி, நேஷனல் பப்ளிகேஷன்ஸ், பக். 104, விலை 70ரூ. பொருளாதாரத்தில் சாதனை புரிந்த அறிஞர்களைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கையையும் மிக அழகாக எடுத்துக்கூறும் நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 22/2/2016.

Read more

தாகூரின் வாழ்வியல் சிந்தனைகள்

தாகூரின் வாழ்வியல் சிந்தனைகள், எஸ். ஜெகத் ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வு மையம், பக். 200, விலை 130ரூ. தேசியக் கவிஞர் தாகூரின் சிந்தனைகளில் இருந்து மணிமணியானவற்றை பொறுக்கி எடுத்து தொகுத்துள்ள நூல். படிக்க சுவாரஸ்யம். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 22/2/2016.   —- நமது சங்கீத வித்துவான்கள், திருக்குடந்தை பதிப்பகம், விலை 100ரூ. எம்.எஸ். சுப்புலட்சுமி, ஜி.என். பாலசுப்பிரமணியம், டி.கே. பட்டம்மாள், அரியகுடி ராமானுஜ அய்யங்கார், வீணை எஸ். பாலசந்தர், என்.சி. வசந்தகோகிலம், எம்.எம். தண்டபாணி தேசிகர் உள்பட 17 சங்கீத வித்துவான்கள் […]

Read more

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?, எஸ். சிதம்பரதாணுப்பிள்ளை, சித்தா மெடிக்கல் லிட்ரேச்சர் ரிசர்ச் சென்டர் வெளியீடு, பக். 158, விலை 100ரூ. பல நூல்களில் செய்தித்தாள்களில் வெளிவந்த செய்திகளின் சேகரிப்பு என்றாலும் பல கருத்துகள் படிக்க பயனுள்ளவையாக உள்ளன. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 8/2/2016.     —- துடுப்பும் தூரிகையும், முனைவர் செ. வில்சன், வைகறை பதிப்பகம், பக். 128, விலை 65ரூ. வாழ்க்கைக்கு வழிகாட்டும் வாழ்வியல் சிந்தனைகளைக் கொண்ட தொகுப்பு நூல். குறிப்பாக நம் மனதில் குடிகொண்டிருக்கும் தாழ்வு மனப்பான்மையை உடைத்தெடுக்கும் நூல். […]

Read more

எனது வாழ்க்கைப் பயணம்

எனது வாழ்க்கைப் பயணம், மருத்துவர் சு. முத்துசாமி, தாய்த்தமிழ்ப்பள்ளி வெளியீடு, பக். 360, நன்கொடை 200ரூ. ஒரு குக்கிராமத்தில் படிப்பறிவு இல்லாத எளிய குடும்பத்தில் பிறந்து, படித்து இன்று சிறந்த மருத்துவராக விளங்கும் ஒரு கிராமத்துச் சிறுவனின் வாழ்க்கைப் பயணத்தை கதைபோல் சொல்லிச் செல்கிறார் நூலாசிரியர். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 8/2/2016.   —- அருட்பெருஞ்சோதி நாட்டிய நாடகம், அருள்பாரதி, ஸ்ரீஅலமு புத்தக நிலையம், பக். 80, விலை 55 ரூ. வள்ளலார் வாழ்க்கை வரலாற்றை, சிறுவர்கள் படித்து நாடகமாக நடிப்பதற்கு ஏற்ற […]

Read more

சமரன்

சமரன், ச. மோகனகிருஷ்ணன், தியாக தீபங்கள் வெளியீடு, பக். 600, விலை 400ரூ. சரஸ்வதி என்ற இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்த வ. விஜயபாஸ்கரன் நடத்திய விமர்சன இதழே ‘சமரன்’ என்ற அரசியல் இதழாகும். 1962-64 வரை சுமார் இரண்டாண்டு காலம் தமிழக அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள், இந்திய அளவில் அரசியல் கட்சிகள் சந்தித்த சவால்கள், நீதிக்கட்சி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திராவிட கட்சிகள் போன்ற மூத்த கட்சிகளுக்குள் நடந்த பிரச்னைகளை விமர்சித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. நெற்றிக்கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே என்ற நக்கீரன் […]

Read more

இலக்கிய அமுதம்

இலக்கிய அமுதம், பேராசிரியர் இரா. மோகன், திருவரசு புத்தகநிலையம், பக். 282, விலை 180ரூ. மனித குலம் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதற்கான வழிமுறையை, நெறியை ஏடுத்தியம்பும் இலக்கிய கட்டுரைகள் முப்பதைக் கொண்ட நூல். கவிஞர்களைப் பற்றிய கவி அமுதம், சங்க இலக்கியம் குறித்த செவ்வியல் அமுதம், இக்கால நடப்பியலை பதிவு செய்யும் சிந்தனை அமுதம் என இலக்கிய அமுதத்தை மூவகையாகத் தந்து சுவைக்க சுவைக்க இன்பமூட்டுகிறார் பேராசிரியர் இரா. மோகன். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 8/2/2016.

Read more

காப்பிய மகளிர் ஒரு புதிய கண்ணோட்டம்

காப்பிய மகளிர் ஒரு புதிய கண்ணோட்டம், ந.யோகாம்பாள், முல்லைப் பதிப்பகம், பக். 80, விலை 80ரூ. காப்பியங்களில் வரும் பெண்களை காதல், வீரம், கற்பு, தீக்குணம், தியாகம், காமம் போன்ற கண்ணோட்டத்தில் பார்க்கும் புது முயற்சி. கண்ணகி, மாதவி முதல் நீலகேசி, வேகவதி வரையான காப்பியப் பெண்களின் மாறுபட்ட குணங்களை இந்நூலில் காண முடியும். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 4/1/2016.   —- ஹைக்கூ பூக்கள், மயிலாடுதுறை இளையபாரதி, நம் மொழி பதிப்பகம், பக். 128, விலை 120ரூ. 58 கவிஞர்களின் ஹைக்கூ […]

Read more

இரண்டாம் புத்தர்

இரண்டாம் புத்தர், சொ. முத்துக்குமார், வனிதா பதிப்பகம், பக். 120, விலை 60ரூ. நம் நாட்டுக்காக, சமுதாயத்திற்காக, விடுதலைக்காகப் பாடுபட்டவர்களின் தொண்டினை, அப்பா, மகன், மகள் ஆகியோரின் உரையாடல்கள் வழி சின்னஞ்சிறுவர்கள் முதல் பெரியோர் வரை அறிந்து கொள்ளச் செய்துள்ளார் ஆசிரியர். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 4/1/2016.   —- எளிமையின் சிகரம் எங்கள் நல்லக்கண்ணு, கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், பக். 288, விலை 180ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024665.html எளிமை, தியாகம், கறைபடாத வாழ்க்கை […]

Read more

இயற்கை வேளாண்மை

இயற்கை வேளாண்மை, வீ. அன்பழகன், அருட்தந்தை ச. இஞ்ஞாசிமுத்து, கண்ணதாசன் பதிப்பகம், பக். 144, விலை 90ரூ. விவசாயமும் விவசாயிகளும் உயிர்த்துடிப்புப் பெற ஒரே வழி நாம் நமது பாரம்பரிய விவசாய முறைக்கு மாற வேண்டும் என்பதை வலியுறுத்தும் நூல். தவறான விவசாய முறைகளால் குடிக்கும் நீரிலிருந்து உண்ணும் உணவு, உடுத்தும் உடை, இருக்கும் இடம் எனத் தொடங்கி தாய்ப்பாலே நஞ்சாகிவிட்ட நிலையை உதாரணங்களுடன் விளக்கி, இதிலிருந்து மீள, நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற இயற்கை வளத்தை, நாம் நமது சந்ததியினருக்கு விட்டுச்செல்ல வேண்டும் […]

Read more
1 29 30 31 32 33 57