ஆயிரம் கவிதைகள் மலரட்டும்

ஆயிரம் கவிதைகள் மலரட்டும், மு. முருகேஷ், மேன்னை வெளியீடு, பக். 180, விலை 120ரூ. சிற்றிதழாளர்கள், அவர்களின் கவிதைகள் ஆகியவற்றைப் பற்றி நூலாசிரியர் எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பு. நல்ல கவிஞர்களும் நல்ல கவிதைகளும் நாள்தோறும் பூக்க வேண்டும் என்பது நூலாசிரியர் விருப்பம். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 18/4/2016.   —- ஷேக்ஸ்பியரின் சிந்தனைகள், டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வுமையம், பக். 196, விலை 70ரூ. நாடகங்களில் ஷேக்ஸ்பியர் வெளிப்படுத்தும் சிந்தனைகளை மட்டும் தனியாக தொகுத்துத் தந்துள்ளார் நூலாசிரியர். இதனை கற்பவர்கள் […]

Read more

பூபாள இராகங்கள்

பூபாள இராகங்கள், நா. அப்துல் ஹாதிபாகவி, ஆயிஷா இஸ்லாமியப் பதிப்பகம், பக். 150, விலை 100ரூ. சமூக அவலம், வறுமை, கொடுமை, சமத்துவம், பெண்ணுரிமை, இஸ்லாம் இந்த மானுட சமுதாயத்திற்கு வழங்கியுள்ள கொடைகள் என்று பலவற்றையும் கவிதைகளாகத் தந்துள்ளார். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 18/4/2016.   —- திருக்குறள் தமிழ் ஆங்கில உரை, மு.க.அன்வர்பாட்சா, நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 344, விலை 200ரூ. பாமரர்களும், மாணவர்களும் எளிதில் புரியும் வண்ணம் புதிய சிந்தனைகளுடன் திருக்குறளுக்கு எழுதப்பட்ட உரை நூல். தமிழோடு ஆங்கிலத்திலும் உரை […]

Read more

வெற்றியே இலட்சியம்

வெற்றியே இலட்சியம், கவிதாசன், குமரன் பதிப்பகம், பக். 112, விலை 70ரூ. வெற்றி என்பது முதன்மையாக இருப்பதல்ல. முன்னேறிக்கொண்டே இருப்பது போன்ற முன்னேற்ற முயற்சிகளுக்கு உந்துதலாக இருக்கும் நூல். நன்றி: குமுதம், 18/4/2016.   —- எண்ணுவது உயர்வு, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், பக். 240, விலை 150ரூ. பாரதியார் எழுதிய ‘புதிய ஆத்திச்சூடி’ க்கு விளக்கவுரை எழுதியுள்ளார். பாரதியின் கீர்த்தியை பரப்பும் வண்ணம் எளிய நடையில் புத்துரை அமைந்துள்ளது சிறப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 18/4/2016.

Read more

புதிய பூமி சூடான சூரியன்

புதிய பூமி சூடான சூரியன், பேரா.சோ.மோகனா, அறிவியல் வெளியீடு, விலை 60ரூ. பூமி பற்றியும் சூரியன் பற்றியும் அறிவயல் பூர்வமான உண்மைகளை, அறிவியல் அறிஞர்கள் கண்டு பிடித்துச் சொன்னதை, நூலாசிரியர் எளிய மொழியில் தந்துள்ளார். நன்றி: குமுதம், 28/3/2016.   —- மெரிவின் நூல்களின் மதிப்பும் மாண்பும், மெர்வின் வெளியீடு, பக். 112, விலை 50ரூ. வாழும்போதே சமுதாயத்திற்காக நல்ல நூல்களை எழுதி, அதனை மதிப்பீடும் செய்து வெளியிட்டுள்ளார் நூலாசிரியர். நன்றி: குமுதம், 28/3/2016.

Read more

உன்னை நீ மறந்ததேன்?

உன்னை நீ மறந்ததேன்?, அ. கீதன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 168, விலை 100ரூ. ஒரு தனிமனிதனின் வாழ்க்கைத் தேடல்கள், சவால்கள், ஆன்மிக விழிப்புணர்ச்சி இவை யாவும் ஒரு மனோதத்துவ நிபுணரின் எழுத்துக்களாக பிரதிபலிக்கின்றன. நன்றி: குமுதம், 28/3/2016.   —- பள்ளு இலக்கியமும் சமுதாயப் பார்வையும், முனைவர் அகிலா சிவசங்கர், தாரிணி பதிப்பகம், பக். 220, விலை 250ரூ. 17,18ம் நூற்றாண்டின் உழவர்கள், அவர்களின் உழைப்பு, களிப்பு, பக்தி என்று கழிந்த அவர்களின் வாழ்க்கை முறைக்கே உரிய நெறிமுறைகளை எடுத்துக்காட்டும் ஆய்வு நூல். […]

Read more

கவிதை ஓர் ஆராதனை

கவிதை ஓர் ஆராதனை, கவிக்கோ அப்துல் ரகுமான், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 176, விலை 125ரூ. கவிதை மனிதனை ஒழுங்கானவனாக்குகிறது. அழகனாக்குகிறது. கவிதை அழகை ஆராதிக்கிறது. அதாவது ஆண்டவனை ஆராதிக்கிறது. இப்படி மனிதனுக்கும் கடவுளுக்கும் ஆராதனை செய்யும் கவிதைகளின் தொகுப்பு கவிக்கோ வரிகளில். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 21/3/2016.   —- டாக்டர் போத்தியின் கவிதைகள், டாக்டர் பெ. போத்தி, மணிவாசகர் பதிப்பகம், பக். 128, விலை 60ரூ. கால்நடை மருத்தவரான போத்தி, பல்வேறு காலங்களில் தமிழரசு உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் எழுதிய […]

Read more

புதிய முகம்

புதிய முகம், இராம இளங்கோவன், சுலோசனா பதிப்பகம், பக். 204, விலை 130ரூ. இனம், மொழி, நாட்டுணர்வு, மாந்தர் நேயம், வீடு, மனைவி, மக்கள், காதல், பெண்மை போன்றவற்றை பாடுபொருளாய் யாத்த கவிதைகளின் அணிவகுப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 21/3/2016.   —- விந்தன் எனும் ஓர் ஆளுமை, கோ. ஜனார்த்தனன்(தொகுப்பு), விந்தன் நினைவு அறக்கட்டளை, பக். 272, விலை 200ரூ. கோவிந்தன் என்னும் விந்தன் தமிழின் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளில் ஒருவர். விந்தனின் படைப்புகளை முன்வைத்து விந்தன் ஆக்கங்கள் எனும் கருத்தரங்கம் நடந்தது. […]

Read more

முப்பத்தி நாலாவது கதவு

முப்பத்தி நாலாவது கதவு, புல்வெளி காமராசன், அகநாழிகை பதிப்பகம், பக். 144, விலை 120ரூ. வாழ்க்கை தரும் நெருக்கடிக்கும் உறவுகள் தரும் ஏமாற்றத்திற்கும் இடையில் சிக்கி அல்லல்படும் பல பெண்களின், மனிதர்களின் கதைகளை தமிழில் தந்துள்ளார். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 21/3/2016.   —- மௌனப்போராட்டம், சீர்காழி உ. செல்வராஜு, வாசகன் பதிப்பகம், பக். 96, விலை 75ரூ. அறத்தையும் வாழ்வியல் தர்மத்தையும் எடுத்துரைக்கும் ஆக்கங்கள், பாக்கள் வடிவில். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 21/3/2016.

Read more

பனித்துளிக்குள் ஒரு பயணம்

பனித்துளிக்குள் ஒரு பயணம், சந்தர் சுப்ரமணியன், வர்ஷன் பிரசுரம், பக். 128, விலை 80ரூ. உலகை பனித்துளியின் உள்ளிருந்து பார்க்கும் பார்வையாய் அமைந்த கவிதைகளின் தொகுப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 21/3/2016.   —- ராம ராவண யுத்தம், வ. பாரத்வாஜர், காவ்யா பதிப்பகம், பக். 227, விலை200ரூ. நாம் நம் மனதில் தேக்கி வைத்திருக்கும் ராமாயணப் பாத்திரங்களை வேறுவகையான கோணத்தில் பார்த்து நவீன ராமாயணத்தைப் படைத்துள்ளார். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 21/3/2016.

Read more

மாணவர்களுக்கு இந்திய விடுதலையின் கதை

மாணவர்களுக்கு இந்திய விடுதலையின் கதை, மு.அப்பாஸ்மந்திரி, நர்மதா வெளியீடு, பக். 320, விலை 300ரூ. தேச விடுதலைக்காக வதைப்பட்ட இந்திய தலைவர்கள், போராட்டங்கள், இந்திய விடுதலை ஆகியவற்றை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும்விதமாக எழுதப்பட்ட நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 22/2/2016.   —- கற்றபின் நிற்க, வாமு.சே. திருவள்ளுவர், தமிழ்மணி புத்தகப் பண்ணை, பக். 272, விலை 200ரூ. உலகம் தழுவிய அமைப்புகளில் பல்வேறு தலைப்புகளில் நூலாசிரியர் பேசிய சொற்பொழிவுன் தொகுப்பு நூல். பல அரிய தகவல்கள் நூலுக்கு சிறப்பு. -இரா. மணிகண்டன். […]

Read more
1 28 29 30 31 32 57