ஆக்கப்படுவதே வாழ்க்கை

ஆக்கப்படுவதே வாழ்க்கை, பிரீத்தி ஷெனாய், தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன், ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ், பக்.214, விலை ரூ.235 ஒரு சுயமுன்னேற்ற நூலைப் போன்ற தலைப்பைக் கொண்ட இந்நூல், உண்மையில் சுயமுன்னேற்ற நூல் அல்ல, நாவல். கொச்சினில் உள்ள அங்கிதா என்ற கல்லூரி மாணவி தில்லி ஐஐடியில் படிக்கும் வைபவ் என்பவனிடம் காதல் வயப்படுகிறாள். செல்பேசி இல்லாத அக்காலத்தில் அவனுடன் தொலைபேசியில் பேசுவதே சாதனையாக இருக்கிறது. அங்கிதா பயின்ற கல்லூரி மாணவர் சங்கத் தேர்தலில் அவள் போட்டியிட்டு வெல்கிறாள். பிற கல்லூரி மாணவர்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. […]

Read more

கண்மணி சோபியா

கண்மணி சோபியா, கவிஞர் புவியரசு, நந்தினி பதிப்பகம், பக்.170, விலை ரூ.150. நிகழ்கால நிகழ்வுகளில் அதுவும் சிறார்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் ஏற்படுத்திய வலியை எழுத்தின் வழியே அனல் பறக்க நாவலாகத் தந்துள்ளார் நூலாசிரியர். அவரின் முதல் நாவலான இந்தப் படைப்பு ஓர் அறிவியல் புதினம் என்பது கூடுதல் சிறப்பு. அமெரிக்காவில் வேலை பார்க்கும் இந்திய விஞ்ஞானி தேவநாதன், பெண் ரோபோ (கண்மணி சோபியா) ஒன்றை உருவாக்கி தமிழ்நாட்டில் உலவ விடுகிறார். கோவை, குன்னூர், கொடைக்கானல் என அது பயணம் செய்கிறது. கூட்டு பாலியல் […]

Read more

கச்சியப்ப சிவாசாரியார் இயற்றிய கந்தபுராணம் (மூலமும் உரையும்-பகுதி-1)

கச்சியப்ப சிவாசாரியார் இயற்றிய கந்தபுராணம் (மூலமும் உரையும்-பகுதி-1) – உரையாசிரியர்: சிவ.சண்முகசுந்தரம்; பாரி நிலையம், பக்.1648; விலை ரூ.1500; சிவபெருமானின் மூன்று திருக்கண்களுள் கந்தபுராணம் நெற்றிக் கண்ணாகப் போற்றப்படுகிறது. "வடமொழியில் உள்ள பதிணென் புராணங்களுள் சிவபெருமானுக்குரியவை பத்துப் புராணங்கள். அவற்றுள் ஒன்று கந்தபுராணம். அதிலுள்ள ஆறு சங்கிதைகளுள் சங்கர சங்கிதையின் முதற்காண்டம் சிவரகசிய காண்டம். அதனுள் உள்ள நமது வரலாற்றைக் கந்தபுராணம் எனப் பெயரிட்டுத் தமிழில் பெருங்காப்பியமாக இயற்றுவாயாக' என முருகப்பெருமான், கச்சியப்ப சிவாசாரியார் கனவில் தோன்றி கட்டளையிட்டும், முதலடியும் (திகடச் சக்கரம்) எடுத்துக் […]

Read more

கஸ்தூர்பா ஒரு நினைவுத்தொகுப்பு

கஸ்தூர்பா ஒரு நினைவுத்தொகுப்பு, சுசிலா நய்யார், தமிழில்-பாவண்ணன்; சந்தியா பதிப்பகம், பக். 160;  விலைரூ.160. தேசப்பிதா காந்தியடிகளைப் பற்றி அறிந்த அளவுக்கு அவரது வெற்றிக்குபின்புலமாக இருந்த கஸ்தூர்பா குறித்து நாம் அறிவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. கஸ்தூர்பா குறித்த மிக அரிய உருக்கமான பல தகவல்களை வெளிப்படுத்தும் நூலாக இதுஅமைந்துள்ளது. மிகப்பெரியதலைவரின் மனைவியாகவும், நண்பராகவும், குழந்தைகளுக்கு நல்ல மாதாவாகவும் அவர் பல்வேறு அவதாரம் எடுத்திருப்பதை விவரித்திருக்கிறார் நூலாசிரியர் சுசிலா நய்யார். கஸ்தூர்பாவுடன் ஆசிரமத்தில் சிறுவயது முதலே தங்கிய நூலாசிரியர், கஸ்தூர்பாவின் தாய்மை உணர்வை ஒரு வீட்டுச் […]

Read more

மாநகராட்சி நகராட்சி சட்டங்கள்

மாநகராட்சி நகராட்சி சட்டங்கள், சோ.சேசாசலம், ஜீவா பதிப்பகம், பக்.280, விலை ரூ. 230 ஓர் அரசின் நிர்வாக கட்டமைப்பில் உள்ளாட்சி அமைப்புகளின் பணி என்பது மிகவும் இன்றியமையாதது. அரசின் திட்டங்கள் மக்களுக்குச் சென்றடைவதிலும், அடிப்படை வசதிகள், வரி வசூல், நிர்வாகம் போன்றவற்றில் உள்ளாட்சி அமைப்புகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இதில், 1919-இல் இயற்றப்பட்ட சென்னை மாநகராட்சி சட்டங்கள், அதன் தொடர்ச்சியாக இயற்றப்பட்ட நகராட்சி சட்டங்கள் ஆகியவை குறித்து இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளின் எண்ணிக்கை, மாநகராட்சியை நிர்வகிக்க மக்களால் […]

Read more

கானல் நீர் காட்சிகள்

கானல் நீர் காட்சிகள்-(தினமணி – சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதைகள்): வானதி பதிப்பகம், பக். 160; ரூ.120;, தினமணி – சிவசங்கரி சிறுகதைப் போட்டி (2018) -இல் பரிசு பெற்ற கதைகளின் தொகுப்பு இந்நூல். தொழில் நுட்பம் அசுர வேகமாக வளர்ந்துள்ள இன்றையச் சூழ்நிலையில் வாட்ஸ் அப் மூலம் இருவரிடையே நடக்கும் பதிவுகளில் பெண்கள் எப்படி எளிதில் ஏமாற்றப்படுகின்றனர் என்பதை உரையாடல்களின் மூலம் நம் கண் முன்னே காட்டுகிறது முதல் பரிசுக்குரியதாகத் தேர்வு செய்யப்பட்ட கதை. மாதவிலக்கின்போது பெண்கள் பயன்படுத்தும் சானிடரி […]

Read more

நலம் காக்கும் உணவுக் களஞ்சியம் அறிவோம் அவசியம்

நலம் காக்கும் உணவுக் களஞ்சியம் அறிவோம் அவசியம்,  கு.கணேசன், காவ்யா, பக்.445, விலை ரூ.450. நாம் உட்கொள்ளும் உணவுகள், அவற்றில் அடங்கியுள்ள சத்துகள் பற்றி மிக விரிவாக இந்நூலில் கூறப்பட்டுள்ளது. தனக்குத் தேவையான உணவைத் தேர்ந்தெடுத்து, எந்த அளவு உண்ண வேண்டும் என்பதை இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள முடியும். உணவு தொடர்பாக நம்மிடம் இருக்கும் பல கருத்துகள் எவ்வாறு அறிவியலுக்குப் புறம்பாக இருக்கின்றன என்பதையும், நம்மால் ஒதுக்கப்படும் அல்லது விரும்பி உண்ணப்படும் பல உணவுகள் நம் உடலுக்கு எந்த அளவுக்கு உகந்தவையாக இருக்கின்றன […]

Read more

ஏழு ராஜாக்களின் தேசம்

ஏழு ராஜாக்களின் தேசம்,  அபிநயா ஸ்ரீகாந்த், யாவரும் பப்ளிஷர்ஸ், பக்.248, விலை ரூ.275. தூத்துக்குடியைச் சேர்ந்த நூலாசிரியர், கணவரின் வேலை காரணமாக ஐக்கிய அரபு நாட்டில் இரண்டு ஆண்டுகள் வாழும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். அந்த அனுபவங்களின் அடிப்படையில், துபாய், ஷார்ஜா, அபுதாபி, அஜ்மான், உம் அல் குவைன், புஜைரா, ராஸ் அல் கைமா என்ற ஏழு ஐக்கிய அரபு நாடுகளைப் பற்றிய அரிய தகவல்கள் அடங்கிய நூலை எழுதியிருக்கிறார். ஐக்கிய அரபு நாடுகளில் யார் வேண்டுமானாலும் தொழில் வர்த்தகத்தில் முதலீடு செய்யலாம்; ஆனால் அமீரகக் குடியுரிமை […]

Read more

பெரியசாமித்தூரன் நினைவுக் குறிப்புகள்

பெரியசாமித்தூரன் நினைவுக் குறிப்புகள், பதிப்பாசிரியர்: சிற்பி பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, பக்.288, விலை ரூ.260. தமிழகம் நன்கறிந்த படைப்பாளியான பெரியசாமித்தூரன் நினைவுக் குறிப்புகளின் தொகுப்பு இந்நூல். பணம் சம்பாதித்து சுகமாக வாழ வேண்டும் என்று நினைக்காமல், தனக்குப் பிடித்த பணிகளைச் செய்து வாழ்ந்து முத்திரை பதித்து மறைந்தவர் பெரியசாமித்தூரன். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே பித்தன் என்ற இதழை நடத்தியிருக்கிறார். பாரதியாரின் படைப்புகளை அவை வெளிவந்த ஆண்டு, மாதம், நாள் குறிப்புகளோடு 1953 ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கிறார். சிறுகதைகள், உளவியல் நூல்கள், நாடகங்கள், குழந்தை இலக்கியம், […]

Read more

திருவருட்குறள் (மூலமும் உரையும்)

திருவருட்குறள் (மூலமும் உரையும்),  ஆளரியார் என்ற ஆதிநரசிம்மன், மணிவாசகர் பதிப்பகம், பக்.799, விலை ரூ.750. கால வகையினான் புதியன புகுதல்என்பது இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத ஒன்று. திருவள்ளுவரின் திருக்குறளை அடியொற்றியும், அடித்தளமாகவும் கொண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது. முப்பால்களையும், 366 அதிகாரங்களையும் கொண்டு, இயலுக்கு பத்து குறள்களாக, அதிகாரப் பெயர்களில் சில மாற்றங்களுடன் அமைந்துள்ளது. கற்புடைமை (13) அதிகாரத்தில், கற்புடைய பொற்புடையார் நல்லுருச் செய்துலகு/ கற்கோட்டம் கட்டித் தொழும் என்றும், கணவன்-மனைவி கடன் எனக் கூறும் (22) அதிகாரத்தில், படிப்பும் பதவியும் பட்டமும் வாசல்/ படியிலே விட்டுள்வரல் […]

Read more
1 42 43 44 45 46 180