தமிழில் சுயசரித்திரங்கள்

தமிழில் சுயசரித்திரங்கள், தொகுப்பாசிரியர்: சா.கந்தசாமி; சாகித்திய அகாதெமி, பக்.334; ரூ.290 துபாஷி ஆனந்தரங்கப் பிள்ளை, வ.உ.சிதம்பரம் பிள்ளை, உ. வே.சாமிநாதையர், சுப்பிரமணிய பாரதியார், திரு.வி.க., நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, தி.செ.செள.ராஜன், சுத்தானந்த பாரதியார், ம.பொ.சிவஞானம், நெ.து. சுந்தர வடிவேலு, கலைஞர் மு.கருணாநிதி, த. ஜெயகாந்தன் ஆகிய 12 பேர் எழுதிய சுயசரித்திரங்களின் சிறப்பான பகுதிகள் தொகுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சுயசரித்திரங்களை எழுதியவர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பை அழகாக விவரித்துள்ளார் நூலாசிரியர். துபாஷி ஆனந்தரங்கப் பிள்ளை, வ.உ.சிதம்பரம் பிள்ளை, உ. வே.சாமிநாதையர், சுப்பிரமணிய பாரதியார், திரு.வி.க., […]

Read more

கூட்டுறவு இயக்க முன்னோடிகள் வாழ்வும் தொண்டும்

கூட்டுறவு இயக்க முன்னோடிகள் வாழ்வும் தொண்டும், க.சிவாஜி, அலைகள் வெளியீட்டகம், தொகுதி 1 – பக்.312; ரூ.200; தொகுதி 2 – பக்.344; ரூ.260; தொகுதி 3- பக்.368; ரூ.350. வேளாண்மையை முன்னேற்றம் அடையச் செய்ய விவசாயிகளுக்குக் கடன் வசதிகள் செய்து தரப்பட வேண்டும்; அதற்காக ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளும் வகையில் கடன் சங்கங்களைத் தொடங்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசாங்கம், 1904 – இல் கூட்டுறவுச் சட்டத்தை இயற்றி, கூட்டுறவுச் சங்கங்களைத் தொடங்கியது. விவசாயிகள் மட்டுமல்லாமல், நெசவாளர், ஆலைப் பணியாளர் என […]

Read more

கண்ணன் எத்தனை கண்ணனடி

கண்ணன் எத்தனை கண்ணனடி, மாலதி சந்திரசேகரன், கைத்தடி பதிப்பகம், பக்.242, விலைரூ. 225. வித்தியாசமான நூல் இது. பகவான் கண்ணனின் லீலைகளை கண்ணனுடன் தொடர்புடையவர்கள் வாய் மொழியாக தெரிவிப்பதாக அமைந்துள்ளது. சுமார் 20 பாத்திரங்கள் கண்ணனின் லீலைகள் குறித்து பேசுகின்றன. குறிப்பாக, வசுதேவருக்கும் ரோஹிணிக்கும் மகனாகப் பிறந்த பலராமனின் பிறப்பு, அப்போது நடந்த சம்பவங்களை நந்தகோபன் கூறுகிறார். அடுத்ததாக, குழந்தை கிருஷ்ணர் மாம்பழம் விற்கும் கிழவியின் ஆசைப்படி, அவளை அம்மா என்றழைத்து மாம்பழம் பெற்ற லீலையை என்னவென்று சொல்வது? பகவானை வணங்கி நாம் ஓரடி […]

Read more

கொங்கு மண்டலத்தில் பெளத்தம் வரலாற்று ஆய்வு

கொங்கு மண்டலத்தில் பெளத்தம் வரலாற்று ஆய்வு, மு.நீலகண்டன், கனிஷ்கா புக் ஹவுஸ், பக்.184, விலை ரூ.160. பெளத்தம் கொங்கு மண்டலத்தில் பரவியது பற்றியும், வீழ்ச்சியடைந்தது பற்றியும் விரிவாகப் பேசும் நூல். நூலின் தொடக்கத்தில் கொங்கு மண்டலம் அமைந்துள்ள நிலப்பகுதி,  கொங்கு என்று பெயர் வரக் காரணம்,கொங்கு நாடு குறித்து தமிழ் இலக்கியங்களான பதிற்றுப்பத்து, புறநானூறு, அகநானூறு, நற்றிணை நானூறு, சிலப்பதிகாரம் ஆகியவற்றில் காணப்படும் இலக்கியச் சான்றுகள், கொங்கு மண்டலத்தில் ஆட்சி புரிந்த குறுநில மன்னர்கள், சிற்றரசர்கள்,சேர, சோழ, பாண்டியர்கள், விசய நகர அரசுகள் குறித்த வரலாற்றுச் […]

Read more

தெய்வப் புலவர் திருவாய்மொழி

தெய்வப் புலவர் திருவாய்மொழி, அரங்க. இராமலிங்கம், வானதி பதிப்பகம், பக்.656, விலை ரூ.500. திருக்குறளின் சிறப்பையும், மாண்பையும் தமிழறிஞர்கள் மட்டுமல்ல, எல்லீஸ், ஜி.யு.போப் முதலிய வெளிநாட்டவர் பலரும் அதன்பால் ஈர்க்கப்பட்டு போற்றி உரைத்துள்ளனர். மொழிபெயர்ப்பு செய்துள்ளனர். திருக்குறளில் உள்ள பல்வேறு சிறப்புகளை குறிப்பாக, நூலின் அமைப்பு, திறனாய்வு குறித்த விவரங்கள், திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள், அதில் இடம்பெற்றுள்ள உவமைகள், அணிநயங்கள், பாயிரத்தில் திருவள்ளுவர் கூறும் இறை, அறிவு பற்றிய கருத்துகள்,  உலகியல் பார்வையோடு கூடிய துறவு அதிகாரத்தின் சிறப்பு, திருக்குறளை எடுத்தாண்ட புலவர்களின் கருத்துகள், பல்வேறு […]

Read more

பிரச்சனைகள் நிலைப்பதில்லை உறுதியானவர்கள் நிலைக்கிறார்கள்

பிரச்சனைகள் நிலைப்பதில்லை உறுதியானவர்கள் நிலைக்கிறார்கள், ராபர்ட் எச்.ஷுல்லர், தமிழில்: தர்மகீர்த்தி, பக்.264, விலை ரூ.210. அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் எச்.ஷுல்லர் எழுதிய ஆங்கில நூலின் தமிழாக்கமாக இந்த நூல் வெளிவந்துள்ளது. யாருக்குத்தான் பிரச்னைகள் இல்லை? ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என பாகுபாடின்றி எல்லாருக்குமே பிரச்னைகள் உண்டு. அவற்றை நேர்மறைச் சிந்தனையோடு எதிர்கொள்பவர்கள்தான் வெற்றிகொள்ள முடியும் என்பதை ராபர்ட் எச். ஷுல்லர் தனது வாழ்க்கையில் சந்தித்த சில மோசமான தருணங்களையும், அவற்றில் இருந்து அவர் மீண்டு வந்ததையும் எடுத்துக்காட்டி விவரித்துள்ளார். அவருக்கு தெரிந்தவர்கள், பின்னாளில் […]

Read more

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம், வாழ்வியல் கட்டுரை, வித்யா சாகர், முகில் பதிப்பகம்,  பக்.144, விலை ரூ.125. நிம்மதி: கிலோ நாலு ரூபாய்,  உடம்பு ஓர் ஆயுதம்: ஆயுதமேந்துங்கள் வாழ்க்கைப் போர் புரிவோம் வசவு: வசவு வாங்கலையோ வசவு, எல்லோரும் தற்கொலை செய்து கொள்ளுங்கள் – இவ்வாறு வித்தியாசமான பல தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள 25 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இன்றைய வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல பிரச்னைகளை எதிர்கொள்ள நம்மை நாம் எப்படித் தயார் செய்து கொள்ள வேண்டும் என்றஅடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியரின் அனுபவம் […]

Read more

முகத்தில் முகம் பதித்தோர்

முகத்தில் முகம் பதித்தோர், இளமாறன், மணிவாசகர் பதிப்பகம், பக்.192, விலை ரூ.150. முகம் சிற்றிதழில் வாழ்வில் சாதனை செய்தவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன. அவை பல தொகுப்புகளாகவும் வெளியிடப்பட்டிருக்கின்றன. இத்தொகுப்பில் சாதனை புரிந்த ஆற்றலாளர்களைப் பற்றிய கட்டுரைகள் அடங்கியுள்ளன. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தி.மு.க. தலைவர் க.அன்பழகன் போன்ற அரசியல் தொடர்புள்ளவர்கள், பொம்மலாட்டக் கலைஞர் மு.கலைவாணன், ஒளிப்படக் கலைஞர் இரா.மணி, கல்வெட்டாய்வாளர் கோ.கிருட்டிணமூர்த்தி, தொல்லியலறிஞர் ச.கிருட்டிணமூர்த்தி, மருத்துவர் க.கோபால் போன்ற பல்வேறு துறை சார்ந்தவர்களின் […]

Read more

பிரமபுரம் மேவிய பெம்மான்

பிரமபுரம் மேவிய பெம்மான்,  அன்பு ஜெயா, காந்தளகம், பக்.272, விலை ரூ.200. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் புகழ்பெற்றது – பிரமபுரம், தோணிபுரம், காழி, கழுமலம், சீகாழி என்றெல்லாம் போற்றப்படும் சீர்காழி திருத்தலம். சைவத்துக்கு மட்டுமல்லாமல் வைணவத்துக்கும் பெருமை சேர்த்த சிறப்பு இவ்வூருக்கு உண்டு. இத்திருத்தலத்திற்குக் காரணப் பெயர்களாக 12 பெயர்கள் உள்ளன. இப்பன்னிரண்டு திருப்பெயர்களும் பன்னிரண்டு யுகங்களில் விளங்கி வந்த பெயர்கள் என்று பட்டினத்தடிகள் ஒரு பாடலில் குறிப்பிடுகிறார். வேதநெறி தழைத்தோங்கவும், சைவம் மேன்மை கொள்ளவும் அவதரித்த திருஞானசம்பந்தரால் புகழ் பெற்றது […]

Read more

இது சிக்ஸர்களின் காலம்

இது சிக்ஸர்களின் காலம்,  ராம் முரளி; யாவரும் பப்ளிஷர்ஸ், பக்.224, விலை ரூ.250. தற்போது ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி தொடங்கி நடைபெறும் நிலையில் கிரிக்கெட் சீசன் உச்சகட்டத்தில் உள்ளது. கிரிக்கெட் ஆட்டங்களில் துரிதமாக ரன்களைக் குவிக்க பவுண்டரிகள், சிக்ஸர்கள் உதவுகின்றன. தற்போது ஏராளமான சிக்ஸர்கள் அடிக்கப்படுவதால், இது சிக்ஸர்களின் காலம் என நூலுக்குப் பெயரிடப்பட்டுள்ளது போலும். தற்காலத்தில் கிரிக்கெட் என்றாலே நினைவுக்கு வரும் விராட் கோலி, தோனி, ரோஹித் சர்மா, ஷிகர் தவன் (இந்தியா) கிறிஸ் கெயில் (மே.இ.தீவுகள்), பாபர் ஆஸம் […]

Read more
1 44 45 46 47 48 180