உயிர்ச்சொல்

உயிர்ச்சொல், த.சித்தார்த்தன், மேன்மை வெளியீடு, விலை 100ரூ. மனித இனம் பெருகிக்கொண்டு இருக்கிறது. அதேசமயம் மண்வளம் அழிந்து கொண்டிருக்கிறது. இருப்பவர்க்கே இயற்கையால் ஈடுதரமுடியாத சூழலில் இனி வருபவர்க்கு என்ன வளம் மீதம் இருக்கும்? இனியாவது இயற்கையைச் சீழிப்பதை நிறுத்தி அதைக் காப்போம் என சமுதாய அக்கறையுடன் வலியுறுத்தும் நூல். நன்றி: குமுதம், 11/10/2017.

Read more

தேவதையின் பிள்ளைகள்

தேவதையின் பிள்ளைகள், அல்லிநகரம் தாமோதரன், மேன்மை வெளியீடு, விலை 120ரூ. உணர்ச்சிவசத்தால் மட்டும் கதைகள் தோன்றிவிடாது. சிறு சிறு உணர்வுகளைக் கோர்த்து அதற்கிடையில் ஒருமுறை வாழ்ந்து பார்த்த பிறகு தான் முழுக் கதையும் மனதுக்குள் வந்து தவழும். அதுவரை அந்தக் கதையின் கண்ணி அகப்படாமலே இருக்கும். தேவதையின் பிள்ளைகள் என்கிற இந்த சிறுகதைத் தொகுப்பும் உணர்வுகளை உரசியே எழுதப்பட்டிருக்கிறது. எளிய மக்களின் துயரங்களை வைத்தே மனிதர்களின் உயர்ந்த பண்புகளையும், அவர்களது உள்ளத்தையும் வடிவமைத்திருக்கிறார். இதனால்தான் தொகுப்பு முழுக்க பணக்காரர்களைப் பார்க்க முடியவில்லை. ஆசிரியரின் சொந்த […]

Read more

ஆகாயச் சுரங்கம்

ஆகாயச் சுரங்கம், சி.ராமலிங்கம், மேன்மை வெளியீடு, விலை 100ரூ. விண்கல் முதல் விண்கலம் வரை, கோள்கள் முதல் செயற்கைக் கோள்கள் வரை இயற்கை, செயற்கை என்று எத்தனையோ அற்புதங்களைச் சுமந்துகொண்டு பரந்து விரிந்து கிடக்கிறது வானம். உயர்ந்து அதனை உற்றுப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடத்தை அது கற்றுத் தருகிறது. தோண்டத் தோண்ட வளரும் சுரங்கமாக தொலைவில் இருக்கும் ஆகாயத்தை தொட்டுவிடும் தூரத்தில் கொண்டுவந்து காட்டியிருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 16/8/2017.

Read more

வல்லிக்கண்ணன் தி.க.சி.க்கு எழுதிய கடிதங்கள்

வல்லிக்கண்ணன் தி.க.சி.க்கு எழுதிய கடிதங்கள், தொகுப்பாசிரியர் கழனியூரன், மேன்மை வெளியீடு, பக்.368, விலை ரூ.275. எழுத்தாளர் வல்லிக்கண்ணன், திறனாய்வாளர் தி.க.சி.க்கு எழுதிய 161 கடிதங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நூல் இது. தி.க.சி. வல்லிக்கண்ணனைக் ‘குருநாதர் 39‘ என்று குறிப்பிட்டாலும், வல்லிக்கண்ணனின் ‘பிரிய சகோதரராகவே 39‘ அவர் இருந்திருக்கிறார். அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள், இலக்கிய இதழ்கள், இலக்கியக் கூட்டங்கள், கூட்டங்களில் நடந்த கலாட்டாக்கள், மழை பெய்தது, பெய்யாமல் வெயில் கொடுமைப்படுத்தியது என எல்லா விஷயங்களையும் வல்லிக்கண்ணன் தி.க.சி.க்கு எழுதியுள்ளார். சுவாரசியமான பல தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. […]

Read more

கண்ணோட்டம்

கண்ணோட்டம், கே. ஜீவபாரதி, மேன்மை வெளியீடு, பக். 160, விலை 120ரூ. பத்திரிகைகளில் வரும் மிக அரிதான செய்திகளையும், நம்மை கடந்துபோகும் வரலாற்று நிகழ்வுகளையும் ஆய்வு செய்து கட்டுரைகள் எழுதுவது ஜீவபாரதியின் தனித்தன்மை. அக்கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். வந்தே மாதரம் வந்த கதை, வேலுநாச்சியார் பற்றிய கட்டுரை, கோதையம்மாளுக்கு தியாகி பென்சன் கிடைக்க காரணமாக இருந்த கட்டுரை என்று அத்தனையும் பல்நோக்கு கொண்டு பயனளிப்பதாக உள்ளன. நன்றி: குமுதம், 19/4/2017.

Read more

காலத்தால் அழியாத சுதந்திரம்

காலத்தால் அழியாத சுதந்திரம், எல்லை. சிவக்குமார், மேன்மை வெளியீடு, பக். 128, விலை 100ரூ. புதுச்சேரி வரலாற்றில் வ. சப்பையாவுக்கும் அவர் தொடங்கிய ‘சுதந்திரம்’ இதழுக்கம் ஒரு சிறப்பான இடமுண்டு. அத்தகைய சிறப்பான ‘சுதந்திரம்’ பத்திரிகையின் ஆரம்பகால இதழ்களை இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது. புதுச்சேரி மக்கள், அரசியல், போராட்டம், தொழிலாளர்கள், இலக்கியம், சமூகம் என்று அனைத்தையும் இவ்விதழ் வழி ஆராயப்பட்டுள்ளது. நன்றி: குமுதம், 5/4/017.

Read more

எளிமையின் ஏந்தல்

எளிமையின் ஏந்தல், தொகுப்பாசிரியர் கே. ஜீவபாரதி, மேன்மை வெளியீடு, விலை 240ரூ. கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான ஆர். நல்லகண்ணுவின் 98-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து இந்த நூலை வெளியிட்டு இருக்கிறார்கள். மொத்தம் 48 கட்டுரைகள், எல்லாம், படிப்பவர்களை சிந்திக்க வைக்கும் கட்டுரைகள். “கச்சத்தீவும் தமிழக மீனவர்களும்” என்ற கட்டுரையில் நல்லகணணு கேட்கிறார்- “ராஜீவ்காந்தி – ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை இலங்கை அரசுமதிக்கவில்லை. ஆனால், நாம் மட்டும் எவ்வாறு கச்சத்தீவு ஒப்பந்தத்தைப் புனிதமாகக் கருதமுடியும்? புனிதத்தின் பெயரில் இந்திய உயிர்கள் […]

Read more

பால்வெளி (பேரண்டர் கவிதைகள்),

பால்வெளி (பேரண்டர் கவிதைகள்), கவிஞர் சி. ராமலிங்கம், மேன்மை வெளியீடு, பக். 192, விலை 150ரூ. மக்கள் மொழியில் மக்கள் பிரச்னையை முதன் முதலில் தமிழ்க் கவிதையில் பேசியவர் என்ற சிறப்பு பாரதிக்கே உண்டு. எதிலும் நடந்த வழியே நடந்து செல்லாமல் புதிய வழியில் செல்வோரைத்தான் வரலாறு பதிவு செய்யும், அந்த வகையில் தமிழ்க் கவிதையில் முதன் முதலில் அறிவியல் கருத்துக்களைப் பேசிய சிறப்பு இந்த நூலாசிரியர் கவிஞர் சி. ராமலிங்கத்தையே சேரும். பேரண்டம் குறித்த செய்திகளை இன்றைய செய்யுள் வடிவமான புதுக்கவிதையாகச் சொல்ல […]

Read more

மலர்களுக்காக மலர்ந்தவை

மலர்களுக்காக மலர்ந்தவை, கே. ஜீவபாரதி, மேன்மை வெளியீடு, பக். 184, விலை 135ரூ. “ஓம்சக்தி’ தீபாவளி மலருக்காக நூலாசிரியர் எழுதிய “மும்மூர்த்திகளும் தமிழர்களும்’, “கப்பலோட்டிய தமிழனின் கடைசி மணித்துளிகள்\’, “மாவீரனின் கடைசி மணித்துளிகள்‘’ ஆகிய கட்டுரைகள் போன்று பல்வேறு சமயங்களில் பல்வேறு மலர்களுக்காக எழுதப்பெற்ற கட்டுரைகள் இந்த நூலில் தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன. “வடலூர் வள்ளலாரும் பசும்பொன் தேவரும்\’ கட்டுரையில் இருபெரும் மகான்களின் வாழ்க்கையைப் பற்றிய ஒப்பீடும், “மும்மூர்த்திகளும் தமிழர்களும்“ ட்டுரையில் காந்திக்கு “மகாத்மா’ என்ற பட்டம் எப்படி, யாரால் அளிக்கப்பட்டது “  என்பதற்கான விவரமும், மரணத்தைக் […]

Read more

தமிழ்ச் சமூகத்தில் சமயம் சாதி கோட்பாடு

தமிழ்ச் சமூகத்தில் சமயம் சாதி கோட்பாடு, ரவி வைத்தீஸ்வரன், ரா. ஸ்தனிஸ்லாஸ், மேன்மை வெளியீடு, பக். 336, விலை 250ரூ, தற்கால சமய, பண்பாட்டு, அரசியலை விளங்கிக் கொள்ளும் நோக்குடன், அண்மைக் காலத்தில் கோட்பாடு ரீதியாக எழுச்சி பெற்ற பின் அமைப்பியல், பின் காலனித்துவம், விளிம்பு நிலை மக்கள் ஆய்வு முறை, பின் காலனிய மதச் சார்பின்மை ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு. இந்தியா, இலங்கை, கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறிவு ஜீவிகளின் விவாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. நன்றி: குமுதம், 10/8/2016.

Read more
1 2 3