பாரதத்தில் ராஜதர்மம்

பாரதத்தில் ராஜதர்மம் அன்றும், இன்றும், ஆர்.பி.வி.எஸ். மணியன், வர்ஷன் பிரசுரம், சென்னை 17, பக். 456, விலை 250ரூ. ஆட்சியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய உயரிய நெறிமுறைகளே ராஜதர்மம் எனப்படுவது. போற்றத்தக்க இத்தகைய நெறிமுறைகளை உருவாக்கி, அவற்றை உலகிற்கு முதன் முதலில் போதித்தது பாரத நாடு என்று கூறும் இந்நூலாசிரியர், அவை குறித்த பல்வேறு வரலாற்றுத் தகவல்களை இந்நூலில் தொகுத்துள்ளார். இதற்கு ராமாயணம், மகாபாரதம், சுக்ர நீதி, அர்த்த சாஸ்திரம் போன்ற ஹிந்து தர்ம நூல்கள் முதல், திருக்குறள், அகநானூறு, புறநானூறு போன்ற சங்க கால […]

Read more

இணைவோம்

இணைவோம், மு. காலங்கரையன், எல்கேஎம் பப்ளிகேஷன், பக். 264, விலை 100ரூ. நூலாசிரியர் மாற்றுத் திறனாளிகளின் துயரங்களைக்கூட இருந்து அனுபவித்துள்ளதால், அவர்களின் முன்னேற்றத்திற்காக, இந்நூலை சுவை குன்றாமல் ஓர் நாவலாக எழுதியுள்ளார். இந்நூலில் காணும் மூதுரைகள், முன்னோரின் கவிதை வரிகள், சிந்தனைச் சிதறல்கள், நூலாசிரியரின் ஆழ்ந்து, அகன்ற அறிவின் திறத்திற்கு எடுத்துக்காட்டுகளாகும். சான்றாக, சேர்ந்து வாழுகிறது மட்டும்தான், காதலுக்கு வெற்றின்னு இல்லை. நம்மள நேசிச்சவங்க நமக்குக் கிடைக்காவிட்டாலும், அவங்க சந்தோஷமா இருக்கிறதப பார்த்து சந்தோஷப்படுகிறதும், உண்மையான காதல்தான் என்ற வைர வரிகளைக் கூறலாம். நூலின் […]

Read more

காலம்

காலம், ராஜம் கிருஷ்ணன், சேகர் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. தமிழ் இலக்கிய உலகின் கௌரவத்துக்குரிய எழுத்தாளர்களில் ஒருவர் ராஜம் கிருஷ்ணன். 1925ல் முசிறியில் பிறந்த ராஜம் கிருஷ்ணன் 50 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய வேருக்கு நீர் என்னும் நாவலுக்கு 1973ல் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. அவரது நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன. கணவர் கிருஷ்ணன் மறைவுக்குப் பின்னர் தனியே வாழ்ந்து வந்த ராஜம் கிருஷ்ணன் உடல்நலக் குறைவு காரணமாகக் கடந்த நான்கைந்து ஆண்டுகளாகச் சென்னையில் தனியார் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருகிறார். […]

Read more

ராஜீவ் காந்தி சாலை

ராஜீவ் காந்தி சாலை, விநாயக முருகன், உயிர்மை பதிப்பகம், சென்னை, பக். 328, விலை 240ரூ. சென்னை மாநகர வெளியில் ராஜீவ் காந்தி சாலை சென்னை நகரைச் சுற்றிலும் இயற்கை எழிலுடமன் விளங்கிய கிராமங்கள் நகரமயமாதலின் காரணமாக இன்று சிதிலமாகிகொண்டிருக்கின்றன இயற்கை வளமான பிரதேசத்தின் ஊடே மாமல்லபுரத்தினை நோக்கிச் செல்லும் ராஜீவ் காந்தி சாலை வெறுமனே போக்குவரத்திற்கானது மட்டுமல்ல. பாரம்பரியமான கிராமங்கள், ஐ.டி. கம்பெனிகள் என இரு வேறு உலகங்களைப் பிரிக்கும் எல்லையாக ராஜீவ் காந்தி சாலை விளங்குகிறது. பன்னாட்டுத் தகவல்தொடர்புக் கம்பெனிகளின் வருகையினால் […]

Read more

ஆறா வடு

ஆறா வடு, சமயந்தன், தமிழினி பதிப்பகம், சென்னை, பக். 192, விலை 120ரூ. ஈழப்போரின் துயரமான பக்கங்கள் போர் பின்னணியிலான கதையுடன் அதிர்ச்சியும் பதற்றமும் ஊட்டும் ஈழ இலக்கியத்தின் முக்கியமான நாவல். எண்பதுகளில் தீவிரமான ஈழத்தமிழர் அரசியல் பிரச்சனையின் விளைவுகள் இன்றளவும் தொடர்கின்றன. இலங்கை அரசாங்கத்தினை எதிர்த்து ஆயுதமேந்திப் போராடிய தமிழர் இயக்கங்களின் செய்றபாடுகள், சிங்களப் பேரினவாத அரசின் அடக்குமுறை, இந்திய அரசின் அமைதிப்படை உள்ளிட்ட நடவடிக்கைகள் எனத் தமிழர்கள் எதிர்கொண்ட துயரங்கள் அளவற்றவை. ஈழத்தில் தமிழின விடுதலையை முன்வைத்து நடைபெற்ற போராட்டத்தின்போது, மக்களின் […]

Read more

பூக்கள் எல்லாம் மாலைகளுக்காக

பூக்கள் எல்லாம் மாலைகளுக்காக, செங்கை பதிப்பகம், 349/166, அண்ணாசாலை, செங்கல்பட்டு603002, விலை 110ரூ. பட்டணத்துப் பெண் சகுந்தலாவும், அத்தை மகன் வெங்கடேசும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர். அத்தை வீட்டில் பணத்தால் நிராகரிக்கப்படுகிறாள். அந்த வேதனையால் கிராமத்திலிருந்து பெண் கேட்டு வந்த சங்கரனை கணவனாக ஏற்றுக்கொள்கிறாள். கிராமத்து வாழ்க்கை ஒரு புதுவிதமான அனுபவத்தையும், சந்தோஷத்தையும் கொடுக்கிறது. அதேசமயம் சங்கரனின் பங்காளிகளால் உருவாக்கப்பட்ட சொத்து பிரச்சினையில் சங்கரன் கொலை குற்றம் சாட்டப்பட்டு துன்பமும், துயரமும் அனுபவிக்கின்றான். அன்பு, பாசம், துக்கம், இரக்கம் என்று எல்லா உணர்ச்சிகளிலும் தத்தளிக்கிறார்கள். […]

Read more

கடைசிக்கோடு

கடைசிக்கோடு, ரமணன், கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 80ரூ. இந்தியாவின் வரைபடம் முதன் முதலாக 1806ம் ஆண்டு எவ்வாறு தயாரிக்கப்பட்டது? அதன் மூலம் இமயத்தின் உயரமான சிகரம் எவரெஸ்ட் என்பது எப்படி கண்டறியப்பட்டது? என்பது போன்ற பல தகவல்கள் நாவல் போல சுவைபட தரப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 2/1/2014.   —-   உடல் உண(ர்)வு மொழி, தே. சவுந்தரராஜன், விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோயம்புத்தூர் 1, விலை 80ரூ. எப்போது உண்ணக்கூடாது, எதை […]

Read more

மனசே மருந்து

மனசே மருந்து (மனநோய்க்கு மருந்தில்லா மருத்துவம்-ஹிப்னோதெரபி, டாக்டர் வேத மாலிகா, தனலெட்சுமி பதிப்பகம், சென்னை 17, பக். 240, விலை 150ரூ. நம் மனதுக்கும், உடல்நலத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதை உணர்த்தும் வகையில் உடல் நலத்துக்கு மனசே மருந்து என்கிறது இந்நூல். இயந்திரமயமாகிவிட்ட இன்றைய அவசர யுகத்தில், போதிய ஓய்வின்றி, ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்து முடித்துவிட வேண்டும் என டென்ஷனாகிறோம். டென்ஷனைக் குறைக்க மாத்திரைகளை விழுங்குகிறோம். மனநோய்க்கு தொடர்ந்து தரப்படும் மருந்துகளே நரம்பு தளர்ச்சி போன்ற பல புதிய நோய்கள் […]

Read more

கலாமின் எனது பயணம்

ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் எனது பயணம், தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், புதுதில்லி 110002, விலை 150ரூ. கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுத்தல் பக்ஷி லஷ்மண சாஸ்திரிகளும், போதல் பாதிரியாரும், ஜைனுலாப்தீனும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையிலும் சந்தித்து ஊர் நலனைப் பற்றிய சிந்தனைகளில் ஈடுபட்டிருந்த ஆரோக்கியமான காலங்களில் இந்தத் தேசத்தை ஆண்டு அடிமைப்படுத்தியிருந்தவர்கள் வெள்ளையர்கள்தான். ஆனால் சுதந்திர பாரதம் என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டிய இன்றைய காலகட்டத்தில் அத்தகைய இணக்கமான சூழல் வெகு அரிதாகிவிட்ட அவலத்துக்குக் காரணம் சுயநல அரசியல்தான் என்பதைப் புரிந்து […]

Read more

அகமும் புறமும்

அகமும் புறமும், கீதா, புதிய தலைமுறை வெளியீடு, சென்னை, விலை 80ரூ. சிறப்பான வாழ்க்கையை மேற்கொள்ள ஒரு மனிதனுக்கு என்ன தேவை என்பதை விளக்கும் நூல். வீட்டின் ஒவ்வொரு பகுதியும் எப்படி இருக்க வேண்டும் என ஆழமாகப் பேசுகிறது நூல். சமையலறையின் அமைப்பிலிருந்து வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்கும் வழிகள் வரை அனைத்தையும் தெரிந்துகொள்ளலாம். -கவின்மலர். நன்றி: இந்தியா டுடே, 30/7/2014.   —- போர்ப் பறவைகள், வி.டில்லி பாபு, மித்ர ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ், சென்னை, விலை 100ரூ. ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த நூல்கள் […]

Read more
1 2 3 8