நடிகர் திலகம் சிவாஜி

நடிகர் திலகம் சிவாஜி, கே. சந்திரசேகரன், நக்கீரன் வெளியீடு, சென்னை, விலை 275ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-806-2.html நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்து பல்வேறு கவிஞர்கள் எழுதிய கவிதைகள், அவருடன் பழகியவர்கள் அவர் குறித்து எழுதியவை என எல்லாவற்றையும் தொகுத்துத் தருகிறது நூல். சிவாஜி கணேசனின் அரிய புகைப்படங்கள் பலவும் நூலில் உண்டு. அவர் எத்தனை பேரை கவர்ந்த நடிகர் என உணரவைக்கும் நூல். -கவின்மலர். நன்றி: இந்தியா டுடே, 30/7/2014.   —- கசடறக் கற்க […]

Read more

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும்

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும், டாக்டர் சங்கரசரவணன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 195ரூ. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் முதலான பரீட்சைகள் எழுதுபவர்களுக்கு உதவும் வகையில் எழுதப்பட்டுள்ள நூல் இது. ஆயினும், இந்தியாவுக்குள் வெள்ளையர்கள் எப்படி நுழைந்தார்கள், ஆட்சியைப் எப்படி கைப்பற்றி, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் விவரங்கள் என்ன இதுபற்றி எல்லாம் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் விளக்கமாகவும், விறுவிறுப்பாகவும் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. ஏறத்தாழ 200 ஆண்டுகள், இந்தியாவை வெள்ளையர்கள் ஆண்டனர். அந்தக் காலக்கட்டத்தில் எத்தனையோ வரலாற்று […]

Read more

இலங்கைத் தமிழர் வரலாறு

இலங்கைத் தமிழர் வரலாறு, தந்தி பதிப்பகம், சென்னை, விலை 360ரூ. வரலாற்றுச் சுவடுகள் நெடுந்தொடர் தினத்தந்தியில் வெளியானபோது அதில் ஒரு பகுதியாக, இலங்கைத் தமிழர் வரலாறு இடம் பெற்றுள்ளது. அது வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதை நூலாக வெளியிட வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்களும், வாசகர்களும் விரும்பினார்கள். அந்த எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் இப்போது இலங்கைத் தமிழர் வரலாறு 576 பக்கங்கள்கொண்ட வண்ண நூலாக மலர்ந்துள்ளது. சங்க காலத்தைச் சேர்ந்த கரிகால் சோழன் முதல் பிற்கால சோழர்களின் மாமன்னராகத் திகழ்ந்த ராஜேந்திர சோழன் […]

Read more

குமுதம் ஒரு பக்கக் கதைகள் 1999

குமுதம் ஒரு பக்கக் கதைகள் 1999, குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 112, விலை 80ரூ. பரபரப்பான இந்த உலகில் ஒரே மூச்சில் படித்து விட வேண்டும். அதே சமயம் ஒரு சிறுகதையைப் படித்த திருப்தி கிட்ட வேண்டும் என்ற வாசகர்களின் எண்ணத்தை குமுதம் ஒரு பக்கக் கதைகள்தான் தீர்த்து வைத்தன. கதை எழுத ஆர்வம் உள்ள அனைவரையும் குறிப்பாக வாசகர்களையும் எழுதவைத்தது இந்தக் கதைகள்தான். அன்றாட வாழ்வில் நடக்கும் எந்த ஒன்றையும் இந்தக் கதைகள் விட்டு வைத்ததேர இல்லை. கொலை மனசு, நூலைப்போல, […]

Read more

என் இனிய இந்து மதம்

என் இனிய இந்து மதம், திருமகள் நிலையம், சென்னை, விலை 45ரூ. இந்து மதத்தின் பெருமைகளையும், மேன்மைகளையும் விளக்கிக்கூறும் நூல். மார்கழியின் மகத்துவம். தை மாதத்தில் திருமணம் செய்தால் ஐப்பசியில் குழந்தையோடு தலைத் தீபாவளி கொண்டாடலாம். சிவராத்திரியின் சிறப்பு, ஜாதகம் பார்ப்பது ஏன்? கடவுளுக்கு எதற்கு கல்யாணம்? முடியைக் காணிக்கையாக செலுத்துவது ஏன் என்பன போன்ற இந்துக்களின் சடங்குகள், சம்பிரதாயங்களில் ஒளிந்திருக்கும் ஆழ்ந்த நுட்பமான பொருளை எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் அழகுபட விவரித்துள்ளார். அதுவே மனிதன் மகிழ்வோடு வாழ்ந்திட ஆதாரமாக இருக்கிறது என்பதை ஆதாரத்துடன் […]

Read more

மனக்குகைச் சித்திரங்கள்

மனக்குகைச் சித்திரங்கள், ஆத்மார்த்தி, புதிய தலைமுறை பதிப்பகம், பக். 104, விலை 120ரூ. தன் வாழ்க்கையில் சந்தித்த பல மனிதர்களை குணச்சித்திர வார்ப்புகளாக தீட்டிக் காட்டுகிறார் ஆத்மார்த்தி. புதிய தலைமுறை வார இதழில் வெளியான, கட்டுரைகளின் தொகுப்பு. பழைய புத்தக கடைக்காரர், சாலையில் சாக்பீஸ் மூலம் சித்திரம் வரையும் ஓவியர், தன் உற்றார் உறவினரை போரில் பறிகொடுத்த சிலோன்காரர், சாலை விபத்தில் மகனை பறிகொடுத்த தந்தை, என பல வகையான மனிதர்கள். ராணுவத்தில் சேர இருந்த மகன், சாலை விபத்தில் போனதும், தந்தை சொல்கிறார், […]

Read more

வாழ்விக்க வந்த காந்தி

வாழ்விக்க வந்த காந்தி, ரொமெய்ன் ரோலந்து, தமிழில் எழுத்தாளர் ஜெயகாந்தன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 208, விலை 150ரூ. ரொமெய்ன் ரோலந்து என்ற, பிரெஞ்சு பேரறிஞர் எழுதிய மகாத்மா காந்தி பற்றிய ஆங்கில நூலினை, புகழ்மிக்க எழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழில் தந்திருக்கிறார். மொழிபெயர்க்கும் பணியில் தமது துணைவி திருமதி ஜெயஜனனி, பெரிதும் உதவியது பற்றி அவரே குறிப்பிட்டுள்ளார். மகாத்மாவின் அருங்குணங்கள், சுதந்திரப் போராட்டம் தொடர்பான அவருடை பல்வேறு செயற்பாடுகள், சத்யாக்கிரக நிகழ்வுகளில் அவர் பின்பற்றிய விதிமுறைகள், பிறர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு காந்தி அளித்த பதில்கள், […]

Read more

கழிசடை

கழிசடை, அறிவழகன், அலைகள் வெளியீட்டகம். கும்பிட வேண்டியோரை எள்ளி நகையாடுகிறோம் எழுத்தாளர் அறிவழகன் எழுதிய கழிசடை நாவலை, அண்மையில் படித்தேன். அலைகள் வெளியீட்டகம் பதிப்பித்துள்ளது. நகர்ப்புறத்தில் மலம் அள்ளும் அருந்தியர் வாழ்க்கையை, இந்நாவல் சித்தரிக்கிறது. மலம் அள்ளும் தொழிலாளியின் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தை விவரித்துக் கொண்டே செல்லும் நாவல், மலம் அள்ளும் தொழிலாளிக்கு ஒவ்வொரு நாளையும் கடத்துவதே வாழ்கையின் வெற்றி என சொல்கிறது. மலம் அள்ள சென்றாலோ, சாக்கடைகளின் அடைப்புகளை எடுக்க சென்றாலோ, அவர்களை மனிதனாக நடத்தி, வேலை வாங்கும் சூழல் இல்லை. சாக்கடைகளை […]

Read more

வரலாற்றின் வெளிச்சத்தில் போர்த்துக்கீசியர்கள்

வரலாற்றின் வெளிச்சத்தில் போர்த்துக்கீசியர்கள், குஞ்ஞாலிகள், செ.திவான், சுகைனா பதிப்பகம், பக். 584, விலை 500ரூ. மரைக்காயர் என்ற சொல்லின் பொருள் என்ன? உண்மையில், 17/5/1498லேயே, இந்தியாவில் அன்னியரை எதிர்த்து போராடும் விடுதலை போர் துவங்கிவிட்டது. ஆம் அன்றுதான், கள்ளிக்கோட்டை அருகே கப்பாடு என்ற இடத்தில் வாஸ்கோடாகாமா என்ற போர்த்துக்கீசியன், மூன்று கப்பல்களோடு இந்திய மண்ணில் கால்பதித்தார். மேலைக் கடற்கரையில் காலூன்றி விட்டால், படிப்படியாக இந்தியாவில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி இந்தியாவின் செல்வவளத்தை சுரண்டிவிடலாம் என்பதே போர்த்துக்கீசியர்களின் திட்டம். அப்போது, கள்ளிக்கோட்டையை ஆண்டு வந்த சாமுத்திரி […]

Read more

குற்றவியல் வழக்குகளில் துப்பறிதல்

குற்றவியல் வழக்குகளில் துப்பறிதல், புலமை வெங்கடாசலம், தாமரை பப்ளிகேஷன்ஸ். குற்றங்களை துப்பறிவதற்கு மருத்தவர்கள் உதவியாக இருந்தாலும், உண்மையை மூடிமறைப்பது உடல் அழுகிவிடுவது போன்ற பல காரணங்களால் துப்பறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதையும் கடந்து, ரத்தக்கறை, உமிழ்நீர் கறை, சிறுநீர் கறை, சோப்பு துகள்கள், மாவு, கரித்தூள், முடி, பூவில் உள்ள மரகத பொடி, மரக்கட்டை, சுருட்டு, பீடி, சிகரெட் சாம்பல் மற்றும் சிதைந்த காயம், வீக்கங்கள், துப்பாக்கியால் ஏற்படும் காயங்கள் போன்ற தடயங்களை கொண்டு எப்படி போலீசார் துப்பு துலக்குகின்றனர் என்பதை விளக்குவதுதான் இந்த […]

Read more
1 2 3 4 8