முல்லை பெரியாறு

முல்லை பெரியாறு, ஜி. விஜயபத்மா, விகடன் பிரசுரம், பக். 175, விலை 115ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-233-6.html 1790ம் ஆண்டு, ராமநாதபுர மன்னர் முத்துராமலிங்க சேதுபதிதான், முதன்முதலாக, முல்லை பெரியாற்றில், அணை கட்டுவது குறித்து சிந்தித்தவர். அதையடுத்து, 1876-78ம் ஆண்டுகளில் ஏற்பட்ட சென்னை மாகாணப் பெரும்பஞ்சம் அல்லது தாது வருடப் பஞ்சம்தான், பிரிட்டிஷ்காரர்களை, முல்லை பெரியாறு அணை கட்டுவதை துரிதப்படுத்தியது என, ஆதாரத்துடன் நிறுவுகிறார் நூலாசிரியர். கடந்த 1807ம் ஆண்டு துவங்கி 1870ம் ஆண்டு வரை ஜேம்ஸ் கார்ட்வெல், […]

Read more

தலைப்பற்ற தாய்நிலம்

தலைப்பற்ற தாய்நிலம், மஞ்சுள வெடிவர்தன, தமிழில் ஃபஹீமா ஜஹான், எம். ரிஷான் ஷெரீப், நிகரி எழுநா வெளியீடு, சென்னை, விலை 50ரூ. கை கால்களால் தமிழர்களின் நெஞ்சங்களைப் பிளந்து மனதால் மகிழும் இழிவானவர்களின் மத்தியில் நின்று புத்தனின் வருகை நிகழ்ந்த பூமியிலிருந்து கவியெழுதும் எனக்கு மோட்சம் கிடைக்கப்பெறுமா அரசனிடமிருந்து? என்று துணிச்சலாய் கேட்ட சிங்களக் கவிஞர் மஞ்சுள வெடிவர்தன. இப்போது ஃபிரான்ஸில் வசிக்கிறார். மேரி எனும் மரியா என்ற இவரது சிறுகதைத் தொகுப்பு சிங்கள அரசால் 2000ம் ஆண்டில் தடை செய்யப்பட்டது. ஆனாலும், அச்சம் […]

Read more

உழைப்பின் நிறம் கருப்பு

உழைப்பின் நிறம் கருப்பு, ஆரிசன், தளிர் பதிப்பகம், சாத்தூர், பக். 112, விலை 100ரூ. அருகில் வரும் வானம் நுட்பமான மன உணர்வுகளைச் செறிவாக மொழியில் சிற்சில சொற்களில் எழிலுறச் சித்தரித்தல் ஹைக்கூ கவிதையின் சிறப்பு. அவ்வகையில் ஆரிசன் எழுதியுள்ள உழைப்பின் நிறம் கருப்பு எனும் ஹைக்கூ கவிதைத் தொகுப்பு வித்தியாசமான பின்புலத்தில் எழுதப்பட்டுள்ளது. உலகமயமாதல், இயற்கையை நேசித்தல், உழைப்பின் மேன்மை ஆகிய தளங்களில் கவிஞரின் பார்வை சிறகடித்துப் பறப்பதைக் காணலாம். தவிர தினந்தோறும் அலுக்காமல் சலிக்காமல் உழைக்கும் அந்த வர்க்கத்துக்காக ஆரிசன் குரல் […]

Read more

பறவைகளும் சிறகுகளும்

பறவைகளும் சிறகுகளும், பாஸ்கர் சக்தி, கயன் கவின் புக்ஸ், சென்னை, பக். 152, விலை 110ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-865-9.html பெண்கள் பறவைகளாக… தேடல் சிறகுகளாக… நீ உன் சொந்த விஷயத்தை எழுதலாம். ஆனால் உன் எழுத்து அதை ஒரு பொது அனுபவமாக மாற்ற வேண்டும்.  இல்லாவிடில் அது வெறும் சுயபுராணமாகிவிடும் என்ற எழுத்தாளர் சுப்ரமண்ய ராஜுவின் வார்த்தைகளுக்கு ஏற்ப பாஸ்கர்சக்தியின் அனுபவம் பொது அனுபவமாக மாறும் மந்திரம்தான் இக்கட்டுரைகளின் சிறப்பும். இயல்பான வாழ்க்கையைப் பதிவு செய்யும் கட்டுரைகள் […]

Read more

தனிமையின் நூறு ஆண்டுகள்

தனிமையின் நூறு ஆண்டுகள், காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ், தமிழில்-ஞலன் சுப்பிரமணியன், சுகுமாரன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 350ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-161-2.html கதை சொல்லும் முறையில் புதிய திசைகள் திறந்துவிட்ட எழுத்து மார்க்கேஸுடையது. மகோந்தா என்ற நகரம் உருவாவதிலிருந்து அழிவது வரை அதை உண்டாக்கிய குடும்பத்தின் வழிவழியாய் வருகிற மனிதர்களைச் சுற்றிப் போகிறது கதை. ஒரே மூச்சில் படித்து மூடும் வேகம் கொண்டவர்களுக்கல்ல இந்தப் புத்தகம். ஒரு நகரத்தின் பிறப்பு, எழுச்சி, வீழ்ச்சி என்பது எந்தவொரு நாடு, […]

Read more

அகம் புறம் அந்தப்புரம்

அகம் புறம் அந்தப்புரம், முகில், சிக்ஸ்த் சென்ஸ், பக். 1032, விலை 999ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-202-3.html அந்தப்புரத்திற்கு எத்தனை பெயர்கள் நபா, தோல்பூர், அல்வார், பரத்பூர், ஐதராபாத், இந்தூர், கபுர்தலா, புதுக்கோட்டை, பரோடா, பாட்டியாலா, மைசூர், ஜெய்ப்பூர் ஆகிய இந்திய சமஸ்தானங்களின் வரலாறுகளையும், ஒவ்வொரு மகாராஜாவின் வாழ்க்கைக்குள்ளும் புதைந்து கிடக்கும் செய்திகளையும், காலனியாதிக்க காலகட்டத்தையும் குறித்து, நூலாசிரியர், குமுதம் ரிப்போட்டர் வார இதழில், தொடராக எழுதியது, தற்போது ஒரே நூலாக வெளிவந்திருக்கிறது. 1527ல் தோல்பூரை முகலாய பேரரசர் […]

Read more

நாயக்கர் கால கலைக் கோட்பாடுகள்

நாயக்கர் கால கலைக் கோட்பாடுகள், சா. பாலுசாமி, காலச்சுவடு பதிப்பகம், பக். 304, விலை 375ரூ. தமிழில் கலை தொடர்பான ஆய்வுகள் குறைவு. அதிலும் கோவில் தொடர்பான பண்பாட்டுக் கலை பற்றிய ஆய்வு மிக குறைவு. நூலாசிரியர் இந்த துறையில் கவனம் செலுத்தி, நாயக்கர் கால கலைக் கோட்பாடுகள் குறித்து, ஓர் அருமையான ஆய்வு நூலை படைத்துள்ளார். நூலுக்கு ஈழத்து தமிழறிஞர் கா. சிவத்தம்பி அளித்த அணிந்துரையில் இதுவரை நுண்ணாய்வு செய்யப்படாத ஒரு துறை இது என கூறியிருப்பது முக்காலும் உண்மை. நாயக்கர் கால […]

Read more

திராவிட இயக்கமும் கலைத்துறையும்

திராவிட இயக்கமும் கலைத்துறையும், டாக்டர் மு. இராமசுவாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 74, விலை 70ரூ. நாடகக் கலை எதிர்கொண்ட கலகங்கள் வரலாற்று ரீதியாக, தமிழ் சமூகத்தில் நடந்த முக்கிய மாறுதல்களை பற்றி பேசுகிறது இந்த புத்தகம். கலைகளின் தாக்கம், தமிழ் சமூகத்தில் எப்படி நிகழ்ந்தது என்பதை மிகத் தெளிவாக ஆராய்கிறது. குறிப்பாக நாடகங்களின் சாயல், அவற்றின் வெளிப்பாடு, அவை சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் அல்லது மாற்றம் குறித்த தகவல்கள், கடுமையான உழைப்பின் மூலம் தொகுக்கப்பட்டுள்ளன. திராவிட அரசியல், கம்யூனிச அரசியல் […]

Read more

வேலி மேல் வாச மலர்

வேலி மேல் வாச மலர் (பிறமொழிக் கதைகள்), வீ. விஜயராகவன், தளம் வெளியீடு, பக். 160, விலை 120ரூ. கணையாழி, படித்துறை, தளம் இதழ்களில் வெளிவந்த மொழியாக்க சிறுகதைகளில், இந்தியில் இருந்து 6, ஆங்கிலம், வங்கம், மைதிலி, மராத்தி, மலையாளம், பஞ்சாபி மொழிகளில் இருந்து தலா ஒன்று வீதம் மொத்தம், 12 சிறுகதைகள் ஆகியவை இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. அவற்றில், 100 ஆண்டுகளுக்கு முன், பிரேம்சந்த், இந்தியில் எழுதிய, பண்ணையாரின் கிணறு, மருமகளால் அடிபட்டு இறந்து போன பூனைக்கு பிராயச்சித்தம் செய்ய முற்படும் […]

Read more

சுந்தர ராமசாமியின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்

சுந்தர ராமசாமியின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள், தொகுப்பு ச. தில்லைநாயகம், சாகித்திய அகாதெமி, சென்னை, பக். 304, விலை 155ரூ. அருமையான 30 கட்டுரைகள். அதிலும் நான்கு பிரிவாக ஆளுமையும், ஆக்கங்களும், மதிப்பீடுகளும் எதிர்பார்ப்புகளும் படைப்பாளிகளும் படைப்புகளும், சமூக அரசியல் சிந்தனைகளும்) பிரித்து கொடுத்திருக்கிறார்கள். சிறந்த எழுத்தாளர்களின் அனைத்து எழுத்துகளுமே சிறப்பாகத்தான் இருக்கும். அதிலும் சிறப்பானவற்றை காலத்திற்கு ஏற்றாற்போல தேர்வு செய்துள்ள தில்லைநாயகத்தைப் பாராட்ட வேண்டும். அகிலனின் சித்திரப் பாவைக்கு ஞானபீடப் பரிசு கிடைத்தது தொடர்பான கட்டுரை, தமிழகத்தில் யார் விருது பெற்றாலும், ஒருமுறை எடுத்துப் […]

Read more
1 6 7 8