பாரதநாடு பாருக்கெல்லாம் திலகம்

பாரதநாடு பாருக்கெல்லாம் திலகம், ஆர்.பி.வி.எஸ். மணியன், வர்ஷன் பிரசுரம், சென்னை, விலை 140ரூ. நம் பாரத நாட்டின் அருமை, பெருமைகளைப் பற்றி, வி.ஹெச்.பி. நடத்தி வந்த ஹிந்து மித்திரன் இதழில் 2005ல் இந்நூலாசிரியர் எழுதிரய தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இதில் உள்ள விஷயங்கள் அடடா… இத்தனை சிறப்புகளைக் கொண்டதா நம் நாடு என்று இன்றைய தலைமுறையினரை வியப்பில் ஆழ்த்தக்கூடியவை. நமது பழைய சாஸ்திரங்களில் இல்லாத விஷயங்களே இல்லை. ஆனால் நம்மை ஆண்ட அன்னியர்கள் அவற்றையெல்லாம் அழித்துவிட்டார்கள் என்று ஆதங்கப்படும் ஆசிரியர், அவற்றை உரிய […]

Read more

திரை இசை வாழ்க்கை

திரை இசை வாழ்க்கை, ஷாஜி, உயிர்மை பதிப்பகம், சென்னை. வாழ்வின் குறிப்புகள் தமிழில் வெகுமக்கள் இசைமீதான விமர்சனத்தை மிகச் சிறப்பாக எழுதக்கூடியவரான ஷாஜியின் புதிய கட்டுரைத் தொகுப்பு நூல் இசை திரை வாழ்க்கை. இதில் இசை மட்டுமல்ல. அற்புதமான பல ஆளுமைகளின் வாழ்வையும் தன் தேர்ந்த கவித்துவமிக்க உரைநடை மூலம் பதிவு செய்திருக்கிறார். முதல் கட்டுரையான மைக்கேல் ஜாக்சனை எடுத்துக்கொள்ளுங்கள். அக்கட்டுரை மேற்கத்திய இசை தெரியாத ஒரு சாமானியனுக்கும் ஜாக்சனின் மேதைமையை அறிமுகப்படுத்தி அவருடன் நெருக்கமாக்குகிறது. ராஜேஷ் கன்னா, ஸ்டீவ் ஜாப்ஸ், டாக்டர் தம்பையா, […]

Read more

அசுரன்

அசுரன் வீழ்த்தப்பட்டவர்களின் வீரகாவியம், ஆனந்த் நிலகண்டன், தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், போபால், விலை 395ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-247-7.html அசுரன் சொல்லும் அரசியல் கேரளாவைச் சேர்ந்த ஆனந்த் நீலகண்டன் ஆங்கிலத்தில் எழுதிய Asura the tale of the vanquished என்கிற நாவல், தமிழில் அசுரன் வீழ்த்தப்பட்டவர்களின் வீரகாவியம் என்ற பெயரில் மொழிபெயர்ப்பு நூலாக வெளியாகி உள்ளது. எடுத்த எடுப்பிலேயே நமக்கு உற்சாகம் அளிப்பது இதன் மொழிபெயர்ப்பு நடை. மிகவேகமாகப் படித்துச் சென்றுவிடும் அளவுக்கு […]

Read more

ஊழல் நம் பிறப்புரிமை

ஊழல் நம் பிறப்புரிமை, துக்ளக் சத்யா, ஆதாரம் வெளியீடு, சென்னை, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-248-0.html துக்ளக் வாசகர்களுக்கு இந்நூலாசிரியர் பற்றிய அறிமுகம் தேவையில்லை. சீரியஸான அரசியலையும், நாட்டு நடப்புகளையும் நகைச்சுவைப் பாணியில் படிப்பவர்கள் மட்டுமல்ல, விமர்சிக்கப்படுபவர்களும்கூட மெய்மறந்து சிரிக்கும்படி எழுதுவதில் இந்நூலாசிரியர் கைதேர்ந்தவர். இவரது அரசியல் கற்பனைக் கட்டுரைகளைவிட, நாட்டு நடப்புகள் குறித்த நையாண்டி உரையாடல் கட்டுரைகள் வயிறு குலுங்கச் சிரிக்க வைப்பவை. துக்ளக்கில் பல்வேறு கட்டங்களில் வெளியாகி, வாசகர்களின் சிறப்பான வரவேற்பைப் பெற்ற 25 […]

Read more

நொறுக்கப்படும் மக்களும் மறுக்கப்படும் நீதியும்

நொறுக்கப்படும் மக்களும் மறுக்கப்படும் நீதியும், முருகப்பன். ஜெசி,இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம், திண்டிவனம், விலை 200ரூ. சக மனிதனை ஓர் உயிராகக்கூட மதிக்காமல் நாகரிகச் சமூகமாக ஆகிக்கொண்டு இருக்கிறோம். சக மனிதனை எத்தகைய அநாகரிகமாக நடத்துகிறோம் என்பதை அம்பலப்படுத்தும் புத்தகம் இது. தீண்டாமை ஒழிப்புச் சட்டம், குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்று ஒவ்வொன்றாக உருவாக்கப்பட்டு 58 ஆண்டுகள் ஆன பிறகும் தீண்டாமை இருக்கிறது. வன்கொடுமை இருக்கிறது. பலாத்காரம் நடக்கிறது என்றால், வெறும் சட்டங்களால் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பதே […]

Read more

முல்லை பெரியாறு

முல்லை பெரியாறு, ஜி. விஜயபத்மா, விகடன் பிரசுரம், பக். 175, விலை 115ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-233-6.html அணை பிறந்த கதை பென்னிகுயிக்-தமிழ்க் கடவுள். ஆக்கிரமிப்பாளராக இந்த நாட்டுக்குள் வந்து ஆபத்பாந்தவனாக மாறும் மனப்பக்குவம் ஒருசில மனிதர்களுக்கே வாய்க்கும். அப்படிப்பட்ட ஆளுமைகளில் ஒருவர் பென்னிகுயிக். பசி, பஞ்சம் தாண்டவம் ஆடிய காலத்தில், உணவு உற்பத்தியைப் பெருக்குவதற்காகத் தொடங்கப்பட்ட முல்லை பெரியாறு அணையின் கட்டுமானத்தை, பல்வேறு அதிகாரிகள் முடியாது என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டு விலகியபோது, எடுத்துச் செய்து கட்டி முடித்தது […]

Read more

ஜீவா பார்வையில் பாரதி

ஜீவா பார்வையில் பாரதி, கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. காந்தி வ.உ.சி., பரலி சு. நெல்லையப்பர், மறைமலையடிகள், வ.ரா. போன்ற மகாகவி பாரதியார் காலத்தில் வாழ்ந்தவர்களைச் சந்திக்கும் வாய்ப்பையும் அவர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்யும் சூழலையும் ஜீவா பெற்றார். ஆனால் மகாகவி பாரதியைச் சந்திக்கும் வாய்ப்பு ஜீவாவுக்கு வாய்க்கவில்லை. இருப்பினும் பாரதியின் படைப்புகளை கருத்தூன்றிப் படித்து, அதில் தன் மனத்தை இழந்து தமிழ் மக்களிடத்தில் பாரதியைக் கொண்டு செல்லும் மகத்தான பணியைச் சிறப்பாகச் செய்து முடித்தவர் ஜீவா. அதற்கு இந்த […]

Read more

வண்ணங்களை விழுங்கிப் பெருத்திருக்கும் இருட்டு

வண்ணங்களை விழுங்கிப் பெருத்திருக்கும் இருட்டு, ரகசியன், பொன்னி வெளியீடு, சென்னை, விலை 60ரூ. கனவுகள் சுமந்து வனம் திரிபவன் தனிமனித வாழ்வு இயற்கையின் ஒவ்வோர் அங்கத்தோடும் தான் கொள்ளும் இயைபை அல்லது இயற்கை தனக்குள் கிளர்த்தும் நெருக்கத்தை மொழிவழி வெளிப்படுத்துகின்றன. குடிப்பெயர்ச்சியால் ஊரமைத்து வாழ்கிறான் மனிதன். அவன் வருகைக்கு முன்பே, பின் உருக்கொள்ளும் ஊருக்கும் அடையாளமாய் இருப்பவை மலைகள். அவ்வகையில் தன் ஊருக்கு அடையாளமாய் நிற்கும் கோழி குத்து மலையைப் பற்றிய இருவேறு கவிதைகள் முக்கியமானவை. ஒரு குடியின் பல தலைமுறைகளின் மனதில் நிலைகொண்டிருக்கும் […]

Read more

நோக்கு நூல்கள் மரபும் புதுமையும்

நோக்கு நூல்கள் மரபும் புதுமையும், முனைவர் இரா. பன்னிருகைவடிவேலன், தமிழாய்வு மன்றம், விலை 100ரூ. நோக்கு நூல்கள் ஒரு மொழியின் மேம்பட்ட நிலையை விளக்குவனவாக அமைவன. அந்த வகையில், மரபும் புதுமையும் என்னும் இந்நூல் நிகண்டுகள் குறித்தும் கணினி வழி நூலடைவு உருவாக்கம் குறித்தும் பல தகவல்களை உள்ளடக்கி, மொழியின் பழமையையும் வளர்ந்துவரும் அறிவியல் யுகத்திற்கு ஈடுகொடுக்கும் புதுமையையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. மக்கள் மத்தியில் பெரிதும் அறியப்படாத ஐந்திணை மஞ்சிகன் சிறு நிகண்டு, நீரார் நிகண்டு, சிந்தாமணி நிகண்டு ஆகியவை குறித்த ஆய்வுக் கட்டுரைகள் […]

Read more

1001 இரவுகள்

1001 இரவுகள், கண்ணப்பன் பதிப்பகம், சென்னை, விலை 250ரூ. அரபு மன்னர் ஷாரியாருக்கு பெண்கள் மீது அடங்காத மோகம். தினம் ஒரு பெண்ணை மணப்பது, மறுநாள் காலை அவளைக் கொன்று விடுவது என்று பெண்களை வஞ்சம் தீர்த்துக்கொள்கிறார். அவரைத் திருத்த எண்ணிய அமைச்சரின் மகள் ஷாரஜாத், மன்னரை மணந்து கொள்கிறாள். ஒவ்வொரு நாள் இரவும் ஒரு கதை சொல்கிறாள். கதை கேட்கும் ஆவலில் அவளை கொல்லாமல் விடுகிறார். மொத்தம் 1001 நாட்கள் கதைகள் தொடர்கின்றன. அந்தக் கதைகளை கேட்டதும் மன்னன் மனம் மாறுகிறார். பெண்கள் […]

Read more
1 4 5 6 7 8