ஜுலியஸ் சீஸர்

ஜுலியஸ் சீஸர், எஸ்.எல்.வி.மூர்த்தி, சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம், சென்னை, விலை 160ரூ. கிரேக்கத்தின் அலெக்சாண்டர், மங்கோலிய செங்கிஸ்கான், பிரெஞ்ச் நெப்போலியன், ரோமானிய ஜுலியஸ் சீஸர் ஆகியவை மறக்க முடியாத வீரப்பெயர்கள். இதில் சீஸர் பற்றியப் புத்தகம் இது. சீஸரை விலக்கிவிட்டு, வீரம் பற்றிப் பேச முடியாது. சீஸரை தவிர்த்துவிட்டு, பண்பு பற்றி பேச முடியாது. சீஸரை விட்டுவிட்டு வெற்றியின் சூட்சமங்களை ஆராய முடியாது என்ற கம்பீரத்துடன் இந்தப் புத்தகத்தை எஸ்.எல்.வி.மூர்த்தி எழுதியிருக்கிறார். சீஸரைப் பற்றி எழுதுவதாலேயே சொற்களும் கூர்மையாக இருக்கின்றன. வரலாறு ஆர்வலர்களுக்கு அகஸ்ட்டஸ் சீஸர், […]

Read more

ஸ்ரீமத் பாகவதம்

ஸ்ரீமத் பாகவதம், வர்த்தமானன் வெளியீடு, பக். 900, விலை 300ரூ. மகாபாரதத்தை அருளிய பின்னரும் வியாச முனிவருக்குச் சாந்தி ஏற்படவில்லை. தம் மனக் குறையை நாரதரிடம் தெரிவித்தார். நாரதர், மகாபாரதத்தில் பகவானின் கல்யாண குணங்களைவிடத் தர்மங்களை அதிகமாக விவரித்துள்ளீர். கிருஷ்ண பரமாத்மாவின் மகிமைகளைச் சொல்லவில்லை. அவற்றை விரிவாக வருணிக்கும் நூல் ஒன்றைச் செய்தால் தங்கள் மனம் சாந்தி அடையும் என்றார். வியாசரும் மனமகிழ்வுடன் இந்தப் பாகவதத்தை உண்டாக்கித் தம் தவப் புதல்வரான சுக முனிவருக்கு அருளினார். அவர், மோட்சத்தை விரும்பிய பரீட்சித்து மன்னனுக்கு இதனை […]

Read more

வியாச பாரதம்

வியாச பாரதம், வர்த்தமானன் பதிப்பகம், பக். 2000, விலை 700ரூ. வேதங்களில் சொல்லப்படும் கருத்துக்கள் அனைத்தும் இதில் இடம் பெறுவதால் வியாசபாரதத்தை ஐந்தாம் வேதம் என்பர். நூற்றுக்கணக்கான மாந்தர்கள் உலாவரும் ஸ்வர்ண மாளிகை, வியாசபாரதம். ஏராளமான கிளைக்கதைகளையுடைய ஓர் ஆலவிருட்சம், வியாச பாரதம். நளதமயந்தி வரலாறு, சத்தியவான் சாவித்திரி வரலாறு, இராமன் வரலாறு, துஷ்யந்தன் சகுந்தலை வரலாறு போன்றவை புகழ் வாய்ந்தவை. அரிச்சந்திரன், குசேலன், கந்த பெருமான், பரசுராமர் போன்றோர் வரலாறும் இதில் இடம் பெற்றுள்ளன. மனித வாழ்க்கையை நெறிப்படுத்த எழுந்த இந்நூல், அறவழியில் […]

Read more

வால்மீகி இராமாயணம்

வால்மீகி இராமாயணம், வர்த்தமானன் வெளியீடு, பக்.2000,  விலை (நான்கு தொகுதிகளும் சேர்த்து) – 700ரூ. மனிதனுடைய வாழ்க்கையை நல்வழிப்படுத்துவதில் இரண்டு இதிகாசங்கள் தோன்றியுள்ளன. அவைதான் இராமாயணம், மகாபாரதம். இவ்விரண்டு நூல்களுமே தர்மத்தையே அடிப்படையாகக் கொண்டு வந்த நூல்கள். மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று தர்மத்தை மாத்திரமே அதிகம் வலியுறுத்துகிறது இராமாயணம். நடத்தியும் காட்யிருக்கிறது. அறம், பொருள், இன்பம் என்பவற்றில் அறத்தை இராமரும், பொருள் இன்பங்களை இராவணனும் தங்கள் இலட்சியமாகத் தேர்ந்தெடுக்கின்றனர். இராவணன் கடுந்தவம் புரிந்து தேவர்களையும் தலைமிதித்து நிற்கும் ஆட்சிப் பேற்றை வரமாகப் […]

Read more

தஞ்சைப் பெரியகோயில்

தஞ்சைப் பெரியகோயில், முனைவர் வி.அ. இளவழகன், பூங்கொடித் தாமரை வெளியீட்டகம், தஞ்சாவூர், விலை 160ரூ. மழைநீர் சேமிப்பில் முன்னோடியாகத் திகழ்கிறது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே எடுப்பிக்கப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில். இந்த ஆலயம் அமைந்துள்ள 3,32,000 சதுர அடி நிலப்பரப்பில் மாதம் மும்மாரி பொழிந்த தண்ணீரெல்லாம் வீணாகாமல் சேகரிக்கப்பட்டு நான்கு நீர்த்தாரைகளின் வழியே சென்று ஆலயத்தின் வடபுறம் உள்ள சிவகங்கைக் குளத்தை சென்றடையுமாம். இது சிவபெருமானின் திருமுடிமீது பொழியும் கங்கை நீராகக் கருதப்பட்டதாம். இப்படிச் சேகரிக்கப்பட்ட தூய மழைநீர் ஐம்பதாண்டுகளுக்கு முன்பு வரைகூடத் தஞ்சாவூரின் […]

Read more

தெரிந்தெடுத்த சுரதா கவிதைகள்

தெரிந்தெடுத்த சுரதா கவிதைகள், தொகுப்பாளர்-மறைமலை இலக்குவனார், சாகித்ய அகாடமி, சென்னை, விலை 140ரூ. கவிஞர், இதழாசிரியர், சினிமா வசனகர்த்தா, திரைப்பட பாடலாசிரியர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர், கவியரங்கத் தலைவர் என்று பன்முக ஆற்றல் பெற்றவர் சுரதா. அவர் பாடல்களில் உவமைகள் அதிகம் இருப்பதால் உவமைக் கவிஞர் என்று அழைக்கப்பட்டார். கவிஞர் சுரதாவின் தெரிந்தெடுத்த கதைகளை சாகித்ய அகாடமி தொகுத்து வெளியிட்டுள்ளது. இவர் மிகக் குறைவான சினிமா பாடல்களையே எழுதி இருக்கிறார் என்ற போதிலும் அவை கருத்தாழமும், பலமை வீச்சும் நிறைந்தவை. அமுதும் தேனும் எதற்கு நீ […]

Read more

பக்கம் பக்கமாய்

பக்கம் பக்கமாய், சுதா பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. கவிதை உறவு இலக்கிய இதழில் கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் எழுதிய ஒரு பக்க கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். வரலாற்றில், வாழ்க்கையில், நடைமுறையில் கண்டறிந்த உயர்ந்த சிந்தனைகளை கருவாக்கி, தன்னம்பிக்கையை எருவாக்கி, நல்ல எண்ணங்களை பயிராக்கி இருக்கிறார். இந்த நூலில் உள்ள 44 கட்டுரைகள் மூலம் நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல பண்புகளை கற்றுத் தருகிறார். இதமாக நடந்து கொண்டால் இமயமாக உயரலாம். எளிமையாக இருந்தால் எவரையும் கவரலாம் என்பதை […]

Read more

தி மியூசிக் ஸ்கூல்

தி மியூசிக் ஸ்கூல், செழியன், தி மியூசிக் ஸ்கூல் பப்ளிகேஷன்ஸ், சென்னை 33. The Music School எளிமையான, குழப்பம் இல்லாத தமிழ் நடை. வகுப்பில் ஆசிரியர் பாடம் எடுப்பதுபோலவே எழுதப்பட்ட வடிவமைப்பு.உதாரணத்துக்கு ஒரு பகுதி இதோ- இது வெறுமனே தொடர்ச்சியாக வாசிக்கிற புத்தகம் அல்ல. இதில் இருக்கிற பல விஷயங்களுடன் நீங்கள் இணைந்து பயிற்சி செய்ய வேண்டும். கண்களால் பார்த்து இந்தப் பாடங்களை நினைவில் வைத்துக்கொண்டால் மட்டும் போதாது. பாடத்தை வாசிக்கும்போது, எப்போதும் அருகில் பென்சில் வைத்திருங்கள். முக்கியமான விஷயத்தை அடிக்கோடு இடுவதற்கு […]

Read more

நெருப்பில் பூத்த ஆசிரியர்

நெருப்பில் பூத்த ஆசிரியர், இதயம் பதிப்பகம், மதுரை, விலை 250ரூ. ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியராக வாழ்க்கையை ஆரம்பித்த இந்நூலாசிரியர் கலைமாமணி எப்.சூசைமாணிக்கத்தின் வாழ்க்கை வரலாறு, ஒரு நாவலைப்போல் அமைந்துள்ள வியப்பளிக்கிறது. அவர் ஆசைப்பட்டு அமைத்த வாழ்க்கையுமல்ல. திறமைகளால் அமைந்த வாழ்க்கையும் அல்ல. தானே அமைந்த ஆசிரியர் வாழ்வை விருப்பமுடன் ஏற்றுக்கொண்டு வாந்தார். ஆனால் எதிர்கொண்ட அனுபவங்கள் வித்தியாசமானவை, விறுவிறுப்பானவை, திருப்பங்கள் நிறைந்தவை, திடுக்கிட வைப்பவை, சூழ்ச்சிகள் சூழ்ந்தவை, சுவையானவை. இந்த அனுபவங்களே அவரை தனித்துவம் பெற்ற வரலாற்று நாயகராக்கி இவ்வரலாற்றின் மையப்புள்ளியாய் திகழ்கிறார். உண்மைச் […]

Read more

நீளும் கனவு

நீளும் கனவு, கவின்மலர், கயல்கவின் பதிப்பகம். அண்ணன் மனதில் மறைந்திருக்கும் வக்கிரம் நீளும் கனவு என்ற சிறுகதை தொகுப்பை சமீபத்தில் படித்தேன். எழுத்தாளர் கவின்மலர். பல்வேறு காலகட்டங்களில் எழுதிய சிறுகதைகள் இவை. கயல் கவின் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பில் பல கதைகள் இருந்தாலும் அண்ணன், இரவில் கரையும் நிழல்கள் என்ற இரு சிறுகதைகள் என்னை மிகவும் பாதித்தவை. பெண்ணுடன் பிறக்கும், ஆண்களை அண்ணன், தம்பி என அழைக்கிறோம். அதேநேரத்தில் உடன் பிறவாத மூன்றாம் நபராக இருக்கும் ஒரு ஆணையும் அண்ணன் என அழைப்போம். […]

Read more
1 2 3 4 5 8