கல்கியின் பொன்னியின் செல்வன் காமிக்ஸ்

கல்கியின் பொன்னியின் செல்வன் காமிக்ஸ், நிலா காமிக்ஸ், வி 145ரூ. அமரர் கல்கியின் பொன்னியின் செல்வனைப் பற்றி புதிதாக எதுவும் சொல்லத் தேவையில்லை. அந்த வரலாற்றுப் புதினத்தை, அழகழகான படங்கள், சுவாரஸ்யமான டயலாக்குகளுடன் படக்கதையாகத் தரும் வித்தியாசமான முயற்சி. மாதம் இருமுறை என அத்தியாயங்களின் தொடர் வெளியீடாக வருமாம். காமிக்ஸ் பிரியர்களைக் கண்டிப்பாகக் கவரும். நன்றி: குமுதம், 6/12/2017.

Read more

அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை

அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை(சிறுவர் கதைகள்), மு.முருகேஷ், அகநி வெளியீடு, விலை 100ரூ. குழந்தைகளின் இலக்யி உலகின் கதவு, கதை கேட்பதில்தான் திறக்கிறது. பாட்டிகள் கதை சொல்வது அபூர்வமாகிவிட்ட இக்காலத்தில் குழந்தைகளுக்காக குட்டிக் குட்டி கதைகளை சுவாரஸ்யம், நகைச்சுவை, புத்திசாலித்தனம் கலந்து சொல்லி அவர்களின் இலக்கியக் கதவைத் திறந்திட முயற்சித்திருக்கிறார் ஆசிரியர். படிக்கும் குழந்தைகள் ரசிப்பார்கள். சிரிப்பார்கள். சிந்திப்பார்கள். நன்றி: குமுதம், 6/12/2017.

Read more

விடை தெரியாத மர்மங்கள்

விடை தெரியாத மர்மங்கள், குன்றில் குமார், குறிஞ்சி, விலை 110ரூ. இப்படிக்கூட நடக்குமா? இதையெல்லாம் யார் செய்கிறார்கள்? இவையெல்லாம் உண்மையா? வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா? இந்த மாதிரி விடைதெரியாத ஆச்சரியமூட்டும், திகிலான, நம்பவே முடியாத அதேசமயம் நிஜமாகவே நடந்த நிகழ்சிகள் இந்த உலகில் எத்தனை எத்தனையோ உண்டு. அவற்றில் சில அரிய நிகழ்வுகளின் தொகுப்பு. நன்றி: குமுதம், 6/12/2017.

Read more

பன்முக நோக்கில் புறநானூறு

பன்முக நோக்கில் புறநானூறு, பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், விலை 160ரூ. செந்தமிழ் நூல்களுள் பழமையும் இனிமையும் வாய்ந்தது புறநானூறு. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றின் எளிமையும், அதில் மணக்கும் தமிழின் சீர்மையும் காலவளர்ச்சியில் படிப்பார் இன்றி மங்கிவிடாமல் தடுப்பதற்கான அரிய முயற்சியாக எழுதப்பட்டுள்ள நூல். புறநானூற்று நூல்களைப்பற்றி அறிந்தவர் அறியாதவர் என எல்லோரையும் கவர்ந்திழுக்கும் எளிய நடை. நன்றி: குமுதம், 6/12/2017.

Read more

சுதந்திரப் போரில் திருப்பூர் தியாகிகள்

சுதந்திரப் போரில் திருப்பூர் தியாகிகள், பி.ஆர்.நடராஜன், நியூ செஞ்சரி புக் ஹவுஸ்(பி)லிட், விலை150ரூ. திருப்பூர் என்றதுமே கொடிகாத்த குமரனின் நினைவுதான் எல்லோருக்கும் வரும். கொடுங்கோல் அரசு புரிந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த சுதந்திரப்போரில் கலந்துகொண்ட திருப்பூர் குமரன் உள்ளிட்ட பல தியாகிகளின் வரலாற்றுத் தொகுப்பு. நன்றி: குமுதம், 6/12/2017.

Read more

வனநாயகம்

வனநாயகம், வெ.இறையன்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 50ரூ. வனம் மிகுந்து ஊர் சிறுத்து இந்த காலத்தில் நம் மனத்து இருந்த நிம்மதியும், இயற்கை அளித்த கொடையும் நிறைந்து இருந்தது. வனம் அழிந்து ஊர்களானதில் வெளிச்சம் வெளியே வந்து மனதின் உள்ளே இருட்டு பரவி விட்டதை படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் இறையன்பு. தினம் தினம் வனம் அழிகிறது. அதனால்தான் மனிதனின் வாழ்நாளும் வேகமாக கழிகிறது என்ற உண்மை, கனக்கிறது. கூடவே, வனம் வளர்த்து வருங்காலத் தலைமுறைக்கு வளம் சேர்க்கவேண்டும் என்ற எண்ணம் மனதுக்குள் படமாகத் […]

Read more

இப்படியெல்லாமா இருக்கிறது பிரச்னை?

இப்படியெல்லாமா இருக்கிறது பிரச்னை?, ப. திருமலை, புதிய வாழ்வியல் பதிப்பகம், விலை 60ரூ. திருட்டு, கொலை, கொள்ளை என்று குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களைத் திருத்துவதற்காக ஏற்பட்ட, சிறைச்சாலைக்குள்ளேயே குற்றங்கள் நிகழ்வதன் காரணம் என்ன என்று ஆராய்கிறது ஒரு கட்டுரை. ‘தங்கள் பிரச்னையை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்கிற வேகமும் கவலையும் கைதிகளிடம் இருக்கிறது. அதை யாரிடமும் கொட்ட வழியில்லாதபோது மனதுக்குள்ளேயே புழுங்கி ஆத்திரமாக வெளிப்படுத்துகிறார்கள். அவர்களை ஆற்றுப்படுத்த ஒவ்வொரு சிறைச் சாலையிலும் கவுன்ஸிலிங் அவசியம்’ என்கிறார் ஆசிரியர். காணாமல் போகும் பெண் குழந்தைகள் கருவறையா, […]

Read more

பாலாற்றங்கரை தெய்வங்கள்

பாலாற்றங்கரை தெய்வங்கள், ப்ரியன், திருவரசு புத்தக நிலையம், விலை 80ரூ. கல்கி குழுமத்தின் ‘தீபம்’ ஆன்மிக இதழில் தொடராக வந்த கட்டுரைகள் இவை. நீர்வளம் குன்றிய பாலாற்றின் கரையில் இத்தனை வரலாற்றுச் சிறப்புடைய கோயில்களா என்று பிரமிக்கப் பண்ணுகிற முப்பத்தொன்பது கட்டுரைகள். தரிசன நேரம், செல்லும் வழி போன்ற அவசியமான தகவல்களையும் கொண்ட நல்ல நூல். நன்றி: கல்கி, 3/12/2017.

Read more

நட்சத்திரத் தோரணங்கள்

நட்சத்திரத் தோரணங்கள், கவிஞர் கே.ஜி.இராஜேந்திரபாபு, புதுகை தென்றல் வெளியீடு, விலை 70ரூ. ஹைக்கூ கவிதைகள் தோன்றி 100 ஆண்டுகள் ஆகின்றன. அதையொட்டி, இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது. கவிஞர் கே.ஜி.இராஜேந்திரபாபு எழுதியுள்ள அழகான ஹைக்கூ கவிதைகள், படங்கள் இடம் பெற்றுள்ளன. ஹைக்கூ கவிதைகளை ரசிப்பதற்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. அவர்கள் இந்த நூலை பெரிதும் ரசிப்பார்கள். நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more

ஐயப்பனின் முத்துமணி மாலை

ஐயப்பனின் முத்துமணி மாலை, புலவர் வெய்கை முத்து, மு.கல்யாணி பதிப்பகம், விலை 100ரூ. ஐயப்பன் வரலாறும், ஐயப்பன் பாடல்களும் அடங்கிய நூல். புத்தகம் கண்ணுக்கு அழகாகவும், கருத்துக்கு விருந்தாகவும் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more
1 2 3 9