சுந்தரகாண்டம் (படக்கதை)

சுந்தரகாண்டம் (படக்கதை), டாக்டர் வே. ஹரிகுமார் பதிப்பகம், தாரணி பதிப்பகம், விலை 20ரூ. ராமாயணத்தின் இறுதிப் பகுதி சுந்தர காண்டம். ராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதையை ராமன் மீட்பதுதான் சுந்தரகாண்டம். இதைப் படக்கதையாக்கி இருக்கிறார் டாக்டர் வே.ஹரிகுமார். ஓவியங்களை அழகாகத் தீட்டியிருக்கிறார் தமிழ். பாராட்டத்தக்க முயற்சி. நன்றி: தினத்தந்தி, 3/1/2018.

Read more

ஸ்ரீ ஐயப்பன் பஜனைப் பாடல்கள்

ஸ்ரீ ஐயப்பன் பஜனைப் பாடல்கள், பாலசர்மா, ஸ்ரீ விக்னேஷ் பதிப்பகம், விலை 30ரூ. சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் படிப்பதற்காக ஐயப்பன் பஜனைப் பாடல்கள் அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி, 3/1/2018.

Read more

அங்கீகாரமற்ற வீட்டுமனைகள்

அங்கீகாரமற்ற வீட்டுமனைகள், அ.பாலகிருஷ்ணன், ராஜாத்தி பதிப்பகம், விலை 80ரூ. விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவது எப்படி?, அதிகாரமற்ற வீட்டு மனையை வாங்கவோ, விற்கவோ முடியுமா? அங்கீகாரமற்ற வீட்டுமனை எங்கே எப்படி விண்ணப்பம் செய்வது? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை அளிக்கும் நூல். நன்றி: தினத்தந்தி, 3/1/2018.

Read more

வங்கிகள் வழங்கும் சேவைகள்

வங்கிகள் வழங்கும் சேவைகள், M.ராமச்சந்திரன், வசந்த பதிப்பகம், விலை 150ரூ. வங்கியில் உயர் பதவிகளை வகித்தவரும், வங்கி பயிற்சி கல்லூரி பேராசிரியருமான எம்.ராமச்சந்திரன், வங்கிகள் குறித்த பொதுமக்கள் அறிய வேண்டிய தகவல்களை புள்ளி விவரங்களுடன் இந்நூலில் கொடுத்துள்ளார். இந்த நூலின் விலை 150ரூ. மற்றும் சிறுதொழில் கடன் (:ரூ.100). வியாபாரக் கடன் (ரூ.75), வீட்டுக்கடன் (ரூ70), வாகனக் கடன் (ரூ.60), கல்விக்கடன் (ரூ70), விவசாயக் கடன்(ரூ.60), காசோலைகள் (ரூ120) ஆகிய நூல்களையும் இவர் எழுதியுள்ளார். எல்லாமே, வங்கிப் பணிகள் பற்றி பொதுமக்கள் அறிந்து கொள்ள […]

Read more

நாங்கள் நலம் நீங்கள் நலம் பெற

நாங்கள் நலம் நீங்கள் நலம் பெற, B.R.பொன்னம்பலம், மணிமேகலைப் பிரசுரம், விலை 50ரூ. வாழ்க்கைக்கு வழிகாட்டக் கூடிய விஷயங்கள் அடங்கிய புத்தகம். பெண்களுக்கு நூலாசிரியர் பி.ஆர்.பொன்னம்பலம் கூறும் சில குறிப்புகள் பெண்கள் இருளில் விளக்கு வைத்தவுடன் அழக்கூடாது. விளக்கு வைத்தபின், வளையல்களை கழற்றக்கூடாது. செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் வீட்டை விட்டுச் சென்றால், இரவு வீடு திரும்பி விட வேண்டும். அன்று பிறர் வீடுகளில் தங்கக்கூடாது. உப்பைத் தரையில் சிந்தக்கூடாது. அரியைக் கழுவும்போது தரையில் சிந்தக்கூடாது. இப்படி நிறைய குறிப்புகள் இந்த நூலில் கூறப்பட்டுள்ளன. […]

Read more

ரஜினீஷ் எனும் ஓஸோ

ரஜினீஷ் எனும் ஓஸோ, யோக சித்தர் டாக்டர் மானோஸ், ஹலோ பப்ளிகேஷன்ஸ், விலை 150ரூ. பாலுணர்வில் இருந்து விடுதலை அடைவதற்கு சரியான வழி சொன்னவர் ஓஸோ. தவறான அணுகுமுறையால் காமமே வாழ்க்கையாக்கிக் கொண்ட நமக்கு விடுதலை வாங்கி கொடுத்தவர் ஓஸோ. அவர் பாலுணர்வுவை மட்டும் போதிக்கவில்லை. பிரார்த்தனை, கடவுள், அன்பு மரணம், தியானம் இன்னும் மானிட சம்பந்தமான அனைத்தையும் அலசி ஆராய்ந்து 600 நூல்களில் தன்னுடைய கருத்தை பிரச்சாரமாக தந்துள்ளார். அந்த 600 நூல்களில் சொன்ன அத்தனை கருத்துக்களையும் ரத்தின சுருக்கமாக இந்த நூலில் […]

Read more

தமிழ்மகள் சிறுகதைகள்

தமிழ்மகள் சிறுகதைகள், தமிழ்மகள், உயிர்மை பதிப்பகம், விலை 550ரூ. பல நாவல்களும் ஏராளமான சிறுகதைகளும் எழுதியுள்ள தமிழ்மகன் என்கிற பா.வெங்கடேசன், ஜுனியர் விகடனில் பணியாற்றுகிறார். அவருடைய பல நாவல்கள், பரிசுகளும், விருதுகளும் பெற்றவை. இவர் எழுதிய சிறுகதைகள் காலவரிசைப்படி தொகுக்கப்பட்டு ஒரே புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 80 சிறுகதைகள் இதில் அடங்கியுள்ளன. 3 பக்கக் கதைகளும் உண்டு. 10 பக்க கதைகளும் உண்டு. கதைகளை வீணாக வளர்க்காமல், வார்த்தைகளை சிக்கனமாகக் கையாண்டு, விறுவிறுப்பாக எழுதியுள்ளார். பரிசு பெற்ற கதைகளும் பாராட்டுப் பெற்ற கதைகளும் நிறைய […]

Read more

முத்தும் பவளமும்

முத்தும் பவளமும், தொகுப்பாசிரியர் முஹம்மது ஃபுஆத் அப்துல் பாக்கீ, சாஜிதா புக் சென்டர், பக். 944, விலை 400ரூ. இஸ்லாமிய வாழக்கைக்கு வழிகாட்டியாக இருப்பவை திருக்குர்ஆனும், ஹதீஸும். குர்ஆன் என்பது இறைவன் அருளிய வேதம். ஹதீஸ் என்பது நபிகள் நாயகம்(ஸல்)) அவர்கள் அருளிய வாழ்க்கை நெறி. இஸ்லாமியர்களின் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே நபிகள், தனது வாழ்க்கை முறையைக் கொண்டே வழிகாட்டினார்கள். அவற்றின் தொகுப்பே ஹதீஸ் நூல்கள். இறை நம்பிக்கை, தொழுகை, நோன்பு, தர்மம், வியாபாரம், கல்வி சமூக […]

Read more

சந்தோசம்

சந்தோசம், மு.ஞா.செ.இன்பா, பந்தள பதிப்பகம், விலை 299ரூ. கலை பேசும் சந்தோசம் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, கடும் உழைப்பாலும், நேர்மையாலும் வெற்றியின் சிகரத்தைத் தொட்டவர்கள் வி.ஜி.பன்னீர்தாஸ் சகோதரர்கள். அண்ணன் பன்னீர்தாஸ் எதிர்பாராதவிதமாக இளமையிலேயே மறைந்து விட, சோதனைகளைத் தாங்கி அந்த நிறுவனத்தை கோபுரம் அளவுக்கு உயரச் செய்தவர் வி.ஜி.சந்தோஷம். எதிர்நீச்சல் போட்டு முன்னேறிய சந்தோஷத்தின் வாழ்க்கை வரலாற்றை ஒரு நாவலுக்குரிய விறுவிறுப்புடன் எழுதியுள்ளார் நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா. ஏராளமான படங்களுடன், கண்ணையும், கருத்தையும் கவரும் வண்ணம் புத்தகம் அமைந்துள்ளது. வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர்கள் அவசியம் படிக்க […]

Read more

வியப்பின் மறுபெயர் வீரமணி

வியப்பின் மறுபெயர் வீரமணி, மஞ்சை வசந்தன், திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, விலை 250ரூ. திராவிட கழக தலைவர் கி.வீரமணியின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல். ஒரு காவிய நாயகரின் வரலாற்றை, காவியமாகவே படைத்திருக்கிறார் மஞ்சை வசந்தன். புத்தகத்தை கையில் எடுத்தால், கீழே வைக்க மணம் வராது. அந்த அளவுக்கு சுவை, விறுவிறுப்பு. புத்தகத்தில் உள்ள மறக்க முடியாத சில தவல்கள் பிறந்து 11 மாதமே ஆகி இருந்த நிலையில் வீரமணியின் தாயார் மறைந்தார். அதன் பின் சிற்றன்னையால் வளர்க்கப்பட்டார். இவருடைய இயற்பெயர் சாரங்கபாணி. […]

Read more
1 2 3 4 5 8