விடுதலைப் போர் தெரிந்த பெயர்கள் தெரியாத தகவல்கள்

விடுதலைப் போர் தெரிந்த பெயர்கள் தெரியாத தகவல்கள், ஆர்.பி.வி.எஸ். மணியன், அத்வைத் பப்ளிஷர்ஸ், பக். 200, விலை 120ரூ. இன்றைய தலைமுறையினருக்கு அந்நியர்களிடம் குறிப்பாக வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நம்நாட்டை மீட்டெடுக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்த நம் விடுதலைப் போராட்ட வீரர்களின் அருமை, பெருமைகளை நினைவூட்டுவது காலத்தின் கட்டாயமாக உள்ளது. காரணம், தேச விடுதலை என்றால் என்ன, அந்நியர்களிடம் தேசம் அடிமைப்பட்டுக் கிடந்தபோது நாட்டில் நடந்த நிகழ்வுகள் என்ன, அதனால் மக்கள் அன்றாடம் அடைந்த துயரங்கள் என்ன… என்பன போன்ற […]

Read more

இந்தியாவின் இலட்சிய மகளிர்

இந்தியாவின் இலட்சிய மகளிர், வசந்தநாயகன், ஸ்ரீகுருஇராகவன் பப்ளிகேஷன்ஸ், விலை 50ரூ. மாலவனுக்குத் தொண்டு செய்த ஆண்டாள் முதல் மக்களுக்கு சேவை செய்த மதர் தெரசா, ஜெயலலிதா வரை இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த மங்கையர்கள், பதினேழுபேரின் சுருக்கமான வரலாறு. ஜான்சிராணியின் இயற்பெயர் மணிகர்ணிகா என்பது போன்ற பலருக்கும் தெரியாத தகவல்களும் உண்டு. -ஆர்.நாகராஜன். நன்றி: குமுதம், 3/1/2018

Read more

கடல் பயணங்கள்

கடல் பயணங்கள், மருதன், கிழக்கு பதிப்பகம், விலை 130ரூ. பயணிகளால்தான் பாதை உருவானது. அதுதான் உருண்டையான உலகின் இரு முனைகளை இணைக்க உதவியது. வாஸ்கோடகாமா, மார்கோபோலோ, கொலம்பஸ் என பன்னிரண்டுபேர் கடலோடிகளாகப் பயணித்து பல்வேறு சிரமங்களுக்கு இடையே கடல்வழிப் பாதைகளையும் அதன் வழிசென்று பல நாடுகளையும் கண்டுபிடித்த வரலாறு. கதைபோல் சொல்லப்பட்டிருப்பது சுவாரஸ்யம்! -ஆர்.நாகராஜன். நன்றி: குமுதம், 3/1/2018

Read more

கொஞ்சம் பயமாய் இருக்கிறது

கொஞ்சம் பயமாய் இருக்கிறது, நர்மதா, படிவெளியீடு, விலை 90ரூ. சுற்றி நடக்கும் அநீதியைத் தட்டிக் கேட்க முயலாமல், உள்ளுக்குள் நொறுங்கி வெளியே தைரியசாலியாய் வேஷம் போடும் மனத்தின் மனக்குரலாய் ஒலிக்கும் கவிதைகள். நேசம், பாசம், பரிதவிப்பு, நெகிழ்ச்சி என்று ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு உணர்வின் வெளிப்பாடு. -ஆர்.நாகராஜன். நன்றி: குமுதம், 3/1/2018

Read more

விடை தெரிந்த மர்மங்கள்,

விடை தெரிந்த மர்மங்கள், குன்றில் குமார், சங்கர் பதிப்பகம், விலை 160ரூ. தோன்றி நாள் முதல் எத்தனை எத்தனையோ மர்மங்களைத் தனக்குள் புதைத்துக் கொண்டு சுன்று கொண்டிருக்கிறது இந்த உலகம். மறைந்து கிடக்கும் இந்த மர்மங்கள் பலவற்றுக்கான விடையை தேடிக்கொண்டே இருக்கிறார்கள் விஞ்ஞானிகள். அவற்றுள் விடை தெரிந்தவற்றின் தொகுப்பு. படிக்கப் படிக்க, மர்மக் கதையைப் படிப்பது போன்ற சுவாரஸ்யம் எட்டிப்பார்க்கிறது. -ஆர்.நாகராஜன். நன்றி: குமுதம், 3/1/2018

Read more

புலம்பெயர்ந்தோர் கவிதையும் வலியும்

புலம்பெயர்ந்தோர் கவிதையும் வலியும், கவிஞர் ஈழபாரதி, இனிய நந்தவனம், விலை 80ரூ. காதலும் வேதனையும் மட்டுமே கவிதைகள் ஆவதில்லை. சாதலும் புலம் விட்டுச் சென்று மனம் நோதலும்கூட ஆழமான கவிதைகளாய் உருவெடுத்து மனதை அசைக்கக் கூடும் என்று நிரூபிக்கும் வண்ணம், புலம்பெயர்ந்தோர் எழுதிய கவிதைகளை ஆய்வு செய்து அதில் மறைந்திருக்கும் வலியைப் படம் பிடித்துக் காட்டும் தொகுப்பு! -ஆர்.நாகராஜன். நன்றி: குமுதம், 3/1/2018

Read more

நேரம்

நேரம், வெ.இறையன்பு, நியூ செஞ்சரி புக் ஹவுஸ்(பி)லிட், விலை 50ரூ. நேரம் நகர்ந்து கொண்டேதான் இருக்கும். அதன் நகர்தலுக்கு ஏற்ப நமது நகர்தலுக்கான திட்டமிடலைச் செய்தால், நேரம் இல்லை என்ற பிரச்னையே வராது. காலத்தை நம் கைப்பிடியில் வைத்துக் கொண்டு கணக்கிட்டு செயலாற்றும் வழியை சீராகச் சொல்லித் தந்திருக்கிறார் இறையன்பு. இளைஞர், முதியோர், ஏழை, பணக்காரர், எஜமானர், வேலைக்காரர், மாணவர், இல்லத்தரசி என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவருக்குமே பயன்தரக்கூடிய அற்புதமான புத்தகம். -ஆர்.நாகராஜன். நன்றி: குமுதம், 3/1/2018

Read more

தமிழ்த் திருமணம்

தமிழ்த் திருமணம், மாருதி தாசன், நர்மதா பதிப்பகம், பக். 112, விலை 70ரூ. துணையை முறைப்படுத்தும் செயலே திருமணமாகும். திருமணம் என்பது உயர்ந்த நெறி; தெய்வீக நெறி. காதல் வயப்படுவது உயிர் இயற்கை. அது கட்டுப்பாட்டுக்குள் இருக்குமாறு செய்யப்படும் சடங்கே திருமணம். காலத்துக்குக் காலம் திருமணச் சடங்குகள் மாறலாம்; நாட்டுக்கு நாடு மாறலாம். ஆயினும், இரண்டு உள்ளங்களின் பிணைப்பே மணம் என்பது உறுதியான ஒன்று. இந்நுால், திருக்கோவில்களில் அர்ச்சகராக பணிபுரிவோருக்கும் வழிகாட்டியாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், 17/12/2017.

Read more

சமரம்

சமரம் – வங்க மூலம்: தபோ விஜயகோஷ்; தமிழில்: ரவிச்சந்திரன் அரவிந்தன்; சப்னா புக் ஹவுஸ், பக்.328, விலை ரூ.200. மேற்கு வங்காளத்தில் 70 களின் சூழ்நிலையின் பின்னணியில் உருவான நாவல். தமால்ராய் என்கிற கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர் கொலை செய்யப்படுவதுடன் தொடங்குகிறது இந்நாவல். அவரின் இறுதி ஊர்வலத்துடன் நிறைவடைகிறது. கொலைக்கு முன்பு நிகழ்ந்த சம்பவங்கள், கொலை நடந்த பிறகு நிகழ்ந்த சம்பவங்கள் இடையில் சொல்லப்படுகின்றன. 24 பர்கானா பகுதியில் இருந்த நிலச்சுவான்தார் மணிசங்கர் செüத்ரி அங்கு தனக்குத் சொந்தமாக இருந்த நிலங்களை விற்றுவிட்டு, […]

Read more

சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக இசைக் களஞ்சியம்

சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக இசைக் களஞ்சியம், அரிமளம் சு.பத்மநாபன், காவ்யா,  பக்.340 ; விலைரூ.330; 1867 இல் பிறந்த சங்கரதாஸ் சுவாமிகள் தமிழ் நாடகத்துறையின் முன்னோடியாவார். அவர் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா என்ற பாய்ஸ் கம்பெனி நாடக சபையைத் தொடங்கி நடத்தியவர். எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், எம்.ஆர்.ராதா உள்ளிட்ட நடிகர்கள், உடுமலை நாராயண கவி, தஞ்சை இராமையா தாஸ் உள்ளிட்ட கவிஞர்கள் இந்த நாடக சபையில் பயிற்சி பெற்றவர்கள். 68 நாடகங்களை அவர் எழுதியிருக்கிறார். ஆனால் 16 நாடகப் பிரதிகளே […]

Read more
1 2 3 4 5 6 8