1974 – மாநில சுயாட்சி – மைய – மாநில உறவு ஆய்வுக்குழு

1974 – மாநில சுயாட்சி – மைய – மாநில உறவு ஆய்வுக்குழு (ராஜமன்னார் குழு) அறிக்கை மற்றும் அதுதொடர்பான விஷயங்களின் தொகுப்பு,  ஆழி செந்தில்நாதன், ஆழி பப்ளிஷர்ஸ், பக். 608, விலை ரூ. 1,000. 1974 தமிழ்நாடு சட்டப் பேரவைத் தீர்மானம், அதன் மீதான விவாதங்களின் உரை ஆகியன நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அரை நூற்றாண்டுக்கு முன்னரே மத்திய, மாநில உறவுகள் அறுபட்டுவிடாமல் சீரமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து திமுக தலைவரான மறைந்த கருணாநிதி சிந்தித்திருப்பதுடன் ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.  ‘ஓர் ஒற்றையாட்சியமைப்பை ஏற்க […]

Read more

மனதின் குரல்

மனதின் குரல் (5 தொகுப்புகள்); பிரதமர் நரேந்திர மோடி, செந்தில் பதிப்பகம், பக். 1,664 (336+328+336+328+336), 5 தொகுப்புகள்: ரூ.2,000. விஜயதசமியன்று 2014 அக். 3-ஆம் தேதி முதல் பிரதமர் நரேந்திர மோடியின் “மனதின் குரல்’ (மன் கீ பாத்) நிகழ்ச்சி ஒலிபரப்புத் தொடங்கியது. ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிறன்று வானொலியில் உரையாற்றும் நிகழ்ச்சியானது, 87-ஆவது நிகழ்ச்சியை நிறைவு செய்திருக்கிறது. இதில் 85 உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, 5 தொகுப்புகளாக வெளிக்கொணர்ந்திருப்பது ஆவணப் பெட்டகமே. உரையாடலில் பல்வேறு, தகவல்கள் இடம்பெற்றிருந்தாலும் அதில் தமிழகத்தைப் பற்றியும், […]

Read more

தேசியமும் திராவிடமும்

தேசியமும் திராவிடமும், துரை கருணா, எம்.ஜி.ஆர்., பாசறை, விலைரூ.300. தமிழகத்தில் தேசிய இயக்கத்தை பின்னுக்கு தள்ளி, திராவிட இயக்கங்கள் செல்வாக்கு பெற்ற வரலாற்றை பதிவு செய்யும் நுால். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் முகமாக, 39 கட்டுரைகள் உள்ளன. இந்தியாவில் விடுதலை இயக்கம் தோன்றி பரவியதுடன் துவங்குகிறது. அதில் தீவிரவாதியாக பங்கேற்ற, வ.உ.சி.,க்கு விதிக்கப்பட்ட தண்டனை பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. பின், நீதி கட்சியின் தோற்றம் வளர்ச்சி பற்றி குறிப்பிடுகிறது. தொடர்ந்து தமிழகத்தில் இயக்கங்களின் வளர்ச்சி, செயல்பாடு என்று பேசுகிறது. அரசியல் நிலையை, விமர்சனப்பார்வையுடன் […]

Read more

முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்களின் பேருரைகள்

முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்களின் பேருரைகள், தொகுப்பாசிரியர்: கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், வெளியீடு: இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், விலை:ரூ.100. தமிழக சட்டசபையில் முஸ்லிம் லீக் உறுப்பினர்களாகப் பணியாற்றியவர்கள் சட்டமன்ற விவாதத்தில் தெரிவித்த கருத்துகள் ஏற்கனவே இரண்டு தொகுதிகளாக வெளியாகியுள்ள நிலையில், 3-வது பாகமாக இந்த நூல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் வாணியம்பாடி எச்.அப்துல் பாசித், அரவக்குறிச்சி கலீலுர் ரஹ்மான், கடையநல்லூர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் ஆகியோரின் உரைகள் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், தனது தொகுதி பிரச்சினைகளுடன், சிறுபான்மையினரின் பிரதிநிதியாக, ஹஜ் […]

Read more

தேசமே உயிர்த்து எழு!

தேசமே உயிர்த்து எழு!, டாக்டர் க. கிருஷ்ணசாமி, கிழக்கு பதிப்பகம், பக்: 216, விலை ரூ. 250. இந்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பது தவறு என்று கண்டிக்கும் “இந்தியா ஒன்றியமா?’ கட்டுரையில் தொடங்கி, “நேதாஜியின் மர்ம மரணம்’, “சாதி ஒழிப்பு நாடகம்’, “திராவிட பேரினவாதம்’, “வன்னிய இட ஒதுக்கீடு’, “மாறாத அமெரிக்கா’, “புதிய கல்விக் கொள்கை’, “எழுவர் விடுதலை’, “காலத்துக்குப் பொருந்தாத சாதிப்பட்டியல்’ உள்ளிட்ட 39 தலைப்புகளில் உள்ளாட்சி நிகழ்வுகளிலிருந்து உலக நாடுகளின் நடப்பு வரை சுருக்கமாகவும் தெளிவாகவும் விவரித்திருக்கிறார் நூலாசிரியர். […]

Read more

தேசியமும் திராவிடமும்

தேசியமும் திராவிடமும், துரை கருணா, எம்.ஜி.ஆர். பாசறை, பக் – 200, விலை ரூ. 300. தேசியமும் திராவிடமும் – என்ற இந்த நூலில் பெரும் பகுதி திராவிட இயக்கத்தின் வளர்ச்சி, ஆட்சி, அதிகாரம் குறித்து எழுதப்பட்டுள்ளது. மொத்தமாக 39 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். தேசியம் என்று வரும் போது, காங்கிரஸ் பேரியக்கத்தின் ஆரம்ப கால சுதந்திரப் போராட்ட வீரர்களான வ.உ.சி, வாஞ்சிநாதன் வரலாற்றுச் சம்பவங்களுடன் தொடங்குகிறது. “வாஞ்சியின் தீவிரவாதச் செயலும் அவரது உயிரிழப்பும் தனக்கு உவப்பிலை’ என்று வ.உ.சி.யின் அறிக்கையை எடுத்துக்காட்டி […]

Read more

இரண்டாவது உலக யுத்தம்

இரண்டாவது உலக யுத்தம், வி.அ.மத்சுலேன்கோ, தமிழில்: டாக்டர் இரா.பாஸ்கரன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை:500. பல லட்சக்கணக்கான மக்களைப் பலிகொண்ட இரண்டாவது உலக யுத்தம்(1939-1945) தொடர்பான வரலாற்று நிகழ்வுகள் இதில் தரப்பட்டு இருக்கின்றன. இந்த யுத்தம் ஏற்பட்டதற்கான காரணங்கள், அதில் ஒவ்வொரு நாடுகளின் செயல்பாடுகள், இந்த யுத்தத்தால் விளைந்த முடிவுகள் ஆகியவை, இதுவரை வெளிவராத ஆவணங்களின் அடிப்படையில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அவற்றுடன் ரஷியா மற்றும் பல நாடுகளின் அரசியல் பிரமுகர்கள் போர் குறித்து வெளியிட்ட தகவல்கள், ராணுவ நிபுணர்கள் நினைவுக் குறிப்புகள் ஆகியவற்றை யும் பயன்படுத்தி […]

Read more

தளபதி மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உரைகள்

தளபதி மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உரைகள், பூம்புகார் பதிப்பகம், விலை: முதல் பாகம் ரூ.360; 2-ம் பாகம் ரூ.290; 3-ம் பாகம் ரூ.340;     முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 1989-ம் ஆண்டு முதல் சட்டமன்றத் திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நேரங்களில், சட்டமன்றத்தில் நிகழ்த்திய உரைகள் 3 பாகங்களாகத் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. 1989 ஏப்ரல் 1-ந் தேதி நிதிநிலை அறிக்கை மீதான அவரது உரையுடன் இது தொடங்குகிறது. ஒவ்வொரு முறையும் நிதிநிலை அறிக்கைகள் மீதான உரைகள், ஆளுநர் உரை மீதான பதில் உரைகள் ஆகியவை 1-ம் பாகத்திலும், […]

Read more

ரஸப் தய்யிப் எர்டோகன்

ரஸப் தய்யிப் எர்டோகன், கே.எம்.அஷ்ரப் கீழுபரம்பு, இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், விலைரூ.170. துருக்கியின் தொன்மத்தையும், அரசியல் மாற்றங்களையும், ஆற்றல்மிகு ஆட்சியாளராக விளங்கிய ரஜப் தய்யின் எர்டோகன் ஆட்சித் திறனையும் விளக்கும் நுால். மதச்சார்பற்ற தன்மை என்ற பெயரில் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டு துருக்கியின் பண்பாடும் பாரம்பரியமும் குழிதோண்டி புதைக்கப்பட்டது. உஸ்மானிய ஆட்சியைக் கவிழ்த்து மேற்கத்திய பாணியிலான ஆட்சியைக் கொண்டு வருவோம் என முழங்கிய, முஸ்தபா கமால், இஸ்லாமியருக்கு எதிராக சட்டங்களை இயற்றியதை விரிவாக விளக்குகிறது. துருக்கியில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களையும், ரஜப் தய்யிப் எர்டோகன் […]

Read more

ராஜீவ் காந்தி- அதிகாரம், ஆட்சி, அரசியல்

ராஜீவ் காந்தி- அதிகாரம், ஆட்சி, அரசியல், ஆர்.முத்துக்குமார், கிழக்கு பதிப்பகம், பக். 232, விலை ரூ. 250. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை இந்நூல் எடுத்துரைக்கிறது. ராஜீவைப் பற்றி மட்டுமல்லாமல் அவரின் தாயாரும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி காலத்தில் நிகழ்ந்தவை, அந்தக் காலத்தில் காங்கிரஸின் செயல்பாடுகள், நாட்டின் நிலை, மக்களின் எண்ணவோட்டங்கள், மாநிலங்களின் அரசியல் சூழல், சர்வதேச நிகழ்வுகள் என அனைத்தையும் இந்நூல் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்திரா காந்தியின் படுகொலைக்கான காரணங்கள், அதற்குப் பிறகு நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள், […]

Read more
1 2 3 44