அரோரா

அரோரா, சாகிப்கிரான், புது எழுத்து வெளியீடு, விலை: ரூ.100 அரோரா’ என்பதற்கு மூல அர்த்தம் வைகறை. சூரியனின் மின்னூட்டம் பெற்ற துகள்கள் உயர் வளிமண்டலத்தில் இருக்கும் அணுக்களோடு மோதுவதால் வட, தென் துருவப் பகுதிகளில் சிவப்பாகவும் பச்சையாகவும் வானில் ஏற்படுத்தும் கதிர்வீச்சு ‘அரோரா’ என்று அழைக்கப்படுகிறது. இயற்கையும் அதன் வழிகளும் தம்மிடமுள்ள புதிரை, சில வேளைகளில் மாற்று விடைகளை, மனிதன் வழியாக வெளியிடுகின்றன. அப்படி வெளியிடும் சிறந்த கலை ஊடகங்களில் ஒன்றாகக் கவிதை இருக்கலாம் என்று சாகிப்கிரான் கவிதைகளைப் படிக்கும்போது தோன்றுகிறது. நிகழ்ச்சிகள், அனுபவங்கள், […]

Read more

கஸல்களைப் பாடும் யாரோ ஒருவன்

கஸல்களைப் பாடும் யாரோ ஒருவன், காரிகைக் குட்டி, இனிய நந்தவனம் பதிப்பகம், பக். 120, விலை 100ரூ. கஸல்களைப் பாடும் யாரோ ஒருவன் கவிதைகள் எதார்த்தங்களின் வெளிப்பாடாகவே விளங்குகின்றன. இவரின் கவிதைகள் எளிய நடையில் அமைந்திருந்தாலும் கனமான கருவுடன் உணர்வுகளின் தாக்கங்களை வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொரு பொழுதுகளும் துாசி பறக்க விடுவது, பெண்களின் வாழ்வில் சுமை மற்றும் சடங்காகவே விளங்குவதை புலப்படுத்துகிறார் கவிஞர். கன்னி கழியவில்லை, கஸல்களைப் பாடும் யாரோ ஒருவன், சுட்டுவிரல், சாட்சியங்கள் போன்ற கவிதைகள் கவிஞரின் ஆவேசத்தை வெளிப்படுத்துகின்றன. கஸல்களைப் பாடும் யாரோ […]

Read more

கடல் ஒரு நீலச்சொல்

கடல் ஒரு நீலச்சொல், மாலதி மைத்ரி, வெளியீடு: அணங்கு பெண்ணியப் பதிப்பகம், விலை: ரூ.100 முதுநீரை மூக்குத்தியாய் அணிந்த தென்முனைக் குமரி மன ஆழங்களை அகழ்ந்து சொற்களைத் துடுப்பாகி, பெண்ணாழியின் அரசியலை கரை சேர்க்கும் மொழிவெளிக்குள் கொந்தளிக்கும் நீர்மைக் கவிதைகளின் தொகுப்பு. நன்றி: இந்து தமிழ், 19/1/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000030120.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தாயின் தாலாட்டு

தாயின் தாலாட்டு, அ.முத்துவேலன், அ.முத்துவேலன் வெளியீடு, விலை 90ரூ. மரபுக் கவிதைகளும் புதுக்கவிதைகளுமாக மொத்தம் 42 கவிதைகள் இடம் பெற்றுள்ள இந்த நூல், கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல சிறிய புத்தகமாக இருந்தாலும் சீரிய முறையில் அமைந்து இருக்கிறது. இதழியல் துறையில் நீண்டகாலம் பணியாற்றியவர் என்பதால், தமிழ்த்தாய் வாழ்த்து, கடவுள் வணக்கத்திற்கு அடுத்தபடியாக எழுத்தாணியைப் போற்றும் அழகிய கவிதை படைத்து இருக்கிறார். வெளிநாடுகளில் இருந்து வந்து தமிழைப் போற்றி வளர்த்த அறிஞர்களைப் பாராட்டி இருக்கும் கவிஞர், கீழடி நாகரிகம், வைகை ஆற்றின் […]

Read more

குக்கூவென

குக்கூவென, மு.முருகேஷ், அகநி, பக். 80, விலை 50ரூ. மூன்று வரியில் ஒரு, ‘அடடே’ போட வைக்கும் கவிதையே ஹைக்கூ. ஒரு பக்கம், ஒரு என, உள்ளங்கைக்குள் அடக்கும் வகையில், புதுமையான நூலை வெளியிட்டிருக்கிறார் மு.முருகேஷ். இவரின், ‘விரல் நுனியில் வானம், தோழமையுடன்’ உள்ளிட்ட ஹைக்கூ நூல்களைப் போலவே, இதுவும் கவனிக்கப்படும். நன்றி: தினமலர், 14/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பீஃப் கவிதைகள்

பீஃப் கவிதைகள், பச்சோந்தி, நீலம் வெளியீடு, விலை: ரூ.150 உயிரற்ற மாட்டுக்கறி உணவாக ஆகும்போது, அது உயிர்களை நீட்டிக்க உதவுகிறது. உழைப்பும் உற்பத்தியும் குழந்தைகளும் அதன் வழியாக நீளும் பண்பாடும் உயிர்கள் நீட்டிக்கப்படுவதாலேயே உருவாகின்றன. உயிரை நீட்டிக்க முடிந்த எந்த உணவும் தனித்ததல்ல, விலக்கப்பட்டதல்ல. அதனால், நம்மை வாழ்விக்கும் எல்லா உணவுகளும் உயிர்த்தன்மை கொண்டவையே. அதனாலேயே அவை பொதுப் பண்பாட்டின் உயிரங்கமாகவும் ஆகிவிடுகின்றன. அந்த உயிர்த்தன்மை கலை ஆகும், கவிதை ஆகும் எழில் பச்சோந்தி எழுதிய ‘பீஃப் கவிதைகள்’ தொகுப்பில் நடந்துள்ளது. தமிழகம், கேரளத்தின் […]

Read more

சிறுகோட்டுப் பெரும்பழம்

சிறுகோட்டுப் பெரும்பழம், விக்ரமாதித்யனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள், வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ், விலை: ரூ.250. பாரதியார் நூற்றாண்டில் அன்னம் வெளியிட்ட’ ஆகாசம் நீல நிறம்’ தொகுதி மூலம் புதுக்கவிதையில் அழுத்தமான தடத்தைப் பதிக்கத் தொடங்கியவர் விக்ரமாதித்யன். கவிதையையே வாழ்வாகவும் கவிஞர் என்பதையே பிரதான அடையாளமாகவும் கொண்ட விக்ரமாதித்யனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தான்’ சிறுகோட்டுப் பெரும்பழம்’. எளிய வாசகர்களும் தங்கள் வாழ்வின் பல்வேறு பருவங்கள் மற்றும் அனுபவங்களூடாக நினைவில் வைத்துக்கொள்ளும் அழகிய கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. சாதாரண மக்களின் காதல், பிரிவு, ஏக்கம், இல்லாமை, நம்பிக்கை, அவநம்பிக்கை […]

Read more

குட்டிரேவதி கவிதைகள்

குட்டிரேவதி கவிதைகள், எழுத்து பிரசுரம், தொகுதி 1, விலை 599ரூ, தொகுதி 2,விலை 450ரூ. கவிதைக்குள் எப்படி வந்தீர்கள்? அப்பா இளம் பருவத்திலேயே தமிழ் மொழி மீது உண்டாக்கிய ஆர்வம்தான் காரணம். நிறைய சங்கப் பாடல்களை மனனமாக அவர் எனக்குச் சொல்லிக் காட்டுவார். இதனால், எனக்குத் தொடர் வாசிப்புப் பழக்கம் ஏற்பட்டது. இதற்குத் தீனிபோடும் வகையில் பழைய புத்தகக் கடைகளிலிலிருந்து எனக்கான புத்தகங்களை அப்பா தேடித் தேடி வாங்கிவந்து தருவார். நான் படித்த சித்த மருத்துவத்தில் தமிழ்மொழிப் பாடத்திட்டம் ஒரு முக்கியமான காலகட்டத்தின் சொற்களை […]

Read more

புலம்பெயர்ந்த பறவைகள்

புலம்பெயர்ந்த பறவைகள், டாக்டர் டி.எம்.ரகுராம், திசை எட்டும் வெளியீடு, பக்.76, விலை 60ரூ. உலகப் புகழ் பெற்ற மூத்த கவிஞர் சச்சிதானந்தன் துவங்கி, இளம் கவிஞர்கள் வரை பலரின் படைப்புகள் அடங்கிய மலையாள மொழிக் கவிதைகளின் தொகுப்பு இந்நுால். ‘வயல் வெளியின் மடியில் கனவுகளால் வலைகள் பின்னி, காற்றுடன் வேடிக்கை பேசி செடியுடன் சேர்ந்து நின்ற காலம். என் மெய்யும் மனமும் அன்று மிருதுவாய் இருந்தது. ஈரத்தின் துடிப்பு செடியிலிருந்து வேறுபட்டு எங்கோ தொலைதுாரம் சென்றடைவதற்குள், காற்று என் ஜீவனின் ஆதாரமான நீரனைத்தும் வற்ற […]

Read more

அம்மை & பதுங்குகுழி நாட்கள்

அம்மை & பதுங்குகுழி நாட்கள், பா.அகிலன், பரிசல் வெளியீடு, விலை: ரூ.170 ஒரு பக்கத்தில் ‘அம்மை’ கவிதைத் தொகுப்பும், இன்னொரு பக்கம் திருப்பினால் ‘பதுங்குகுழி நாட்கள்’ கவிதைத் தொகுப்பும் என யாழ்ப்பாணக் கவிஞர் பா.அகிலனின் இரண்டு கவிதைப் பிரதிகளை ஒரே புத்தகமாகத் தலைகீழ் வடிவில் அச்சிட்டுக் கொண்டுவந்திருக்கிறது ‘பரிசல்’ பதிப்பகம். இரண்டு பிரதிகள், இரண்டு காலங்கள், இரண்டு அட்டைப்படங்கள், ஒரே புத்தகம்! இந்த வடிவமைப்பு உத்திக்காக ஒரு சபாஷ்! நன்றி: தமிழ் இந்து,16/1/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more
1 2 3 52