மனதின் குரல்

மனதின் குரல் (5 தொகுப்புகள்); பிரதமர் நரேந்திர மோடி, செந்தில் பதிப்பகம், பக். 1,664 (336+328+336+328+336), 5 தொகுப்புகள்: ரூ.2,000. விஜயதசமியன்று 2014 அக். 3-ஆம் தேதி முதல் பிரதமர் நரேந்திர மோடியின் “மனதின் குரல்’ (மன் கீ பாத்) நிகழ்ச்சி ஒலிபரப்புத் தொடங்கியது. ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிறன்று வானொலியில் உரையாற்றும் நிகழ்ச்சியானது, 87-ஆவது நிகழ்ச்சியை நிறைவு செய்திருக்கிறது. இதில் 85 உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, 5 தொகுப்புகளாக வெளிக்கொணர்ந்திருப்பது ஆவணப் பெட்டகமே. உரையாடலில் பல்வேறு, தகவல்கள் இடம்பெற்றிருந்தாலும் அதில் தமிழகத்தைப் பற்றியும், […]

Read more

இப்படித்தான் ஜெயித்தார்கள்

இப்படித்தான் ஜெயித்தார்கள், ஒரு பத்திரிகையாளனின் நேர்காணல்கள், மோ.கணேசன், பாரதி புத்தகாலயம், பக்.239, விலை ரூ.230. “அப்போது எங்கள் வீட்டில் கேட்பதற்கு வானொலி பெட்டி கூட இல்லை’ என்கிறார் பிரபல வானொலி அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத். பள்ளித் தேர்வில் நான்கு முறை தோல்வி அடைந்ததை சிரித்துக் கொண்டே கூறுகிறார் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன். சென்னை வந்த மூன்றே மாதத்தில் வீடு வாங்கினேன்- அப்போது எனக்கு வயது 15 என நம்மை புருவம் உயர்த்த வைக்கிறார் ஓவியர் ஸ்யாம். இதேபோன்று மணல் மாஃபியாக்களுக்கு முடிவு கட்டிய அமுதா ஐஏஎஸ், […]

Read more

பிரபஞ்சன் சில நினைவுகள்

பிரபஞ்சன் சில நினைவுகள், பி.ராஜ்ஜா, இனிய நந்தவனம் பதிப்பகம், விலை:ரூ.100 தமிழிலும், ஆங்கிலத்திலும் புலமையோடு எழுதக்கூடிய இந்த நூலின் ஆசிரியர், பிரபல எழுத்தாளரான பிரபஞ்சனுடன் பழகிய நாட்களில் நடைபெற்ற செய்திகளை தனக்கே உரித்தான பாணியில் தந்து இருக்கிறார். இதில் பிரபஞ்சனின் தனித் திறமை நன்றாக வெளிப்பட்டு இருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 13/2/22 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

விகடன் இயர்புக் 2022

விகடன் இயர்புக் 2022, பதிப்பாளர் பா.சீனிவாசன், விகடன் பிரசுரம், விலை:ரூ.275. 10 -ம் ஆண்டாக வெளியாகி இருக்கும் இயர்புக் 2012 நூலில், பல்வேறு நாடுகளின் மக்கள் சந்தித்த முக்கிய பிரச்சினைகள், உலகம், இந்தியா, தமிழகம் ஆகியவற்றின் நடப்பு நிகழ்வுகள், மத்திய அரசின் 2021-ம் ஆண்டின் பட்ஜெட் முக்கிய அம்சங்கள், பல்வேறு துறைகளில் விருது பெற்றவர்கள் விவரம் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன. போட்டித் தேர்வுகளில் பங் கேற்பவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் யு.பி. எஸ்.சி. தேர்வு வினா-விடை, தேர்வு அட்டவணை, குடிமைப் பணித் தேர்வில் வெற்றிபெற்றவர்களின் அனுபவக் […]

Read more

எனது வாய்மொழி பதிவுகள்

எனது வாய்மொழி பதிவுகள்,  கி.ராஜநாராயணன், அன்னம்,  விலை:ரூ.300. கரிசல்காட்டு இலக்கியவாதியான கி.ராஜநாராயணன், வார, மாத நாளிதழ்களுக்கும், செய்தியாளர்களுக்கும் அளித்த நேர்காணல்கள் அனைத்தும் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. அவர் மனதில் புதைந்துள்ள ஆசாபாசங்கள், பலதரப்பட்ட மக்கள் பற்றிய அவரது புரிதல்கள், மற்ற எழுத்தாளர்கள் குறித்த அவரது கண்ணோட் டம் ஆகியவை இந்த நேர்காணல்களில் வெளிப் பட்டு இருக்கின்றன. பள்ளிக்கூடமே செல்லாத அவர் கல்லூரி பேராசிரியரானது, எழுத்துலகில் அறிமுகம் ஆனது, கரிசல் பூமி மீது அவருக்கு உள்ள கரிசனம் ஆகிய அனைத்தையும் இந்த நூலில் காணமுடிகிறது. கி.ராஜநாராயணனை […]

Read more

இருபத்தோராம் நூற்றாண்டில் தமிழ் நவீன இலக்கிய வளர்ச்சி

இருபத்தோராம் நூற்றாண்டில் தமிழ் நவீன இலக்கிய வளர்ச்சி,  முனைவர் அ.பிச்சை, கபிலன் பதிப்பகம், விலை:ரூ.480. 2011 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டுவரை தமிழில் வெளியான கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் ஆகியவை இந்த நூலில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இருக் கின்றன. இந்த 10 ஆண்டுகளில் வெளியான கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் பற்றிய விளக்கமான குறிப்பும், அந்த நூல்ககளுக்கு பல்வேறு இதழ்களில் வெளியான மதிப் புரையும் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. இந்த நூற்றாண்டில் தமிழ் இலக்கிய வளர்ச்சி எவ்வாறு இருந்தது என்பதை இந்த ஆய்வு […]

Read more

அயோத்திதாச பண்டிதரின் சொற்பொழிவுகள்

அயோத்திதாச பண்டிதரின் சொற்பொழிவுகள், தொகுப்பு ஆசிரியர் முனைவர் பெ.விஜயகுமார், பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம், விலை 150ரூ. அயோத்திதாச பண்டிதர் 100 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட விமர்சனத்துடக்குள்ளான சொற்பொழிவுகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 8/8/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் மாவட்ட ஊராட்சி நிர்வாகம்

ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் மாவட்ட ஊராட்சி நிர்வாகம், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக்.664, விலை ரூ.560. ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி நிர்வாகம் தொடர்பான அனைத்து விவரங்களும் அடங்கிய நூல். ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி நிர்வாகம் எவ்வாறு செயல்படுகின்றன? செயல்பாடுகளுக்கு யார் பொறுப்பு? அதற்கான விதிமுறைகள் எவை? ஒரு பணிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை எவ்வாறு செலவழிக்க வேண்டும்? என்பன போன்ற பல விவரங்கள் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.  உதாரணமாக ஒரு பணிக்கான ஒப்பந்தம் எவ்வாறு போடப்படுகிறது? என்பதை விளக்க அதற்கான […]

Read more

அணிந்துரை மலர்கள்

அணிந்துரை மலர்கள், கடவூர் மணிமாறன், விடியல், விலை 120ரூ. குழந்தை இலக்கியம், பெரியவர்களுக்கான இலக்கியம், கவிதைத் தொகுப்பு, பயண நூல், குறுநாவல் போன்ற பல நூல்களுக்கு முனைவர் கடவூர் மணிமாறன் எழுதிய அணிந்துரைகளின் தொகுப்பான இந்த நூல், அவர் பாராட்டிய நூல்களையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டி இருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 18/7/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஆயிரம் பிறை கண்ட அண்ணாச்சி

ஆயிரம் பிறை கண்ட அண்ணாச்சி, சந்தனம்மாள் பதிப்பகம், விலை 300ரூ. மிகச் சாதாரண நிலையில் இருந்து கடின உழைப்பால் மிகப் பெரிய தொழில் அதிபராக உயர்ந்தவரும், அனைவராலும் அண்ணாச்சி என்று அன்புடன் அழைக்கப்படுபவரான வி.ஜி.சந்தோசத்தின் 85-வது பிறந்த நாளையொட்டி இந்த நூல் வெளியாகி இருக்கிறது. அரசியல் தலைவர்கள், ஆன்மிகப் பெரியவர்கள், தொழில் அதிபர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என அனைத்துத்தரப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், வி.ஜி.சந்தோசம் பற்றி வெளியிட்ட கருத்துகளின் தொகுப்பாக இந்த நூல் திகழ்கிறது. வி.ஜி,சந்தோசத்தின் அருமை பெருமைகளைக் கொண்டுள்ள இந்த நூல், உழைத்து […]

Read more
1 2 3 63