புனைவுவெளி

புனைவுவெளி, நா. விச்வநாதன், பேசும் புதிய சக்தி வெளியீடு, விலை 150ரூ. படைப்புலகு தமிழ் இலக்கிய ஆளுமைகளை அவர்களின் எழுத்து வழியே அணுக முயற்சிக்கும் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். நகுலன், ப. சிங்காரம், லா.ச.ரா., எம்.வி.வெங்கட்ராம், தஞ்சை ப்ரகாஷ், ஜி. நாகராஜன் என எழுதிய காலத்தில் அதிகம் அறியப்படாத எழுத்தாளுமைகளின் மீது வாசக வெளிச்சம் பாய்ச்சும் முயற்சி இது. நகுலன் என்ற பெயர்க்காரணம், நகுலன் படைப்புகளின் அகவுலகப் பயணம், தத்துவ தரிசனம், சுயத்தை அழித்தல் பற்றிப் பேசும் நகுலனின் கவிதைகள் பற்றிய கட்டுரை தொகுப்பின் […]

Read more

சிந்தனை மலர்கள்

சிந்தனை மலர்கள், கவிஞர் தாரை வடிவேலன், நிவேதிதா பதிப்பகம், விலை 70ரூ. மரபில் திளைத்த தமிழ்ப்பற்று இது மரபுக்கவிதைகள் அடங்கிய தொகுப்பு. எல்லாப் பக்கங்களிலும் நிரம்பியிருப்பது ஆழமான தமிழ்ப்பற்றுதான் என்பதில் மிகையில்லை. உலகம் போற்றும் தமிழ், தமிழும் முதன்மை பெற வேண்டும். தமிழா தூங்கும் புலி என இராதே, நீரின்றித் தவிக்கும் தமிழகம், என அதிகமும் தமிழர் நலம் பேசும் மரபுக்கவிதைகள். சுற்றுச்சூழல் குறித்த மரபுக்கவிஞரின் அக்கறை கவனத்துக்குரியது. நன்றி: அந்திமழை, ஜுலை, 2017.

Read more

முகமறை

முகமறை, அகத்தியா, இனிய நந்தவனம், விலை 80ரூ. சாதாரணங்களின் பரவசம் ‘சமையலறைப் பாத்திரங்களையும் கழிவறைச் சாதனங்களையும் கழுவி முடித்த பின் அவளுக்குத் தரப்பட்டது தனித்தம்ளரில் தேநீர்.’ என்பது போன்ற புதுக்கவிதைகள் அடங்கிய நுல் இது. இது கவிஞரின் முதல் தொகுப்பு. அன்றாடங்களின் சாராம்சத்தை மெல்லிய உணர்ச்சிகளால் கவிதையாக்க முயன்றிருக்கிறார் கவிஞர். நன்றி: அந்திமழை, ஜுலை, 2017.

Read more

பொலிக பொலிக

பொலிக பொலிக, பா. ராகவன், கிழக்கு பதிப்பகம், விலை 325ரூ. நெகிழ்க, நெகிழ்க! ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு இது என்பதை ஒட்டி தினமலரில் 108 நாட்கள் தொடர்ந்து எழுதப்பட்ட தொடர், நூல் வடிவில் வெளியாகி உள்ளது. எந்த விஷயமாக இருந்தாலும் அதைத் தேனில் குழைத்து தருவதில் வல்லவர் பா.ராகவன். ராமானுஜர் குறித்த இந்த நூலும் அதற்கு எந்த விதத்திலும் குறையாமல் படுசுவாரசியமாக அமைந்துள்ளது. ராமானுஜர் பிறப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பாக ஆழ்வார்ப் பாசுரங்களைத் தொகுக்கிறார் நாதமுனி. அவரது கரங்களில் ராமானுஜரின் சிலை அதிசயமான முறையில் […]

Read more

விதானத்துச் சித்திரம்

விதானத்துச் சித்திரம், ரவி சுப்பிரமணியன், போதி வனம், விலை 100ரூ. அழகிய ஓவியம் ‘விதானத்துச் சித்திரம்’ – கவிஞர் ரவி சுப்பிரமணியனின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பு. தொகுப்பில் மொத்தம் 44 கவிதைகள் உள்ளன. பெரும்பாலான கவிதைகள் கற்பனையும் அழகான சொல் முறையும் கொண்ட கவிதைகள். அதனாலேயே நம் கவனம் ஈர்க்கின்றன. கோயிலும் கோயில் சார்ந்த வாழ்வும், அந்த வாழ்வு சார்ந்த கடந்தகால நினைவுகளும்தான் பாடுபொருள்கள். தொகுப்பில் ஆங்காங்கே சில அரசியல் பகடிக் கவிதைகளும் உண்டு (கேயாஸ் தியரி, மாண்புமிகு). பிரெய்லி விரல்களின் ஆரோகணத்தில் மறையும் […]

Read more

நானும் எனது நிறமும்

நானும் எனது நிறமும், ஓவியர் புகழேந்தி, தோழமை வெளியீடு, விலை 350ரூ. காலத்தின் பதிவு, நானும் எனது நிறமும் என்ற தலைப்பில் ஓவியர் புகழேந்தி தன் வரலாறு எழுதியுள்ளார். நாலு கி.மீ. தூரம் தினமும் நடந்து சென்று படித்துக் காலையிலும் மாலையிலும் தோட்ட வேலைகள் செய்து,தனக்குப் பிடித்தது ஓவியப்படிப்பு தானென்பதை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து, அதைப் படிக்க ஏற்பட்ட எதிர்ப்பையும் மீறி அதில் பட்டப்படிப்பு முடித்து முதுநிலைப் பட்டமும் பெற்று இன்று சமூக உணர்வும் தமிழுணர்வும் கொண்ட ஓவியனாய் உயர்ந்து நிற்பதைக் கோர்வையாக எடுத்துச் […]

Read more

நான் ரசித்த வாலி

நான் ரசித்த வாலி, திருநின்றவூர் சந்தானகிருஷ்ணன், வாலி பதிப்பகம், விலை 90ரூ ரசிகனின் பார்வை புலமை எதுவும் பெற்றிராத ஒரு இரசிகனின் பார்வையில் வாலியின் பாடல்களில் மிளிரும் எண்ணங்களின் பதிவே இது – என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார் நூலாசிரியர். தமிழ் திரைப்பட உலகை விரல் நுனியிலும் தன் ஆவணக்காப்பகத்திலும் வைத்திருக்கும் சந்தானகிருஷ்ணன் வாலியின் பாடல்களைப் பற்றிய தன் எண்ணங்களை நன்றாக பகிர்ந்து கொண்டுள்ளார். ‘பூவரையும் பூங்கொடியே, பூமாலை போடவா’ என்ற பாடலில் ஆரம்பிக்கும் நூலாசிரியர் இப்பாடலின் சூழலை விவரித்து, பாடலின் நயங்களை எழுதுகிறார். அத்தோடு […]

Read more

விடம்பனம்

விடம்பனம், சீனிவாசன் நடராஜன், காலச்சுவடு, விலை 575ரூ. காலதரிசனம் கீழத் தஞ்சை மாவட்டத்தில் கடந்துபோன ஐம்பது ஆண்டுகால வாழ்வின் பின்னணியில் செல்லும் நாவல் சீனிவாசன் நடராஜனின் விடம்பனம். நாவலுக்கென்று நாம் அறிந்திருந்த எந்த ஒழுங்கும் இல்லாமல் ஓர் ஓவியர் பல்லாண்டாக வரைந்த ஓவியத் தொடர்போல இந்நாவல் அமைந்திருக்கிறது. நாவலாசிரியரும் ஒரு தேர்ந்த ஓவியர் என்பதால் இது சாத்தியம் ஆகியிருக்கலாம். இந்த தொடர்பற்ற தன்மையைத் தாண்டி, மென்மையான கிறுகிறுப்பூட்டும் தன் நடையால் கவர்கிறது இந்நாவல். மலர்கள் பூத்த குளமும் வாய்க்காலும், நெல்வயலும், கிணறுகளும், குடிசைகளும், தென்னை […]

Read more

நெருப்புப் பொறிகள்

நெருப்புப் பொறிகள், அரசியல் சமூக பொருளாதாரக் கட்டுரைகள், பேராசிரியர் மு. நாகநாதன், கதிரொளி பதிப்பகம், விலை 150ரூ. ஆழமும் விரிவும் தமிழ்நாட்டில் வாழும் முக்கியமான பொருளாதாரம், மாநில சுயாட்சியில் அறிஞரான பேராசிரியர் நாகநாதனின் கருத்துக்கள் எப்போதுமே கவனிக்கத்தக்கன. திமுக தலைமைக்கு நெருக்கமானவராக இருந்தாலும் கூட அவரது கருத்துகளில் துணிச்சலும் தனித்துவமும் இருக்கும். அவர் சிந்தனையாளன் இதழில் குட்டுவன் என்ற பெயரில் எழுதிவந்த தொடர் பத்தியிலும் இந்த தனித்துவம் இருந்தது. இந்திய அரசியல், உலக அரசியல், பொருளாதாரம், மதம், நீதித்துறை, சாதியம், மத்தியில் ஆளும் கட்சிகள் […]

Read more

எரியத் துவங்கும் கடல்

எரியத் துவங்கும் கடல், அ.வெண்ணிலா, அகநி, விலை 275ரூ. பெண்முகம் ‘நானும் கவிதையும் வேறுவேறல்ல, கவிதை பெயரிடப்படாத நான், நான் பெயரழிந்த கவிதை’ என்ற நூலின் முகப்பிலேயே குறிப்பிடும் கவிஞர் வெண்ணிலா இந்த கவிதைத் தொகுப்பில் தன் மொத்த கவியுலகத்தையும் பார்வைக்கு வைக்கிறார். பொதுவாக கவிதை என்பதை மொழி தெரிந்த யார் வேண்மாடுனாலும் எழுதிவிடக்கூடும். ஆனால், அதன் பின்னால் இயங்கும் பித்துப்பிடித்த கவிமனம் தான் கவிஞருக்கும் ‘தொழில் நுட்பவாதிகளுக்கான’ வித்தியாம். வெண்ணிலாவின் கவி உள்ளம் நெகிழ்ச்சியானது. உறவுகளை, உணர்வுகளை, வாழ்வை, சூழலை நெகிழ்வோடு காண்கிறார். […]

Read more
1 2 3 4 5 12