இராஜேந்திர சோழன்

இராஜேந்திர சோழன் (வெற்றிகள்- தலைநகரம் – திருக்கோயில்), குடவாயில் பாலசுப்ரமணியன், அன்னம், பக்.472, விலை ரூ.750. இராஜேந்திர சோழனின் வரலாற்றை கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார், தி.வை.சதாசிவ பண்டாரத்தார் உள்ளிட்ட பல வரலாற்று ஆசிரியர்கள் எழுதியிருக்கின்றனர். அவர்கள் எழுதிய வரலாற்று நூல்களில் விடுபட்டுப் போனவற்றை விரிவாக எழுதும் நோக்கில் இந்த வரலாற்று நூல் படைக்கப்பட்டுள்ளது. முதலாம் இராஜ ராஜனின் மகனான முதலாம் இராஜேந்திரனின் (கி.பி.1012 – 1044) வரலாற்றை விரிவாக இந்நூல் கூறுகிறது. நூலின் முதல் பகுதியில் பிற்காலச் சோழர் மரபு பற்றி சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.முதலாம் ராஜேந்திரன் […]

Read more

சிலம்புச் செல்வரின் அறவழிப் போராட்டங்கள்

சிலம்புச் செல்வரின் அறவழிப் போராட்டங்கள்,  தஞ்சை வெ.கோபாலன், அன்னம், பக்.100, விலை ரூ.80. சைமன் கமிஷனுக்கு எதிர்ப்புத் தெரிவித்த போராட்டம் (1928), உப்பு சத்தியாக்கிரகம் (1930), கள்ளுக்கடை மறியல் போராட்டம் (1931), தனிநபர் சத்தியாக்கிரகம்(1941), ஆகஸ்ட் புரட்சி (1942), வடக்கெல்லை போராட்டங்கள், தெற்கெல்லைப் போராட்டங்கள் என பல மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளுக்காகப் போராடி எட்டுமுறை சிறை சென்றவர் ம.பொ.சிவஞானம். காங்கிரஸ் கட்சியில் அவர் இருந்தபோதே, ஆந்திர மாநில காங்கிரஸ்காரர்களுடன் கருத்து மாறுபாடு கொண்டு வடக்கெல்லைப் போராட்டத்தை நடத்தியவர்; காமராஜர் ஆட்சிக் காலத்தில் திருவாங்கூர் […]

Read more

மகத்தான பேரூரைகள்

மகத்தான பேரூரைகள், பெ.சுபாசு சந்திரபோசு, அன்னம், பக். 240, விலை 200ரூ பேச்சு என்பது உலக அளவில் ஒரு கலையாக உருவான போது, ஒவ்வொரு நாட்டிலும் ஆட்சி, அரசியல், புரட்சி, சமயம், நீதி போன்ற துறைகளில் மாற்றங்களை உருவாக்க, மகத்தான பேச்சாளர்கள் உலக அளவில் உருவாகினர். உலக அளவில் மகத்தான பேருரைகள் ஆற்றிய தத்துவ ஞானிகள், அரசியல் சிந்தனையாளர்கள், பகுத்தறிவுவாதிகள், எழுத்தாளர்கள், சமூகச் சீர்திருத்தவாதிகள், சமயவாதிகள், அரசியல் மேதைகள், சட்ட வல்லுனர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள் என, 25 நபர்களின் பேருரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. […]

Read more

மகத்தான பேருரைகள்

மகத்தான பேருரைகள், பெ.சுபாசு சந்திரபோசு, அன்னம், பக்.240, விலை ரூ.200. தத்துவஞானிகள், அரசியல் சிந்தனையாளர்கள், பகுத்தறிவுவாதிகள், எழுத்தாளர்கள், சமூகச் சீர்திருத்தவாதிகள், சமயவாதிகள், அரசியல் மேதைகள், சட்ட வல்லுநர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள் என 25 ஆளுமைகள் ஆற்றிய மகத்தான பேருரைகளின் தொகுப்பு இந்நூல். இந்த சிறைவாசத்தைக் கண்டு நான் அஞ்சப் போவதில்லை. என்னை தண்டியுங்கள். அது எனக்குப் பொருட்டல்ல. வரலாறு என்னை விடுதலை செய்யும் இது கியூபாவின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து புரட்சி செய்து 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிடல் காஸ்ட்ரோவின் வீர […]

Read more

சட்டப் பேரவையில் அருட்செல்வர்

சட்டப் பேரவையில் அருட்செல்வர், கே.ஜீவபாரதி, அன்னம்,ண விலை 200ரூ. தெய்வபக்தியும் தேசபக்தியும் நிறைந்தவராக விளங்கியவர் அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம். தொடர்ந்து மூன்றுமுறை சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தவர். பொருளாதாரம், கல்வி, நதிநீர் இணைப்பு, வேளாண்மை, மின்சாரம் என பல்வேறு துறைகளும் நலிவு நீங்கி வளமை பெறவும், மக்களின் வாழ்வாதாரம் பெருகவும் வழிசெய்யும் வகையில் சட்டமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு. நன்றி: குமுதம், 21/11/18. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027614.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

சோழர் வரலாறு

சோழர் வரலாறு, சி.கோவிந்தராசனார், சி.கோ.தெய்வநாயகம், அன்னம், பக். 222, விலை 150ரூ. சங்க கால சோழர் முதல், பிற்கால சோழர் வரை இந்நூல், சுருங்க விளக்கியுள்ளது, ஆய்வுக்குரிய அடிப்படை செய்திகளை இதில் காணலாம். நன்றி: தினமலர், 22/1/2018.

Read more

தமிழகத்தில் எமதர்மன் வழிபாடு

தமிழகத்தில் எமதர்மன் வழிபாடு, மு.செல்லன், அன்னம், பக்.153, விலை ரூ.150. உயிரைப் படைப்பதற்கு ஒரு கடவுள் இருந்தால், உயிரை எடுப்பதற்கும் ஒருவர் வேண்டும். அவ்வாறு நியமிக்கப்பட்டவர்தான் எமன். மேலும், எமன் பற்றிய தொன்மைக் கதைகள், கர்ணபரம்பரைக் கதைகள், புராணங்கள், இதிகாசங்கள், ரிக் வேதம், அதர்வண வேதம், விஷ்ணுதர்மோத்ர புராணம், மகாபாரதம், கருட புராணம், பெளத்தம், கடோபநிஷத் முதலிய பலவற்றிலும் எமன் பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. எமன் உலகத்தை இயக்குபவன் என்றும், சூரியக் கடவுள் என்றும் ரிக்வேதம் கூறுகிறது. சீனர்கள் எமனை ‘பின்இன்&39’ என்கின்றனர். அவர்தான் […]

Read more

காலத்தின் திரைச்சீலை

காலத்தின் திரைச்சீலை, டிராட்ஸ்கி மருது, தொகுப்பு-அ. வெண்ணிலா, அகநி வெளியீடு, வந்தவாசி, பக். 280, விலை 300ரூ. தமிழ் ஓவிய மரபில் நெடுவழிப்பாதை ஒன்றை உருவாக்கி அதில் பயணித்துக் கொண்டிருக்கும் ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் ஆளுமையைத் தொகுத்துத் தரும் நூல். விவாதங்களுக்கு அப்பாற்பட்டு, நாற்பதாண்டுகளுக்கும் மேலாக, அழுத்தமான தன்னுடைய கோடுகளின் மூலம் தமிழ்க் கலை உலகை அடையாளப்படுத்துவதில் முன் நிற்கும் மருதுவின் வாழ்க்கைப் பதிவுகள், ஒரு ஆவணப் பதிவாக மட்டுமாகிவிடாமல், உயிரோட்டத்துடனான செயலாகவும் ஆக்கியதில் அ.வெண்ணிலாவின் பங்கு அதிகம். கட்டுரைகளை வாசிக்கும்போது கண்முன் வந்து […]

Read more

சங்ககாலத் தொழில்நுட்பம்

சங்ககாலத் தொழில்நுட்பம், பேராசிரியர் த. சாமிநாதன், அன்னம், பக். 195, விலை 190ரூ. தமிழர்கள், சங்க காலத்திலேயே தொழில் நுட்ப அறிவு வாய்க்கப் பெற்றிருந்தவர்களாக இருந்தனர். அதற்கு சான்றாக சங்கப் பாடல்களில் இருந்து, பல்வேறு உதாரணங்களை காட்டி, இந்த நூலாசிரியர் ஆதாரங்களை நிறுவுகிறார். பயிர்த்தொழில், நெசவு, கட்டுமான இயல், மண்பாண்டம் செய்தல், இரும்புத் தொழில், பொன் தொழில், கடறப்யணம், தோல் பதனிடுதல், கண்ணாடி தயாரித்தல், மகளிர் ஒப்பனை, மதுவகைகள் தயாரிப்பு முறைகளும், தெரிந்திருந்ததையும், அன்றிருந்த தொழில்நுட்பங்களையும், ஆசிரியர் விரிவாக விளக்கி உள்ளார். நிறைவு தலைப்பாக, […]

Read more

உலக வரலாற்றை திசை திருப்பிய சொற்பொழிவுகள்

உலக வரலாற்றை திசை திருப்பிய சொற்பொழிவுகள், சௌமாரீஸ்வரி, மங்கை, சென்னை. பல தலைவர்களின் அனுபவப்பூர்வமான வழிநடத்தும் பேச்சுக்கள், வரலாற்றில் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன. அந்த வகையில் ரஷ்யாவின் விளாடிமிர் லெனின், 1917ம் ஆண்டு நடத்திய போல்ஸ்விக் புரட்சியின் நினைவு தினமான1921ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி உரை நிகழ்த்தினார். அதில் நீ ஓநாய்களுக்கு நடுவில் வாழ நேர்ந்தால், அவற்றைப்போல ஊளையிடப் பழகிக்கொள். அவற்றை முழுவதுமாக வெளியேற்ற இந்த ஏற்பாடு தேவைப்படும் என்றார். காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சுவாமி விவேகானந்தர், ஜவஹர்லால் நேரு, இதிரா […]

Read more
1 2