கிரிவலப் பாதையிலே

கிரிவலப் பாதையிலே, வே.மகாதேவன், அருள் பதிப்பகம், விலை 80ரூ. திருவண்ணாமலை கிரிவலத்தின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், எந்தெந்த நாட்களில் செல்லும் கிரிவலத்துக்கு என்னென்ன சிறப்பு, கிரிவலப் பாதையில் உள்ள அனைத்து தெய்வங்கள் மற்றும் தீர்த்தங்களின் சிறப்பு ஆகியவை இந்த நூலில் விவரமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

சங்க காலப் பேரூர்களும் சீறூர்களும் (தொகுதி 2)

சங்க காலப் பேரூர்களும் சீறூர்களும் (தொகுதி 2), குடவாயிற் சுந்தரவேலு, அருள் பதிப்பகம், பக். 352, விலை 160ரூ. கடலூர், அரியலூர், திருச்சி முதலிய, 11 மாவட்டங்களில் உள்ள பேரூர்கள், சிற்றூர்களை நேரில் சென்று ஆராய்ந்து, அவ்வூர்கள் தொடர்பான தொல்பொருள் சான்றுகள், ஊரின் பரப்பளவு, கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியச் சான்றுகள் முதலானவற்றைக் குறிப்பிட்டுள்ள முறை நன்று. ஊரில் உள்ள கோவில்கள், மக்கள் குடியேறிய காலம், ஊர் தொடர்பான சங்க இலக்கியக் குறிப்புகள், சங்க இலக்கியப் புலவர்கள் பற்றிய விளக்கக் குறிப்புகள் தெளிவாக எழுதப்பெற்றுள்ளன. அவை, […]

Read more

பிரம்ம ஞானம்

பிரம்ம ஞானம், உ.நீலன், அருள் பதிப்பகம், பக். 190, விலை 125ரூ. பிரம்மம் எது? என்று தேடும் தத்துவச் சிந்தனை கொண்ட நூல். சங்கரரின் அத்வைதம், ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம், மத்வரின் துவைதம் காட்டும், ‘பிரம்மம்’ பற்றிய வாதங்களைத் தொகுத்துள்ளார். தாளில் போட்ட வட்டத்தை அளக்கலாம். ஆனால், வானில் போட்ட வானவில்லை அளக்கும் முயற்சி தான் பிரம்மத்தை வரையறை செய்வது. ஆனாலும், தெளிவாக தேடி அறிய முயற்சித்துள்ளார். வினா – விடைப் பாங்கில் நூல் முழுவதும் ஆர்வமாக நகர்கிறது. ஆன்மா எது? பிரம்மம் எது? உலகம் […]

Read more

பிரம்ம ஞானம்

பிரம்ம ஞானம், உ. நீலன், அருள் பதிப்பகம்,விலை 125ரூ. தத்துவஞானத்தை புரிந்து கொள்பவர்களின் நலன் கருதி எழுதப்பட்ட இந்தியத் தத்துவங்களை விளக்கும் நூல். இதில் பிரம்மஞானம் குறித்து தெளிவாக நூலாசிரியர் விளக்கி உள்ளார். நன்றி: தினத்தந்தி, 7.9.2016.   —- கண்ணுக்காக நான், டாக்டர் பாபு ராஜேந்திரன்,நோஷன் பிரஸ், விலை 250ரூ. பிரபல கண் சிகிச்சை நிபுணர் டாக்டர் பாபு ராஜேந்திரன் ‘கண்ணுக்காக நான்’ என்ற ஒரு ஆங்கில நூலில் தன் சுயசரிதையை எழுதுவதுபோல, ஒரு கண் டாக்டர் எப்படி உருவாகிறார் என்பதையும், அவர் […]

Read more

ஆ. மாதவன் இலக்கியத் தடம்

ஆ. மாதவன் இலக்கியத் தடம், தொகுப்பாசிரியர் நெல்லை சு. முத்து, அருள் பதிப்பகம், விலை 200ரூ. படாடோபம், பந்தாக்கள் ஏதுமின்றி, அமைதியும், எளிமையுமான வெளிப்படையான பேச்சும், எந்தத் துறையிலும், சபையிலும் தன்னை வலியப் புகுத்திக்கொள்ளாத தன்னடக்கமும் மிக்கவர் முதுபெரும் எழுத்தாளர் ஆ. மாதவன். அவரின் சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள் ஆகியவை தொடர்பாக அவ்வப்போது அவரது சக எழுத்தாளர்கள், அறிஞர்கள், அறிவார்ந்த வாசகர்கள் அனுப்பிய கருத்தாக்கங்களும், விவாதங்களும் பல்வேறு தளங்களில் பதிவாகியுள்ளன. அத்தகைய இலக்கியப் பதிவுகளை செம்மையுறத் தொகுத்தளித்துள்ளார் விஞ்ஞானியும், எழுத்தாளருமான நெல்லை சு. முத்து. […]

Read more

காசியும் கங்கையும்

காசியும் கங்கையும், மு. ஸ்ரீனிவாசன், அருள் பதிப்பகம், பக். 168, விலை 120ரூ. இந்திய கலாசாரத்தில், வரலாற்றில், சமய வாழ்வில், இலக்கியத்தில், மக்கள் சிந்தனையில் என அனைத்திலும் இடம் பெற்றுள்ள விஷயங்களில், காசியும் கங்கையும் குறிப்பிடத்தக்கவை. 1950களில் காசியில் கங்கையின் ஒரு கரையில் மக்கள் நீராட, மறுகரையில் நீர்யானைகளும் டால்பின்களும் மூழ்கி எழுந்த காலமாக இருந்தது. உலகின் முதல் நூலாக கருதப்படும் ரிக்வேதத்தில் காசியைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. காசி, கங்கை பற்றி வேத, புராண, இதிகாச, இலக்கியங்களில் வரும் குறிப்புகள் அனைத்தையும் நூலாசிரியர் தொகுத்து, […]

Read more

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம், வீ. இளவழுதி, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. தமிழில் உருவான முதல் காப்பியம் ‘சிலப்பதிகாரம்’. ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பாரதியாரால் புகழப்பட்ட நூல். இயல், இசை, நாடகம் என்ற இலக்கண எல்லைக்குள் இடம் பெற்ற முத்தமிழ் நூல் எனப் போற்றப்படுகிறது. சிலப்பதிகாரத்தை கதை வடிவில் வீ. இளவழுதி எழுதியுள்ளார். மாணவர்களுக்கு பெரும் பயனளிக்கும் நூல். நன்றி: தினத்தந்தி, 30/12/2015.   —- கட்டுரைக் கதம்பம், மு. ஸ்ரீனிவாஸன், அருள் பதிப்பகம், விலை 150ரூ. கண்ணன் வாழ்ந்த துவாரகை, சேழர்களின் தலைநகரும், உலகின் […]

Read more

தென்பாண்டித் தமிழரின் சிலம்ப வரலாறும் அடிமுறைகளும்

தென்பாண்டித் தமிழரின் சிலம்ப வரலாறும் அடிமுறைகளும், அருள் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. தமிழர்களுடைய வீரத்தின் அடையாளமாகவும், பண்பாட்டுச் சின்னமாகவும், கலாச்சாரப் புதையலாகவும் திகழும் ஒப்பற்ற சிலம்பக் கலைகளின் நுணுக்கங்களையும், வரலாற்றினையும் பற்றி தொகுக்கப்பட்ட நூல். இந்நூலின் முதற்பகுதியில் சிலம்பத்தைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளையும், இரண்டாம் பகுதியில் சிலம்பம் செயல்முறைப் பயிற்சிகளையும், சிலம்பிக் கம்பின் பகுதியையும், சிலம்பம் விளையாடுவோர்செய்ய வேண்டிய பயிற்சியையும் தெளிவாக விளக்கியுள்ளார் நூலாசிரியர் அ. அருணாசலம். நன்றி: தினத்தந்தி, 23/9/2015.   —- தேவனின் திருப்பாடல்கள், அருவி வெளியீடு, விலை 400ரூ. […]

Read more

பாரதத்தின் பக்த கவிகள்

பாரதத்தின் பக்த கவிகள், மு. ஸ்ரீனிவாசன், அருள் பதிப்பகம், சென்னை, பக். 264, விலை 175ரூ. ஒரு காலத்தில், கன்னட அரசால் ஆயிரக்கணக்கில் அச்சிடப்பட்டு, இரண்டு ரூபாய் விலையில் மக்களுக்கு வழங்கப்பட்ட குமார வியாசகனின், கன்னட பாரதம்; தெலுங்கில் கவித்ரயம் என்று போற்றப்படும் நன்னயர், திக்கணர், எர்ரப்ரகடா என்ற இலக்கிய மூம்மூர்த்திகளால் உருவான, தெலுங்கு மகாபாரதம்; இதிகாசங்களின் மொழிபெயர்ப்புகளாய் மாதவ கண்டாவி இயற்றிய, காலத்தால் முற்பட்ட, அசாமிய ராமாயணம்; தெலுங்கில் பதகவிதா பிதாமகர் எனும் உயர்பட்டம் பெற்ற, அன்னமாச்சார்யா; பண்டரிநாதரை மீட்ட பானுதாசர், ஒரிய […]

Read more

ஆசைக்கிளியே அழகிய ராணி

ஆசைக்கிளியே அழகிய ராணி, அனுராதா ரமணன், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 250ரூ. 480க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 365க்கும் மேற்பட்ட நாவல்களையும் எழுதியவர் அனுராதா ரமணன். கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து, கதையை வேகமாக கொண்டு செல்வதில் வல்லவர். அதனால்தான் இவருடைய 4 நாவல்கள் தமிழிலும், ஒரு கதை தெலுங்கிலும், ஒரு கதை கன்னடத்திலும் திரைப்படங்களாக வெளிவந்து வெற்றிவாகை சூடின. ஆசைக்கிளியே அழகியராணி “உனக்காக உமா”, “குயில் வேட்டை” ஆகிய மூன்று நாவல்கள் இப்புத்தகத்தில் அடங்கியுள்ளன. மூன்று கதைகளையும், மூன்று முக்கனிகளுடன் ஒப்பிடலாம். வழக்கமான முத்திரையை […]

Read more
1 2 3