அய்யாவின் அடிச்சுவட்டில்

அய்யாவின் அடிச்சுவட்டில்,கி.வீரமணி, திராவிடர் கழக வெளியீடு, விலை 250ரூ. தந்தை பெரியாரின் இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு 75 ஆண்டுகளாக தொடர்ந்து சமூகப் பணியாற்றி வரும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பெரியாருடன் இணைந்து ஆற்றிய இயக்கப் பணிகள் குறித்து ஏற்கனவே எழுதிய 224 கட்டுரைகள், 5 பாகங்களாக வெளியாகி உள்ள நிலையில், மேலும் 41 கட்டுரைகளுடன் இந்த ஆறாவது தொகுதி வெளியாகி உள்ளது. ஆங்கில நாளேட்டை தமிழர் தொடங்க வேண்டும் என்று தந்தை பெரியார் விரும்பியது, தஞ்சையில் வரலாற்றுச் சாதனையாக மகளிர் பாலிடெக்னிக் […]

Read more

தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?

தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?, கி.வீரமணி, திராவிடர் கழகம், விலை: ரூ.180 திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி எழுதியிருக்கும் ‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்’ என்ற புத்தகம், 270 பக்கங்களில் 20 அத்தியாங்களில் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தமிழர்களின் பண்பாடு, கலை, இலக்கியம், வாழ்வியல் ஆகியவை மேம்பட பெரியார் செய்த மகத்தான பங்களிப்புகளைப் பேசுகிறது. தமிழ், தமிழர் முன்னேற்றத்தில் அவருக்கு இருந்த ஓயாத அக்கறையையும், அதற்கு அவர் செலுத்திய அயராத உழைப்பையும் விவரிக்கிறது. பெரியாரின் உரைகள், ‘விடுதலை’, ‘குடிஅரசு’ இதழ்களில் எழுதிய கட்டுரைகள், தலையங்கங்கள் […]

Read more

இராமாயணம் இராமன் இராமராஜ்யம்

இராமாயணம் இராமன் இராமராஜ்யம், கி.வீரமணி, திராவிடர் கழக வெளியீடு, விலை நன்னொடை 120ரூ. சில மாதங்களுக்கு முன்பு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சென்னை பெரியார் திடலில், 7 நாட்களாக ஆற்றிய உரைகளின் தொகுப்பாக இந்த நூல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் சாதி பாகுபாட்டை வலியுறுத்தும் வருணாசிரமத்தை நீடிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகவும், மத வெறியை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் ராமாயண பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது என்பதை பல ஆதாரங்களுடன் அவர் எடுத்து வைக்கிறார். பல்வேறு மொழிகளில் ராமாயணம் 48 நூல்களாக வெளியாகி இருக்கிறது […]

Read more

வாழ்வியல் சிந்தனைகள்

வாழ்வியல் சிந்தனைகள், கி.வீரமணி, பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம், விலை 250ரூ. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தமது சிந்தனையில் உதித்த கருத்துக்களை, நூல்களாக எழுதி வந்தார். இதில் 12-வது நூல் இப்போது வெளிவந்துள்ளது. இந்த வரிசையில் இது கடைசி நூல். இத்துடன் 1000 சிந்தனைகள் நிறைவு பெறுகின்றன. நூற்றுக்கணக்கான புத்தகங்களைப் படித்தபோது வெளிப்பட்ட சிந்தனைச் சிதறல்கள், அனுபவங்கள் வாயிலாக வெளிப்பட்ட சீரிய கருத்துக்கள் பொன்னும் வைரமுமாக இந்த நூலில் ஜொலிக்கின்றன. வாழ்க்கைக்கு வழி காட்டக்கூடிய இந்த நூல், ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியதாகும். […]

Read more

உலகத் தலைவர் பெரியார்

உலகத் தலைவர் பெரியார், கி. வீரமணி, திராவிடர் கழக வெளியீடு, விலை 250ரூ. மறைந்த தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை திராவிட கழகத்தலைவர் கி. வீரமணி புத்தகங்களாக எழுதி வருகிறார். ஏற்கனவே மூன்று பாகங்கள் வெளிவந்துவிட்டன. இப்போது நான்காம் பாகம் வெளிவந்துள்ளது. இதில், 1952ம் ஆண்டு நடந்த முதல் பொதுத்தேர்தல் பற்றிய முக்கிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாடும், ஆந்திராவும் இணைந்த “சென்னை மாகாணம்” அப்போது இருந்தது. மொத்தம் 371 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 152 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. எதிர்க்கட்சிகள் “ஐக்கிய […]

Read more

கல்லூரி பல்கலைக்கழகங்களில் தமிழர் தலைவர்

கல்லூரி பல்கலைக்கழகங்களில் தமிழர் தலைவர், கி. வீரமணி, திராவிடர் கழக வெளியீடு, விலை 350ரூ. திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி நாடறிந்த தலைவர். நல்ல பேச்சாளர். சீரிய சிந்தனையாளர். டாக்டர் பட்டம் பெற்றவர். சிறந்த கல்வியாளர். அவரைத் தம் கல்வி நிறுவனங்களுக்கு அழைத்து மாணவர்களிடையே உரை நிகழ்த்தச் செய்ய அனைவரும் விரும்புகின்றனர். அவர்கள் அழைப்பை ஏற்று பல கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உரையாற்றியிருக்கின்றார். 25 கல்லூரிகளில் நிகழ்த்திய உரை இந்த நூலில் இடம்பெற்றுள்ளது. கல்லூரி அரங்கங்களில் மாணவர்கள் வினாதொடுப்பதும், கி.வீரமணி விடை நல்குவதும் அறிவார்ந்த […]

Read more

பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்

பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள், கி. வீரமணி, திராவிடக் கழக வெளியீடு, விலை 150ரூ. 20-ம் நூற்றாண்டின் பகுத்தறிவுப் பகலவனாகத் திகழ்ந்தவர் தந்தை பெரியார். அவருடைய வாழ்க்கை, தமிழ்நாட்டின் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்ததாகும். அவருடைய வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளை சுவைபட எழுதியுள்ளார், திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி. பெரியாரின் தொலைநோக்கு பார்வை, அஞ்சாமை, நேர்மை, சிக்கனம், சமத்துவம் முதலிய பண்புகளை எடுத்துக்காட்டும் நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன. ஒரு சமயம் அவர் வாயில் புற்றுநோய் ஏற்பட்டு, அதில் இருந்து அவர் மீண்ட தகவலும் புத்தகத்தில் இடம் […]

Read more

பெரியார் மறைந்தார் பெரியார் வாழ்க

பெரியார் மறைந்தார் பெரியார் வாழ்க, கி. வீரமணி, திராவிடர் கழக வெளியீடு, விலை 210ரூ. பெரியார் பற்றிய சிறந்த நூல் பெரியார் மறைவு பற்றி பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகளை சேகரித்து, “பெரியார் மறைந்தார். பெரியார் வாழ்க” என்ற தலைப்பில், திராவிட கழக தலைவர் கி.வீரமணி ஒரு நூலை தொகுத்துள்ளார். பெரியார் மறைவு பற்றி மட்டுமல்ல. அதற்கு முன் நடந்த பல முக்கிய நிகழ்ச்சிகள் பற்றியும் இந்த நூலில் பல அபூர்வத் தகவல்கள் அடங்கியுள்ளன. பெரியாரின் பொன்மொழிகளும், கட்டுரைகளும் நல்விருந்தாக அமைந்துள்ளன. “எனது நிலை” என்ற […]

Read more

யுனெஸ்கோ பார்வையில் தந்தை பெரியார்

யுனெஸ்கோ பார்வையில் தந்தை பெரியார், கி.வீரமணி, திராவிட கழக வெளியீடு, சென்னை, விலை 180ரூ. தந்தை பெரியாருக்கு ஐ.நா.வின் கிளை அமைப்பான யுனெஸ்கோ உலகில் எந்தத் தலைவருக்கும் அளிக்காத பெரியார் புது உலகின் தொல்லை நோக்காளர். தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ். சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற பழக்கவழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும் எதிரி என்ற ஒப்பற்ற வாசகங்களை பாராட்டுரையாகக் கொண்ட ஒரு விருதினை வழங்கி சிறப்பித்தது. இந்த விருது பற்றி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ஒரு […]

Read more

பெரியார் களஞ்சியம்

பெரியார் களஞ்சியம், தொகுப்பாசிரியர் கி. வீரமணி, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், சென்னை, விலை 210ரூ. தந்தை பெரியார் எழுதிய, பேசிய கருத்துகள் ஏற்கனவே ஏராளமான புத்தகங்களாக பிரசுரமாகி உள்ளன. அந்த வரிசையில் பெரியார் களஞ்சியம் என்ற தலைப்பில் 35 தொகுதிகள் வெளிவந்துள்ளன. 36வது தொகுப்பாக கடவுள் – புராணங்கள் (பாகம் 4) என்ற புத்தகம் வெளியாகி உள்ளது. 1959ம் ஆண்டு முதல் 59ம் ஆண்டு ஜனவரி வரை பெரியார் பேசிய கடவுள் மற்றும் புராணங்கள் பற்றிய கருத்துகள் இதில் இடம் பெற்றுள்ளன. கடவுள், […]

Read more