திருக்குறள் கதைகள்

திருக்குறள் கதைகள், கிருபானந்த வாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், விலை 48ரூ. கிருபானந்த வாரியார் இந்த நூலில் 31 திருக்குறளைக் கூறி, அவற்றுக்கு பரிமேலழகர் உள்ளிட்ட சிலர் அளித்த விரிவுரைகளைத் தெரிவித்து, அந்தக் குறள்கள் வெளிப்படுத்தும் நீதிக்குத் தக்க சிறுகதைகளையும் சொல்லி இருக்கிறார். அவருக்கே உரித்தான நகைச்சுவையுடன் அமைந்துள்ள இந்தக் கதைகள் அனைத்தும் படித்துப் பயன்பெறும் வகையில் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 31/10/21. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000022890_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

செஞ்சொல் உரைக்கோவை

செஞ்சொல் உரைக்கோவை, திருமுருக கிருபானந்த வாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், பக். 292;  விலை ரூ. 86 . சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்காக கிருபானந்த வாரியார் ஆற்றிய உரைகளின் தொகுப்பு இந்நூல். இலக்கிய இன்பம், முத்தமிழ், திருப்புகழ் இன்பம், தேவார இன்பம், பெரிய புராணச் சிறப்பு, கந்தபுராண நுண்பொருள், ராமாயண சாரம், சைவ சித்தாந்தம் ஆகிய எட்டு தலைப்புகளில் அவர் ஆற்றிய உரைகளைப் படிக்கும்போது, வாரியாரின் பேச்சை நேரில் கேட்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இடையிடையே அவர் கூறும் உதாரணங்களும், குட்டிக் கதைகளும் நகைச்சுவையுடன், […]

Read more

கிருபானந்த வாரியார் வாழ்க்கை வரலாறு

கிருபானந்த வாரியார் வாழ்க்கை வரலாறு, திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், பக்.356, விலை ரூ.225. வாரியார் சுவாமிகள் தன் வாழ்க்கை வரலாற்றை தனது அற்புத நடையில் பதிவு செய்திருக்கும் நூல். ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு காலம் ஆன்மிக சொற்பொழிவின் சிகரமாகத் திகழ்ந்த வாரியாரின் இளமைப் பருவ நிகழ்வுகள் வியக்க வைக்கின்றன. 52 கி.மீ. தூரம் நடந்து வந்து, பொய் சொல்ல மறுத்து, உண்மையைச் சொன்னதால் சாமியைத் தரிசனம் செய்ய முடியாமல் ஊர் திரும்பிய வாரியாரின் பாட்டனார் சாமியண்ணா, இந்த வரலாற்று […]

Read more

செஞ்சொல் உரைக்கோவை

செஞ்சொல் உரைக்கோவை, கிருபானந்த வாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், விலை 86ரூ. சென்னைப் பல்கலைக்கழகத்தில் இலக்கிய இன்பம், முத்தமிழ், திருப்புகழ் இன்பம், தேவார இன்பம் என்ற 8 தலைப்புகளில் கிருபானந்த வாரியார் பேசிய பேச்சுக்களின் தொகுப்பு. நன்றி: தினத்தந்தி, 13/9/2017.

Read more

நேபாளமும் பண்டரிபுரமும்

நேபாளமும் பண்டரிபுரமும், வாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், விலை 46ரூ. திருமுருக கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவை கேட்டவர்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்களோ அவ்வளவு மகிழ்ச்சியை அவருடைய புத்தகங்களைப் படிப்பவர்களும் பெறுவார்கள். வாரியார் சுவாமிகள் நோபாளத்துக்கும், பண்டரிபுரத்துக்கும் சென்று வந்தது பற்றி அவர் எழுதிய புத்தகம் இது. படிப்பதற்கு சுவையாக இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தின்போது, தாஜ்மகாலுக்கும் வாரியார் சென்று வந்திருக்கிறார். அதுபற்றியும் விவரித்திருக்கிறார். அரிய கருத்துக்கள் நிறைந்த சிறிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

அறுபத்து நான்காவது நாயனார்

அறுபத்து நான்காவது நாயனார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், விலை 18ரூ. கிருபானந்த வாரியார் சுவாமிகள், பக்தி சொற்பொழிவுகள் நிகழ்த்துவதில் ஈடு இணையற்றவர். உலகம் முழுவதும் ஆன்மிகத்தைப் பரப்பியவர். ஏற்கனவே உள்ள 64 நாயன்மார்களுடன் 64-வது நாயனராக வாரியார் சுவாமிகளை கருதவேண்டும் என்ற வலியுறுத்துகிறார் நூலாசிரியர் புலவர் க. தியாகசீலன். நன்றி: தினத்தந்தி, 1/3/2017.

Read more

வெற்றித்திருமகன்

வெற்றித்திருமகன், ந. மணிவாசகம், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை 140ரூ. வெறும் பழையாறையுடன் இருந்த சோழ நாட்டை, தமிழகமெங்கும் பரந்து விரியச் செய்தவன் விஜயாலயன். அதற்காக அவன் அடைந்த இன்னல்களும், எடுத்துக்கொண்ட முயற்சிகளும் தனிச் சரித்திரமாகும். முழுக்க முழுக்க சரித்திரத்தை ஆதாரமாகக்கொண்டு, சில கற்பனைப் பாத்திரங்களோடு, கற்பனைச் சம்பவங்களையும் கலந்து விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் படைத்துள்ளார் நூலாசிரியர் ந.மணிவாசகம். நன்றி: தினத்தந்தி, 10/8/2016.   —- விநாயகர், திருமுருக கிருபானந்த வாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், விலை 24ரூ. திருமுருக கிருபானந்த வாரியார் எழுதிய விநாயகர் வரலாறு […]

Read more

திருக்குறள் பரிமேலழகர் உரை

திருக்குறள், பரிமேலழகர் உரை, அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறள், உலகின் தலைசிறந்த நீதி நூலாகப் போற்றப்படுகிறது. அதற்கு உரை எழுதிய அறிஞர்கள் பலர். பழங்காலத்தில் எழுதப்பட்ட உரைகளில், பரிமேலழகர் உரையே சிறந்தது என்பது தமிழறிஞர்களின் கருத்து. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பரிமேலழகர் உரை சிறந்த முறையில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கு உரிய பணி. நன்றி: தினத்தந்தி, 11/5/2016.   —- வாரியார் சுவாமிகள் ரசித்து தொகுத்த பழமொழிகள், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், விலை 23ரூ. பொதுவாக பழமொழிகள் […]

Read more

கனவின் பலன்கள்

கனவின் பலன்கள், திருமுருக கிருபானந்த வாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், விலை 33ரூ. கனவின் பலன்களைக் கூறுகிறார், திருமுருக கிருபானந்த வாரியார். கனவில் கழுதையைக் கண்டால், கொஞ்சம் கொஞ்சமாக துன்பம் நீங்கும். யானையைக் கண்டால் அதிர்ஷ்டம். புலிகள், சிங்கங்கள், கரடிகள் முதலிய கொடிய மிருகங்களைக் கண்டால் பலவான்களுடன் விரோதம் ஏற்படும். சிட்டுக்குருவி, வாத்து ஆகியவற்றைக் கண்டால் நல்லது நடக்கும். இப்படி பல பலன்களை சொல்கிறார் வாரியார் சுவாமிகள். புராணங்களிலும் இலக்கியங்களிலும் கனவு கண்டவர்கள் பற்றியும், அவர்கள் கண்ட கனவுக்கான பலன்களையும் குறிப்பிட்டுள்ளார். நன்றி: தினத்தந்தி, […]

Read more

பல்வேறு நோய்களுக்கான உணவு முறைகள்

பல்வேறு நோய்களுக்கான உணவு முறைகள், கற்பகம் புத்தகாலயம், விலை 65ரூ. மனிதனின் தொழில் முன்னேற்றத்திற்கு சூத்திரம் இருப்பதுபோல, அவன் உண்ணும் உணவிற்கும் உண்டு. உடற்கூறுகளில் ஏதாவது மாறுதல்கள் ஏற்பட்டால் அதற்குத் தகுந்தாற்போல் உணவு முறை சூத்திரத்தை மாற்றி அமைத்து உடலின் இயக்கத்தை சீர் செய்யலாம் என்பதை விளக்குகிறது இந்த நூல். வயிற்றுப்புண், குடல் புண், மலச்சிக்கல், அஜீரணம், ரத்தக் கொதிப்பு, சிறுநிரகக் கற்கள், பித்தப்பைக் கற்கள், மூலநோய், நிரழிவு, மாதவிடாய்க் கோளாறு என அனைத்து முக்கியமான நோய்களுக்கான உணவு ஆலோசனைகளை எளிய நடையில் சமையல் […]

Read more
1 2 3