அறச்சீற்றம்

அறச்சீற்றம், விழிகள் பதிப்பகம், சென்னை, விலை 75ரூ. தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஞா. சிவகாமி, அவருடைய சிறுகதைத் தொகுப்பு இது. சில எழுத்தாளர்கள், சிறுகதைகளை குறுநாவல் அளவுக்கு இழுப்பார்கள். இவர் நான்கு அல்லது ஐந்து பக்கங்களுக்கு மேல் போவதில்லை. கதைகள் சுருக்கமாக இருந்தாலும் சுருக் என்று நெஞ்சில் குத்துகின்றன. அவ்வளவு வர்மையான எழுத்ததுக்கள். நன்றி: தினத்தந்தி, 2/9/2015.   —- நல்லறம், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை, விலை 30ரூ. சமயோசித பத்ய மாலிகா என்ற பழமையான வடமொழி […]

Read more

தியாகராயநகர் அன்றும் இன்றும்

தியாகராயநகர் அன்றும் இன்றும், கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 100ரூ. சென்னையில் இதயம் போன்ற பகுதி தியாகராயநகர். நகைக்கடைகள், பெரிய பெரிய பட்டு ஜவுக்களிக்கடைகள் இங்கு அதிகம். அதுமட்டுமல்ல, சினிமா நட்சத்திரங்கள், வி.ஐ.பி.க்கள் நிறைய பேர் வகிக்கிறார்கள். தியாகராயநகர் முன்பு எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது என்பதை, அதே பகுதியில் நீண்டகாலமாக வசித்து வரும் நல்லி குப்புசாமி செட்டியார் இப்புத்தகத்தில் சுவைபட எழுதியுள்ளார். இங்கு வசித்த திராவிட இயக்கத் தலைவர்கள் பற்றிய விவரங்களும், மற்றும் ராஜாஜி, காமராஜர், கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சத்தியமூர்த்தி, […]

Read more

சக்தி பீடங்கள் 51

சக்தி பீடங்கள் 51, தெள்ளாறு இ. மணி, சங்கர் பதிப்பகம், சென்னை, பக். 328, விலை 225ரூ. பாரததேசத்தின் வரைபடத்தை உற்று நோக்கினால் அன்னை பராசக்தியின் திருவுருவை நாம் தரிசித்த உணர்வுதோன்றும். அவளே நம் இந்திய தாய். வடகோடியில் காமரூபத்து காமாக்யாதேவி கொலுவிருக்கிறாள் என்றால், தென்குமரியில் கன்னியாகுமரி பகவதி தேவியாகவும் அவளே குடியிருக்கிறாள். புராண வரலாற்றின்படி, பாரதம் முழுக்க 51 சக்தி பீடங்கள் அமைந்திருப்பதாகவும், அவை தேவியின் திருவுடலின் ஒவ்வொரு பாகத்தை அடையாளப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. அந்த செய்தியின் ஆதாரமாக தட்சயக்ஞ சம்பவம் அமைந்துள்ளது. அதை […]

Read more

வரலாற்றுச் சுவடுகள்

வரலாற்றுச் சுவடுகள் (நான்காம் பதிப்பு), தினத்தந்தி பதிப்பகம், விலை 650ரூ. தமிழக மக்களின் அமோக வரவேற்பைப் பெற்ற வரலாற்றுச் சுவடுகள் நூலின் நான்காம் பதிப்பு இப்போது வெளிவந்துள்ளது. முதல் பதிப்பில் 50 ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டு, உடனடியாக விற்பனையாகி, பதிப்புத்துறையில் மவுனப் புரட்சியை நடத்திக்காட்டியது வரலாற்றுச் சுவடுகள். இப்புத்தகத்தை வாங்க, வாசகர்கள் நீண்ட ‘கியூ’வரிசையில் நின்ற காட்சியை, முதல் முதலாகப் புத்தகக் கண்காட்சியில் மக்கள் கண்டு வியந்தனர். இப்போது நான்காம் பதிப்பில், 2013, 2014 ஆண்டுகளில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளும், 2015ல் இதுவரை நடந்துள்ள […]

Read more

தேடி வந்த நன்றி

தேடி வந்த நன்றி, உடுமலை நன்னன், சிவா பதிப்பகம், திருப்பூர் மாவட்டம், விலை 100ரூ. அவள் தந்த பரிசு, கைதியின் மனைவி, செல்லப்பெண், கெட்டிக்காரி போன்று பெண்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 26 கதைகள் இந்நூலில் உள்ளன. இந்த சிறுகதைகள் ஏற்கனவே தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் பல்வேறு வார, மாத இதழ்களில் வெளிவந்தவையாகும். இந்த கதைகள், வாழ்க்கையை நெறிப்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளதால் அனைவரையும் சிந்திக்க வைக்கிறது. நன்றி: தினத்தந்தி, 27/8/2014.   —- விநாயகர், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை, விலை 22ரூ. விநாயகர் […]

Read more

திருக்குறளுக்கு புதிய உரை

திருக்குறளுக்கு புதிய உரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, விலை 125ரூ. திருக்குறளுக்கு பலர் உரை எழுதியுள்ளனர். ஆரம்ப காலத்தில் எழுதப்பட்ட சில உரைகள், மிகக் கடினமாக இருந்தன. அவற்றுக்கே உரை எழுத வேண்டும்போல் இருந்தன. காலமாற்றத்துக்குத் தக்கபடி சமீப காலமாக எளிய உரைகள் வரத் தொடங்கின. 1000 படங்களுக்கு மேல் வசனம் எழுதியவரும், பல மொழிகள் அறிந்தவருமான ஆரூர்தாஸ் தமிழ் மறை என்ற தலைப்பில் திருக்குறளுக்கு இனிய, எளிய தமிழில் புதிய உரை எழுதியுள்ளார். பாமர மக்களுக்கு புரிந்து கொள்ளத்தக்க வகையில் உரை எளிய […]

Read more

பரம(ன்) ரகசியம்

பரம(ன்) ரகசியம், என். கணேசன், பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன், சென்னை, விலை 550ரூ. அளவிலும், எடையிலும் சிறியதான, ஆனால் அபூர்வ சக்தி கொண்ட ஒரு லிங்கத்தை அபகரிப்பதற்காக நடக்கும் ஒரு கொலையுடன் நாவல் தொடங்குகிறது. அந்தக் கொலையை செய்தவன், மறு நிமிடமே மர்மமாக இறந்து கிடப்பது முதல் நடைபெறும் ஒவ்வொரு திகில் சம்பவமும் பரபரப்பு நிறைந்த அத்தியாயங்களில் விறுவிறுப்பாக சொல்லப்பட்டுள்ளன. அத்துடன், அமானுஷ்ய நிகழ்வுகள், ஆன்மிக விசாரம், விஞ்ஞான ஆராய்ச்சிகள் ஆகியவையும் கதையுடன் சேர்த்துக் கொடுக்கப்பட்டுள்ளதால், படிக்க மேலும் சுவாரசியமாக உள்ளது. நன்றி: […]

Read more

மகாபாரதம்

மகாபாரதம், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை, பக். 512, விலை 217ரூ. நம்முடைய பண்டைய இதிகாசங்களான இராமாயணமும் மகாபாரதமும் மிகச் சிறந்த நீதியைக் கூறும் நூல்கள். ஒவ்வொரு தருமத்தையும் விரித்துக் கூறுவது புராணம். அநேக அறங்களை உணர்த்துவது இதிகாசம். மகாபாரதத்தில் அடங்காத அறமே இல்லை என்று கூறுவர் முன்னோர். வியாச முனிவர் கூற, விநாயகப் பெருமானே தன் திருக்கரங்களால் எழுதிய இதிகாசம் மகாபாரதம் என்பதால், இதன் பெருமையை விரித்துரைப்பது யாராலும் இயலாத ஒன்று. பறவைகள் வந்து ஆலமரத்தில் தங்குவது […]

Read more

உன் மீதமர்ந்த பறவை

உன் மீதமர்ந்த பறவை, பழநிபாரதி, குமரன் பதிப்பகம், சென்னை, பக். 80, விலை 60ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-230-0.html கவிஞனின் ஆழ்மன அனுபவங்கள் சொற்களாக மாறும்போது கவிதைகள் பிறக்கின்றன. அவை அனுபவத்தை தொடர, உணர, பழநிபாதியின் இந்த கவிதைத் தொகுப்பை படிப்போர் உணரலாம். தொடர முடியாத நிழலைத் தொட வைக்கிறார். பார்க்க முடியாத உயிரைப் பார்க்க வைக்கிறார். வாசம் நுகர முடிகிற கவிதையின் ஆழத்திற்குள் செல்ல உவமை, படிமம் என்ற துணையை அனுப்புகிறார். பெண் என்ற கண்ணாடியைப் பார்த்து […]

Read more

முதலாளி ஆனவர்களின் வெற்றிக்கதை

முதலாளி ஆனவர்களின் வெற்றிக்கதை, பெரிகாம், 37, அசீஸ் மூல்க் இரண்டாம் தெரு, ஆயிரம் விளக்கு, சென்னை 6, விலை 80ரூ. தொழில் அதிபர்களாக உயர்ந்தவர்களின் வாழக்கை வரலாற்றைப் படித்துப் பார்த்தால் அந்த வெற்றிக்குப் பின்னால் கடும் உழைப்பு இருப்பது தெரியும். குறைந்த முதலீட்டில் முதலாளி ஆன 23 தொழில் முனைவோரின் வெற்றிக் கதைகள் தொழிலாளி டு முதலாளி என்ற இந்த நூலில் அடங்கியுள்ளன. இந்த வெற்றிக் கதைகளை இளங்குமார் சிங்காரம் விறுவிறுப்புடன் எழுதியுள்ளார். முதலாளியாக உயர விரும்புவோர் படிக்க வேண்டிய புத்தகம்.   —- […]

Read more
1 2 3