ஐம்பேரியற்கை

ஐம்பேரியற்கை. மாற்கு, தமிழினி . போராடும் மாநிலமாக மாறியுள்ள தமிழகத்தின் அத்தனை போராட்டங்களுக்கும் மைய இழை, இயற்கையைப் பாதுகாப்பதுதான். அந்த நோக்கத்துக்கு இலக்கிய வடிவம் கொடுத்திருக்கிறார் மாற்கு. கிராமத் தன்னிறைவு, சமத்துவம், எளிய வாழ்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற லட்சியங்களைக் கொண்ட ஒரு வெற்றிகரமான கிராமத்தை முன்மாதிரியாகக் காட்டுகிறது கதை. தொண்டு நிறுவனங்களின் லாப நோக்கம், நகர நாகரிகத்தின் தாக்கத்தால் மறந்துபோன 23 மூலிகைகளின் பட்டியல் என்று நடப்பையும் இழப்பையும் ஒருசேரப் பேசுகிறது. நன்றி: தி இந்து, 5/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

நேனோ ஓர் அறிமுகம்

நேனோ ஓர் அறிமுகம், அருண் நரசிம்மன், தமிழினி, பக். 96, விலை 75ரூ. இயற்கை நிகழ்வுகளில் புதைந்திருக்கும் நேனோ பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும், குறிஞ்சி மலரைக் கண்டால் எவ்வளவு மகிழ்வு ஏற்படுமோ, அத்தனை மகிழ்வும் திருப்தியும், இந்த நூலின் 12 அத்தியாயங்களில் இருந்தும் கிடைக்கின்றன. கி.மு. 7ம் நூற்றாண்டில் துவங்கி, 2013ம் ஆண்டு வரை, நேனோ தொழில்நுட்ப வளர்ச்சி கண்ட பரிணாம மாற்றங்களும், மைல் கற்களும் இந்த நூலில் பட்டியலிடப்பட்டுள்ளன. எந்தெந்த பொருட்கள், நேனோ சார்ந்தவை. எவை நேனோ அல்லாதது என்ற […]

Read more

நெல்லை வட்டார வழக்குச் சொல் தொகை

நெல்லை வட்டார வழக்குச் சொல் தொகை, வெள்உவன், தமிழினி, சென்னை, விலை 80ரூ. பண்பாட்டை அறிய உதவும் சொற்கள் மொழி என்றாலே பேசு எனப் பொருள் கொள்ளலாம். ஆனால் இன்று மொழி, பேச்சு, எழுத்து என இரு வடிவங்களில் வெளிப்படுகிறது. எழுத்து வடிவத்திற்குச் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆனால் பேச்சுக்கு எல்லைகள் இல்லை ஆக பேச்சு வடிவத்தில் மொழி அதன் அத்தனை சாத்தியங்களையும் கண்டடைய முயலும். ஒவ்வொரு பகுதிக்கும் தமிழ் ஒரு தனித்த மொழி வெள்ப்பாட்டைக் கொண்டுள்ளது. அதை வட்டார வழக்கு என்கிறோம். இவ்வட்டார […]

Read more

வந்தாராங்குடி

வந்தாராங்குடி, கண்மணி குணசேகரன், தமிழினி, சென்னை. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு வீடு வாசல் நிலபுலம் எல்லாம் தந்துவிட்டு, வேறுவேறு ஊர்களில் குடியேறி வந்தாரங்குடியாய் வாழ நேர்ந்த மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களை அப்படியே அசலாய்ப் படம் பிடித்திருக்கிறது கண்மணி குணசேகரனின் இந்த நாவல். குருவிகளின் சிலும்பல்கள், கொட்டப்புளிகளின் கெக்களிப்புகள் இணைகளோடும் குஞ்சுகளோடும் கூடுகள் தோறும் விடியல் ஒலிகள், ஏகத்துக்குமாய் பச்சைப் பசேல் என்று விரிந்த கம்மங்கொல்லைகள், தாய்மடி போல் இம்மண், உயிர்களை ஊட்டி வளர்க்கும் பரிவு-இந்த அறிமுகத்தோடு வேப்பங்குறிச்சி கிராமத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறார் நாவலாசிரியர். […]

Read more

ஊழிக்காலம்

ஊழிக்காலம், தமிழ்க் கவி, தமிழினி, சென்னை, விலை 270ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-201-0.html பெற்றெடுத்த பிள்ளைகளில் இருவரைக் களத்தில் பலிகொடுத்துவிட்டு, பேரப்பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக அடிக்கடி இடம்பெயர்ந்து, கடைசியில் அயல்மண்ணில் மனம் கூசி நிற்கும் அறுபதைக் கடந்த ஓர் அம்மாவின் கதையைச் சொல்கிறார் தமிழ்க் கவி. குழந்தைகளை மட்டும் தூக்கிக் கொண்டு முதியவர்களையும், ஆடு, மாடுகளையும் அப்படியே கைவிட்டுச் செல்ல நேரும் துயரம். உணவுப் பொருட்களையும், எரிபொருட்களையும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல். கைகால்களை நீட்டிப் […]

Read more

இன்னும் பிறக்காத தலைமுறைக்காக

இன்னும் பிறக்காத தலைமுறைக்காக, சு. தியடோர் பாஸ்கரன், உயிர்மை பதிப்பகம். சூழலியல் எழுத்தாளர்கள் சு. தியடோர் பாஸ்கரன், புத்தாயிரம் ஆண்டுக்குப் பிறகு தமிழில் தொடர்ச்சியாக எழுத ஆரம்பித்தார். அவருடைய சூழலியல் கட்டுரைகளின் முதல் தொகுப்பு இது.  தமிழகத்தில் சுற்றுச்சூழலில் மீதான ஆர்வம் பரவலாக, இந்தக் கட்டுரைகளும் ஒரு காரணம். நன்றி: தி இந்து, 22/4/2014.   —-   அணுகுண்டும் அவரை விதைகளும், பாமயன், தமிழினி. மூன்றாம் உலக நாடுகளை மிரட்ட வல்லரசு நாடுகள் எடுத்துள்ள புதிய ஆயுதம் விதைகள் என்பது போன்ற அதிர்ச்சியளிக்கும் […]

Read more

ஊழிக்காலம்

ஊழிக்காலம், தமிழ்க் கவி, தமிழினி. இறுதிப் போரின் சாட்சி ஈழப்போரின் இறுதி நாட்களில் நடந்தவை குறித்து நாம் அறிந்த செய்திகள் சொற்பம். மரணத்தை தொட்டுவிடும் தூரத்தில் கண்ட மக்களிடையே இன்னமும் துயரின் நெருப்பு மனதுக்குள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இத்தீயை நெஞ்சில் சுமந்து, நடந்தவற்றுக்கு சாட்சியாய் இருந்த 66 வயதுப் பெண்ணாகிய தமிழ்க்கவி எழுதிய தன்வரலாற்று நாவல் இது. ஈழப்போரின் இறுதிக்கால அவலம், துயரம், கோரம், கொடூரம் என்று ஒவ்வொருவருக்குள்ளும் இறுகிக் கிடக்கும் துயர நினைவுகளை தன் நாவலில் கசியவிட்டிருக்கிறார் தமிழ்க்கவி. போர்க் குற்றங்களுக்கு […]

Read more

பெயரற்றது

பெயரற்றது, சயந்தன், தமிழினி, 63, நாச்சியம்மை நகர், சேலவாயல், சென்னை 51, பக்.128, விலை-90ரூ. போருக்குப் பிந்தையது ஈழத்துப் படைப்புகள், காத்திரமான யுத்த இலக்கியங்களாக உருவாகி வருகின்றன. சுவிஸ் நாட்டில் வசிக்கும் ஈழத் தமிழரான சயந்தன் எழுதியுள்ள பெயரற்றது. புலம்பெயர் இலக்கியத்தின் இன்னோர் உலகத்தை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. மொத்தம் எட்டு கதைகள். அனைத்துமே போரின் வலிகளைப் பேசுகிறது. தமிழ் டைகர்ஸ் பிறீடம் பைட்டர்ஸ் என்ற சிறுகதை, புகலிடத்தில் மொழிப்பெயர்ப்பாளராக வேலை செய்யும் ஒருவருடைய குறிப்பு. தாய்நாட்டில் வாழ முடியாத சூழல் நிலவுவதை நிரூபித்தாக வேண்டிய […]

Read more

2012 சிறந்த 10 புத்தகங்கள் – ஜெயமோகன்

2012 சிறந்த 10 புத்தகங்கள் – ஜெயமோகன் சரிவிகித உணவு பற்றி நாம் ஐந்தாம் வகுப்பிலேயே வாசிக்க ஆரம்பித்திருப்போம். எல்லா சத்துகளும் அடங்கிய உணவுதான் உடல்நலத்துக்கு நல்லது. ஏதேனும் ஒரு சத்து மிகையாக இருந்தாலும், குறைந்தாலும்… நோயையே உருவாக்கும். வாசிப்பிலும் அப்படி ஒரு சரிவிகித நிலை வேண்டும். எல்லா அறிவுத்தளங்களிலும் முக்கியமான நூல்களை வாசிப்பதுதான் அவசியமானது. அதுவே சமநிலை கொண்ட முழுமையான நோக்கை உருவாக்கும். நாக்கின் சுவை கருதி உண்பது எப்படி நோயை அளிக்குமோ, அப்படித்தான் வாசிப்பின் சுவை மட்டுமே கருதி வாசிப்பதும். தமிழில் […]

Read more