நக்சல் பாரி முன்பும் பின்பும்

 நக்சல் பாரி முன்பும் பின்பும், ஆங்கில மூலம் சுனிதிகுமார் கோஷ், தமிழில் கோவேந்தன் விடியல் பதிப்பகம், கோயம்புத்தூர். ஒரு கம்யூனிஸ்ட் வாக்குமூலம் இந்திய மக்களுக்கு இன்னமும் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றைத் துர்த்துக் கொள்வதற்காக அவர்கள் பல்வேறு வண்ணங்களில் அரசியல் இயக்கங்களைச் சமுதாயத்தில் உருவாக்கி இருக்கிறார்கள். அவற்றில் நக்சல் பாரி இயக்கமும் ஒன்று. அதன் முக்கிய பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றியவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பேராசிரியர் சுனிதிகுமார் கோஷ். சில மாதங்களுக்கு முன்புதான்96 வயதில் அவர் காலமானார். அவர் தனது இறுதிக் காலத்தில் […]

Read more

மொழியியல் தொடக்கநிலையினருக்கு

மொழியியல் தொடக்கநிலையினருக்கு, டெரன்ஸ் கோர்டொன், தமிழில் நாகேஸ்வரி அண்ணாமலை, விளக்கப்படம் சூசன் வில்மார்த், அடையாளம் பதிப்பகம், திருச்சி, விலை160ரூ. மொழியியல் ஓர் அறிமுகம் தமிழுக்கு மொழியியல் தேவை இல்லை என்பது போன்ற கருத்துகள் இங்கு உண்டு. இந்தப் பார்வைகளைப் புரட்டிப்போடுகிறது அடையாளம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மொழியியல் தொடக்கநிலையினருக்கு புத்தகம். டெரன்ஸ் கோர்டொனின் நூலைத் தமிழிச் சூழலுக்கு ஏற்ப, குறிப்பாக இளைய தலைமுறையினரைச் சென்றடையும் வகையில் மொழியியலை எளிமைப்படுத்தித் தந்திருக்கிறார் நாகேஸ்வரி அண்ணாமலை. மொழிகள் செயல்படும் விதத்தில் தொடங்கி, மனிதர்கள் தங்கள் மொழியைக் கற்றுக்கொள்ளும் விதம், […]

Read more

குற்றப் பரம்பரை அரசியல்

குற்றப் பரம்பரை அரசியல், பெருங்காமநல்லுரை முன்வைத்து, தொகுப்பாசிரியர் முகில்நிலவன், தமிழாக்கம் சா. தேவதாஸ், பாலை வெளியீடு, மதுரை, விலை 300ரூ. ஆளும் வர்க்கத்தினர் சார்ந்தே எழுதப்பட்ட வரலாறுகள் இன்று கேள்விக்குறியாகியுள்ளன. மக்களின் நினைவுகளிலிருந்தும், வாய்மொழிக் கதைகளிலிருந்தும் எழுதப்பட்டவையும் வரலாறுதான் என்ற நம்பிக்கை இன்றைய காலகட்டத்தில் உறுதிப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென்பகுதியில் ஒரு சமூகத்தையே குற்றப் பரம்பரையினர் என்று மத்திரை குத்தி, அவர்கள் வாழ்ந்த ஊரையே பிரிட்டிஷ் அரசாங்கம் சிறையாக்கிய கொடூரங்கள் பெரும்பாலும் பதிவு செய்யப்படவேயில்லை. 1930களில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் கைரேகைகள் பதியப்பட்டு, […]

Read more

அதிகாரத்தின் மூலக்கூறுகள்

அதிகாரத்தின் மூலக்கூறுகள், எலியா கனெட்டி, தமிழில் ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், சென்னை, விலை 25ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-344-2.html 1905ல் பல்கேரியாவில் பிறந்த எலியா கனெட்டி, இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்றவர். வெகுமக்களின் கும்பல் மனோபாவத்துக்கும் அதிகாரம் செயல்பாடுவதற்கும் இடையிலான இவரது ஆய்வுகளுக்காகவே தற்போது அதிகம் அறியப்படுகிறார் என்று மொழிபெயர்ப்பாளர் ரவிக்குமார் குறிப்பிடுகிறார். க்ரவுட்ஸ் அண்ட பவர் என்ற இவரது புகழ்பெற்ற நூலிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட சிறு கட்டுரைகள் கொண்ட தொகுதியாக அதிகாரத்தின் மூலக்கூறுகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தனியாக இருக்கும்போது அத்தனை […]

Read more

சொற்றுணை வேதியர்

சொற்றுணை வேதியர், பேராசிரியர் எச். வேங்கடராமன் வாழ்வும் தமிழ்த் தொண்டும், புலவர் தி.வே. விஜயலட்சுமி, மணிவாசகர் பதிப்பகம், பக். 256, விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-235-3.html நற்றிணையைப் பதிப்பித்த ஆசான் பேராசிரியர் எச். வேங்கடராமன் வாழ்வும் தமிழ்த் தொண்டும் என்ற பெயரில் மணிவாசகர் பதிப்பகத்தில் வெளியாகியுள்ள 256 பக்க நினைவு மலரின் பின்னணியில் அவருடைய அன்பு மகள் தி.வே. விஜயலட்சுமியின் முயற்சியும் ஆர்வமும் ஈடுபாடும் ஒருங்கே தெரிகின்றன. தன் தந்தை என்ற பாசத்தில் அவர் செய்திருந்தாலும் நற்றிணையைப் […]

Read more

கடல் கிணறு

கடல் கிணறு, ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், சென்னை, விலை 60ரூ. மௌனமாய் மரணத்தைப் பேசும் கதைகள் கடல் கிணறு தொகுப்பில் இருக்கிற சிறுகதைகள் வழக்கமான தமிழ்க் கதைகள் அல்ல. மனதின் வலியிலிருந்து எழுதப்பட்ட, சமூக நிகழ்வுகளின் கொடூரங்கள் தந்த மன அழுத்தத்திலிருந்து எழுதப்பட்ட கதைகள். அரசியல் கதைகள் என்று தோற்றம் தருகிற உண்மை அறிதல், எட்டாம் தூக்கம், ழ, வார்த்தைகள் போன்ற கதைகளில் முக்கியமான பாத்திரம் அரசியல் அல்ல. மரணம்தான். அதைவிடவும் மௌனம்தான் எல்லாக் கதைகளிலும் பிரதான பாத்திரம். தொகுப்பின் அநேகக் கதைகளில் மரணம் […]

Read more

உயிர்ப்பு மிக்க காவியம்

உயிர்ப்பு மிக்க காவியம், சீறா வசனகாவியம், கண்ணகுமது மகுதூமுகம்மது புலவர், கல்தச்சன் பதிப்பகம், 21, மேயர் சிட்டி பாபு தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5. சீறாப்புராணத்தின் உரைநடை வடிவம்தான் இந்தச் சீறா வசன காவியம். இதை எழுதியிருப்பவர் காயல்பட்டணத்தைச் சேர்ந்த கண்ணகுமது மகுதூமுகம்மது புலவர். இது 125 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. என்றாலும் அதில் கையாளப்பட்டுள்ள மொழியால் இந்நூல் இன்று உயிர்ப்புடன் இருக்கிறது. இந்தப் புத்தகம் சீறாப்புராணத்தின் பொழிப்புரையோ தெளிவுரையோ அல்ல. கண்ணகுமது மகுதூமுகம்மது புலவர் இதை ஒரு பருந்துப் பார்வையுடன் எழுதியிருக்கிறார். சீறாப்புராணத்தின் […]

Read more

வேடிக்கை வினோதக் கதைகள்

வேடிக்கை வினோதக் கதைகள், கவிதா பப்ளிகேஷன்ஸ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சன்னை 17, விலை 350ரூ. பெரியவர்களுக்கு கவுசிகள் என்ற பெயரிலும், சிறுவர்களுக்கு வாண்டு மாமா என்ற பெயரிலும் கதை எழுதும் வி.கே. மூர்த்தி,இப்போது சிறுவர்களுக்காக பெரிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். ராஜா ராணி கதைகள், மந்திராவாதிக் கதைகள், மர்மக் கதைகள், சிரிக்க வைக்கும் கதைகள் இப்படி பலதரப்பட்ட கதைகள் இதில் உள்ளன. மொத்தம் 50க்கும் மேற்பட்ட கதைகள், சுவையும், விறுவிறுப்பும் மிக்க கதைகள். சிறுவர் சிறுமிகள் கையில் எடுத்தால், படித்து […]

Read more
1 26 27 28