ஒளி உன்னால் அறியப்படுகிறது

ஒளி உன்னால் அறியப்படுகிறது, பழநிபாரதி, குமரன் பதிப்பகம், விலை ரூ:80 முத்தத்தின் துயர மொழி, திரையிசைப் பாடல்களில் தனித்துவத்தோடு மிளிர்ந்த கவிஞர் பழநிபாரதி தனது ‘ஒளி உன்னால் அறியப்படுகிறது’ கவிதைத் தொகுப்பில் சுண்டக் காய்ச்சிய வார்த்தைகளால் எழுதியிருக்கிறார். பெரும்பாலான கவிதைகள் வாசகரின் மனசுக்குள் காட்சி கிளைகளாக விரிகின்றன. இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் எதிலும் அலங்கார வார்த்தைகள் இல்லை. ‘வீட்டின் வரவேற்பறையில்/ ஒரு பியானோ இருக்கிறது/ அதன் முன்னிருக்கையில் யாருமில்லை /நடுங்காத தீபத்தைப் போல /நின்றொளிரும் இசையில்/ நிரம்பி வழிகிறது/ வீடு’ எனும்போது நமக்குள்ளிருக்கும் இசை நம் வீட்டை […]

Read more

ஒளி உன்னால் அறியப்படுகிறது

ஒளி உன்னால் அறியப்படுகிறது, பழநிபாரதி, குமரன் பதிப்பகம், பக். 104, விலை 80ரூ. இலக்கண நடையில் எழுதி, இக்கால இலக்கியத்திற்கு சிறப்பு சேர்க்கும், பழநிபாரதியின் கவிதைகள் எண்ணற்றவை. ‘இந்த வைகறை உன்னிடமிருந்து துயிலெழுகிறது; ஒளி உன்னால் அறியப்படுகிறது; முதல் மலர்களின் நறுமணத்தை நுகர்ந்தபடி விடைபெற்ற நட்சத்திரங்களில் ஒன்று கடைசியாக உன்னைத் திரும்பிப் பார்க்கிறது!’ என்ற கவிதை வரிகள், நம்மை நெகிழ வைப்பதாக உள்ளன. இந்நுால், இன்றைய இளைய தலைமுறையினருக்கு பயனுள்ளதாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. – மாசிலா இராஜகுரு நன்றி: தினமலர்,17/3/19, இந்தப் […]

Read more

உன் மீதமர்ந்த பறவை

உன் மீதமர்ந்த பறவை, பழநிபாரதி, குமரன் பதிப்பகம், சென்னை, பக். 80, விலை 80ரூ. வாழ்வில் ஒருமுறையாவது ஒரு கவிதையாவது ஒரு மனிதன் எழுதிவிட வேண்டும். அப்போதுதான் அசலான மனிதனாக அவன் அவனை உணரும் தருணம் வரும் என்பார் கவிஞர் கந்தர்வன். அவர் சொன்ன அந்த அபூர்வ கணங்களை, உன் மீதமர்ந்த பறவை என்ற தமது கவிதைத் தொகுப்பில் காட்சியாகவும் சாட்சியாகவும் மாற்றியுள்ளார் கவிஞர் பழநிபாரதி. முன்னுரை என்பது ஒரு கோபுரத்தின் நுழைவாயிலைப் போன்றது. அது வசீகரிக்க வேண்டும். பிரம்மாண்டத்தின் ஒரு துளி ருசியை […]

Read more

உன் மீதமர்ந்த பறவை

உன் மீதமர்ந்த பறவை, பழநிபாரதி, குமரன் பதிப்பகம், சென்னை, பக். 80, விலை 60ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-230-0.html கவிஞனின் ஆழ்மன அனுபவங்கள் சொற்களாக மாறும்போது கவிதைகள் பிறக்கின்றன. அவை அனுபவத்தை தொடர, உணர, பழநிபாதியின் இந்த கவிதைத் தொகுப்பை படிப்போர் உணரலாம். தொடர முடியாத நிழலைத் தொட வைக்கிறார். பார்க்க முடியாத உயிரைப் பார்க்க வைக்கிறார். வாசம் நுகர முடிகிற கவிதையின் ஆழத்திற்குள் செல்ல உவமை, படிமம் என்ற துணையை அனுப்புகிறார். பெண் என்ற கண்ணாடியைப் பார்த்து […]

Read more

உன் மீதமர்ந்த பறவை

உன் மீதமர்ந்த பறவை, பழநிபாரதி, குமரன் பதிப்பகம், சென்னை, விலை 60ரூ. பறவைகளாக்கும் கவிதைகள் பழநிபாரதியின் கவிதைகளும் பாடல்களும் தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவை. உன் மீதமர்ந்த பறவை என்னும் அவரது இந்தத் தொகுப்பில் இயற்கையும் காதலும் இயற்கை மீதான காதலும்  வாஞ்சையுடன் வெளிப்பட்டு கவிதை அனுபவத்தை அர்த்தப்படுத்துகின்றன. மென்மையான உணர்வுகளைச் சொற்களின் வார்ப்பிலிட்டுக் கவிதைகளாய்க் கவனப்படுத்தியுள்ளார் பழநிபாரதி. ஏ.பி. ஸ்ரீதரின் ஓவியங்களும் பழநிபாரதியின் கவிதைகளும் கொண்ட இந்தத் தொகுப்பு மெல்லிய காதலை விரும்புபவர்களுக்கும் இயற்கை நேசர்களுக்கும் விருந்தளிப்பவை. இளம் வெயில், கூந்தல், கூழாங்கற்கள், […]

Read more

காற்றின் கையெழுத்து

காற்றின் கையெழுத்து, பழநிபாரதி, விகடன் பிரசுரம், சென்னை, பக். 256, விலை 130ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-483-1.html பத்திரிகையாளராக இருந்து பாடலாசிரியராக கவிஞர் பழநிபாரதி எழுதிய 52 கட்டுரைகளின் தொகுப்புதான் இந்தநூல். சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் சகலவிதமான அழுக்குகளையும் சாடும் பழநிபாரதியின் ஆக்ரோஷமான கோபம், படிப்பவர்களையும் தொற்றிக்கொள்கிறது. இதுவே இந்நூலின் வெற்றி. நகரமயமாதல் என்கிற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகளும் ரியல் எஸ்டேட் மாஃபியா கும்பல்களும் விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு அடித்துத் துரத்தி வாங்கும் பின்னணியை காடு வெளையட்டும் […]

Read more