தமிழ் சினிமா புனைவில் இயங்கும் சமூகம்

தமிழ் சினிமா புனைவில் இயங்கும் சமூகம், ஸ்டாலின் ராஜாங்கம், பிரக்ஞை, பக். 176, விலை 145ரூ. மிழ் சினிமாவைப் பற்றி எத்தனையோ நூல்கள் வெளி வந்திருக்கின்றன. இந்த நூல் குறிப்பிட்ட சில திரைப்படங்களில் இடம்பெறும் காட்சிகளிலும், பேசப்படும் வசனங்களிலும் உள்ள “உண்மைத்தன்மை‘’யை மிகையின்றிப் பதிவு செய்திருக்கிறது. இந்நூல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வடிவேலுவின் கிராமத்தான், போலீஸ், ரவுடி போன்ற வெற்றிகரமான பாத்திரங்களைப் பற்றிய ஆய்வும், இசையமைப்பாளர் இளையராஜாவின் திறமை பற்றிய பதிவும் இரண்டாவது பகுதியில் அடங்கியிருக்கிறது.‘ பல விதங்களில் வித்தியாசமான படமாக இருந்தாலும் வன்முறைப் […]

Read more

தமிழர் பண்பாடும் தத்துவமும்

தமிழர் பண்பாடும் தத்துவமும், நா. வானமாமலை, அலைகள் வெளியீட்டகம், பக். 208, விலை 145ரூ. மார்க்சிய ஆய்வாளரான நூலாசிரியரின் குறிப்பிடத்தக்க ஆய்வுகள் அடங்கிய நூல் இது. வடநாட்டின் ஸ்கந்த வழிபாடு, தமிழகத்தின் முருகன் வழிபாட்டோடு இணைந்தது பற்றிய கட்டுரை, இவ்வுலக இன்பத்தைப் பெறும் பொருட்டே, அதற்காக வேண்டுவதற்காகவே தமிழகத்தில் முருகன் வழிபாடு இருந்ததை பரிபாடலின் மூலம் விளக்கும் கட்டுரை ஆகிய இரண்டும் முருகன் வழிபாட்டின் வரலாற்றை ஆய்வுப்பூர்வமாக விளக்குகிறது. மனிதனின் உழைப்பு, உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி, உற்பத்தி உறவுகள் ஆகியவற்றின் அடித்தளத்திலேயே கலைகள் தோன்றுகின்றன; […]

Read more

பாண்டியர் கொற்கை

பாண்டியர் கொற்கை, செ.மா. கணபதி, சங்கத் தமிழ்ப் பதிப்பகம், பக். 412, விலை 250ரூ. மதுரையை ஆண்ட “அகுதை’ என்ற மரபினரிடமிருந்துதான் பாண்டியர்கள் மதுரையைக் கைப்பற்றினர் என்பதும், முதன்முதலில் கொற்கையில்தான் பாண்டியர்கள் ஆட்சி செய்தனர் என்பதும் பாண்டியர் வரலாறு கூறும் செய்தி. இராபர்ட் கால்டுவெல் என்பவர்தான் பாண்டியரின் கொற்கை பற்றிய ஆய்வினை முதன் முதலில் மேற்கொண்டவர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் உள்ள “கொற்கை’ என்னும் சிறிய கிராமம்தான் முன்பு, பாண்டிய அரசர்களின் சிறந்த நகரங்களுள் ஒன்றான கொற்கையாகத் திகழ்ந்தது. இக்கிராமம் குறித்த அறிமுகத்துடன் […]

Read more

ஈழத்தில் தமிழ் இலக்கியம்

ஈழத்தில் தமிழ் இலக்கியம், கார்த்திகேசு சிவத்தம்பி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 289, விலை 240ரூ. ஒரு குறிப்பிட்ட இனத்தின் மொழி வளர்ச்சி, அதன் போக்கு, அதில் வெளிப்படும் பண்பாடு ஆகியவையே அந்த மொழி பேசும் மக்களின் முழுமையான அடையாளமாக விளங்கும் என்ற அடிப்படையில் இந்த நூல் பல பகுதிகளாக தொகுத்தளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர் இலக்கியம் கடந்த 1950 வரை தமிழக இலக்கியத்தையே சார்ந்திருந்தது. அதன் பின்னர் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வளர்ந்தது. இலங்கைத் தமிழ் இலக்கியப் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. […]

Read more

அறிவுசார்ந்த சொத்துரிமைகள் சட்டம்

அறிவுசார்ந்த சொத்துரிமைகள் சட்டம், வழக்கறிஞர் சோ. சேசாச்சலம், மணிமேகலைப் பிரசுரம், விலை 70ரூ. பதிப்புரிமை, வணிகக் குறியீடுகள், புத்தாக்கம், வடிவமைப்புகள், புவிசார் குறியீடுகள் போன்ற சொத்துக்களைக் குறிக்கும் சொல்லாக “அறிவு சார்ந்த சொத்துரிமைகள்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதுபற்றிய சட்ட விவரங்களை விளக்கமாகவும், விரிவாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் சோ. சேசாச்சலம். இது சட்டம் பயில்வோருக்கான பாடநூலாகும். நன்றி: தினத்தந்தி, 31/8/2016.

Read more

உரிமைக்குரல்

உரிமைக்குரல், சுந்தரம் வெளியீடு, விலை 350ரூ. 2006-ம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சிக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக 144-வது வட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சு.மங்களராஜ். அவர் மக்கள் பிரச்சினைகளுக்காக தொடுத்த உரிமைக்குரல்”களையும் அதற்காகமேயர் மா. சுப்பிரமணியன் அளித்த பதில்களையும் தொகுத்து வெளியிடப்பட்டுள்ள நூல். அதன் விளைவு, சென்னை வாழ்மக்களுக்கு மட்டுமின்றி மாநகராட்சியை சார்ந்த பல்வேறு துறை ஊழியர்களும் பயன் பெற்றனர் என்பதை அறிய முடிகிறது. அத்தகைய ஜனநாயகம் மீண்டும் வருமா? நன்றி: தினத்தந்தி, 31/8/2016.

Read more

கேட்டதும் கிடைத்தது

கேட்டதும் கிடைத்தது, ‘பதின் கவனகர்’ இராமையா, தொகுப்பு கனகசுப்புரத்தினம், கற்பகம் புத்தகலாயம், விலை 150ரூ. இந்நூல் வினா- விடை வாயிலாகத் திருக்குறளுக்கு விளக்கம் அளிக்கிறது. சில வினாக்கள் வேடிக்கையாகக் கேட்கப்பட்டவைபோல் தோன்றினாலும் அதற்குரிய விடையை விளக்கமாகவும் பொருத்தமாகவும் தந்திருக்கிறார் பதின் கவனகர் இராமையா. கொம்புக்குறி இடம் பெறாத குறள் ஒன்றைக் கூறுமாறு கேட்க, அதற்கு 17 குறளைக் காட்டுகிறார் ஆசிரியர். அதேபோல் நீட்டலளவை, நிறுத்தல் அளவைக்கு ஒரு குறள், விதையில்லாப் பழம் உள்ள குறள், தோல்வியே வெற்றி ஆகின்ற குறள், ஐந்து உவமைகள் இடம் […]

Read more

இதய ஒலி

இதய ஒலி, பழனி ஜி. பெரியசாமி, வானதி பதிப்பகம், விலை 350ரூ. இன்று தமிழ்நாட்டின் முக்கிய தொழில் அதிபர்களில் ஒருவராக விளங்கும் டாக்டர் பழனி ஜி.பெரியசாமி, சில காலத்துக்கு முன் அமெரிக்காவில் பொருளாதாரப் பேராசிரியராக இருந்தவர். தமிழக முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டபோது, அவரை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லவும், புரூக்களின் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகளை முன்நின்று செய்தவர். அதனால் எம்.ஜி.ஆர். இதயத்தில் தனி இடம் பெற்றவர். எம்.ஜி.ஆர். பற்றிய பல அபூர்வ தகவல்கள் இந்த நூலில் இடம் […]

Read more

சங்க இலக்கிய ஐயங்களும் தெளிவுகளும்

சங்க இலக்கிய ஐயங்களும் தெளிவுகளும், முனைவர் வாணி அறிவாளன், அருண் அகில் பதிப்பகம், விலை 110ரூ. சங்க இலக்கியங்கள், ஆழமான கருத்துக்களைக் கொண்டவை. அவற்றைப் படிப்போருக்கு பல ஐயங்கள் எழுவது இயல்பு. அந்த ஐயங்களைப் போக்கும் வகையில் இந்த நூலை எழுதியுள்ளார். சென்னைப் பல்கலைக்கழக தமிழ் மொழித்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் வாணி அறிவாளன். நன்றி: தினத்தந்தி, 31/8/2016.

Read more

ஈழத்தில் தமிழ் இலக்கியம்

ஈழத்தில் தமிழ் இலக்கியம், கார்த்திகேசு சிவத்தம்பி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 240ரூ. ஈழத்தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கட்டங்களையும், வெவ்வேறு காலநிலைகளில் வெளியான இலக்கிய ஆக்கங்களைப் பற்றிய நூல். பழமையான வரலாற்றை கொண்ட ஈழத்தமிழ் இலக்கியத்தை ஆழமாக ஆய்வு செய்து நூலாசிரியர் எழுதியிருப்பது பல்வேறு கட்டுரைகள் மூலமாக தெரிகிறது. இலக்கியப்படைப்புகள், ஈழத்துக் கவிதைப் போக்கு, நாடகங்களின் வகைகள், இலக்கிய விமர்சனம், இலக்கிய அரசியல் உள்ளிட்ட பல்வேறு இலக்கிய கருத்துகள் இதில் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டு உள்ளன. புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றிய ஆய்வுக்கட்டுரையும், […]

Read more
1 2 3 4 9