அப்துல்கலாம் – ஒரு கனவின் வரலாறு

அப்துல்கலாம் – ஒரு கனவின் வரலாறு, சேவியர், அருவி வெளியீடு, விலை 250ரூ. ‘ஏவுகணை மனிதர்’ ‘மக்கள் ஜனாதிபதி’ ‘மாணவர்களின் நண்பன்’ ‘அணு விஞ்ஞானி’ போன்ற அடைமொழிகளால் அடைகாக்கப்பட்டவர் அப்துல் கலாம். அப்துல்கலாமுடைய புகழுக்கும் பெருமைக்கும் அவரது எளிமையும், பணிவும் நேர்மையுமே காரணம். இந்தப் பண்புதான் அவரை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வழிகாட்டியாக மாற்றியது. இன்றைய தலைமுறையும், அடுத்த தலைமுறையும் கலாமிடம் இருந்து எதைக் கற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ இந்த மூன்று பண்புகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் எழுத்தாஒர் சேவியர் இந்த நூலை […]

Read more

சோதிடத்தில் பலன் காணும் முறை

சோதிடத்தில் பலன் காணும் முறை, இளங்கோவன், குருவருள் சோதிட ஆய்வு மையம், பக்.72, விலை ரூ. 100. ஒரு ஜாதகத்தை கையிலெடுக்கும் ஜோதிடர், அடிப்படையில் என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும், எத்தகைய விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது இந்நூலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. லக்கினத்தின் முக்கியத்துவம், பாவங்கள், அந்த பாவங்களை ஆளும் கிரகங்களின் காரகத்துவங்கள், அதில் அமர்ந்திருக்கும் கிரகங்களின் செயல்பாடுகள், பாவங்களைக் கண்டு ஜாதகங்களை ஆராயும் திறன் போன்றவற்றை அக்கறையுடன் எடுத்துக் கூறி எளிமையான உதாரணங்களுடன் இந்நூலைப் படைத்திருக்கிறார் இந்நூலாசிரியர். கிரகங்களுக்குரிய நட்பு, பகை கிரகங்கள், அவை […]

Read more

நா. முத்துகுமார் கவிதைகள்

நா. முத்துகுமார் கவிதைகள், பட்டாம்பூச்சி பதிப்பகம், விலை 225ரூ. கவிதையின் அனுபவ உலகத்தை அகம், புறம் என இரண்டாகப் பிரிக்கும் கோடு அத்தனை தெளிவானதல்ல. சமுத்திரமும் நிலமும் சந்திக்கும் கரை போன்றது அது. எளிய கருத்தாக்கங்களுடன் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. வன்மமோ, புரியாத புதிரோ, புத்தகத்தை மூடிவிட்டு பொருள் தேடிப் புறப்படும் பயணமோ வேண்டியதில்லை. சித்திரம், சித்திரமாய் எழுதிப் போகிறார் நா. முத்துக்குமார். அருமையான நீரோட்டம் மாதிரி படிக்கும்போதே தெளிந்து உணரக்கூடியவை. அடர்த்தியாக, அடுத்தடுத்த பக்கங்களுக்கு தாவிப்போக எந்தத் தடையும் இல்லை. கவிதை எழுதுவது […]

Read more

நபிகளாரின் பொன்மொழிகள்

நபிகளாரின் பொன்மொழிகள், ரஹ்மத் பதிப்பகம், விலை 400ரூ. நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் பொன்மொழிகள் தொகுப்புக்கு ‘ஹதீஸ்’ என்று பெயர். ஐம்பதுக்கும் மேற்பட்ட நபிமொழித் தொகுப்புகள் வெளிவந்தபோதிலும், இமாம் புகாரி இஸ்மாயில், இமாம் முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ், திர்மிதீ, அபூதாவூத், இப்னு மாஜா, நஸயீ ஆகியோர் தொகுத்த ஆறு நூல்களே நம்பிக்கைக்குரிய ஆதாரபூர்வ நூலாகக் கருதப்படுகிறது. இவற்றில் அமாம் புகாரி தொகுத்த ஸஹீஹுல் புகாரி, முஸ்லிம், திர்மிதீ ஆகிய நபிமொழித் தொகுப்புகளை ரஹ்மத் பதிப்பகம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இப்போது அபூ, தாவூத் (ரஹ்) தொகுத்த நபிகளாரின் […]

Read more

வெற்றித் திருநகர்

வெற்றித் திருநகர், அகிலன், தாகம் பதிப்பகம், பக். 528, விலை 350ரூ. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு‘’ என்பதை தனது வாழ்க்கையின் சீரிய லட்சியமாகக் கொண்ட ஓர் உத்தமனின் (விசுவநாத நாயக்கன்) கதையைப் படைத்துள்ளார் நூலாசிரியர். கல்லில் வடிக்கப்பட்ட அவன் உருவைக் காண விரும்புவர் இன்றும் அவனை மதுரைமீனாட்சி அம்மன் ஆலயத்தில் சந்திக்கலாம்! பெண்மைக்கு உரிய எல்லாச் சிறப்பும் பெற்றிருந்தாள் கதை நாயகி இலட்சுமி. வீரன் ஒருவனின் அன்பு நெஞ்சத்தையும் தனக்கே உரிமையாகப் பெற்றிருந்தாள். ஆயினும் தந்தையின் சூழ்ச்சிக் கொடுமைகளைத் தடுக்கவோ மனப்போக்கைத் திருத்தவோ முடியாத […]

Read more

செல்வச் சுரங்கத்தின் திறவுகோல்

செல்வச் சுரங்கத்தின் திறவுகோல், நெப்போலியன் ஹில், தமிழில் மு. சிவலிங்கம், கண்ணதாசன் பதிப்பகம், பக். 256, விலை 160ரூ. வாழ்க்கையில் ஏதேனும் ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை உருவாக்கும் சிந்தனைகளைத் தூண்டும் நூல். சிறப்பான மொழி பெயர்ப்பு. நூலாசிரியர் நெப்போலியன் ஹில், 12 மகத்தான செல்வங்கள் எனப் பட்டியலிட்டு, நேர்மறை மனோபாவம், நல்ல உடல் ஆரோக்கியம், சகமனிதர்களுடன் நல்லுறவு, பயத்திலிருந்து விடுதலை, சாதிக்கும் தன்னம்பிக்கை, நம்பிக்கை கொள்வதற்கான ஆற்றல், நமக்குக் கிடைத்த வரப்பிரசாதங்களைப் பகிர்ந்து கொள்வதில் நாட்டம், உழைப்பின் மீது காதல், திறந்த […]

Read more

நினைவு நாட்களும் நெஞ்சில் அலைகளும்

நினைவு நாட்களும் நெஞ்சில் அலைகளும், கே. ஜீவபாரதி, மேன்மை வெளியீடு, பக். 176, விலை 135ரூ. லட்சியத்துக்காக வாழ்வதென்பது அண்மைக்காலமாக அனைத்து அரசியல் கட்சிகளிலும் அருகி வருகிறது. இந்நிலையில், பொதுவுடைமை இயக்கத்துக்காக தங்களை அர்ப்பணம் செய்த தியாகிகளின் வரலாறு, இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டிருக்கிறது. ப.ஜீவானந்தம், கே.பாலதண்டாயுதம், கே.டி.கே.தங்கமணி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சி.எஸ்.சுப்பிரமணியம், சாம்பவான் ஓடை சிவராமன், சின்னியம்பாளையம் தியாகிகள் ஆகியோருக்கான அஞ்சலிக் கட்டுரைகள், கொண்ட கொள்கைக்காக வாழ்ந்த அற்புதமான மனிதர்களை அறிமுகப்படுத்துகின்றன. இவை ஜனசக்தி, தாமரை உள்ளிட்ட பத்திரிகைகளில் வெளியானவை. பொதுவுடைமை சித்தாந்தம் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, […]

Read more

நமனை விரட்டும் நாட்காட்டி

நமனை விரட்டும் நாட்காட்டி, நா. துரைசாமி, அனைத்தண்ட இராமலிங்கர் சன்மார்க்க சுத்த மாயா சித்தர் பீடம், பக். 432, விலை 210ரூ. அருட்பிரகாச வள்ளலார் சுமார் 51 ஆண்டுகள் இப்பூமியில் வாழ்ந்துள்ளார். அந்த 51 ஆண்டுகளில் அவர் வாழ்வில் நடந்த அற்புதங்களும், அவர் வெளியிட்ட கருத்துகளும் சிறு சிறு குறிப்புகளாக இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலின் முதல் பகுதியில், அருட்பிரகாசர் அகவல் வடிவில் எழுதிய – இதுவரை ஏட்டில் வராத – பிரபஞ்ச ரகசியமும் அதற்கான எளிய விளக்கமும் தரப்பட்டுள்ளது. இரண்டாம் […]

Read more

உன்னை உறங்க விடாமல் செய்வதுதான் கனவு

உன்னை உறங்க விடாமல் செய்வதுதான் கனவு, அப்துல் கலாம், விகடன் பிரசுரம், பக். 269, விலை 145ரூ. “ஒவ்வோர் இளைஞனுக்கும் வாழ்க்கையில் நிச்சயம் ஒரு லட்சியம் வேண்டும். அதை நிறைவேற்ற விடாமுயற்சியோடு கடுமையாக உழைக்க வேண்டும். தோல்வி மனப்பான்மையை தோல்வியடையச் செய்ய வேண்டும்‘’ என்று இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும், சாதிக்க வேண்டும் என்பதற்காக நூலாசிரியர் அழுத்தம் திருத்தமாக திரும்பத் திரும்ப கூறியிருப்பது, புத்தகத்தை ஆழமாகப் படிக்கத் தூண்டுகிறது. தவிர, 2020-இல் இந்தியா ஒளிர வேண்டும் என்ற தனது கனவை மெய்ப்படுத்த விவசாயம், அறிவியல், […]

Read more

ஒரு வீணையின் விசும்பல்

ஒரு வீணையின் விசும்பல், தாழை மதியவன், தாழையான் பதிப்பகம், பக். 176, விலை 100ரூ. முஸ்லிம் கதை மாந்தர்களைக் கொண்ட, சிறந்த கதைகள் அடங்கிய நூல். ‘ஐரோப்பாவின் நோயாளி’ என அழைக்கப்பட்ட துருக்கி, முதல் உலகப் போரில் மல்யுத்த வீரனாக எழுந்து நின்றதைச் சொல்லும், ‘கல்விப்போலி போர்க்களம்’ என்ற கதை, ஒரு சிறந்த சரித்திர ஆவணம். கதைக்கான கருக்கள், பெரும்பாலும் உண்மை நிகழ்வுகளில் இருந்தே எடுத்துக் கையாளப்படுகின்றன என்று, நூலாசிரியர் தன் முன்னுரை யில் கூறியுள்ளார். – எஸ்.குரு. நன்றி: தினமலர், 18/6/2016.

Read more
1 2 3 4 5 6 9