அச்சம் தவிர்

அச்சம் தவிர், வெ. இறையன்பு, ஸ்ரீ துர்க்கா பப்ளிகேஷன்ஸ், விலை 60ரூ. பொதுவாக மாணவ – மாணவிகள் எல்லோருக்கும் உள்ள ஒரு பெரிய மனக்குறை, ‘நான் ஆண்டு முழுவதும் நன்றாக படிக்கிறேன். ஆனால் தேர்வு எழுத போகும்போது மட்டும் என் கை கால்கள் நடுங்குகின்றன. நான் ஏற்கனவே படித்தவை எல்லாம் மறந்துவிடுகின்றன. மதிப்பெண்களும் நான் எதிர்பார்த்த அளவு எனக்கு கிடைக்கவில்லை. நான் என்ன செய்வேன்’ என்று கவலைப்படுகின்றனர். இதற்கெல்லாம் காரணம் தேர்வின் மீது அவர்களுக்கு இருக்கும் அச்சம். அந்த அச்சத்தை தவிர்க்க என்ன வழிமுறையை […]

Read more

பொய்கைக்கரைப்பட்டி

பொய்கைக்கரைப்பட்டி, எஸ். அர்ஷியா, புலம், விலை 130ரூ. ஏழை விவசாயிகளின் நிலங்களை லாபநெறி கொண்ட மனிதர்களால் அபகரிக்கப்பட்டு, சமூகத்தின் சொத்துடமையாளர்களிடம் மறுபங்கீடு செய்கிற அவலநிலையை சமகாலத்தின் அதிர்வுகளோடு எழுதப்பட்ட நாவலாகும். நன்றி: தினத்தந்தி, 17/8/2016.   —- ஒரு சாமானியனின் பார்வையில் கம்பன், மணிமேகலைப் பிரசுரம், விலை 120ரூ. தன் வாழ்வில் எப்போதோ நடந்த நிகழ்வுகளையும், சமூக நிகழ்வுகளையும் கம்பன் பாடலுடன் கொண்டு வந்து பொருத்திப் பார்த்து இந்நூலை படைத்துள்ளார் அந்தமான் கிருண்ணமூர்த்தி. நன்றி: தினத்தந்தி, 17/8/2016.

Read more

நீதி நூல்களில் உடல் நலம்

நீதி நூல்களில் உடல் நலம், மு.சு. கன்னையா, சங்கர் பதிப்பகம், பக். 160, விலை 135ரூ. மனிதனிடம் உள்ள மதிப்புயர்ந்த செல்வங்கள், அவன் நோய்வாய்ப்படும்போது மருந்து வாங்கியே அழிந்துவிடுகின்றன. அதனால்தான் ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்கிறது தமிழ் நீதி. நீதி நூல்களில் காணப்படும், உடல்நலம் குறித்த கருத்துக்கள் குறித்தும் இந்த நூல் தொகுத்தும், பகுத்தும் பேசுகிறது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், அற நூல்கள், அறநெறிச்சாரம், ஆத்திசூடி, சதகங்கள் ஆகிய இலக்கியங்கள் இதற்கு ஆய்வுக் களங்களாக விளங்குகின்றன. உடலும் உயிரும், மருந்து, சினம், கள்ளும் […]

Read more

ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள்

ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள், செ. கார்த்திகேயன், விகடன் பிரசுரம், பக். 254, விலை 150ரூ. எங்கும், எந்தத் தொழிலிலும் கடும் போட்டி நிலவும் இன்றையச் சூழலில், உள்நாட்டுச் சந்தையைத் தாண்டி, சர்வதேச அளவில் தங்களது வணிகத்தை விஸ்தரிக்க வேண்டிய அவசியம், சுயதொழில் புரிவோருக்கு உள்ளது. ஏற்றுமதி வர்த்தகத்தின் நுணுக்கங்களை அறிந்து அவற்றைக் கடைபிடிப்பதன் மூலம், சுயதொழில் புரிவோர் சர்வதேசச் சந்தையைத் தங்களுக்குச் சாதகமாக்கி கொள்ளலாம். இந்நூல், ஏற்றுமதி தொழிலில் கவனிக்க வேண்டிய அம்சங்கள், தமிழகத்திலிருந்து எந்தெந்தப் பொருள்களை எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்? […]

Read more

தமிழ் நாட்டு வரலாறு

தமிழ் நாட்டு வரலாறு, பா. இறையரசன், பூம்புகார் பதிப்பகம், பக். 352, விலை 250ரூ. மூன்றாம் பதிப்பாக வெளிவந்துள்ள இந்நூலில், முந்தைய பதிப்பில் உள்ள பழைய வரலாற்றுச் செய்திகளோடு அண்மைக்காலச் செய்திகளும் (இக்காலத் தமிழகம்) சேர்ந்துள்ளன. உலகம் தோன்றியது தொடங்கி, தொல் பழங்காலம், கற்காலம், சங்ககாலம், மூவேந்தர் காலம், இருண்ட காலம், பல்லவர் காலம், நாயக்கர் காலம், மராத்தியர் காலம், ஆங்கிலேயர் காலம், தற்காலம் எனத் தமிழக வரலாற்றைத் துல்லியமாகப் பல சான்றுகளோடு சுவைபட விளக்குகிறது. தொன்மையும் பழைமையும் உடைய தமிழ்நாட்டு வரலாற்றை அறிய […]

Read more

கணித வரலாறு

கணித வரலாறு, பி. முத்துக்குமரன், எம். சாலமன் பெர்னாட்ஷா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 413, விலை 325ரூ. எகிப்திய, மெசபடோமியக் கணிதம், கிரேக்கக் கணிதம், ரோமானியக் கணிதம், சீனக் கணிதம், இந்தியக் கணிதம் என தொன்மைக் காலம் தொடங்கி, இடைக்காலத்தில் தோன்றிய இஸ்லாமியக் கணிதம், ஐரோப்பியக் கணிதம் மற்றும் நவீன காலத்தில் மறுமலர்ச்சி கால இத்தாலிய தீபகற்பக் கணிதம், நவீன ஐரோப்பாவின் கணிதத்தின் துவக்கம் எனப் பல்வேறு தலைப்புகளில் கணித வரலாற்றை நூலின் ஆசிரியர்கள் விரிவாக எழுதியுள்ளனர். எண்களின் குணாதிசயங்களை எடுத்துரைக்கும் […]

Read more

காற்றினிலே வரும் கீதம்

காற்றினிலே வரும் கீதம், இசையரசியின் வாழ்க்கை பயணம், ரமணன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 264, விலை 800ரூ. கர்நாடக இசையுலகில் நிகரற்ற கலைஞராக விளங்கிய எம்.எஸ். சுப்புலட்சுமியின் நூற்றாண்டையொட்டி வெளியாகியிருக்கும் அவரது வாழ்க்கைப் பயண நூல் இது. மதுரை சேதுபதி பள்ளியின் திறந்தவெளியில் மதுரை சண்முகவடிவு வீணை வாசிக்க அவரது ஆறு வயதுக் குழந்தையான குஞ்சம்மா சற்று தொலைவில் மணல் வீடு கட்டி விளையாடுவதில் தொடங்கி, அந்த ஆறு வயதுக் குழந்தை “ஆனந்தஜா’‘ என்கிற மராட்டிய மொழிப் பாடலை முதன்முதலாக மைக்கில் பாடியது, மதுரை […]

Read more

பிம்பச் சிறை

பிம்பச் சிறை, எம்.ஜி.ராமச்சந்திரன் திரையிலும் அரசியலிலும், எம்.எஸ்.எஸ். பாண்டியன், தமிழில் பூ.கொ. சரவணன், பிரக்ஞை, பக். 248, விலை 250ரூ. மூன்றெழுத்தில் மயங்கிய ரசிகர்கள்! எம்.ஜி.ஆர்., என்ற பெயர் தமிழகத்தில் எளிதில் அழிக்க முடியாத பெயராக நிற்கிறது என்பது உண்மை. கடந்த, 1953 – 72 வரை திராவிட முன்னேற்றக் கழகத்தில் எம்.ஜி.ஆர்., உறுப்பினராக இருந்தார். அந்த காலகட்டத்தில் தி.மு.க.,வின் கொள்கை களான இறையாண்மை மிக்க தமிழகம், நாத்திகம், சுயமரியாதை, மொழிப் பற்று ஆகியவற்றை தனது திரைப்படங்களில் நீர்த்துப் போன வடிவில் பரப்பினார் எம்.ஜி.ஆர்., […]

Read more

தமிழ் சமூகத்தில் சமயம் சாதி கோட்பாடு

தமிழ் சமூகத்தில் சமயம் சாதி கோட்பாடு, தொகுப்பாசிரியர் ரவி. வைத்தீஸ்வரன், ரா. ஸ்தனிஸ்லால், மேன்மை வெளியீடு, பக். 336, விலை 250ரூ. சமய ஆய்வின் பயிற்சிக் கையேடு! இந்திய சமூக வரலாற்றில் சமயம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், சமயம், ஜாதி ஆகியவற்றைக் குறித்த பாடத்துறையோ, ஆய்வுக் கழகமோ தமிழகம் மட்டுமல்ல இந்தியக் கல்விச் சூழலில் இல்லை. இதனால், சமூகவியல் ஆய்வில் மிகப் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்ப, இந்தியா – இலங்கை – கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் […]

Read more

ஒச்சாவும் ஒத்தக்காது ஆடும்

ஒச்சாவும் ஒத்தக்காது ஆடும், மதுரை பாலன், ஓவியா பதிப்பகம், பக்.144, விலை 120ரூ. நூலாசிரியர், திரைத்துறையில் பணியாற்றி வருபவர். அவரது சிறுகதைகள், திரைப்படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகின்றன. காட்சிகள் நகரும் விதம் அருமை. காதல் ஆகட்டும், ஜாதி மோதல் ஆகட்டும் எதைப் பற்றியும் நம்மை உசுப்பி விடும் விதத்தில் கூறிச் செல்கிறார். பாலியல் தொழிலாளியின் அவல வாழ்வைச் சொல்லும், ‘சுழல்’, ஜாதிக் கலவரங்களைச் சொல்லும், ‘தீண்டாமை’ மற்றும் ‘அடங்கா நெருப்பு’, மனைவியின் கடந்த காலத்தை ஒரு சந்தேகக் கணவன் கிளறிப் பார்ப்பதைச் சொல்லும், ‘எதிர்மறை’ […]

Read more
1 4 5 6 7 8 9