கனவோடு நில்லாமல்

கனவோடு நில்லாமல், முனைவர் ஜெ. சதக்கத்துல்லாஹ், வானதி பதிப்பகம், பக். 204, விலை 150ரூ. உச்ச நீதிமன்ற நீதிபதி எஃப்.எம்.இப்ராஹிம் கலிஃபுல்லா, தமிழ்நாடு வேள்ண்மைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் கே.கே.கிருண்ணமூர்த்தி, கவிக்கோ அப்துல் ரகுமான்.. போன்றோர் இந்நூலுக்கு அளித்துள்ள அணிந்துரைகளே இந்நூலின் தகுதிக்குச் சான்றுகள். சிறுவயதிலேயே தன் தந்தையை இழந்து, ஏழ்மையில் உழன்று, தனது ஏழைத்தாயின் தினக் கூலியில் கல்வி கற்று, தன் சீரிய முயற்சியால் ஒவ்வொரு தடையையும் தாண்டி, இன்று ரிசர்வ் வங்கியின் தென் மண்டல (தமிழ்நாடு – பாண்டிச்சேரி) […]

Read more

மனோவசியம்

ஹிப்னாசிஸ்(ஆங்கிலம்), பெர்னாண்டஸ், மனோவசியம், டாக்டர் எம்.பீட்டர், லிப்கோ பப்ளிஷர்ஸ், பக். 310, விலை 300ரூ. கலவரப்படுத்தும் வார்த்தை மனோவசியம் ஹிப்னாடிசம் (மனோவசியம்) – சற்றே நம்மை கலவரப்படுத்தும் வார்த்தை. மனோவசியம் மூலம் நாம் மற்றவரின் கட்டுப்பாட்டிற்குள் முழுமையாக சென்று விடுவோம் என்ற அச்சம் பொதுவாக நமக்கு உண்டு. அதனாலேயே, ஹிப்னாடிசம் மிகவும் பிரபலமாக இருக்கிறது. ஹிப்னாடிசம் , ஹிப்னோதெரபி என்பதெல்லாம் நேர்மையான செய்கை கிடையாது என்ற அபிப்ராயம் பொதுவாக இருப்பதால், பெரும்பாலான மனோதத்துவ நிபுணர் இதை ரகசியமாக பயன்படுத்தினர். 1958ல்தான் ‘ஹிப்னாடிசம்’ ஒரு மருத்துவ […]

Read more

மார்க்சின் மூலதனம் ஒரு பொறியாளனின் இன்றைய பார்வையில்

மார்க்சின் மூலதனம் ஒரு பொறியாளனின் இன்றைய பார்வையில், ப. பார்த்திபன், வாசகன் பதிப்பகம், பக். 224, விலை 150ரூ. சாதாரண மனிதனும் தன்னுடைய பொருளாதார அறிவை வளர்த்துக் கொள்ள உதவும் நூல். மார்க்சின் மூலதனத்தை இன்றைய வாழ்வியலோடு பொருத்திப் பார்த்து நம்மை தெளிவுபடுத்தும் நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 7/9/2016.

Read more

சட்டக் கேள்விகள் 100

சட்டக் கேள்விகள் 100, வழக்குரைஞர் வெ. குணசேகரன், லாயர்ஸ் லைன் வெளியீடு, பக். 128, விலை 150ரூ. எல்லா துறைகளிலும் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் அந்த பிரச்சினைகளுக்கு சட்ட ரீதியாக என்ன தீர்வு உள்ளது என்பதை விளக்கும் நூல். பிரச்சினைகளை சந்திக்கும் மக்கள் அவர்கள் தொடுக்கும் கேள்விகளையும் அதற்கான பதில்களையும் தொகுத்து சட்டக் கேள்விகள் 100 (பாகம் 1, 2) என்ற தலைப்பில் வெளியிட்டு, அனைத்து வகையான மக்களையும் பிரச்சினைகளில் இருந்து சுலபமாக வெளிவர உறுதுணையாக இருக்கும் நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், […]

Read more

கண்ணாடிச் சிறகுள்ள ஒரு பறவை

கண்ணாடிச் சிறகுள்ள ஒரு பறவை, சிற்பி, கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 96, விலை 80ரூ. சிற்பி தன் கவிதைக்கு வயது ஐம்பதைக் கடக்கும் என்கிறார். இந்த ஐம்பதாண்டுகளில் கவிதைகயின் அகமும் புறமும் பெருமளவு மாறிப்போயிருந்தாலும், யாப்புகளில் புதிய பரிசோதனைகளும் மாற்றங்களும் நிகழ்ந்திருந்தாலும், மரபு நீங்காத புதிய காலப் பதிவுகளோடு இன்றைக்கும் புது சிறகோடு பறக்கிறது அவரது கவிதைப் பறவை. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 7/9/2016.

Read more

1000 செய்திகள்

1000 செய்திகள், முக்தா வீ. சீனிவாசன், திருக்குடந்தை பதிப்பகம், பக். 80, விலை 100ரூ. இது முக்தா வீ. சீனிவாசனின் 140வது புத்தகம். இதில் இல்லாத தகவல்களே இல்லை என்பதுபோல், நம் ஊர் பாரதி பற்றிய தகவல்கள் தொடங்கி, சாக்ரடீஸ், அரிஸ்டாடில் போன்றோரின் கருத்துக்கள், அறிவியலாளர்கள், நடிகர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், இசைஞானிகள், சாதனையாளர்கள், ஆன்மிகவாதிகள், விளையாட்டு வீரர்கள் என்று தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. -இரா. மணிகண்டன் நன்றி: குமுதம், 7/9/2016.

Read more

நான் ஏன் பிறந்தேன்?

நான் ஏன் பிறந்தேன்?, எம்.ஜி.ஆர், கண்ணதாசன் பதிப்பகம், பக். 736, விலை 460ரூ. எம்.ஜி.ஆரின் சுயசரிதாதான் ‘நான் ஏன் பிறந்தேன்?’ நூல் வடிவம் கொண்டுள்ளது. அவர் கைப்பட எழுதியது என்பது இதன் தனிச்சிறப்பு. எம்.ஜி.ஆர். பங்கு கொண்ட நாடக அமைப்புகள், பட நிறுவனங்கள், தன்னோடு பணியாற்றிய சக கலைஞர்கள், அவர் சாந்த கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், குடும்ப நண்பர்கள், தொண்டர்கள் என்று யாரையும் விடாமல் உள்ளதை உள்ளபடி தைரியமாக எழுதிச் செல்கிறார். அவருக்கு உதவியோரையும் அவரை படுபாதளத்தில் தள்ளி அழிக்க முயன்றோரைப் பற்றியும் […]

Read more

ஆங்கிலத்தில் பாரதியார் பாடல்கள்

ஆங்கிலத்தில் பாரதியார் பாடல்கள், டாக்டர் சிற்பி பாலசுப்பிரமணியம், சாகித்ய அகாடமி, விலை 950ரூ. மகாகவி பாரதியாரின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடும் முயற்சியில் சாகித்ய அகாடமி ஈடுபட்டுள்ளது. இப்போது முதல் பாகம் வெளிவந்துள்ளது. பெரிய அளவில் 636 பக்கங்கள். பாரதியாரின் கவிதைகளை உலக மக்கள் படித்து ரசிக்க இந்நூல் உதவும். நன்றி: தினத்தந்தி, 31/8/2016.

Read more

தொண்டர் கோவே

தொண்டர் கோவே, வீ. செல்வராஜ், குமுதம் வெளியீடு, விலை 200ரூ. தொண்டர்கோவே என்றழைக்கப்படும் கோ. வேங்கடாசலபதியின் வாழ்க்கை வரலாற்ற நூல். அவரது வாழ்க்கை முழுவதும் சமுதாயத் தொண்டுகள் நிறைந்ததாகவே உள்ளது. காந்தியடிகளைப் போல அவரும் ஒரு சமுதாய விஞ்ஞானியாகத் திகழ்ந்திருக்கிறார். அவருடைய ஒட்டுமொத்த வாழ்க்கையை உற்று நோக்கினால் அவர் ஒரு பிறவித் தொண்ட என்ற உண்மையை அறிய முடிகிறது என விவரிக்கிறார் நூலாசிரியர் வீ. செல்வராஜ். நன்றி: தினத்தந்தி, 31/8/2016.

Read more

இளவரசியின் சபதம்

இளவரசியின் சபதம், அய்க்கண், திருவரசு புத்தகநிலையம், விலை 60ரூ. சங்க காலத்தில் ஒரு பெண்ணின் சபதம் பற்றிய ஒரு வரலாற்று நாவல். இதனை செய்தியாகவும், உவமையாகவும், சுவையோடும் நூலாசிரியர் அளித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 31/8/2016.   —-   மலரும் மனங்கள், கலைமாமணி ஏர்வாடி எஸ். ராதாகிருஷ்ணன், கங்கை புத்தக நிலையம், விலை 100ரூ. ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை மீது ஈடுபாடு கொண்ட நூலாசிரியர், ஆன்மிகச் சிந்தனைகள், கடவுள் நம்பிக்கைக் கொள்கையை எளிய தமிழில் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் அளித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, […]

Read more
1 2 3 4 5 9