வினாடிக்கு 24 பொய்கள்

வினாடிக்கு 24 பொய்கள், இயக்குனர் மிஷ்கின், எஸ். தினேஷ், பேசாமொழி வெளியீடு, பக். 102, விலை 100ரூ. சினிமா பார்த்து சினிமாவை பற்றி தெரிந்து கொள்ளலாம். ஆனால், அது சார்ந்த புத்தகங்களை படித்து தான், சினிமாவை புரிந்து கொள்ள முடியும். சினிமா என்பது, இயக்குனரின் ஒரு பார்வை மட்டுமே. புத்தகங்கள் தான், சினிமா சார்ந்த இரண்டாயிரம் பார்வைகளை கொடுக்க வல்லது’ என்பது, எஸ்.தினேஷின் ஒரு கேள்விக்கு, மிஷ்கின் அளித்த பதிலின், ஒரு பகுதியாக வருகிறது. இவ்வாறு, சினிமா பற்றிய மிஷ்கினின் பார்வையை வாசகர் முன் […]

Read more

சீனப் பெண்கள் சொல்லப்படாத கதை

சீனப் பெண்கள் சொல்லப்படாத கதை, சின்ரன், தமிழில் வி. விஜயபத்மா, எதிர் வெளியீடு, பக். 318, விலை 280ரூ. சீனாவின், ஆளுங்கட்சி தலைவர்களின் மனைவியர், நகரத்தின் உச்சரிக்கப்படாத ஒதுக்குப்புற கிராமத்தின் ஏழை விவசாயியின் மனைவி என, சமூகத்தின் அனைத்து பகுதி பெண்களின் கண்ணீர் கதைகளை, அவர்களின் வாக்குமூலமாக பதிவு செய்தவர்,சின்ரன். வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளரான சின்ரன், சீனாவின் மறைவு பிரதேசமான, பெண்களுக்கு எதிராய் அனைத்து தளத்திலும் நடக்கும் வன்கொடுமைகளை, வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார். இது, உலக பெண்களுக்கு எதிரான கொடுமையாக, உலகம் அங்கீகரிப்பதோடு, […]

Read more

மண்ணின் மரங்கள்

மண்ணின் மரங்கள், கா. கார்த்திக் தமிழ்தாசன், இயல்வாகை வெளியீடு, பக். 60, விலை 75ரூ. நீர் நிலை, மரங்களை அழித்து, நகரம் நிர்மாணிக்கப்படுகிறது. சாலை ஓர நிழலுக்காக, விரைவில் வளரும், வெளிநாட்டு மரங்கள் நடப்படுகின்றன. நாட்டு மரங்களை நம்பி வாழ்ந்த உயிரினங்கள், உணவு கிடைக்காமல் அழிகின்றன. இதனால், மகரந்த சேர்க்கையின்றி, காய்கறி, பழங்களும் அருகி, உயிர்ச்சூழல் பாதிக்கப்படுகிறது. மேலும், காற்று, மழை, வெயிலை தாங்க பழக்கமில்லாத, அயல் மரங்களும் மடிகின்றன. இதை விரிவாக பதிவு செய்கிறது, இந்நூல். நன்றி: தினமலர், 16/1/2017.

Read more

நிலைத்த பொருளாதாரம்

நிலைத்த பொருளாதாரம், ஜே.சி. குமரப்பா, தமிழில் அ.கி. வேங்கட சுப்பிரமணியம், இயல்வாகை வெளியீடு, பக். 160, விலை 200ரூ. நிலைத்த பொருளாதாரம் என்னும் முற்போக்கு சிந்தனை நூல்,ஜே.சி.குமரப்பாவின் சிறைப்படைப்பு. இயந்திர மயமாதல், முதலாளித்துவம், உலக மயமாதல் என்னும் செயல்பாடுகள் வேகமாக பரவிய போது, அதை கேள்விகளுக்கு உட்படுத்தி, அதன் எதிர்கால தாக்கம் பற்றி விரிவாக எழுதி இருக்கிறார். பன்மயம் என்பது மாறி, ஒருமயமாகும் போது ஏற்படப்போகும் விளைவுகளை ஆராய்ந்து, காந்தியின், கிராம பொருளாதாரத்தின் நன்மைகளையும் அலசுகிறது. இக்காலத்திற்கு அவசியமான நூல். நன்றி: தினமலர், 16/1/2017.

Read more

நரகம்

நரகம், டான் பிரவுன், தமிழில் இரா.செந்தில், எதிர் வெளியீடு, பக். 760, விலை 550ரூ. அமெரிக்க எழுத்தாளரான, டான் பிரவுனின், ‘டாவின்சி கோட்’டுக்கு பின் வெளிவந்து, உலக ரசிகர்களை ஈர்த்துள்ளது நரகம். வலுவான கதாபாத்திரங்கள், தந்திரக்குவியலால் பின்னி இருக்கிறார் பிரவுன். ‘தூசடைந்த புத்தகங்களும், பயன்படாத பாதை வழிகளும், புராதன உலகின் சதித்திட்டங்களை மூடி மறைத்திருக்கின்றன‘ என, வாசகர்களை நம்ப வைத்து விடுகிறார். நன்றி: தினமலர், 16/1/2017.

Read more

பயணம்

பயணம், சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி, சமர் யாஸ்பெக், தமிழில் ஸ்ரீதர் ரங்கராஜ், எதிர் வெளியீடு, பக். 344, விலை 320ரூ. ஒரு பத்திரிகையாளராக, நீதியின் பக்கம் நின்று, தன் பேனா வாளை சுழற்றும் தைரியம் சிலருக்கு மட்டுமே வாய்க்கும். அந்த வகையில், தான் ஒரு பெண்ணாக இருந்தும், போருக்கு எதிரான அறப்போரை, தைரியமுடன் தொடுத்து, சிரியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர், சமர் யாஸ்பெக். அவரின், ‘பயணம்’ என்னும் இந்நூல், ஜனநாயகத்தின் முதல் அமைதிப் பேரணியில் இருந்து, ஐ.எஸ்.ஐ.எஸ். சின் ஊடுருவல் வரையான வாழ்வாதார […]

Read more

பயங்கரவாதி என புனையப்பட்டேன்

பயங்கரவாதி என புனையப்பட்டேன், மொகமது ஆமிர் கான், நந்திதா ஹக்ஸர், தமிழில் அப்பணசாமி, எதிர் வெளியீடு, பக். 240, விலை 200ரூ. கடந்த, 1998ல் கடத்தப்பட்டு, வதைக்கு உள்ளாக்கப்பட்டு, 24 குண்டு வெடிப்புகள் தொடர்பாக, 19 வழக்குகளில் சேர்க்கப்பட்டவர், ஆமிர் கான். 14 ஆண்டு சிறைத் தண்டனைக்கு பின், தன்னை குற்றமற்றவன் என்பதை நிரூபித்து, விடுதலையாகிறான். தந்தையை இழந்து, தாயை நோயாளியாக பார்க்கும் அவனை, சமூகம் எப்படி நடத்துகிறது என்பது தான், இந்நூல். இது, போலீஸ் உள்ளிட்ட துறைகளின் தப்பித்தல், தப்ப வைத்தல், தப்பு […]

Read more

சொற்களின் மீது எனது நிழல்

சொற்களின் மீது எனது நிழல், சைலபதி, நிவேதிதா பதிப்பகம், பக். 160, விலை 120ரூ. ‘சொற்களின் மீது எனது நிழல்’ சிறுகதையில் உள்ள, 13 கதைகளும், ஒன்றில் இருந்து ஒன்று மாறுபட்டவை. மகளின் படிப்பை கனவு காணும் தந்தை, சிறு வயதில் வாழ்க்கை இழக்கும் பெண், முதுமையால் நிராகரிக்கப்படும் முதியவர் என, இக்கதையில் வருவோர் எல்லாரும், நமக்கு நெருக்கமானவர்களாகவே உள்ளனர். நடுத்தர மனிதர்களின் கனவுகளை, எளிமையாய் யதார்த்த பின்னணியில் இந்நூல் விளக்குகிறது. சைலபதியின் கதைகள், இனிமையாக துவங்கி, அதிர்ச்சியாகவே முடிவடைகின்றன. நன்றி: தினமலர், 16/1/2017.

Read more

துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை

துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை, பாலசுப்ரமணியன், யாவரும் பதிப்பகம், பக். 200, விலை 150ரூ. சென்னை நகரின் வரலாறு, பொருளாதார மந்த நிலை, சமணர்கள் குகை, மெட்ரோ நகரத்தின் அல்ட்ரா மார்டன் மனநிலை உள்ளிட்டவை குறித்து இதில் சொல்லப்பட்டுள்ளது. உலக மயமாக்கலால் உருமாற்றம் பெற்ற கலாசாரமும், வாழ்வியலும், சிதறுண்ட வாழ்க்கை முறை குறித்தும் இந்நூல் விரிவாக அலசுகிறது. நவீன தமிழ் சிறுகதை உலகில், இந்நூல் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. நன்றி: தினமலர், 16/1/2017.

Read more

கல்வியில் வேண்டும் புரட்சி

கல்வியில் வேண்டும் புரட்சி, வினோபா, தமிழில் அருணாச்சலம், இயல்வாகை வெளியீடு, பக். 48, விலை 30ரூ. எழுத்தை கற்றுக் கொள்வதல்ல கல்வி. சத்தியம், அன்பு போன்ற குணங்களை போதித்து, அதை வாழ்வின் எல்லா நிலைகளிலும் கடைபிடிக்க வலியுறுத்துவதே சிறந்த கல்வி. இதை வினோபா விளக்குகிறார். கட்டாயக் கல்வி, சிந்தனை மற்றும் படைப்பாற்றலை கொன்றுவிடும் என வலியுறுத்துகிறார். அதற்கு மாறாய், ஆதாரக் கல்வியை அறிமுகப்படுத்துகிறார். கல்வி புரட்சியாளர்களுக்கும், பெற்றோருக்கும், இது அற்புதமான கையேடு. நன்றி: தினமலர், 16/1/2017.

Read more
1 2 3 4 5 6 9