தமிழ்வாணனின் தன்னிகரில்லா பதில்கள்

தமிழ்வாணனின் தன்னிகரில்லா பதில்கள், லேனா தமிழ்வாணன், மணிமேகலை பிரசுரம், விலை 320ரூ. தமிழ் இதழியல் உலகில், பொது அறிவு களஞ்சியமாக வெளிவந்தது, ‘கல்கண்டு’ வார இதழ். அந்த இதழ் மலர துவங்கிய காலத்தில் இருந்தே, தமிழ்வாணனின், ‘என்னை கேளுங்கள்’ என்ற கேள்வி – பதில் பகுதி துவங்கியது. அப்பகுதி, தற்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. அரசியல், நகைச்சுவை, பொது என, மூன்று பிரிவுகளில், கேள்வி – பதில்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ‘காமராஜருக்கு, சொந்த ஊரான விருதுநகரில், அவருக்கு மதிப்பு உண்டா’ என்ற கேள்விக்கு, ‘ஆப்பிள் பழம், காய்த்து […]

Read more

திண்ணைகளற்ற பெரு நகரங்களில்

திண்ணைகளற்ற பெரு நகரங்களில், நர்மதா, பாப்லோ பதிப்பகம், பக். 82, விலை 80ரூ. தொலைந்து போன் மனித மனங்களைத் தேடும் ஒரு முயற்சி இது. ‘எல்லோர்க்கும் எல்லாம் கிட்டும் நல்வாழ்வு தேடும் நல்லோர் நிறை சமூகம் வேண்டும்’ என்பது கவிஞரின் அன்றாடப் பிரார்த்தனை. அதுவே படிப்போரை நாளைய உலகம் நல்லோரின் கை சேரலாம் என்ற நம்பிக்கை கொள்ள வைக்கிறது. -இரா. மணிகண்டன், நன்றி: குமுதம் 1/2/2017.

Read more

சர்தார் வல்லபாய் படேல்

சர்தார் வல்லபாய் படேல், அ.செல்வமணி, ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், பக். 458, விலை 280ரூ. அசோகர், கனிஷ்கர், சந்திர குப்தர், சாணக்கியர், சத்ரபதி சிவாஜி, மேவார்ராணாக்கள், தாந்தியோதோபி, நானாசாகிப் போன்ற மாவீரர்கள் இந்த பாரத தேசத்தை வலிமைமிக்க நாடாக ஆக்க எடுத்த முயற்சிகள் தனித்தனியானவை. தனித்துவமானவை. ஆனால் பிரிந்து கடந்த இந்த பாரதத்தை செம்மைப்படுத்தி, ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த மாவீரர் சர்தார் வல்லப பாய்படேல் என்ற ஒரு தனி மனிதரே. அவரது வாழ்க்கை வரலாற்றை முழுமையாகத் தரும் நூல் இது. -இரா. […]

Read more

நீங்கள் எந்த மரம்?

நீங்கள் எந்த மரம்?, அ. அறிவுநம்பி, சித்திரம் வெளியீடு, பக். 158, விலை 120ரூ. மொழி, சமூகம், நாடு, மானிடர், தனி மாந்தர் ஆகிய தளங்களில் ஆசிரியர் எழுதிய கட்டுரைகள் தொகுப்பு இந்நூல். தமிழ் மொழியை வளர்த்தெடுப்பதில் உள்ள அக்கறை, பாரதியின் கனவு மெய்ப்பட வேண்டும் என்பதில் காட்டும் முனைப்பு, மதுரையின் கடம்பவன பழமை, வரதட்சணை என்ற வியாபாரம், காலதாமதத்தைப் போக்கும் மனக்கட்டுப்பாடு, மரபுகளின் மாற்றத்தால் நன்மையா? தீமையா? என்பதைப் புலப்படுத்தும் மரபுக் கட்டுரை, தமிழுக்கு ஒளி கூட்டிய வ.சு.ப. மாணிக்கனார், அறிவியல் கூத்து, […]

Read more

அக்னிசாட்சி

அக்னிசாட்சி, மலையாளம் லலிதாம்பிகை அந்தர்ஜனம், தமிழில் சிற்பி பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, பக். 128, விலை 100ரூ. கேரளத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு நம்பூதிரி குடும்பங்களில் நிலவி வந்த இறுக்கமான நம்பிக்கைகள், சடங்குகள் பற்றியும், பெண்ணடிமைத்தனம் பற்றியும் மிகவும் யதார்த்தமாகச் சொல்லும் நாவல். நம்பூதிரி குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களும் கூட சுதந்திரமற்றவர்களாக, குடும்பத்தில் மூத்தோர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, வழிபாடு, சடங்குகளைச் செய்து கொண்டு வாழ்பவர்களாக இருந்திருக்கின்றனர். அப்படி வாழ்ந்த ஒரு நம்பூதிரியின்மனைவி, அங்கிருந்த அடக்குமுறைகள் பிடிக்காமல், கணவன் வீட்டைவிட்டு வெளியேறி தாய் வீடு […]

Read more

திரைத்தொண்டர்

திரைத்தொண்டர், பஞ்சு அருணாசலம், விகடன் பிரசுரம், பக். 288, விலை 185ரூ. அறுபது ஆண்டுகால தமிழ்த் திரையுலக வரலாற்றுடன் பின்னிப் பிணைந்திருக்கிற பஞ்சு அருணாசலத்தின் சுயசரிதை இந்நூல். பஞ்சு அருணாசலத்தின் தந்தை அந்தக் காலத்திலேயே பி.ஏ. படித்திருந்தும், சம்பளத்துக்கு வேலை செய்வதை அவமானமாகக் கருதி, வேலைக்குப் போகாமல் இருந்ததால், அம்மாவின் நகைகள் அத்தனையையும் இழக்க நேரிடுகிறது. அந்தக் கோபத்தில் முதன் முதலாக அப்பாவை எதிர்த்துப் பேசிவிட்டு, வீட்டை விட்டு வெளியேறி, பணம் சம்பாதிக்க பஞ்சு அருணாசலம் சென்னைக்கு ரயில் ஏறியது, நெஞ்சை நெகிழச் செய்கின்றது. […]

Read more

நீர் மேலாண்மை

நீர் மேலாண்மை, பெருமாங்குப்பம் சா. சம்பத்து, ரேணுகாம்பாள் பப்ளிஷர்ஸ், பக். 256, விலை 200ரூ. “நீரின்றி அமையாது உலகு‘’ என்று சொல்லித் தெரியும் நிலை இப்போதில்லை. ஆனால் நீரைப் பாதுகாக்கும் முயற்சிகள், நீர் வளத்தை மேம்படுத்தும் செயல்களை எல்லாம் நாம் செய்கிறோமோ? என்றால், இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். இந்நூலில் நீரின் தோற்றம், நீரின் இன்றியமையாமை, நீர் வளத்தைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? என்பன போன்ற விவரங்களை மிகவும் எளிமையாகச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். தேசிய நதிநீர் இணைப்பு சாத்தியமா? ஏன் நதிகளை இணைக்க வேண்டும்? […]

Read more

சங்ககால மறவர்

சங்ககால மறவர், செ.மா. கணபதி, சங்கத் தமிழ்ப் பதிப்பகம், பக். 640, விலை 400ரூ. சங்க காலத்தில் வாழ்ந்த பழந்தமிழ்க் குடிகளை சிற்றரசர், குறுநிலைத் தலைவர் குடிகள், சிறுகுடிகள், பதினெண்குடிகள் என வகைப்படுத்தியுள்ளனர். இவர்களைப் பற்றி சுருக்கமாக இந்நூல் எடுத்துரைக்கிறது. சங்ககால மறவர்களின் போர் ஒழுக்கங்களையும், போர் முறைகளையும், வாழ்க்கை நெறிமுறைகளையும் எடுத்துரைப்பதற்காகவே இயற்றப்பட்டது புறப்பொருள் வெண்பாமாலை என்ற இலக்கண நூல். சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய இலக்கியங்களில் உள்ள சங்ககால மறவர் பற்றிய செய்திகளே இந்நூலில் அதிகம் இடம்பெற்றுள்ளன. பெருங்கற்காலச் சமுதாயம் […]

Read more

ஆனந்த யாழ்

ஆனந்த யாழ், ஆரூர் தமிழ்நாடன், நக்கீரன் பதிப்பகம், பக். 264, விலை 170ரூ. திரைப்படப் பாடலாசிரியராகவும், சிறந்த கவிஞராகவும் அறியப்பட்ட நா.முத்துக்குமார், கடந்த ஆண்டு அகால மரணமடைந்ததைத் தொடர்ந்து, அவருடனான தங்களின் பழக்கத்தையும் நெருக்கத்தையும் அவருடைய நண்பர்கள், நலம் விரும்பிகள், திரையுலகப் புள்ளிகள், அரசியல் பிரபலங்கள் போன்ற பல்வேறு துறையினரும் வெவ்வேறு ஊடகங்களில் பதிவு செய்ததன் தொகுப்புதான் இந்நூல். திரைப்படப் பாடலாசிரியராக பதினைந்தே ஆண்டுகள் பணியாற்றியிருந்தாலும் அக்காலகட்டத்தில் ஏறக்குறைய 1500 பாடல்கள் எழுதியுள்ளார் என்பது வியப்பைத் தருகிறது. அவற்றில் பெரும்பாலான பாடல்கள் மக்களால் கொண்டாடப்பட்டவை […]

Read more

எதிரி உங்கள் நண்பன்

எதிரி உங்கள் நண்பன், பால்தசார் கிராசியன், தமிழில் சந்தியா நடராஜன், சந்தியா பதிப்பகம், விலை 80ரூ. ஸ்பெயின் தேசத்து சாணக்கியன் பால்தசார் எழுதிய புத்தகம் இது. எப்பொழுதும் நிலைக்கக் கூடிய கருத்துக்களை உருவாக்குகிற கலைஞர்கள் ஒருசிலரே பிறக்கிறார்கள். அவர்கள் கண்ட தரிசனங்களை வெளியில் வைக்கிறார்கள். இந்த வாழ்க்கை நம் முன் வைக்கும் மாய விளையாட்டைச் சுலபமாகக் கையாள பால்தசார் சொல்லித் தருகிறார். இது சுய முன்னேற்ற நூல்லல்ல. உங்களின் ஆளுமையை, இருத்தலை உங்களுக்கே உணர வைக்கும் நூல். உலகமெங்கும் பேசப்பட்ட புத்தகம். தினசரி வாழ்வில் […]

Read more
1 2 3 4 9