போர்த் தொழில் பழகு
போர்த் தொழில் பழகு, வெ. இறையன்பு, புதிய தலைமுறை பதிப்பகம், பக். 156, விலை 250ரூ. இளைய தலைமுறை எப்படிப்பட்டதாக உருவாக வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதி வரும் இந்நூலாசிரியர், இளைஞர்களிடம் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் உருவாக தன்னம்பிக்கையும், துணிவும் வேண்டும். அது உருவாக ‘போர்க் குணம்’ வேண்டும் என்கிறார். ’ரௌத்திரம் பழகு’ என்று மகாகவி பாரதியும் கூட வலியுறுத்தியுள்ளார். தீமைகளையும், அடக்குமுறைகளையும் கண்டு உள்ளுக்குள் ஊற்றெடுக்கும் நியாயமான கோபம்தான் போர்க்குணம். இக்குணம் உடையவர்களால்தான் உலகம் பல்வேறு வகைகளில் முன்னேற்றம் அடைகிறது. […]
Read more