பேரரசன் அசோகன்

பேரரசன் அசோகன், சார்லஸ் ஆலன், தமிழில் தருமி, எதிர் வெளியீடு, விலை 400ரூ. ‘சாலையெங்கும் மரங்களை நட்டார் அசோகர்’ என படித்தறியாத சிறுவர்கள் இங்கே எவரும் இருக்க முடியாது. அத்தகைய பேரரசன் அசோகனின் மறக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட வரலாற்றை விவரிக்கிறது இந்நூல். அசோகன் வெறும் மன்னர் மட்டுமில்லை, அவனது மனச்சித்திரங்களாக காணக்கிடைப்பது ஆச்சர்யமூட்டுகிறது. அவர் ஒரு தேசாந்திரியாக இருந்திருக்கிறார். அவரது பயணங்கள் விசாலமானவை. வாழ்ந்த இடமே மறந்து போகிற அளவுக்கு பயணப்பட்டிருக்கிறார். அனைத்து மதங்களுமே மரியாதைக்குரியவை என நினைத்து வந்திருக்கிற அசோகனின் பெருந்தன்மை நினைவுகூரத்தக்கது. […]

Read more

இந்தியப் பயணம்

இந்தியப் பயணம், ஜெயமோகன், கிழக்கு, பக். 136, விலை 125ரூ. தான் கேள்விப்படும் விஷயத்தையே சுவாரசியமாக எழுதக்கூடியவர், ஜெயமோகன். தான் பார்த்த, உணர்ந்த, அனுபவித்த விஷயங்களை எப்படி எழுதுவார்? அப்படிப்பட்ட உணர்தலின் பதிவுதான், இந்தியப்பயணம். அவர், இந்தியாவின் சில பகுதிகளுக்கு, 2008ல், நண்பர்களுடன் ஒரு பயணத்தை மேற்கொண்டு, அதன் அனுபவங்களை, இணையத்தில் பதிவிட்டார். அது, அச்சாகி வந்துள்ளது, இது இந்தியா குறித்த நம் கண்களுக்கு, ஜன்னல் கதவை திறப்பதுபோல. நன்றி: தினமலர், 19/1/2017.

Read more

சந்நியாசமும் தீண்டாமையும்

சந்நியாசமும் தீண்டாமையும், ராமாநுஜம், பரிசல், பக்.225, விலை 200ரூ. விரிவான ஆய்வையும், அதனூடாக பல்வேறு விவாதங்களையும் கோரி, நிற்க கூடிய அளவிற்கு ஆழமானது சாதி எனும் சொல்லாடல். நிலை கொண்டிருக்கும் சாதியத்தின் ஒடுக்குமுறைகள் பற்றி சமூக அறிவியலாகவும், அரசியலாகவும் விவாதங்கள் கட்டமைக்கப்பட்டு வந்திருக்கும் நிலையில், ஆங்கிலத்தில் இயங்கி வருவதை போன்று சாதியம் பற்றி தமிழில் கோட்பாட்டு ரீதியான பார்வை சட்டகத்தை அறிமுகப்படுத்தி விவாதிக்க முனைகிறது இந்நூல். அம்பேத்கர் போன்று சாதியை, கோட்பாட்டு ரீதியாக சிந்தித்திராத நம் சூழலில் சாதியம் பற்றி முற்றிலும் வேறொரு வாசிப்பிலிருந்து […]

Read more

ஜல்லிக்கட்டு அறுபடும் மூக்கணாங்கயிறு

ஜல்லிக்கட்டு அறுபடும் மூக்கணாங்கயிறு, புதின், சரவணன் தியாகராஜன், ரெட் ஹாக் பதிப்பகம், விலை 230ரூ. ஊரெங்கும், ஜல்லிக்கட்டு நடக்குமா என்ற விவாதம் நடக்கும் இவ்வேளையில், அதை தடை செய்ய துடிப்பவர்களுக்கும், ஜல்லிக்கட்டு பற்றி தெரியாதவர்களுக்கும், படைக்கப்பட்டிருக்கும் புத்தகம் இது. நாட்டு மாடுகளை காக்கவே ஏறுதழுவுதல் என்றும், இது, மூடத்தனம் அல்ல. உயிர் நேயம் மிக்க விவேக விளையாட்டு என்றும் படங்களுடன் உணர்த்துகிறது. நன்றி: தினமலர், 19/1/2017.

Read more

ட்விஸ்ட்

ட்விஸ்ட், சுப்ரஜா, வாதினி பதிப்பகம், பக். 80, விலை 70ரூ. மின்னல் வேகத்தில் செல்லும் சிறுகதைகள். ஒவ்வொரு சிறுகதையும் படிக்க படுசுவாரசியம். பதினொறு சிறுகதைகளும், பதினாறு விதமான அனுபவத்தை தருகின்றன. நிறைய ஆங்கில கதைகளின் பேட்டர்ன்,ஒவ்வொரு சிறுகதையிலும் தெரிகிறது. மீண்டும் மீண்டும் படித்து, ரசிக்கத் தூண்டும் கதைகள். நன்றி: தினமலர், 19/1/2017.

Read more

பெண்ணுடல் பேராயுதம்

பெண்ணுடல் பேராயுதம், புதிய மாதவி, இருவாட்சி, பக். 120, விலை 100ரூ. பெண் என்னும் ஆதித்தாய் வழியே, இந்த சமூகம் எவ்வாறு புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஆட்படுகிறது என்பதையும், அவள் ஏன் உலகின் முக்கியமான படைப்பாக்கப்பட்டு, பின் நிலவைப் போல, மறைந்து போகிறாள் என்பதை, ஒரு பெண்ணாக வெளிப்படுத்துகிறார் புதிய மாதவி. பெண்ணுடல் பேராயுதம், பெண்களுக்கு பிடிக்கும் ஆயுதம். நன்றி: தினமலர், 19/1/2017.

Read more

உயிர்ப்பாதை

உயிர்ப்பாதை, கே.என். சிவராமன், சூரியன் பதிப்பகம், பக். 256, விலை 200ரூ. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் சயாம் – பர்மா இடையில் ரயில் பாதை அமைக்க ஜப்பான் முற்பட்டதும், அதில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழ்த் தொழிலாளர்கள் மரணமடைந்ததையும் சுவாரசியமான நடையில் விளக்கும் நூல். நன்றி: தினமலர், 19/1/2017.

Read more

யாதென அழைப்பாய்

யாதென அழைப்பாய், எஸ். வாசுதேவன், மருதா பதிப்பகம், பக். 325, விலை 300ரூ. கலை, இலக்கியம், இசை, விமர்சன கோட்பாடுகள், திரைப்படம், அரசியல், சுற்றுச்சூழல், நூல் மதிப்புரைகள் போன்ற தலைப்புகளில் பத்திரிகைக்களில், முகநூல், இணையத்தில் எழுதிய சிறிப பதிவுகளை விரிவாக்கி கட்டுரை வடிவில் தொகுக்கப்பட்ட நூல். அறிவு புலம் சார்ந்த 41 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினமலர், 19/1/2017.

Read more

மாலுவின் டயரி

மாலுவின் டயரி (சிறார், பெரியவர்களுக்கான கருத்துக் களஞ்சியம்), ஞாநி, ஞானபாநு பதிப்பகம், பக். 160, விலை 225ரூ. எழுத்தாளர் ஞாநி எழுதியுள்ள மாலுவின் டயரி 10 வயது முதல் 16 வயது வரையிலான சிறுவருக்கான நூல். இன்னொரு பார்வையில், அது எல்லா வயதினருக்குமான நூல். ஜெனரல் பிக்ஷன் என்ற வகைப்பாட்டில் உலக அளவில் மிகச் சில நூல்களே எழுதப்பட்டிருக்கின்றன. தமிழில் இதுவே முதல் ஜெனரல் நூலாக வந்துள்ளது. எழுத்தாளனே ஒரு பாத்திரமாக தன் நூலில் வலம் வருவதே ஆத்தோகேர் வடிவமாகும். மாலுவின் டயரி இப்படி […]

Read more

இன்றைய பிள்ளைகளுக்கான வளர்ப்பு முறைகள்

இன்றைய பிள்ளைகளுக்கான வளர்ப்பு முறைகள், நளினி சந்திரசேகரன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 82, விலை 50ரூ. இன்றைய குழந்தைகள் மற்றும் பதின் பருவத்தினரைக் கையாளும் வழிகளை, எளிய நடையில் விளக்குகிறது. குழந்தைகள் வளர்ப்பதை, பெற்றோரும் ஒரு சவாலாகவே பார்க்க ஆரம்பித்துவிட்டனர். இப்புத்தகம் பிள்ளை வளர்ப்பு யுக்திகள் மட்டுமல்லாமல், தம்பதிகளுக்குள் ஒற்றுமை, பெண்களின் மன அழுத்தம் போக்கும் வழிகள் இவற்றையும் கூறுகிறது. நன்றி: தினமலர், 13/1/2017.

Read more
1 4 5 6 7 8 9